பாரதி எனும் அருந்தவப்பன்றி !


அருந்தவப்பன்றி எனும் பாரதி கிருஷ்ணகுமார் அண்ணன் அவர்களின் நூலை வாசித்து முடித்தேன். மகாகவி பாரதி தன்னுடைய பதினைந்து வயது தொடங்கி இருபத்தி ஒரு வயது வரை கவிதை புனையாமல் அருந்தப்பன்றியாக கவிதா தேவியின் அருள் வேண்டி இருந்திருக்கிறார். காசியில் இருந்த காலத்தில் ஷெல்லி,வடமொழி,ஹிந்தி என்று கழிந்த அவர் வாழ்க்கையில் கவிதை இயற்றல் என்பது மட்டும் நிகழாமல் போயிருக்கிறது. இது குறித்து பாரதியின் எழுத்துக்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே குறிப்புகள் காணப்படுகின்றன. சின்ன சங்கரன் கதையில்,பாரதியின் ‘ கனவு’ என்ற காதற்கவிதையிலும் , ‘பாரதி அறுபத்தாறு’ , கவிதாதேவி அருள்வேண்டல்’ ஆகியவற்றில் இது சார்ந்த குறிப்புகள் காணப்படுகின்றன. 

இந்த ஆறாண்டுகளுக்கு சற்று முன்பு எட்டையபுரம் அரசரிடம் வேலை பார்த்து இருக்கிறார் பாட்டுக்கொரு புலவன் அந்த காலத்தில் சிருங்காரம் சார்ந்த விஷயங்களில் அவரின் கவனம் நகர்ந்திருக்கிறது. அதை பின்னர் வருத்தத்தோடு பாரதி பதிவு செய்கிறார். இளம் வயதில் அம்மாவின் அன்பு கிடைக்காமல் தவிக்கும் முண்டாசுக்கவி எங்கேனும் அம்மா என்று குழந்தைகள் அழைக்கும் என்றால் கண்கலங்கி நின்று விடுவாராம். பத்து வயதில் அவருக்கு உதித்த காதலின் தாக்கத்தில் தன்னுடைய மகளுக்கு சாகுந்தலை என்று பெயர் வைக்கிறார் அவர். 

பாரதியின் நூற்றாண்டை ஒட்டி சென்னைப்பல்கலைக்கழகம் அவரைப்பற்றிய நூல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்படி தமிழக அரசு பணித்து இருந்தது. இன்னமும் அப்பணி நிறைவேறவில்லை. அப்படி அப்பணி செய்யப்படும் பொழுது பாரதி அருந்தவப்பன்றியாக இருந்த காலம் பற்றிய ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று வேண்டும் இந்நூல் அந்த பாரதி பேனாவை தொடாத காலத்தை மேலும் ஆய்வு செய்யத்தூண்டுகிறது 

ரூட்ஸ் வெளியீடு 
பக்கங்கள் நூற்றி ஐம்பது 
விலை: ரூபாய் இருநூறு 
புத்தகத்தை வாங்க: 9444299656

 

2 thoughts on “பாரதி எனும் அருந்தவப்பன்றி !

செல்வகுமார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி