பராக் ஒபாமா


பராக் ஒபாமாவின் தந்தை சீனியர் ஒபாமா கென்யா நாட்டில் இருந்து ஹவாய்க்கு பட்டப்படிப்பு படிக்கவந்த மாணவர் அங்கே ஆன் டன்ஹாமை திருமணம் செய்துகொண்டார் !அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் இவர்கள் இருவருக்கும் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தவர் தான் பராக் ஒபாமா . கென்யாவின் ஸ்வாஹிலி மொழியில் ‘பராக்’ என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்

று பொருள்

ஒபாமா பெரும்பாலும் தன் தாத்தா மற்றும் பட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்தார் .அப்பா மற்றும் அம்மா திருமணமான மூன்றே வருடங்களில் பிரிந்து விட்டார்கள் !அதற்கு பிறகு அம்மாவுடன் இணைந்து இந்தோனேசியாவில் இளம் வயதில் வாழ்ந்தார் .அங்கே இந்தோனேஷியாவில் இருக்கும்போது, இரண்டு முதலைகள், ஏகப்பட்ட கோழிகள், வாத்துகளை வளர்த்து வந்தார். இவர் வளர்த்த குரங்கின் பெயர் டாடா!

தாத்தா மற்றும் பாட்டியுடன் இணைந்து அமெரிக்காவில் வாழும் பொழுது பள்ளியில் படிப்பில் மற்றும் கூடைப்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கினார்.வகுப்பில் மூன்றே கறுப்பின பிள்ளைகள் படித்து வந்ததால் மாற்ற பிள்ளைகளால் இழிவாக நடத்தப்பட்டார் !கூடைப்பந்து போட்டிகளின் பொழுது துன்புறுத்தப்பட்டார் .அப்பொழுது கண்ணாடி முன் சட்டையை கழட்டிவிட்டு தன்னைத்தானே உற்றுப்பார்த்து ஏன் இந்த வேறுபாடு என குமுறி அழுது இருக்கிறார் 

அப்பா வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து பார்ப்பார் !ஒபாமாவிற்கு தந்தையின் மீது எல்லையற்ற பாசம் உண்டு அவரின் மரணத்திற்கு பிறகு அவர் வாழ்ந்த இடங்களுக்கு பயணப்பட்டு அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்தார் !”என் தந்தையிடம் இருந்து எனக்கான கனவுகள் !”என அவர் எழுதிய நூல் ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் வலியையும்,சமஉரிமை தாகத்தையும் உலகுக்கு எடுத்து சொன்னது 

கொலும்பியா பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் படித்தார் ,பின் சிலகாலம் சிக்காகோ தேவாலயத்தின் சமூக முன்னேற்ற திட்ட இயக்குனராக பணியாற்றினார் அதற்கு பின் ஹார்வர்ட் சட்டப்பள்ளியில் சட்டம் பயின்றார்.அப்பொழுதே மேடைப்பேச்சில் பின்னி எடுப்பார் !கல்லூரியில் படிக்கும் பொழுதே பல்வேறு சட்ட நிறுவனங்களில் பகுதிநேர வேலைப்பார்த்தார் .பின் சிக்காகோ சட்டப்பல்கலைகழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார் !

பாடம் நடத்தும் பொழுது பல்வேறு விஷயங்களை அழகாக தொட்டுச்செல்வார்.வாழ்க்கையில் இருந்து,அமெரிக்காவின்,உலகின் வரலாறில் இருந்து பல்வேறு அற்புதமான எடுத்துக்காட்டுகளை வழங்குவார்.இதனால் இவரின் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை அலை மோதும் ,விளைவு -சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் ‘சிறந்த பேராசிரியர்’ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்!

எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தவர் !கல்விக்கடனிலேயே படித்தவர் !அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு சிலவருடங்களுக்கு முன்தான் தான் கல்லூரியில் படிக்க வாங்கிய கடனையே அடைத்தார்.இவரின் வருமானம் இவரின் புத்தகங்களில் இருந்தே இன்னமும் பெரும்பாலும் கிடைக்கிறது !அது போக இவரின் Dreams from My Father, மற்றும் The Audacity of Hopeநூலின் ஒலிவடிவம் இவருக்கு அமெரிக்காவின் உயரிய இசை விருதான கிராமி விருதை பெற்றுத்தந்து இருக்கிறது 

குத்துச்சண்டை மிகவும் பிடிக்கும் !முகமது அலி கையெழுத்திட்ட குத்துச்சண்டை க்ளவுஸ் இரண்டு இப்பொழுதும் பத்திரமாக அவரிடம் இருக்கிறது !எப்பொழுதும் மோதிப்பார்த்து விடவேண்டும் !எதிராளியின் பலத்தை பார்த்து பயமில்லை !நம்மிடம் நம்பிக்கை இருந்தால் போதும் என அடிக்கடி சொல்வார் !அதே போல் அதற்கு முன் இரண்டே கறுப்பினத்தவர் மட்டுமே வென்ற அமெரிக்காவின் செனட் தேர்தலில் வென்று அரசியலில் நுழைந்தார் அதிலும் தன் வசீகரிக்கும் பேச்சாற்றலால் கிட்டத்தட்ட எழுபது சதவிகித ஓட்டுக்களை பெற்று இல்லினாயிஸ் மாகாண செனட் தேர்தலில் வென்றார் !

போரை எதிர்த்து குரல் கொடுத்தார் !தான் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனால் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா படைகள் வெளியேறும் என சொன்னார் !”நான் போர்களை எதிர்க்கவில்லை !அடிப்படையே இல்லாத போர்களை தான் எதிர்க்கிறேன் என்றார் !”நமது தேசப்பிதா மகாத்மா காந்தி, அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைக்கு போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய மெக்சிகோ அமெரிக்கன் சீசர் சாவேஸ் ஆகிய மூவரும் தான் இவரின் ரோல்மாடல்கள்.

முதலில் கிளிண்டனை ஆதரித்து அரசியல் செய்தார்,பின் ஜான் கேரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் !பின் தானே அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்தார் !அவர் தன் கட்சியில் எதிர்த்து நின்றது கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன்.அப்பொழுது ,சிகாகோ என்னும் மாகாணத்தில் இருந்து வந்து இருக்கும், மிகவும் ஒல்லியான தேகம்கொண்ட, பேரைச் சொல்லும்போதே சிரிப்பை வரவழைக்கும் மனிதர்’ – ஒபாமாவை இப்படிக் கிண்டல் அடித்தார் கலிஃபோர்னியா மாகாண கவர்னர் மற்றும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு ஷ்வாஸ்னெகர்.ஆனால் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை பின்னுக்குத்தள்ளி நின்றார் ஒபாமா !அவர் வெல்வாரா என உலகமே ஆவலோடு பார்த்தது !

ஒபாமாவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது’ என்று குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, ‘உண்மையான அன்புக்காக சிறு வயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!’ என்று இவர் தனது சிறு வயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டது பெரிய அளவில் இவர் ,மீது நம்பிக்கை ஏற்படுத்தியது.மார்டின் லூதர் கிங் கண்ட வெள்ளைமாளிகையில் ஒரு கறுப்பினத்தவர் என்கிற கனவு ஒபாமாவால் நிஜமாகும் என நினைத்த தருணத்தில் அவர் இஸ்லாமியர் என அடுத்த வதந்தி கிளம்பியது !தேர்தலும் வந்தது 

“இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான்!” என்று பேசினார் ஒபாமா.தேர்தல் முடிவுகளில் மெக்கைனை வீழ்த்தி வெற்றிபெற்றதும் இன்ப அதிர்ச்சி தாங்க முடியாத லட்சக்கணக்கான ஆஃப்ரோ-அமெரிக் கர்கள் வீதிகளில் வாய்விட்டு அழுத காட்சிகளும்,பாமா அதிபராகப் பதவியேற்றபோது, வாஷிங்டனின் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டதும் மக்களுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கையை காட்டியது 

பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது !அதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன !”இந்த விருது என்னை கூச்சப்பட வைக்கிறது !இது என்னுடைய பணிகளை இன்னமும் அதிகம் பொறுப்பு மிகுந்தது ஆக்குகிறது !:என பணிவாக சொன்னார்.அவர் கையில் இராக் போருக்கு போன ஒரு போர்வீரன் தந்து விட்டுப்போன ப்ரேஸ்லெட் இப்பொழுதும் உள்ளது !சொன்னபடியே இராக்கில் இருந்து படைகளை படிப்படியாக 
வெளியேற்றினார் ஒபாமா !

ஒபாமா நல்ல உயரம் !ஆறடி இரண்டு அங்குலம் .இப்பொழுதும் ,அப்பொழுதும் கூடைப்பந்து ஆட மிகவும் பிடிக்கும்.சட்டக்கல்லூரியில் அறிமுகமான மிசெல்லை காதலித்து திருமணம் செய்து கொண்டார் !இரண்டு மகள்கள் -தன் செல்ல மகள்களுக்கு நாய்க்குட்டி தேடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதியான பின் ஒபாமா அலைந்தது ஒரு பொறுப்பான தந்தையாக அவரை அடையாளப்படுத்தியது

உங்களின் செருப்புகளை கழட்டி எறியுங்கள்,போருக்கான ஷுக்களை அணிந்து கொள்ளுங்கள்,சிலிர்த்துக்கொள்ளுங்கள்!குறை சொல்லாதீர்கள் ,புலம்பாதீர்கள் ,அழாதீர்கள் இன்னமும் உழைக்க வேண்டும் ,இன்னமும் முன்னேற வேண்டும் ஆம் நம்மால் முடியும் (YES WE CAN ) என்பது ஒபாமாவின் பிரபலமான மந்திர சொல் !இன்னமும் உழைக்கிறார் ஒபாமா !அவரின் கனவுப்பயணம் தொடர்கிறது !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s