பாரதி எனும் அருந்தவப்பன்றி !


அருந்தவப்பன்றி எனும் பாரதி கிருஷ்ணகுமார் அண்ணன் அவர்களின் நூலை வாசித்து முடித்தேன். மகாகவி பாரதி தன்னுடைய பதினைந்து வயது தொடங்கி இருபத்தி ஒரு வயது வரை கவிதை புனையாமல் அருந்தப்பன்றியாக கவிதா தேவியின் அருள் வேண்டி இருந்திருக்கிறார். காசியில் இருந்த காலத்தில் ஷெல்லி,வடமொழி,ஹிந்தி என்று கழிந்த அவர் வாழ்க்கையில் கவிதை இயற்றல் என்பது மட்டும் நிகழாமல் போயிருக்கிறது. இது குறித்து பாரதியின் எழுத்துக்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே குறிப்புகள் காணப்படுகின்றன. சின்ன சங்கரன் கதையில்,பாரதியின் ‘ கனவு’ என்ற காதற்கவிதையிலும் , ‘பாரதி அறுபத்தாறு’ , கவிதாதேவி அருள்வேண்டல்’ ஆகியவற்றில் இது சார்ந்த குறிப்புகள் காணப்படுகின்றன. 

இந்த ஆறாண்டுகளுக்கு சற்று முன்பு எட்டையபுரம் அரசரிடம் வேலை பார்த்து இருக்கிறார் பாட்டுக்கொரு புலவன் அந்த காலத்தில் சிருங்காரம் சார்ந்த விஷயங்களில் அவரின் கவனம் நகர்ந்திருக்கிறது. அதை பின்னர் வருத்தத்தோடு பாரதி பதிவு செய்கிறார். இளம் வயதில் அம்மாவின் அன்பு கிடைக்காமல் தவிக்கும் முண்டாசுக்கவி எங்கேனும் அம்மா என்று குழந்தைகள் அழைக்கும் என்றால் கண்கலங்கி நின்று விடுவாராம். பத்து வயதில் அவருக்கு உதித்த காதலின் தாக்கத்தில் தன்னுடைய மகளுக்கு சாகுந்தலை என்று பெயர் வைக்கிறார் அவர். 

பாரதியின் நூற்றாண்டை ஒட்டி சென்னைப்பல்கலைக்கழகம் அவரைப்பற்றிய நூல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்படி தமிழக அரசு பணித்து இருந்தது. இன்னமும் அப்பணி நிறைவேறவில்லை. அப்படி அப்பணி செய்யப்படும் பொழுது பாரதி அருந்தவப்பன்றியாக இருந்த காலம் பற்றிய ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று வேண்டும் இந்நூல் அந்த பாரதி பேனாவை தொடாத காலத்தை மேலும் ஆய்வு செய்யத்தூண்டுகிறது 

ரூட்ஸ் வெளியீடு 
பக்கங்கள் நூற்றி ஐம்பது 
விலை: ரூபாய் இருநூறு 
புத்தகத்தை வாங்க: 9444299656

 

எரியும் பனிக்காடு-வியர்வையும்,ரத்தமும் தோய்ந்த ஒரு வரலாறு !


எரியும் பனிக்காடு வாசித்து முடித்தேன். தேயிலை தோட்டங்களில் இன்னமும் ரத்தம் தோய்ந்த,பிணங்கள் உரமாக போடப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள். வீட்டுக்கு போய் விடுவோம் என்கிற நம்பிக்கையை சுமந்து மிருகங்களை போல வீடு என்கிற கிடங்குகளில் கிடந்து நசிந்து போனவர்கள். பாலியல் தொந்தரவுகளால் வெம்பிப்போன பெண்கள்,மலேரியா,நிமோனியா ஆகியவற்றோடு வேலை பார்த்து நம்மின் டீ கோப்பை வெள்ளையர்களின் பர்ஸ் ஆகியவற்றை நிறைத்த அவர்களின் வலி தோய்ந்த கதை இது. இதை வள்ளி,கருப்பன் எனும் இரு மாந்தரின் மூலம் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் 

கொஞ்சமே கொஞ்சம் க்யூனின்,சிற்சில மருந்து கரைசல்கள் இவற்றோடு மருத்துவமனை என்கிற பெயரில் இருக்கும் வதைக்கூடம் என்று இருக்கும் தேயிலை தோட்டங்களில் கொடுக்கப்பட்ட கூலி,அங்கே நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவங்கள். கடுங்குளிர்,வார்த்தைகள் மற்றும் வன்முறையால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள்,எத்தனை உயிர் போனாலும் சற்றும் அசையாத கல் நெஞ்சம் எல்லாமும் ஆங்கிலேயரின் தோட்டங்களில் சிவந்த மண்ணின் கதையை சொல்லும். 

ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள்,போலியாக கணக்கு எழுதப்பட்டு சுரண்டப்படும் உழைப்பு,அறியாமையை பயன்படுத்திக்கொண்டு மளிகை பொருட்களின் மூலமும் கம்பளிகளின் மூலமும் கடன்காரர்களாக ஆக்கி விடும் எல்லாவற்றிலும் எப்படி சுரண்டல் நிறைந்து இருந்தது என்பதை நேருக்கு நேராக நின்று பார்த்த அங்கே மருத்துவராக இருந்த டேனியல் அவர்களின் பதிவுகள் உங்களை உலுக்கிவிடும் 

தலித் இலக்கியமும் கூட இது. அந்த எளிய மக்களின் ஒரே ஒரு ஆறுதலான மாட்டுக்கறி உண்பதைக்கொண்டு கூட எப்படி சுரண்டல் நடந்திருக்கிறது என்பதை இந்நூல் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும். இந்த ரெட் டீ எனும் டேனியல் அவர்களின் நூலை திருநெல்வேலி வட்டார வழக்கில் வெகு அற்புதமாக மொழி பெயர்த்து இருக்கிறார் முருகவேள் அவர்கள். 

நீங்கள் குடிக்கிற தேநீரை நிறுத்தி விடுங்கள் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால்,நாம் குடித்து கொண்டிருக்கும் இந்த தேயிலை இலைகள் ஒரு காலத்தில் எத்தனையோ பேரின் உயிர்,ரத்தம்,கண்ணீர்,என்றும் மீள முடியாமலே மரணித்து போன வெறுமை,வியர்வை ஆகியவற்றின் மீது எழுந்தவை என்பதை மட்டும் நினைவு கூர்ந்தால் போதும். தன் இனத்தை தானே வேட்டையாடுவதில் சுகம் காணும் ஒரே இனம் மனித இனம் மட்டுமே எனும் வரிகள் தான் எவ்வளவு சத்தியமானவை ? 

எரியும் பனிக்காடு. பி.எச்.டேனியல். தமிழில் இரா. முருகவேள். விடியல் பதிப்பகம். கோவை. விலை ரூ.150.

நாமக்கல் கவிஞர் எனும் நல்லவர் !


நாமக்கல் கவிஞரின் நினைவு நாள் இன்று. எளிமையாக எளியவர்களுக்கு புரிகிற மொழியில் எழுதும் அற்புதத்தை பாரதி தமிழ் கவிதையுலகில் ஆரம்பித்து வைத்தார் என்றால் அதை அடியொற்றி எளியவர்களுக்காக புரியும் மொழியில் எழுதியவர் அவர். 

மோகனூரில் பிறந்தாலும் நாமக்கல்லில் வாழ்ந்தமையால் நாமக்கல் கவிஞர் என்பது அவரின் பெயரானது. உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது கலந்து கொண்ட எளியவர்களின் நாவில் இருந்து எழுந்த வரிகளான கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது பாடல் இவரின் பேனாவில் இருந்து எழுந்ததே !

இவரின் திருக்குறள் உரை நூலுக்கு முன்னுரை வாங்க ராஜாஜியிடம் போனார் கவிஞர். ‘இந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவது என்ற வீண் பெருமையை விரும்பவில்லை. இந்த விஷயத்தைல் என்னைவிட அறிவுடைய நீங்கள் எழுதிய நூலுக்கு முன்னுரை எழுத நான் யார்?’ என்று ராஜாஜி பதில் சொன்னார். 

காரைக்குடியில் மகாகவி பாரதியாரை இவர் சந்தித்தார். இவர் ஓவியர் கவிஞரும் கூட என்று சொல்லவே இவரை ஒரு பாடல் பாட சொல்லி இருக்கிறார் பாரதியார். “தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்’ என்ற கிட்டப்பாவின் நாடகத்துக்கு எழுதிய பாடலைப்பாடினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், “பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. “தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்…’ பலே, பலே இந்த ஓர் அடியே போதும்” என்று வாழ்த்தினார் 

“தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்’ என்று எழுதிய ராமலிங்கம் அவர்கள் எழுதிய மலைக்கள்ளன் நாவல் எண்ணற்ற மொழிகளில் வெற்றிப்படம் ஆனது. தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர் இவரே. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எழுதிய அவர் இன்றைக்கு இருந்திருந்தால் என்ன பாடியிருப்பாரோ

அராபத் எனும் போராளி !


 

யாசர் அரபாத் பிறந்த தினம் ஆகஸ்ட் இருபத்தி மூன்று. யூதர்களுக்குன்று ஒரு நிரந்தமான பூமி இல்லாத பொழுது இங்கிலாந்து பாலஸ்தீனம் எனும் பூமியை உருவாக்கி அதில் இஸ்லாமியர்களையும் ,இஸ்ரேல் நாட்டில் யூதர்களையும் குடியமர்த்தி விட்டு சென்றது.ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்பதை நாடாக ஏற்றுக்கொள்ளாமல் அவர்களின் பூமியையும் சேர்த்து தனதாக்கி கொண்டது . மொசாட் எனும் உலகின் தலைசிறந்த உளவுத்துறை ,அதிநவீன தொழில்நுட்பம்,கூடவே ரத்தவெறி மற்றும் அமெரிக்காவின் ஆதரவு எல்லாமும் இஸ்ரேல் எனும் நாட்டை ஜீவித்தது;பாலஸ்தீனம் கனவாகவே இருந்தது ;அப்பொழுது பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்கிற அமைப்பை தொடங்கி யாசர் அரபாத் போராட ஆரம்பித்தார் .

ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளின்உதவியோடு போராடிக்கொண்டு இருந்தவருக்கு போரின் மூலம் ஜோர்டான் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா மற்றும் வெஸ்ட் ஸ்ட்ரிப் பகுதிகள் பிடுங்கப்பட்டன ;பின் லெபனானில் தங்கள் அமைப்பின் உறைவிடத்தை அமைத்துக்கொண்டு போராடினார்கள் ;பல உயிர்களை இருபக்கமும் காவு வாங்கியது இந்த நிலத்துக்கான யுத்தம் .

ஆனாலும் இஸ்ரேல் நிலம் தரமாட்டோம் அல்லது தருகிற மாதிரி பேசி கழுத்தறுப்போம் என்கிற மனநிலையிலே செயல்பட்டது.ஐ.நா சபையில் பேசப்போகும் பொழுது அரபாத் என் ஒரு கையில் துப்பாக்கி இருக்கிறது ,இன்னொரு கையில் அமைதியை குறிக்கும் ஒலிவ இல்லை இருக்கிறது எதை தூக்க வேண்டும் என நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் என்பது வரலாற்றின் கண்ணீர் பக்கம் .பல முறை இருட்டு நிலங்களிலும் ,வெட்ட வெளிகளிலும்,பயத்தின் நடுவினிலும் தன் தேசத்தின் கனவை தன் மக்களுக்கு விளைத்தவாறே இருந்த இந்த ஜீவன் 2004 இல் மரணித்து போனது .

அதற்கு பத்து வருடங்களுக்கு முன்னேயே அமைதிக்கான நோபல் பரிசு மத்திய கிழக்கில் விடுதலை கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டது .எனினும் அமைதி தான் திரும்பவே இல்லை .போராடிக்கொண்டே இருந்த காலத்தில் பல உயிர்களை கொல்வதற்கு காரணமாக இருந்தவர் என்கிற குற்றச்சாட்டுடன் தான் இறந்து போனார் .

ஆனால் இஸ்ரேல் எனும் கொடிய கருணையற்ற நாட்டின் முன் வேறெந்த வழியும் இல்லாமல் நின்ற ஒரு அனாதை நாட்டின் கூக்குரலை ஒலித்த சுதந்திர குயில் என யாசர் அரபாத் நினைவுகூரப்படுவார்

அரபாத் எனும் போராளி !


 

யாசர் அரபாத் பிறந்த தினம் ஆகஸ்ட் இருபத்தி மூன்று. யூதர்களுக்குன்று ஒரு நிரந்தமான பூமி இல்லாத பொழுது இங்கிலாந்து பாலஸ்தீனம் எனும் பூமியை உருவாக்கி அதில் இஸ்லாமியர்களையும் ,இஸ்ரேல் நாட்டில் யூதர்களையும் குடியமர்த்தி விட்டு சென்றது.ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்பதை நாடாக ஏற்றுக்கொள்ளாமல் அவர்களின் பூமியையும் சேர்த்து தனதாக்கி கொண்டது . மொசாட் எனும் உலகின் தலைசிறந்த உளவுத்துறை ,அதிநவீன தொழில்நுட்பம்,கூடவே ரத்தவெறி மற்றும் அமெரிக்காவின் ஆதரவு எல்லாமும் இஸ்ரேல் எனும் நாட்டை ஜீவித்தது;பாலஸ்தீனம் கனவாகவே இருந்தது ;அப்பொழுது பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்கிற அமைப்பை தொடங்கி யாசர் அரபாத் போராட ஆரம்பித்தார் .

ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளின்உதவியோடு போராடிக்கொண்டு இருந்தவருக்கு போரின் மூலம் ஜோர்டான் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா மற்றும் வெஸ்ட் ஸ்ட்ரிப் பகுதிகள் பிடுங்கப்பட்டன ;பின் லெபனானில் தங்கள் அமைப்பின் உறைவிடத்தை அமைத்துக்கொண்டு போராடினார்கள் ;பல உயிர்களை இருபக்கமும் காவு வாங்கியது இந்த நிலத்துக்கான யுத்தம் .

ஆனாலும் இஸ்ரேல் நிலம் தரமாட்டோம் அல்லது தருகிற மாதிரி பேசி கழுத்தறுப்போம் என்கிற மனநிலையிலே செயல்பட்டது.ஐ.நா சபையில் பேசப்போகும் பொழுது அரபாத் என் ஒரு கையில் துப்பாக்கி இருக்கிறது ,இன்னொரு கையில் அமைதியை குறிக்கும் ஒலிவ இல்லை இருக்கிறது எதை தூக்க வேண்டும் என நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் என்பது வரலாற்றின் கண்ணீர் பக்கம் .பல முறை இருட்டு நிலங்களிலும் ,வெட்ட வெளிகளிலும்,பயத்தின் நடுவினிலும் தன் தேசத்தின் கனவை தன் மக்களுக்கு விளைத்தவாறே இருந்த இந்த ஜீவன் 2004 இல் மரணித்து போனது .

அதற்கு பத்து வருடங்களுக்கு முன்னேயே அமைதிக்கான நோபல் பரிசு மத்திய கிழக்கில் விடுதலை கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டது .எனினும் அமைதி தான் திரும்பவே இல்லை .போராடிக்கொண்டே இருந்த காலத்தில் பல உயிர்களை கொல்வதற்கு காரணமாக இருந்தவர் என்கிற குற்றச்சாட்டுடன் தான் இறந்து போனார் .

ஆனால் இஸ்ரேல் எனும் கொடிய கருணையற்ற நாட்டின் முன் வேறெந்த வழியும் இல்லாமல் நின்ற ஒரு அனாதை நாட்டின் கூக்குரலை ஒலித்த சுதந்திர குயில் என யாசர் அரபாத் நினைவுகூரப்படுவார்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் !


சென்னையின் சில சுவையான முதல்கள் இங்கே :

இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னை தான். கிண்டி தேசிய பூங்கா தான் அந்த பூங்கா

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில் எழுந்தது தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.

இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் எழுந்தது தான். பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை துவங்கியது. இந்த வருடத்தோடு அந்த ரேடியோ சேவை ஆரம்பித்து தொன்னூறு வருடங்கள் ஆகின்றன

இந்தியாவின் முதல் வங்கி ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான்.

ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை எழுந்ததும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட அது உருவான வருடம் 1819 !

இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில் தான். நுங்கம்பாக்கத்தில் இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் எழுந்தது அது. இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடைபெற்றது பரங்கி மலையில் !

இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சி தான். ஆனால்,கொண்டு வந்தது காமராஜர் இல்லை,பி.டி.தியாகராயர். தியாகராயர்.இந்தியாவிலேயே கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானதும் விடுதலைக்கு முந்திய நீதி கட்சியின் ஆட்சி காலத்தில் தான் .

இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரி தான். இந்தியாவில் மெக்கானிகல்,எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இங்கே தான்.

இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான். உலகின் இரண்டாவது பழமையான கார்பரேசன் அது தான். இது எழ காரணம் ரிப்பன். அவர் பெயரால் எழுந்தது தான் ரிப்பன் கட்டிடம்

இன்றொடு சென்னைக்கு வயசு 375 !

வேளச்சேரி,அடையார்,மைலாப்பூர்,மேற்கு மாம்பலம்,லாயிட்ஸ் ரோட்-எல்லாம் நம்ம சென்னை !


விகடனில் மாணவ நிருபராக இருந்த பொழுது பெரிதும் நிறைவைத்தந்தது அதில் செய்த என் ஊர் பகுதி தான். அதிலிருந்த சென்னை சார்ந்த என் ஊர் பகுதிகள் மட்டும் உங்களின் வாசிப்புக்காக 

“இப்போதும் பேனா பிடித்தால் கைகள் பின்னிக்கொள்கின்றன. முன்னே மாதிரி எழுதவருவதில்லை..என் எழுத்தைப்போல யாருக்கும் எந்தச் சங்கடமும் தராததாகவே இந்த வேளச்சேரி இருக்கிறது என நான் நினைக்கிறேன்!” என நெகிழவைக்கிறார் அசோகமித்திரன்.
https://saravananagathan.wordpress.com/2012/10/24/சர்க்கஸ்ல-இருந்து-வந்துட/

“இதே பெசன்ட் நகரில் 1980-களில் அன்டன் பாலசிங்கம் தன் மனைவியோடு தங்கி இருந்தபோது, அவர் வீட்டில் வெடிகுண்டு வெடித்த வழக்குக்காக அவரைச் சந்தித்ததும்; விசாரணைக்காக அடையாறு போய் புலிகள் தலைவர் பிரபாகரனோடு பேசியதும் நேற்று நடந்ததைப் போல் நினைவில் இருக்கிறது. இந்தக் கடல் அலைகள் நமக்குத்தான் எவ்வளவு கதைகள் சொல்கின்றன. கண்களை மூடி நன்றாகக் கேட்டுப் பாருங்கள், அது ஒரு கடலின் வரலாறு மட்டும் அல்ல; ஒரு தலைமுறையின் எச்சங்கள்!” முன்னாள் டி என் பி எஸ் சி தலைவர் Natraj Ramachandran
https://saravananagathan.wordpress.com/2013/01/15/பக்கிங்காம்-படகு-சவாரி/

மேற்கு மாம்பலத்தின் இன்னொரு சிறப்பு, கூட்டுக் குடும்பங்கள். காலப்போக்கில் ஒவ்வொரு வீடும் இடிக்கப்பட்டு ஃப்ளாட்டா மாறினப்ப, ‘அடுக்கு மாடி வீடு வரப்போகுது’னு அன்னைக்கு சந்தோஷமா பேசிட்டு இருப்போம். ஆனால், இன்னைக்கு ‘பழைய வீடுகளை எல்லாம் இழந்துட்டோமே’னு வருத்தமா இருக்கு.- பின்னணி பாடகி சைந்தவி 

https://saravananagathan.wordpress.com/2013/01/15/சூப்பர்-மார்க்கெட்-சோகம்/

அடையாறு மட்டுமே பசுமையால் போர்த்தப்பட்டு இருக்கும். இந்தப் பகுதி அப்போது பெரும்பாலும் காடுகள் சூழப்பட்டு இருந்ததால் மக்கள் இங்கு வசிக்க விரும்பவில்லை. இதை மக்கள் புழங்கும் ஓர் இடமாக மாற்ற விரும்பிய அன்றைய முதல்வர் ராஜாஜி, இங்கு பல்வேறு வீடுகளைக் கட்டி, திரைக் கலைஞர்களுக்குக் கொடுத்தார். இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு ஏரியாக்களுக்கு காந்தி, நேரு, கஸ்தூரிபா, ஜீவரத்தினம், பக்தவத்சலம், காமராஜர் என தேசத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டினார். என்கிறார்கள் இரட்டை எழுத்தாளர்கள் சுபா Suresh Subha

https://saravananagathan.wordpress.com/2012/10/24/இங்கேதான்-பசுமை-இருக்கிற/

அன்று எங்களுக்குள் எம்.ஜி.ஆர். கோஷ்டி, சிவாஜி கோஷ்டி என இரு பிரிவுகள் இருந்தன. ஆனாலும் இணைந்தே எல்லாப் படங்களையும் பார்ப்போம். இதில் உச்சபட்ச த்ரில், எம்.ஜி.ஆர். அலுவலக மூத்த மேனேஜர் குஞ்சப்பன், சிவாஜி சாரின் அலுவலகத்துக்கு போன் போட்டு, எங்களுக்கு முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் வாங்கித் தருவதுதான். என்கிறார் நடிகர் Mohan Raman

https://saravananagathan.wordpress.com/2013/08/22/என்-ஊர்-லாயிட்-சாலை-எம்-ஜி/

மைலாப்பூர் குளத்தில் ஒரு ராட்சத மீன் இனத்தை வளர்க்கவிட்டு அது வளர்ந்து பெரியத் தொல்லையாக உருவெடுத்தது. பெரிய பெரிய அளவுகளில் இருந்த அவை, குளத்தில் விழுந்து இறந்துபோன ஒரு மனிதரை முழுசாக தின்று தீர்த்து விட்டன. மீன்களை விற்றுவிட வேண்டும் என்றபோது கோயில் மீன்களை எடுக்கக்கூடாது எனப் பிரச்னையெல்லாம் கிளம்பியது. காசிமேட்டில் இருந்து படகைக் கொண்டு வந்து அந்த மீன்களை அள்ளிக்கொண்டு போனார்கள். என்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர் 

https://saravananagathan.wordpress.com/2013/01/15/சுகநிவாஸ்-தயிர்-சேமியாவு/

என் ஊர் : லாயிட் சாலை எம்.ஜி.ஆர். கோஷ்டி சிவாஜி கோஷ்டி!


லாயிட்ஸ் சாலை என அழைப்பதே தவறு. ‘லாயிட்’ என்பதுதான் சரி. ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் ஐந்தாறு லாயிட் பற்றிய குறிப்புகள் உள்ளன. எந்த லாயிட் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது, ‘அவ்வை சண்முகம் சாலை’ என்று பெயர் மாற்றப்பட்டு, குழப்பம் தவிர்க்கப்பட்டு உள்ளது!”- ஃப்ளாஷ்பேக்கில் ஆழ்ந்தவாறு லாயிட் சாலையைப் பற்றிப் பேசுகிறார் திரைப்பட நடிகர் மோகன் ராம்.

 ”ஐம்பதுகளில் என் தாத்தா ஏ.வி.ராமன்,பொதுப் பணித்துறை இன்ஜினீயராக இருந்தார். அவரை, அப்போதுதான்  சினிமாவில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்தஒருவர் பார்க்க வந்தார். அவருக்கு என் தாத்தா, ‘160, லாயிட் சாலை’ என்ற முகவரியில் உள்ள வீட்டைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். அந்தப் பிரபலம்தான், எம்.ஜி.ஆர். அந்த அன்பின் காரண மாகத்தான் விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரை எழுதும்போது, தன்னுடைய அன்னை மற்றும் என் தாத்தா ஏ.வி.ராமன் இருவருடைய புகைப்படங்களுடன் தொடங்கினார்.

எம்.ஜி.ஆரை நாங்கள் அன்போடு ‘சேச்சா’ (சித்தப்பா) என்றுதான் அழைப்போம். இன்றைய அ.தி.மு.க. அலுவலகம் இருக்கும் இடத்தில் அன்று நடிகர் சங்க அலுவலகம் இருந்துச்சு. பிறகு இங்கே தான் எம்.ஜி.ஆர். சமூகநீதி பத்திரிகையை நடத்தி னார். அப்போது ‘அலுவலகத்தின் முன்பக்கத்தை கிரிக்கெட் ஆட பயன்படுத்திக்கொள்ளுங்கள்!’ எனப் பெருந்தன்மையோடு அனுமதித்தார். அப்போது எங்கள் வீட்டில் இருந்து மேற்கு நோக்கி சில அடிகள் எடுத்துவைத்தால் கலைவாணர், எம்.ஜி.ஆர்., கலைஞர், இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, ‘சந்திரலேகா’ பட புகழ் ரஞ்சன், இயக்குநர் ஏ.பி.நாகராஜன், ஏவி.எம். ஆகியோரின் வீடுகள் வரும். கிழக்குப் பக்கம் நடந்தால் ராஜா ஐயர், வேதாந்தாச்சாரி, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ராஜு என நீதித் துறை பிரபலங்களின் வீடுகள் வரும்.

பம்பரம், கோலி, காத்தாடி என எங்கள் பால்யம் விளையாட்டுகளால் நிறைந்து இருந்தது. கோபால புரம் மைதானத்தில் மாஞ்சா காத்தாடி பறக்கவிட, வீட்டில் உள்ள பல்புகளை கோணியில் மறைத்து எடுத்துப்போவோம். அதற்கு முந்தைய நாளே திருவல்லிக்கேணி டப்பா செட்டிக் கடையில் வஜ்ரம், லைம்லாக், மயில் துத்தம் வாங்கிச் சேர்த்துஅரைத்துத்  தடவி, மாஞ்சா  காத்தாடிவிட்டுவிளையாடியது பசுமையாக நினைவில் உள்ளது. அப்போது 10 பைசாவுக்கு 10 கோலி தருவார்கள். அபீட், டாவா, ஆக்கர்… இதெல்லாம் பம்பரம் விளையாடும்போது புழங்கும் வார்த்தைகள். இன்றைவிட அன்றுதான் கிரிக்கெட் மோகம் உச்சத்தில் இருந்தது. சனி, ஞாயிறுகளில் கோபாலபுரம் மைதானத்தில் ஏகப்பட்ட டீம்கள் ஆடுவார்கள். 8 மணி போட் டிக்குக் காலை 6 மணிக்கே பிட்ச் பிடிக்கப்போய் விடுவோம். எல்லாத் தரப்பினரும் விளையாடும் அந்த மைதானம், சமத்துவத்தின் அடையாளமாக இருந்தது. அதேபோல், வீட்டில் இருந்து கட்டுச் சோறு, குழிப் பணியாரம் கட்டிக்கொண்டு சேப் பாக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் பார்க்கச்சென்ற தும் சிம்சன், சோபர்ஸ் போன்றோரின் ஆட்டங் களை முதல் பந்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக, கட்டுச் சோறை அரக்கப்பரக்கத் தின்றதும் இன்றும் நினைவில் உள்ளது.  

அன்று எங்களுக்குள் எம்.ஜி.ஆர். கோஷ்டி, சிவாஜி கோஷ்டி என இரு பிரிவுகள் இருந்தன. ஆனாலும் இணைந்தே எல்லாப் படங்களையும் பார்ப்போம். இதில் உச்சபட்ச த்ரில், எம்.ஜி.ஆர். அலுவலக மூத்த மேனேஜர் குஞ்சப்பன், சிவாஜி  சாரின் அலுவலகத்துக்கு போன் போட்டு, எங்களுக்கு முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் வாங்கித் தருவதுதான். அப்போது இருந்த ஜாஃபர் ஐஸ் க்ரீம் கடையில் சேமியாவை பாலில் தோய்த்து ஐஸ்க்ரீம் செய்துதரும் ஃபலூடாவின் சுவை இன்னமும் நாக்கில் அப்படியே இருக்கிறது.

இந்தப் பகுதியில் வாழ்ந்த சில்வர் டங்க் ஸ்ரீனி வாச சாஸ்த்ரி, கோகலே, ரானடே போன்ற தலைவர்களுடன் இணைந்து ‘சர்வென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ அமைப்பில் பணியாற்றினார். அதில் இருப்பவர்கள் சொத்து எதுவும் வைத்திருக்கக் கூடாது என்பது விதி. அதனால் தன் சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுக்கே எழுதிவைத்துவிட் டார். அவர் பெயரில் வீடு கொடுத்தால் அதை யும் நாட்டுக்கே எழுதிவைத்துவிடுவார் என்ப தால் அவரின் மனைவி பெயரில் வீடு ஒன்றை வாங்கித் தந்தார் அண்ணாமலை ராஜா முத்தையா செட்டியார்.

அப்போது ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் தான் நூல்கள் எடுத்துப் படிப்போம். கமல், ரஜினி என இதற்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். அந்த நூலகம் இன்னமும் அப்படியே இருப்பது மனதுக்கு இதமான ஒன்று. 35 பைசாவில் 10 பத்தை மாங்காய் வாங்கி சுவைத்துக்கொண்டு, கிராமப்போனில் மென்மையாக அந்தக் காலப் பாடல்களை கேட்டபடி கவலைகள் எதுவும்இல் லாமல் வாழ்ந்த அந்த வாழ்க்கை இன்று எங்கு போனது என்றே தெரியவில்லை. ஆனாலும் லாயிட் சாலை மீதான காதல் அப்படியேதான் இருக்கிறது!”

முடிக்கப்படாத கவிதை ஒன்று !


 

 
 • Maya Angelou அவர்களின் ஒரு கவிதையை எப்பொழுதோ மொழி பெயர்க்க முயன்று பாதியிலேயே விட்டிருக்கிறேன். 

  அழகான பெண்கள் என் இரகசியங்களை தேடுகிறார்கள்  
  நான் நளினமானவளோ,ஒரு பேஷன் நாயகியின் உடலமைப்போ கொண்டவள் இல்லை
  நான் மனதால் மொழிந்தால் அவர்கள் 
  பொய்களை நான் சொல்வதாக நினைக்கிறார்கள் 
  நான் சொல்கிறேன் 
  என் தனித்துவம் நெருங்கும் தூரத்தில் தான் இருக்கிறது 
  என் இடுப்பின் பரப்பில் 
  என் கரத்துக்கு எட்டும் தூரத்தில் 
  என் நீண்ட காலடிச்சுவடுகளில் 
  என் உதட்டின் பிளவுகளில் 
  என் தனித்துவம் நெருங்கும் தூரத்தில் தான் இருக்கிறது 

  நான் ஒரு பெண் 
  வியப்பில் மூழ்கவைக்கும் 
  தனித்துவமான பெண் 
  நானே தான் அவள் 

  உங்களைப்போலவே 
  தன்மையாக நான் ஆணை நோக்கி 
  அறைகளுக்குள் நடக்கிறேன் 
  சிலர் நிற்கிறார்கள் 
  சிலர் மண்டியிட்டு விழுகிறார்கள் 
  தேனடைச்சுற்றும் தேனீக்களாகி 
  பின் என்னை சூழ்கிறார்கள் 

  நான் சொல்கிறேன் 
  என் கண்களில் தீ சுடரிடுகிறது 
  என் பற்களில் வெளிச்சம் சிரிக்கிறது 
  என் இடுப்பு ஊசலில் நகர்கிறது 
  என் கால்களில் இன்பம் நிறைகிறது 
  அவர்கள் தேனீக்களாக சூழ்கிறார்கள் 

  தனித்துவமான பெண் நானே தான் 

  என்னிடம் எது உள்ளது 
  என்று அவர்களே வியக்கிறார்கள் 

  என்னின் அகத்தின் ரகசியங்களை 
  கண்டறிய எவ்வளவோ முயல்கிறார்கள் 
  நானே காட்சிதர முயன்றாலும் 
  அது அவர்களுக்கு 
  புலப்படாமல் நகைக்கிறது 
  என் பின் வளைவுகளில் 
  என் புன்னகையின் சூரியனில் 
  என் மார்புகளின் பயணத்தில்…

  முடிக்கப்படாமல் விடப்படுவது கூட சமயத்தில் நிறைவைத்தான் தருகிறது 

ராஜீவ்-ஏழாண்டுக்கதை !


ராஜீவ் காந்தி என்கிற வித்தியாசமான பாரத அரசியல்வாதி பிறந்த தினம் இன்று.அரசியல் சதுரங்கத்தில் எந்த காய் வேண்டுமானாலும் எதையும் வெட்டலாம் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு ராஜீவ்.அடிப்படையில் வெளிநாட்டில் கல்வி பயின்று அங்கேயே சோனியாவுடன் காதல் பூண்ட இந்த கோமான் வீட்டு குமரன் சஞ்சயின் மரணத்திற்கு பின் ஏற்பட்ட வெற்று இடத்தை நிரப்பவும் ,இந்திராவின் மரணத்தின் பொழுது தள்ளாடிய காங்கிரசை முட்டுக்கொடுத்து நிறுத்த வந்தவர் தான் இவர்.இந்திரா இறந்த பொழுது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை பெருமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்று சாவகசமாக சொன்னார். இந்திரா மரணம் தந்த அனுதாப அலையில் நேருவால் கூட பெறமுடியாத வெற்றியை பெற்றார்.

பெரிய நிர்வாக அறிவில்லாத இவர் ,ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது அங்கேயே அவர் நீக்கப்படுவதாக அறிவிக்க அந்த செயலாளர் (தமிழர் தான் )பைத்தியம் என்று விட்டார்.

புதுரத்தம் பாய்ச்சுகிறேன் என கிளம்பிய இவர் மீது ஊழல் பூதத்தை கிளப்பினார் வி.பி.சிங்.முதலில் நிதி அமைச்சராக இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கிறார் என மாற்றப்பட்ட அவர் இவருக்கே ஆப்பு வைத்தார் அவர். போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்து வைத்த ஆப்புகள் அவை . பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காமல் இந்தியா அமைதிப்படையை அனுப்பி தீராத அவப்பெயரை தேடிக்கொண்டார். இந்தியாவின் வியட்நாம் இலங்கை என்று வர்ணிக்கிற அளவுக்கு அநியாயங்கள்,உயிரழப்புகள் எழுந்தன. அதன் விளைவு தனு என்கிற விடுதலிப்புலிகளின் மனித வெடிகுண்டின் வெடிப்பில் சிதறுண்டு போனார் என்பது சோகமான ரத்தம் தோய்ந்த முடிவு .
Photo: ராஜீவ் காந்தி என்கிற வித்தியாசமான பாரத அரசியல்வாதி பிறந்த தினம் இன்று.அரசியல் சதுரங்கத்தில் எந்த காய் வேண்டுமானாலும் எதையும் வெட்டலாம் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு ராஜீவ்.</p><br />
<p>அடிப்படையில் வெளிநாட்டில் கல்வி பயின்று அங்கேயே சோனியாவுடன் காதல் பூண்ட இந்த கோமான் வீட்டு குமரன் சஞ்சயின் மரணத்திற்கு பின் ஏற்பட்ட வெற்று இடத்தை நிரப்பவும் ,இந்திராவின் மரணத்தின் பொழுது தள்ளாடிய காங்கிரசை முட்டுக்கொடுத்து நிறுத்த வந்தவர் தான் இவர்.</p><br />
<p>இந்திரா இறந்த பொழுது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை பெருமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்று சாவகசமாக சொன்னார். இந்திரா மரணம் தந்த அனுதாப அலையில் நேருவால் கூட பெறமுடியாத வெற்றியை பெற்றார்.</p><br />
<p>பெரிய நிர்வாக அறிவில்லாத இவர் ,ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது அங்கேயே அவர் நீக்கப்படுவதாக அறிவிக்க அந்த செயலாளர் (தமிழர் தான் )பைத்தியம் என்று விட்டார்.</p><br />
<p>புதுரத்தம் பாய்ச்சுகிறேன் என கிளம்பிய இவர் மீது ஊழல் பூதத்தை கிளப்பினார் வி.பி.சிங்.முதலில் நிதி அமைச்சராக இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கிறார் என மாற்றப்பட்ட அவர் இவருக்கே ஆப்பு வைத்தார் அவர். போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்து வைத்த ஆப்புகள் அவை . பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காமல் இந்தியா அமைதிப்படையை அனுப்பி தீராத அவப்பெயரை தேடிக்கொண்டார். இந்தியாவின் வியட்நாம் இலங்கை என்று வர்ணிக்கிற அளவுக்கு அநியாயங்கள்,உயிரழப்புகள் எழுந்தன. அதன் விளைவு தனு என்கிற விடுதலிப்புலிகளின் மனித வெடிகுண்டின் வெடிப்பில் சிதறுண்டு போனார் என்பது சோகமான ரத்தம் தோய்ந்த முடிவு . </p><br />
<p>ராஜீவ் பஞ்சாயத் ராஜ் என்கிற கனவை முழு மூச்சாக முன்னெடுப்பு எடுத்தார். தொழில்நுட்ப துறை பெரிய அளவில் நகர்வதற்கான ஆரம்ப அச்சாரங்கள் அவர் காலத்தில் போடப்பட்டவையே. லைசன்ஸ் ராஜ்யத்தை மட்டுப்படுத்துகிற பணிகள் அவர் காலத்தில் தான் தொடங்கின. தொலைதொடர்பு துறை கிராமங்களுக்கு போய் சேரும் அற்புதத்தை செய்த பி சி ஓ அவர் காலத்தில் அறிமுகமானதே. </p><br />
<p>ஷாபானு வழக்கில் முஸ்லிம்களிடம் நல்லபெயர் வாங்குகிறேன் பேர்வழி என இவர் அடித்த கூத்தால் மதவாத சக்திகளும் பீறிட்டு கிளம்பியது வலிமிகுந்த வரலாறு. இந்து மதவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது அதை முடுக்கி விடும் வகையில் அயோத்தி சிக்கலை மீண்டும் கிளறி விட்டார் இவர். அப்படியே நூல் பிடித்துக்கொண்டு நாட்டையே ரத்த பூமியாக்கியது ஹிந்து மதவாதம். </p><br />
<p>ராஜீவ் விமர்சனத்துக்குரிய நிகழ்கால பிம்பம்-இளமை மட்டும் போதாது ,அரசியலில் கொஞ்சமாவது பாடம் பயின்று இருக்க வேண்டும் ,பெரியவர்களின் சொல்லையும் மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ராஜீவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம் .
ராஜீவ் பஞ்சாயத் ராஜ் என்கிற கனவை முழு மூச்சாக முன்னெடுப்பு எடுத்தார். தொழில்நுட்ப துறை பெரிய அளவில் நகர்வதற்கான ஆரம்ப அச்சாரங்கள் அவர் காலத்தில் போடப்பட்டவையே. லைசன்ஸ் ராஜ்யத்தை மட்டுப்படுத்துகிற பணிகள் அவர் காலத்தில் தான் தொடங்கின. தொலைதொடர்பு துறை கிராமங்களுக்கு போய் சேரும் அற்புதத்தை செய்த பி சி ஓ அவர் காலத்தில் அறிமுகமானதே.

ஷாபானு வழக்கில் முஸ்லிம்களிடம் நல்லபெயர் வாங்குகிறேன் பேர்வழி என இவர் அடித்த கூத்தால் மதவாத சக்திகளும் பீறிட்டு கிளம்பியது வலிமிகுந்த வரலாறு. இந்து மதவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது அதை முடுக்கி விடும் வகையில் அயோத்தி சிக்கலை மீண்டும் கிளறி விட்டார் இவர். அப்படியே நூல் பிடித்துக்கொண்டு நாட்டையே ரத்த பூமியாக்கியது ஹிந்து மதவாதம்.

ராஜீவ் விமர்சனத்துக்குரிய நிகழ்கால பிம்பம்-இளமை மட்டும் போதாது ,அரசியலில் கொஞ்சமாவது பாடம் பயின்று இருக்க வேண்டும் ,பெரியவர்களின் சொல்லையும் மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ராஜீவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம் .