அரசியலார்வமற்ற மேதாவிகள் எனும் இக்கவிதை எழுதி ஆண்டுகள் பல ஆனாலும் இன்றைய அவலநிலைக்கும் பொருந்தவே செய்கிறது Apolitical Intellectuals – Otto Rene Castillo   ———————— ஒரு நாள் கடையர்கள் அரசியலார்வமற்ற என் … நாட்டு மேதாவிகளை வினாக்களால் விளாசுவார்கள்
இந்த தேசம் தனியாக,மெதுவாக … அழிவுத்தீயில் பொசுங்கிக்கொண்டு இருந்தபொழுது என்ன செய்தீர்கள் என அவர்கள் கேட்கப்படுவார்கள்
அப்பொழுது அவர்களின் ஆடம்பர ஆடைகள் நிறைந்த மதிய உணவுக்கு பிந்திய நீண்ட உறக்கங்கள் எதுவுமில்லா நோக்கங்களோடு ஆன மலடான அவர்களின் கேலி யுத்தங்கள் பணம் கொட்டி பெறப்பட்ட கல்வி அவர்களின் கல்வி எதுவும் கவனம் பெறாது
புராணங்களை பற்றி கேள்விகள் கேட்கப்படமாட்டாது அவர்களின் உள்ளே உள்ள மனசாட்சி கோழையின் மரணம் உற்ற பொழுது அவர்கள் கொண்ட அருவருப்பு பற்றி கவனம் கொடுக்கபடாது
மொத்த பொய்மையின் நிழலில் ஊடாக விளைந்த அவர்களின் அபத்த நியாயப்படுத்தல்கள் பற்றி வெறுமையே மிஞ்சி நிற்கும் அந்த நாளில் எளியவர்கள் வருவார்கள்
அரசியலார்வம் அற்ற மேதாவிகளின் கீதங்களிலும்,நூல்களிலும் இல்லாத அவர்களுக்கு சோறிட்டவர்கள் அவர்களின் வண்டிகளை ஒட்டியவர்கள் அவர்களின் நாயோடும்,தோட்டத்தோடும் அன்பு மொழி பேசியவர்கள் வருவார்கள்
அவர்கள் உங்களை கேட்பார்கள் “ஏழைகள் அழுத பொழுது அவர்களின் வாழ்வும்,நலமும் தீயின் கங்குகளில் அழிக்கப்பட்ட பொழுது என்ன செய்தீர்கள் ?”
என் இனிய தேசத்தின் அரசியலார்வம் அற்ற மேதாவிகளே உங்களால் விடை தர முடியாது உங்கள் துக்கம்
அமைதி எனும் கழுகு உங்களின் ஆண்மையை தின்று செல்லும் உங்கள் துன்பம் உங்கள் ஆன்மாவை உருவி எடுக்கும்
நீங்கள் அவமானத்தால் வெட்கி மௌனம் காப்பீர்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s