ஸ்டீவ் ஜாப்ஸ்.


பில் கேட்ஸ் தன் சொத்துக்கள் முழுவதையும் அறக்காரியங்களுக்கு எழுதி வைத்து இருக்கலாம் ஆனால் அப்படி பைசா கூட செலவு செய்ய மறுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.உலகிற்கு செய்கிற மிகப்பெரிய தொண்டு தொழில்நுட்பத்தின் மூலம் உலகிற்கான கனவுகளை நினைவாக்குவதே என தெளிவு கொண்டு இருந்த நாயகன் அவர்.அவரை பற்றிய எட்டு கடிகள் 


ஆப்பிள் 1 :கடின உழைப்பு
கடி : இந்த மனிதர் ஒன்றும் மென்பொருள் வல்லுனரோ அல்லது கணினி புலியோ இல்லை .ரீட் கல

்லூரியில் இருந்து பாதியில் வெளியேறியவர் தான் .ஆனால் ஓயாத உழைப்பை கொட்டி கொடுத்த மனிதர்காலி பாட்டில்களைசேகரித்து விற்றும் நண்பர்களின் வீட்டு மாடி முற்றத்திலும் தூங்கி எழுந்த மனிதர் நம்பியது கடின உழைப்பை தான்
ஆப்பிள் 2 தன்னம்பிக்கை
கடி:
ஸ்டீவ் ஜாப்ஸ் முதலில் இந்த துறையில் நுழைந்த பொழுது எதிர் கொண்டது IBM
எனும் யானை\பலம் கொண்ட சாம்ராஜியத்தை…கையில் இருந்த 1300
டாலரோடு குதித்து ஜெயித்தது மாபெரும் டானிக்
ஆப்பிள் 3:ஆர்வ கோளறு
கடி:மனிதன் பனிரெண்டு வயதிலே HP நிறுவன தயாரிப்பை நோண்டி
பார்த்து அந்த நிறுவன நிறுவனரை போனில் பிடித்து 20
நிமிடம் பேசி சந்தேகம் தீர்த்து கொள்கிற அளவிற்கு ஆர்வம் இருந்தது
ஆப்பிள் 4:எதிலும் நம்பர் ஒன்
கடி:ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஆளுக்கும் நம்பர் கொடுக்க பட்ட பொழுது இவர் நண்பருக்கு எண் ஒன்று தரப்பட்ட பொழுது எனக்கு எண் 0 வேண்டும் ஏன் எனில் நான் தான் என்றைக்கும் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற மனிதர் இவர் 
ஆப்பிள் 5:எதிலும் புதுமை
ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய சில காலம் ஒரு சிறிய ஸ்டுடியோவை விலைக்கு வாங்கி எங்கும் புதுமைகளை செய்த அந்த நிறுவனம் தயாரித்த படங்கள் தான் டாய் ஸ்டோரி ,பைண்டிங் நெமோ எனும் அற்புதமான அனிமேஷன் காவியங்கள்
ஆப்பிள் 6:பெரிதாய் கனவு காண்க 
கடி:ஒரு சிறிய carriage இல் ஆரம்பிக்கப்பட்ட அப்பிளின் பெயரை உலகம் உச்சரிக்க வேண்டும் என ஆசை பட்ட இவரின் அப்போதைய நிலைமை ஏழு மைல் தூரம் ஒரு வேலை உணவுக்காக தினம் நடப்பது …கையில் பணம் இல்லை …ஒரு வீடியோ கேம் கடையில் வேலை ……ஆனால் கண்ட கனவு பெரிது …அதனால் தான் அவர் மறைந்த பொழுது ஒபாமா முதல் உள்ளூர் உலகநாதன் வரை எல்லோரும் அவர் பெயரை சொன்னார்கள்
ஆப்பிள் 7:வலிகளில் வலிமை
2004 இல் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு கணைய\ புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்க பட்டது ;வலியோடு நிறுவன பதவியை விட்டு இறங்கினால் பங்குகள் கிழே போய்விட்டன …(மீ)ண்டும் வந்தார் ..வலியோடு பல புதுமைகளை செய்தார் அப்போது சொன்ன வரி ,”இன்றோடு வாழ்க்கை முடிய போகிறது என்கிற நினைப்போடு உழையுங்கள் பல விசயங்கள் துரிதமாகவும் சுலபமாகவும் முடியும் .” அப்படியே அடுத்து வந்த ஆப்பிள் தயாரிப்புகள் பெரிய ஹிட் !
ஆப்பிள் 8:படைபற்றல்
தான் கல்லூரியில் அரை குறையாய் கற்ற வடிவமைப்பை கொண்டே தன் முதல் கணினிக்கான வடிவமைப்பை உருவாக்கிய படைப்பாற்றல் அவரிடம் இருந்தது…'”எனக்கு பிடிக்காத ஒன்றை உலகுக்கு தர மாட்டேன் ..எதிலும் எளிமை மற்றும் நளினம் நிறைந்து இருக்க வேண்டும் என்றவர் அவர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s