ரூமி எனும் கவி ராட்சசன் !

ஜலாலுதீன் ரூமியை தெரியுமா உங்களுக்கு ?எழுநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் இந்த பாரசீக கவிஞரின் கவிதைகள் உலகை வசீகரிக்கின்றன.அவரின் சொன்ன புதையல் கதையை தான் நீங்கள் முகவரி படத்தில் கேட்டு இருப்பீர்கள்.அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மாற்று மொழி கவிஞர் என்கிற சிறப்புக்குரியவரும் இவரே. காதலை பற்றி ரூமி சொன்னதை தான் நம்மூரில் பலபேர் ரொம்ப லேட்டாக சொல்லி கைதட்டல் வாங்குகிறார்கள் -அவர்கள் ரூமியை காப்பி அடிக்கிறார்களா என எனக்கு தெரியாது .அவரின் ஒரு காதல் கவிதையில் லைக் திஸ் என்கிற ஒரு வரி காதலில் சொல்ல முடியாத எல்லா உணர்வையும் சொல்லாமல் அந்த வரி கவிதை முழுக்க கடத்தும்.மரணம் வாழ்வு ,தன்னை உணர்தல் ,சுபி ,தத்துவம் என எதை தொட்டாலும் அதில் அவரின் தனித்துவம் அலாதியானது .அவரின் கவிதைகளின் தலைப்புகளே கிறங்கடிப்பவை.தமிழில் அவரின் கவிதைகள் முழுமையாக மொழிபெயர்க்க பட்டுள்ளதா என எனக்கு தெரியவில்லை .அவரின் பிறந்தநாள் இன்று. 

அவரின் இரண்டு கவிதைகள் என் மொழி பெயர்ப்பில்  
சிற்பி நான் 
உருவத்தை உருவாக்குபவன் நான் 
உருகும் ஒவ்வொரு கணத்திலும் உன்னத சிலைகள் வடிக்கிறேன் நான் உன் முன்னால் அவற்றை உருகவிட்டு உயிர்க்கிறேன் நான் 
தீராத தீர்க்க சிலைகள் நூறை 
உன் ஆன்மாவால் நிரப்பி மகிழ்கிறேன் நான் 
உன் ஆசைமுகம் காணுகையில் 
அச்சிலைகளை ஆடி வரும் நெருப்பில் இடுகிறேன் நான் 
உன்னுள் உமிழ்ந்து என் ஆன்மா ஆவியாகிறது 
என் ஆன்மா உன் சுகந்தத்தை சுகித்து 
ஜீவிக்கிறது 
நான் உமிழும் உதிரத்துளி 
ஒவ்வொன்றும் உன்னோடு நான் 
மோகிப்பதாக பூமிக்கு செய்தி சொல்கிறது 
சேறும்,நீரும் நிறை வீட்டில் 
என் மனம் மங்கிக்கிடக்கிறது
மாசிலாதவளே இல்லம் வருக அல்லது 
என் இன்னுயிரை போக விடுக ! -ஜலாலுதீன் ரூமி   

மீண்டெழுதல் 

அதியின்ப அதிகாலையில் 
நான் இக்கணத்தில் காதல் கொள்ள 
மூன்று முத்தங்கள் தந்தாய் நீ 

இந்த கணம் நகர்கிறது
என உணரும் முன்னே 
கனவுகளை காதல் பொங்கும் 
இதயத்தின் இடுக்குகளில் தேடிக்கொண்டு 
தவித்தேன் !

கனவுகளை கண்ட பொழுது 
காதல் நிலா என்னை கடத்தி சென்றது 
உறுதியாக எழுந்து நிற்கையில் 
என்னிதயம் வழுக்கி உன் வார்த்தைகள் 
படும் பாதையில் பாடி விழுகிறது 

காதலுக்கும்,கசியும் உள்ளத்துக்கும் 
நடுவே எல்லாமும் பட்டு பட்டு பரிதவிக்கிறது 
பெருநினைவுகள் 

காணாத உன் கரங்களால் 
என்னை கர்வமுற வைக்கிறாய் 
கண்டடைய முடியாத உன் இதழால் 
என்னை நிறைக்கிறாய் 
தெரியாத உன்னால் திரிகிறேன் நான் ! 
என்னை உயிர்த்திருக்க வைக்கும் உன்னதமே ! 

முத்தங்கள் முடியட்டும் என நீ சொல்லும் 
காலம் வரும் 
நீ என்னை அலட்சியம் செய்யும் 
கணங்களிலும் கனிந்து காதல் செய்வேன் நான் 
கண் கவியும் கணமேனும் கண்டுகொள் என்னை 
காரிகையே !

கொஞ்சம் உருது,கொஞ்சம் வரலாறு,மிச்சம் பிரிவினை !

முசிருல் ஹசனின் JOHN COMPANY TO THE REPUBLIC-A STORY OF MODERN INDIA நூலை வாசித்து முடித்தேன். வரலாற்றை இருக்கிற ஆவணங்களை கொண்டே மறுவாசிப்பு செய்கிற காரியத்தை மிக அழகாக இந்நூலில் நண்பர்கள் மூவர் பேசிக்கொள்ளும் பாணியில் அமைத்திருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கே வரும் உருது கவிதைகள் மனதை வருடிச்செல்கின்றன. 

கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்கள் நெடுநாள் பயணம்,இந்தியாவில் உண்டாகும் வியாதிகள்,வெயில்,எக்கச்சக்க அரசுகள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு வெறும் வியாபாரத்தை மட்டும் பார்த்தால் போதும்,நாடு பிடிப்பது எல்லாம் வேண்டாம் எக்கச்சக்க கடன் என்று கேட்டுக்கொண்ட தருணங்களில் அதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் செயல் பட்டிருக்கிறது கிழக்கிந்திய கம்பெனி. 

நேருவும் காந்தியும் பாகிஸ்தானில் இருந்து வந்த மக்களை கனிவோடு அணுக வேண்டும் என்று எண்ணினார்கள். அவர்களை சந்தேகப்பார்வையோடு அணுக வேண்டும்,அவர்களை தனிக்குடியிருப்பில் தங்க வைக்க வேண்டும் என்று பட்டேல் விரும்பினார். இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையில் அவர்களை வேலைக்கு அமர்த்துவதையே நிறுத்தி வைத்திருந்திருக்கிறார் மனிதர். இன்னமும் கொடுமையாக சீக்கிய மற்றும் ஹிந்து அகதிகள் டெல்லியில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்களின் வீடுகளை தாங்கள் இழந்த வீடுகளுக்கு பழிவாங்கும் பொருட்டாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை உள்துறை வேடிக்கை பார்த்திருக்கிறது 

உருது மொழியை இஸ்லாமியர்களின் மொழி என்று வலதுசாரிகள் கட்டமைக்கிறார்கள். அதை காயஸ்தர்கள்,காஷ்மிரி பண்டிட்கள்,பஞ்சாபிகள் என்று இஸ்லாமியர்கள் அல்லாதோரும் பரவலாக பேசியிருக்கிறார்கள். மிர்ஸா காலிப் எனும் தலை சிறந்த உருதுக்கவிஞர் காசியின் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை சிலிர்த்து எழுதுகிறார். மதங்களை கடந்து மனிதத்தை வலியுறுத்துகிறார். அவரின் மரண ஊர்வலத்தில் ஷியா சுன்னி இஸ்லாமியர்கள்,ஹிந்துக்கள் என்று சகலரும் கலந்து கொண்டதே அவர் எத்தகு பார்வை கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சி . வங்கத்தில் ஆங்கில படைகளுடன் சேர்ந்து கொண்ட மிர் ஜாபர்,மிர் சாதிக் ஆகியோரை கவிஞர் இக்பால் இஸ்லாமுக்கும்,தேசத்துக்கும் அவமானத்தை கொண்டு வந்தவர்கள் என்று சாடுகிறார் 

ஆங்கிலேயரை அமைதி ஒப்பந்தம் போடுமாறு போரில் கலக்கி எடுத்த ஹைதர் அலி பற்றி சொல்லிவிட்டு மதரீதியான அடையாளம் என்பதை விட போரில் வெல்வது என்பதையே குறிக்கோளாக மன்னர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி எப்படி நிஜாம் மற்றும் மராத்தியர்கள் ஒன்றாக இணைந்து திப்புவை எதிர்த்தார்கள் என்று விளக்குகிறார். திப்பு சுல்தான் குர்நூல்,அதோனி,சவநூர்,ஹைதராபாத் இஸ்லாமிய மன்னர்களை எதிர்த்தும் போரிட்டு இருக்கிறார். ஹிந்து மன்னர்களை எதிர்த்தும் போரிட்டிருக்கிறார். திப்புவை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது,ஆங்கிலேயரை எதிர்க்க மதத்தின் பெயரால் ஒன்று திரளுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். துருக்கிய அரசை ஆதரிக்கவும் செய்தார். என்றாலும் அவர் மதவெறி பிடித்திருக்கவில்லை,அன்றைய சூழலில் அவர் மக்களை அரவணைத்து போகும் நபராகவே இருந்திருக்கிறார். அவர் அதிக கொடையை ஹிந்து கோயில்களுக்கு தந்துள்ளார்.

தயானந்த சரஸ்வதி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு மாறிவிட்ட மக்களை சுத்தி செய்து ஹிந்து மதத்தில் சேர்த்துக்கொண்டார். அவரின் எழுத்துகள் மற்றும் அவரின் சீடர் பண்டிட் லேக் ராம் எழுத்துகள் பஞ்சாபில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கட்டமைத்தது. 
இருபத்தி இரண்டு பஞ்சங்களை வெறும் இருபத்தி ஐந்து வருடங்களில் இந்தியா சந்திக்கிற அளவிற்கு இந்தியாவை சுரண்டி எடுத்தார்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் உருவாக்கிய ரயில்வேக்கள் அவர்கள் நாட்டின் வளத்தை பெருக்க பயன்பட்டது ஒருபுறம் என்றால் கிராம மக்களின் கைத்தொழில்கள் நசிந்து போயின. 
அரவிந்தர் திலகர் ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவது,ஹிந்து தேசியத்தை தூக்கி பிடித்தல் ஆகியவை ஆங்கிலேய அரசை விரட்ட உதவும் என்று நம்பினர். இது முதல் விடுதலைப்போரில் கலந்து கொண்ட பெருமளவு இஸ்லாமியர்களை சுதேசி இயக்கத்தை விட்டு தள்ளி நிற்க செய்தது. இன்னமும் குறிப்பாக மராத்திய மண்ணை மதவாதத்தின் வளரிடமாக மாற்றியது. இஸ்லாமியர்களை தேசிய நீரோட்டத்துக்கு கொண்டு வர கிலாபத் இயக்கத்தை காந்தி ஆதரிக்கிறார். 

சையது அகமது கான் இஸ்லாமியர்கள் ஆங்கிலத்தை கற்காமல்,நவீன கல்வி முறைக்குள் மதத்துக்கு எதிரானது என்று சொல்லி வராமல் இருந்ததை விமர்சிக்கிறார். அறிவியல் அறிவை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். அவர் ஹிந்துக்களும்,இஸ்லாமியர்களும் இந்திய அன்னையின் இரு கண்கள் என்றும் குறிக்கிறார். அவரை நாத்திகவாதி என்று தூற்றுகிறார்கள். மதமும்,அரசியலும் பிரிந்தே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். உண்மையில் மவ்துதி இந்தியாவில் ஷாரியா சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த காலத்தில் இப்படி இவர் பதிவு செய்கிறார். 

வட இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் பசுவதையை தடை செய்ய சட்டம் கொண்டு வருதல்,உத்தரபிரேதேச அரசு பதவிகளில் அமர தேவநாகரி லிபியில் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும் எனும் நாகரி தீர்மானத்தை கொண்டு வந்தது ஆகியன இஸ்லாமியார்களை அச்சுறுத்தி இருக்கிறது. முதல் விடுதலைப்போருக்கு பின்னர் இஸ்லாமியர்களை பதவியை விட்டு விலக்கி வைத்த ஆங்கிலேய அரசு இப்பொழுது அவர்களை கொண்டு ஒரு தனி அடையாளத்தை கட்டமைத்தது. கலாசார ரீதியாக பல்வேறு குழுக்களாக இருந்த மக்களை மத ரீதியாக வேறுபடுத்தும் வேலையை ஆங்கிலேய அரசு திட்டமிட்டு செயல்படுத்தியது. 
இஸ்லாமியர்களுக்கு தனித்தொகுதிகளை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் பெரும் பிழை செய்தது. 
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதும் ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள் ஏகத்துக்கும் நடந்தன. கிலபாத் இயக்கத்தை துருக்கி அரசின் செயல்பாடுகளே பிசுபிசுக்க செய்தது. லாலா ஹர் தயாள் முஸ்லீம் லீகுக்கு முன்னரே ஹிந்து சங்கதன்,ஹிந்து ராஜ்ஜியம்,இஸ்லாமியர்களின் சுத்தி,ஆப்கனை கைப்பற்றுதல் ஆகியவற்றில் தான் இந்தியாவின் உருவாக்கம் உள்ளது என்றார்,லஜ்பத் ராயும் அவ்வாறே இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கி உள்ளார். சவார்க்கர் இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் வந்த பின்னரே வாழ்வா சாவா போராட்டம் ஆரம்பித்தது என்று அந்த வெறுப்புக்கு இன்னமும் எண்ணெய் வார்த்து இருக்கிறார் 

தனித்தொகுதிகளை அப்பொழுது எதிர்க்காமல் பத்து வருடங்கள் கழித்து நேரு அறிக்கையில் எதிர்க்க போக இன்னமும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எண்ணத்தை இஸ்லாமியர்கள் பெற்றார்கள். அதை ஜின்னா பயன்படுத்திக்கொண்டார். காந்தி இஸ்லாமியர்களை தனி பிரிவாக பார்த்த பொழுதும் அவர்களின் கலாசார,சமூக,மொழி,பொருளாதாரஅடையாளங்களை கண்டுக்கொள்ள தவறி விட்டார். அரேபிய இஸ்லாமியர் மற்றும் இந்திய இஸ்லாமியரை ஒன்றாக பார்க்கிற தவறை அவர் செய்தார். கூடவே,முப்பத்தி எழில் வந்த இஸ்லாமியர்களை தொடர்பு கொள்ளும் இயக்கத்தை வலதுசாரிகளின் எதிர்ப்பால் காங்கிரஸ் கைவிட்டது பெரும்பிழையாக போய் நாற்பத்தி ஆறில் ஜின்னாவுக்கு பெரிய வெற்றியை தந்தது.

இஸ்லாமியர்களை நவீன போக்குக்கு கொண்டு வரும் சிந்தனையை கொண்டிருந்த அஜ்மல் கான்,அன்சாரி,ஆசாத் முதலியோரோடு நல்ல தொடர்பில் இருந்தும் அந்த எண்ணத்தை வலியுறுத்த காந்தி தவறி விட்டார். நேருவோ மதவாதம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று நம்பவில்லை. சோசியலிசம் சாதிக்கும் என்று நம்பி ஏமாந்தார்.

பீகார் மற்றும் ஐக்கிய பிரேதேசத்தில் ஜமீன்தார்களுடன் இணைந்து கொண்டு பகஷ்த் நிலங்களை எளியவர்களிடம் இருந்து நிலசுவாந்தார்கள் பெறுவதை தடுக்காமல் இருந்திருக்கிறார்கள். வர்க்க பேதத்தை போதித்தவர்களை இந்தியாவின் எதிரி என்கிறார் படேல். காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் இயக்கங்களுக்கு தொடர்பில்லை என்று நேரு அறிவித்தார். வித்தல் நகரில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் இருந்து காங்கிரசை விலக்கி வைத்தார் படேல்

. GIP ரயில்வே போராட்டத்தில் காங்கிரஸ் ஆதரிக்க மறுத்த பொழுது படேல் எப்பொழுதும் எங்களை எதிர்க்கும் உங்களை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நேருவே பூர்ஷ்வாக்களின் மனப்பான்மை காங்கிரசில் இருக்கிறது என்று தன் சுயசரிதையில் குறிக்கிறார். பம்பாய் மற்றும் மத்திய பிரவின்ஸ்கள் அரசை பத்திரிக்கைகளில் இருந்து காக்க வேண்டும் என்று விரும்பியுள்ளர்கள். அதே சமயம் வட மேற்கு ப்ராவின்ஸ்களில் நவ்பத் சவுக்தாரி முறையை நீக்கி உள்ளார்கள்,விவசாய கடனாளிகள் தீர்வு சட்டம்,கடன் தீர்வு சட்டம்,வாடகை மாற்று சட்டம்,எஸ்டேட்களின் நிலவரி சட்டங்களின் மூலம் எளியவர்களுக்கு உதவவும் செய்துள்ளார்கள். 

பிர்பூர் அறிக்கையில் சின்ன சின்ன மோதல்களை பெரிதாக்கியும்,ஹிந்து மகா சபா தான் காங்கிரசை நடத்துகிறது என்றும்,வார்தா மற்றும் வித்யா மந்திர கல்வி முறைகள் ஹிந்து தேசியத்தை காக்கும் வழிகள் என்றும்,வந்தே மாதரம் பாடல் மற்றும் தேசியக்கொடி (இக்கொடியில் இஸ்லாமியர்களின் நிறமான பச்சை இருந்த பொழுதும் ) ஆகியனவும் ஹிந்து தேசியத்தை வளர்க்கும் வேலையையே செய்யும் என்றும் குறித்து தனி தேச எண்ணத்தை நோக்கி செலுத்தி உள்ளார்கள். 

ஜின்னா மதவெறியராகவோ,மதப்பற்றாளராகவோ இல்லாமல் போனாலும் அவர் தன்னை காங்கிரஸ் முந்தைய காலத்தில் நிராகரித்ததை,ஆட்சியில் பங்கு பெற விடமால் போனதை எல்லாவற்றையும் மதத்தை கொண்டு எதிர்கொண்டார். தனி தேசம் என்பதை மத அடையாளத்தின் வழியாக கட்டமைத்தார். நேரடி செயல்பாட்டு தினத்தின் மூலம் ரத்தத்தின் மீது தன் தேசக்கனவுகளை கட்டமைத்துக்கொண்டார். கூடவே மூஞ்சே ஹிந்து மத அடையாளத்தை தாங்கிப்பிடிக்க காங்கிரஸ் ஆட்களே சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி இன்னொரு புறம் மதவெறியை ஊக்குவித்தார். எல்லாமும் சேர்ந்து பாகிஸ்தான் உருவானது ! 

வாசிக்க வேண்டிய நூல் 
விலை நானூறு 
ரோலி வெளியீடு

உயிர் காத்த உத்தமர் பாஸ்டர் !

லூயிஸ் பாஸ்டர் மறைந்த தினம் இன்று .மனிதர்கள் கொத்து கொத்தாக நோய்களில்
செத்துப்போவது கடவுள் தரும் தண்டனை என பலகாலம் நம்பிக்கொண்டு இருந்தனர்
மக்கள் . ராபர்ட் ஹூக் நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப்பில் கண்டிருந்தாலும்
நோய்களுக்கு இந்த கண்ணுக்கு தெரியாத ஜீவன்கள் காரணம் என யாரும்
நினைக்கவில்லை .

திராட்சைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பீர் சீக்கிரம் கெட்டுப்போனது .
விடாது ஆய்வு செய்தார் பாஸ்டர் .நொதித்தலுக்கு காரணமான கண்டறிந்தார் .
நோய்களை பரப்பும் நுண்ணுயிரிகளை கண்டறிந்து நுண்ணுயிரி கோட்பாட்டை
வெளியிட்டார் . நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும்
அவற்றை கண்ணால் காண முடியாது மைக்ராஸ்கோப் கொண்டே அவற்றை காண முடியும்
என்றும் சொன்னார். குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றை
கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் என்றும் சொன்னார்.  .பாலை
கெடாமல் காக்க நன்றாக சூடாக்கி உடனடியாக குளிர வைக்கும் [பாஸ்சரைசேஷன்
இவர் உருவாக்கியதே .

வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலை அக்காலத்தில் உண்டு செய்திருந்தது.
வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு நீருக்கு பயந்து
ஒடுங்கி இருந்து பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். நன்றாக பழுக்க
காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையை கொத்தாக வெட்டி எடுத்தல் என ரத்தம்
உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டன. ஒன்றும்
நடக்கவில்லை. மனிதர் பல நாய்களின் பின்னர் உயிரை பணயம் வைத்து
திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே  நோய்க்கு காரணம்
என்று உணர்ந்தார். நாயின்  உமிழ் நீரைத் தானே உறிஞ்சி, மருந்தாகப்
பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பெற்ற பதினான்கு இடங்களில்
கடிபட்டிருண்ட ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயதுச் சிறுவனின் உடலில்
செலுத்தி பதினான்கு நாளில் அவனை குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு
எதிரான தடுப்பூசி உருவானது.

மருத்துவர்கள் கையுறை அணிவது,அறுவை சிகிச்சை கத்திகளை ஸ்டெரிலைஸ் செய்வது
ஆகியவற்றையும் இவர் வலியுறுத்தினார். உயிர் இழப்பை இதனால் அதிக அளவில்
தடுக்க முடிந்தது .

ஆந்த்ராக்ஸ் நோயும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கால்நடைகள் மொத்தமாக
செத்து விழுந்தன. அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளை கொன்று மீண்டும்
அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் மனிதர். ஐரோப்பா
முழுக்க பட்டுபுழுக்கள் செத்துக்கொண்டு இருந்தன. நோய் வாய்ப்பட்ட பட்டு
புழுக்களை பிரித்து வையுங்கள் என்று அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட
பட்டு உற்பத்தி மையங்கள் தப்பித்தன. இத்தாலி தேசத்து பட்டு உற்பத்தி
நிறுவனத்துக்கு இவரின் பெயரையே சூட்டினார்கள்

  இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்கு
போனது என்றால் இவரை திருமண நாளன்று காணவில்லை. எங்கெங்கும்
தேடிப்பார்த்தார்கள். ஆளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார்
என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கி
போனார்கள்.அங்கே கூலாக ஆய்வு செய்து கொண்டிருந்தார். “உனக்கு கல்யாணம்
இன்னைக்கு !” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். அவரை நினைவு
கூர்வோம்

பகத் சிங் எனும் மாவீரன் !

பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள்
பிரமிப்பானவை.

பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர்
வந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ?” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.

லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது

ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து
முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.
புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில்
சொன்னார் பகத் சிங்.

வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள்
தோழர்கள்.

பகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.
அங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.

சுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு
பின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன்
தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்

பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின்
விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் !” என்று குறிக்கிறார்

சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது
பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.-நன்றி தமிழ் தி ஹிந்து 

அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை
நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று
கேட்கிறீர்களா ? “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன்
“என்றார் . “ஏன்?” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன்
உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!” என்றார் .அவர்
கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான் 

நாகேஷ் எனும் நாயகன் !

நாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ்
என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம்
பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில்
வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த
நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக
தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை. மனிதரை போலீஸ் கூப்பிட்டு கோப்பையை
திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது.

அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும்
தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து
திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை ஓனர் என்று தெரியாமல்
கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த
ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் இவர்

தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தன் மற்றும் இவர்
இருவரும் காத்திருக்க நேர்ந்தது காரில். என்ன பண்ணலாம் என்று
யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று
கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் கழட்டி விட்டு அண்டர் டிராயர்
உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே
பணம் சேர்ந்திருக்கிறது

‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா
அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ், தில்லானா
மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாகஇருக்கும்
என்று சொல்லப்பட்ட வைத்தி கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார்
மனிதர்.

மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே”
என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை
அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி
கதாபாத்திரம். கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார்
சிவாஜி

மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி
சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’
என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக
நடித்திருக்கிறார்” என்றார்.

நாகேஷ் நடிப்பை பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரின்
அனுபவி ராஜா அனுபவி படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த
மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும்
மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர்
கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை
அதிரவைத்தார்.

மதுபழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும்
திரையில் மின்னினார் அவர். அவரின் நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை
சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள கதவை
மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார்.
அப்படித்தான் அவரின் பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார்

‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ்,
தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்கும் நாகேஷ் இல்லாத வசனமான
‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி
அதிரவைத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆக்ஷன் என்று பாலச்சந்தர்
சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் !

“உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு
டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட
பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு
ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன்
வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார்
அவர் அது தான் நாகேஷ் ! நம்மவர் படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர்
விருதை தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை
தேடிவரவில்லைநாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ்

  1. தேடிவரவில்லை

சாகும்வரை காதலிப்போம் சூப்பர் மேன் !

ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் என்னென்ன இருக்கும்? ஹீரோ முதலில் கலக்கி எடுப்பார். பின்னர் தோல்விகள், அதிலிருந்து மீண்டு வருவார்… இதானே? நடுவில் கொஞ்சம் காதல், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கலந்துவிட்டால் ஒரு சூப்பர் ஹிட் படம் தயார். உண்மையான சூப்பர் ஹீரோவில் ஒருவர் கிறிஸ்டோபர் ரீவ்ஸ்.

சின்ன வயதிலேயே சாகசம் என்றால் மனிதருக்கு ரொம்பவே விருப்பம். அட்டைக்கத்திகள் செய்துகொண்டு சகோதரருடன் சண்டை, பனிச்சறுக்கு, ஒரு குட்டி விமானத்தில் ஏறி ஹாயாக அட்லாண்டிக் கடலின் மீது ஒரு த்ரில் பயணம்… வாழ்க்கையில் புதிதாக எதையாவது செய்ய வேண்டும்… அது தான் மனிதரின் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது.

சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டார். சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க நிறைய பேர் யோசித்தார்கள்; சூப்பர்மேன் வேடத்தில் நடித்த பலர் அகால மரணம் அடைந்திருந்தார்கள். அதற்கு முன் ஜார்ஜ் ரீவ்ஸ் என்பவர் குண்டடிபட்டு இறந்திருந்தார். நம்ம ஹீரோவுக்கு தான் சாகசம் பிடிக்குமே. விண்ணப்பம் போட்டுவிட்டார். சில்வெஸ்டர் ஸ்டால்லோன், கிளின்ட் ஈஸ்ட்வுட் முதலிய

மாபெரும் நாயகர்களை பின்னுக்கு தள்ளி ‘சூப்பர் மேன்’ வாய்ப்பைப் பெற்றார் நடிப்பில் ஆக்ஷனில் பின்னி எடுப்பார் இவர்; டூப் போடலாமே என்றால், “நோ தேங்க்ஸ்!” என்று திடமாக ஒரு வரியில் பதில் வரும். சூப்பர் மேன் படத்தை இயக்குகிற அளவுக்கு மனிதர் வளர்ந்தார். ஹீரோ வேடம் என்றில்லை, எந்த வேடம் நல்ல தீனி என்று தோன்றினாலும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிடுவார்.

முதல் திருமணம் முறிந்து போய்விட, ஒரு ஹோட்டலில் பாடிக்கொண்டு இருந்த டானாவிடம் கொஞ்சம் காதல், ஒற்றை ரோஸ், ட்ரேட்மார்க் புன்னகை என்று போய் காதலை சொன்னார். அவரும் ஓகே சொன்னார். இப்படி ஒரு ஜோடி இல்லை என்கிற அளவுக்கு உலா வந்தார்கள்.

சூப்பர் மேன் பட ஷூட்டிங் – இவருக்கு மிகவும் பிடித்த குதிரையேற்ற காட்சி. குதிரை கொஞ்சமாக திணறியது; மனிதர் தலைகுப்புற விழுந்தார். முதுகெலும்பு உடைந்து போய்விட்டது. டாக்டர்கள் கஷ்டப்பட்டு ஓட்ட வைத்தார்கள். நுண்ணிய அறுவை சிகிச்சை. எல்லாம் போய் விட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள். காரணம் கழுத்துக்கு கீழே ஒன்றும் அசையாது; சூப்பர் மேன் இப்பொழுது சோக மேன் என்று பத்திரிகைகள் எழுதின. டானா வந்தார்; கரங்களை பற்றிக்கொண்டார். மனிதருக்கு ஒன்றும் உணர முடியாது. கழுத்துக்கு கீழே உணர்ச்சியே இல்லையே. கண்கள் பேசின, “நானிருக்கிறேன் உங்களுக்கு!” என்றது அவரின் பார்வை.

ஒன்பது வருடம் இப்படித்தான் வாழ்க்கை போனது. நடுவில் ஒரு முறை இதயம் ஸ்ட்ரைக் பண்ணி நின்று விட்டது. போராடி மீட்டார்கள் இவரை. அரிதிலும் அரிதான ரத்த குறைபாடு வேறு துரத்திக்கொண்டு இருந்தது. புன்னகை மட்டுமே ரீவ்ஸ் முகத்தில்.. சூப்பர் ஹீரோ பாருங்கள்!
'சூப்பர் மேன்' படத்தில் கிறிஸ்டோபர் ரீவ்ஸ்
என்ன பண்ணப்போகிறார் மனிதர் என்று பார்த்தால் படம் இயக்க கிளம்பிவிட்டார். ‘In the Gloaming’ என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். எலும்பு மஜ்ஜை குறைபாடு வேறு குடைய ஆரம்பித்த நிலையில் ரீவ் அறக்கட்டளையைத் தொடங்கி ஸ்டெம் செல் ஆய்வுக்கு பல மில்லியன் டாலர்களை திரட்டிக் காண்பித்தார். நம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் எழுதினார். தன்னம்பிக்கை பொங்க போகிற இடமெல்லாம் பேசினார், “ஒன்றும் நடக்கவில்லை எனக்கு!” என்று கம்பீரமாக சொல்வார்.
கிறிஸ்டோபர் ரீவ்ஸ்
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விழா, அதற்குப் பிறகு ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்று இவரை பேச அழைக்காதே இடமே இல்லை என்கிற சூழல் உருவானது. மாற்றுத் திறனாளிகளுக்கான படத்திற்கு கம்பீரமாக குரல் கொடுத்து எம்மி விருது வென்றார் . தன்னைப் போலவே முடங்கியும் ஜெயித்த ஒரு மனிதனின் கதையை The Brooke Ellison Story எனும் படமாக இயக்கினார். எல்லா

இடத்திலும் டானா கண்டிப்பாக கூட இருந்தார். மாரடைப்பு வந்து இறப்பதற்கு முன் கூட Everyone’s Hero என்கிற படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார்.

“நம்முடைய பெரும்பாலான கனவுகள் ஆரம்பத்தில் நிச்சயம் நிறைவேற முடியாததுபோல் தோன்றும். சற்று முயன்றால் அவை நனவாகலாமே என்று தோன்றும். பின்னர் நம் முழு பலத்தையும், தன்னம்பிக்கையையும், வரவழைத்து முயலும்போது அதே கனவுகள் நனவாக முடியாமல் போகாது என்ற நிலை ஏற்படும்!” என்று சொல்லி சாதித்து காண்பித்த இவர் இப்படி இருக்க காரணமான டானா, இவரின் மரணத்துக்கு பின்னும் இவரின் பணியை தொடர்ந்தார். டானா இவரை விட்டு இக்காலத்தில் நீங்கவே இல்லை. “எது தங்களை செலுத்தியது ?” என்று டானாவிடம் கேட்ட பொழுது, “எல்லையில்லா காதல் மற்றும் எதையும் பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை “ என்றார்.

இதுவல்லவோ காதல்!

(செப்.25 – கிறிஸ்டோபர் ரீவ்ஸ் பிறந்தநாள்)

பழமைவாதிகளின் போலி முகமூடி !

அண்மைக் காலங்களில் மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்ற பாலியல் சுதந்திரம், திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களை ஊக்குவித்தல் என்பன தமிழ்நாட்டில் பேசப்படுவதன் வாயிலாக குடும்ப அமைப்புக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. என்று தினமணி கட்டுரையில் ராமதாசு எழுதி உள்ளார். கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்று இவர் வருத்தப்படுவதை எப்படி பார்க்கலாம் ? ஆண்கள் மட்டுமே கல்வி பெற்ற,தரையை பார்த்து நடந்த,குடும்பத்தின் சகல பாரங்களையும் சுமந்து தன்னுடைய விருப்பங்களை சொல்லக்கூட வழியில்லாத நிலையில் இருந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் மேற்குலகின் தாக்கத்தில் எழுந்த சம்மான் சட்டங்கள் இடம் கொடுத்தன என்பதை மறக்க கூடாது. திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல் என்பது நம் பண்பாட்டுக்கு எதிரானது என்பதும் குடும்ப அமைப்பை சீர்குலைப்பதும் என்பது சரியான வாதமே. ஆனால்,விருப்பமே இல்லாமல் ஆட்டைப்போல காட்டி உடனே கட்டிவைக்கும் அல்லது பெரும்பாலும் பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் வாயை திறக்க கூடாது என்கிற ரீதியிலேயே நகரும் குடும்ப முறையின் சிக்கல்களை நாம் பேசவே மாட்டோம் இல்லையா ? 

விவாகரத்து என்கிற உரிமை மட்டும் அக்காலத்தில் பெண்களுக்கு இருந்திருந்து,கூடவே பொருளாதார பலமும் இருந்திருந்தால் கோர்ட் படியேறி இருப்போர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்திருக்கும். கடைசி வரியில் தான் அய்யாவின் சாதிப்பெருமை கொப்பளிக்கிறது;பெற்றோர் அனுமதி பெறாமல் திருமணம் செய்வது குடும்ப அமைப்பை சீர்குலைக்கிறது என்று சொல்லும் இவரின் தொண்டர்கள் எத்தனை குடும்பங்களின் வாழ்வை நாயக்கன்கொட்டாயில் காலி செய்தார்கள் என்று சொல்லியிருக்கலாம். குடும்ப அமைப்பை காக்க பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுதல்,அவர்களை பொருளீட்டும் இயந்திரமாகவோ அல்லது தம்மின் நிழல்கள் என்று மட்டுமே நம்பிக்கொண்டு முடிவுகள் எடுப்பதோ தீர்வாகாது. 

மனதுக்கு பிடித்தவருடன் வாழ பிள்ளைகளை விடாமல் மானம் போய்விடும்,தற்கொலை பண்ணிப்பேன்,அவன் வேற ஜாதி என்றெல்லாம் பேசும் இவர்கள் கட்டிக்காக்கும் குடும்ப அமைப்பு சந்தோசத்தை அவர்களுக்கு தருகிறதா என்கிற கேள்வியை இவருக்கு முன் வைக்க வேண்டி இருக்கிறது. முதிர்ச்சி நிறைந்த காதல் அவசியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை;அதை முன்வைக்கும் பழமைவாதிகளின் போலி முகமூடியை அதே சமயம் விமர்சிக்காமல் இருக்க முடியாது.

ஓரங்களில் …

ஓரங்களில் கசியும் குவளை
தேநீர் நீர்த்துளி போல
மீண்டு நகர்கிறன பொழுதுகள்

சத்தம் மிகுந்த சாலையின்
ஓரத்தில் மரத்தில் தூளி கட்டி
அன்னை பாடும் கீதம் என்னவாக இருக்கும் ?

சாலையோரம் சிதறிக்கிடக்கும்
பிணங்களின் குருதியில் கசியும்
சொற்கள் யாருக்கானவை ?
அடிக்கும் அலைபேசியின் ஓரத்தில்
வழியும் மவுனம் எதற்கானவை ?

கடையோரங்களில்
ஆயிரம் புத்தர்கள் சோறு தேடி
நிற்கையில் சுஜாதாக்கள்
எந்த பொந்துகளில்
அழுகையை தெளிக்கிறார்கள் ?

ஓரங்களில் சிந்தாமல்
மடிக்கப்படும் பொட்டலத்தாளில்
எப்பிள்ளையின் கல்வி
குமுறி மரித்ததோ

சேலையின் ஓரங்களில்
மறைந்துகொள்ளும் மழலைகளுக்கு
அம்மாக்களின் வெட்டவெளி
உலகில் நிகழும் போர்கள்
தடுக்கும் யுக்தி தெரிவதே இல்லை
கைதட்டி தூங்கிப்போகின்றன அவை

ஓரம் ஓரம் என்று நகர்த்தி
ஓரமதில் ஒரு சொட்டு
விஷம் வேண்டி கிடக்கும் அவர்களின்
ஓரங்க நாடகத்தின் நடிகர்கள் யாரோ ?
யாவும் நாமே !

தகிக்கும் தெலுங்கானாவின் கதை இது !

BATTLEGROUND TELENGANA நூலை வாசித்து முடித்தேன். கூடவே ஆர்வம் தாங்காமல் ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கையையும் படித்து முடித்தேன். காகதியர்களின் காலத்தில் தான் தெலுங்கு என்பது தனி அடையாளமாக உருவெடுத்து உள்ளது. தொடர்ந்து முகலாயர்கள்,விஜயநகர் அரசுகள்,ஆங்கிலேயர் ஆகியோரோடு போரிட்ட மனோபாவம் தெலுங்கானா மக்களுக்கு இருந்திருக்கிறது. இவர்களின் பகுதியை விட ராயலசீமா பகுதியில் சில மாவட்டங்கள் குறைவாக வளர்ந்திருந்தாலும் இவர்களின் இயக்கம் இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு இது முக்கிய காரணம் 

நிஜாம் காலத்தில் உருது மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி,கல்வியறிவு வெறும் ஆறு சதவிகிதம்,எல்லா பதவிகளுக்கும் லஞ்சம் மட்டுமே திறவுகோல். கூடவே முல்கி விதிகள் அமலில் இருந்தன,அதில் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கே முன்னுரிமை என்று விதி போட்டு இருந்திருக்கிறார் மனிதர். ஆந்திரா உருவான பொழுது சென்னை கிடைக்காமல் போனதால் ஹைதராபாத் சமஸ்தானம் கிடைக்கட்டும் என்று முயன்று அதை பெற்று இருக்கிறார்கள்.

மாநில மறுசீரமைப்பு கமிட்டி ஆறு வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடத்தி தெலுங்கனா மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிரித்து கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் விடுதலைக்கு முந்திய ஒரு வருடம் துவங்கி ஆறு வருடம் நிலப்பிரபுக்களுக்கு எதிராக போராடி உள்ளார்கள். அடுத்த தேர்தலில் பெரிய வெற்றியையும் அவர்கள் பெற்றுள்ளார்கள். காங்கிரஸ் அரசு அவர்களை கட்டுப்படுத்த நிஜாம் பகுதியை இணைக்க முனைந்துள்ளது. 

இணைந்த பிறகு முல்கி விதிகள் தொடரவேண்டும்,ஐந்தில் இரு அமைச்சர்கள் தங்கள் பகுதி ஆளாக இருக்க வேண்டும்,வேலைவாய்ப்பில்,கல்வியில் தங்கள் பகுதியில் தாங்கள் முன்னுரிமை பெற வேண்டும் என்று ஒத்துக்கொண்டு ஜெண்டில்மான் ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளார்கள். ஆனால்,ஒப்பந்தத்தை மீறி அரசுகள் நடந்துகொண்டு இருந்திருக்கின்றன. இவர்கள் பகுதியில் ஆங்கில அறிவு இல்லாததை பயன்படுத்திக்கொண்டு இவர்களின் வேலையை மற்ற பகுதி ஆட்கள் முல்கி விதிகளை மீறி அள்ளிகொண்டார்கள். 

அதற்கு ஆரம்பம் வைத்த புள்ளி ஆறாயிரம் ராயலசீமா ஆட்கள் ஈ.பி துறையில் தெலுங்கானா பகுதியில் வேலை பார்த்ததை முல்கி விதிகளின் கீழே தடை செய்ய முடியாது என்றிருக்கிறது சுப்ரீம் கோர்ட். இருந்த வருத்தங்கள் சேர தெலுங்கானா போராட்டம் சரியாக நாற்பத்தி நான்கு வருடங்களுக்கு முன் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கானா பிரஜா சமிதி என இணைந்து போராடி உள்ளார்கள். பதினைந்து எம்பி தொகுதிகளில் பத்தை வென்று இருக்கிறார்கள். இவர்களின் தலைவர் சென்னா ரெட்டி இந்திராவுடன் ஒப்பந்தம் போட்டு தனி பட்ஜெட்,முல்கி விதிகளின் தொடர்ச்சி,பொறியியல் கல்வி,கனரக தொழில்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றுக்கொண்டு தெலுங்கானா கோரிக்கையை குழிக்கு அனுப்பிவிட்டார். 

கோர்ட் முல்கி விதிகளை அப்படியே தொடர்கிற வகையில் அரசு போட்ட சட்டம் செல்லும் என்று இப்பொழுது சொல்ல ஆந்திரா பற்றிக்கொண்டது. ஜெய் ஆந்திரா இயக்கம் தோன்றி இருக்கிறது,அதன் விளைவாக முல்கி விதிகளை நீக்கி கூடவே தெலுங்கானா பகுதி கமிட்டி கலைக்கப்பட்டு உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று சொல்லிவிட்டார்கள். எதிர்த்து போராட சக்தியில்லாமல் அமைதி காத்தார்கள் மக்கள். முன்னே பதினைந்து வருடங்கள் தெலுங்கானா பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்கிற விதியை நான்கு வருடங்களாக குறைத்தது புதிய சட்டங்கள். 

கூடவே இவர்களின் மொழியை இரண்டாம் ரக மொழியாக பிற பகுதி ஆட்கள் பார்த்திருக்கிறார்கள்,இவர்களுக்கு நன்றாக வரும் ஹிந்தி மொழியில் வெற்றி பெற பதினெட்டு மதிப்பெண்ணும் தெலுங்கில் வெற்றி பெற முப்பத்தைந்து மதிப்பெண்ணும் என்று விதி வேறு. சினிமாவில் தொடர்ந்து இப்பகுதி மக்களே வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களின் பொம்முலு,பொட்டிகாமு முதலிய பண்டிகைகளை அரசு தன்னுடைய விழாவாக கருதி விடுமுறை அறிவிக்கவே இல்லை. இவர்களின் விடுதலை தினமும் கொண்டாடப்படுவதில்லை. 

கோதவரி,கிருஷ்ணா நதிகளின் பலன்களை ராயலசீமா,கடலோர ஆந்திர பகுதி ஆட்கள் அனுபவிக்க இவர்கள் பகுதியில் நீர்பாசன வசதிகளை நீர்க்க விட்டு விவசாயத்தை அழித்து உள்ளார்கள். போலாவரம் எனும் மற்ற பகுதிக்கான திட்டம் வேகமாக நகர இவர்களுக்கு பயன்தரும் இச்சம்பள்ளி இடிச்சபுளியாக அமர்ந்திருக்கிறது. ஐ டி துறை மற்ற வேலைகளை மற்ற பகுதி ஆட்கள் ஆங்கில அறிவால் அள்ளிக்கொண்டு போகிறார்கள். ஹைதராபாத் பகுதி நிலங்களை ரெட்டிகள் மற்றும் கம்மாக்கள் ஆள்கிறார்கள்,கூடவே எம் ஐ எம் கட்சியும்,இவர்களுக்கு தான் விடுதலை இல்லை. 

கல்விக்கூடங்களும் இவர்கள் பகுதியில் அமைய இருந்தால் அதை தள்ளிக்கொண்டு போய் இருக்கிறார்கள். இவர்களின் தெய்வ வழிபாடுகளும் நக்கலுக்கு உள்ளாகிறது. வருமான வேறுபாடு மிக அதிகம் உள்ள பகுதியும் இதுவே. எல்லாமும் சேர்ந்து வளர்ச்சியை காணாமல் செய்திருக்கிறது. ஹைதராபாத் மற்றவர்களின் ராஜ்யம் ஆகி இருக்கிறது. தனிக்கட்சி ஆரம்பித்து சந்திரசேகர ராவ் மீண்டும் கிளர்ச்சியை துவங்கி உள்ளார். அவ்வப்பொழுது ஒரு நாள் உண்ணாவிரதங்கள் இருந்த அவர் ஒரு முறை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று தகவல் வர,ஒஸ்மானியா (இங்கே பயிற்று மொழி உருது ) பல்கலை பிள்ளை தீக்குளித்து இறந்து போக மீண்டும் போராட்டம் பொங்கி உள்ளது. 

ப.சிதம்பரம் தெலுங்கானா உறுதி என்று சொல்லி பல்டி அடித்து பின் தற்பொழுது தெலுங்கானா கிடைக்கும் என்று உறுதி தந்திருக்கிறார்கள். 
மடிகாக்கள் எனும் தலித் மக்கள் மாலாக்கள் எனும் தலித் மக்களால் வளர முடியாமல் தடுக்கப்படுவதால் அவர்களும்,கம்மாக்கள் மற்றும் ரெட்டிகள் நகர்த்தும் ஆந்திர அரசியலை விட்டு தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் தெலுங்கானா இருக்கும் என்று சிரஞ்சீவியின் ஜாதியான காப்புகளும் ஆசைப்படுகிறார்கள். தெலுங்கானா நெடுநாள் கனவு !

கின்ஷுக் நாக் ஹார்பர் காலின்ஸ் வெளியீடு 
புத்தகம் வாங்கித்தந்த அண்ணாமலைக்கு நன்றிகள் 

கச்சத்தீவு-கண்ணீர் தீவு !

கச்சத்தீவு-கச்சத்தீவு-தமிழக மீனவர்களின்  தன்னுரிமைப் போராட்டம்எனும் அண்ணன் ஆர்.முத்துக்குமாரின் புத்தகத்தை வாசித்து முடித்தேன். கச்சதீவு சிக்கலை இவ்வளவு ஆழமாக பதிவு செய்யும் முதல் நூல் இதுவே என்று சொல்லலாம். வியாபாரம் செய்ய வந்த டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆட்கள் இலங்கையை கைப்பற்றி கொள்கிறார்கள். ராபர்ட் நாக்ஸ் எனும் அதிகாரி உருவாக்கும் வரைபடத்தில் கச்சதீவு ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.

கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் பகுதியாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. அவ்வப்பொழுது சிலர் அதை குத்தகைக்கு எடுக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. மெட்ராஸ் மாகாண அரசு மீன்பிடி வசதிக்காக அதை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. விக்டோரியா மகராணி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் மிக தெளிவாக ராமநாத சமஸ்தானத்தின் ஒரு பகுதி கச்சத்தீவு என்று பதிவு  செய்யப்பட்டுள்ளது.. எண்ணற்ற ஆவணங்கள் அதையே சொல்கின்றன.

தொண்ணூறு வருடங்களுக்கு முன் இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள்,இலங்கையின் பிரிட்டிஷ் அதிகாரிகள் சந்தித்துக்கொண்ட பொழுது கச்சத்தீவு எங்களின் சொத்து என்கிறது இலங்கை குழு. அப்பொழுது அதைப்பற்றி தெளிவான தயாரிப்போடு வராத இந்திய குழு மீன்பிடி உரிமையை மட்டும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறது.

விடுதலைக்கு பின்னர் இலங்கை தொடர்ந்து கச்சத்தீவு தங்களின் பகுதி என்று அவ்வப்பொழுது சொல்லி வந்ததோடு இந்தியா அங்கே ராணுவ தளம் அமைக்கவும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. தமிழக அமைப்புகள் எவ்வளவோ சொல்லியும் மத்திய அரசு இது சார்ந்து தீவிரமான எதிர்ப்பை எப்பொழுதும் பதிவு செய்யவே இல்லை. கச்சத்தீவு சார்ந்து விவாதங்கள் வந்த பொழுதெல்லாம் தகவல்கள் இல்லையென்று நேரு,இந்திரா இருவரும் கையை விரித்து உள்ளார்கள்.

வங்கதேச உருவாக்கம்,போக்ரான் குண்டு வெடிப்பு எல்லாமும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை சர்வதேச அளவில் உருவாக்க இலங்கை தலைப்பொறுப்பு வகித்த ஐ.நா குழுவின் முன் பாகிஸ்தான் தீர்மானம் ஒன்றை கொண்டு வர இந்தியாவை காப்பாற்றி இருக்கிறது இலங்கை. அதற்கு நன்றிகடனாக கச்சத்தீவை நாடாளுமன்றத்தின் அனுமதியோ,தமிழக அரசின் விருப்பத்தையோ பெறமால் இலங்கை அரசுக்கு தாரைவார்த்து உள்ளார்கள். தமிழர்கள் அங்கே சென்று வரவும்,காலங்காலமாக நடக்கும் அந்தோனியார் விழாவில் பங்குபெறும் உரிமை மட்டும் இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

பின்னர் செயலாளர்கள் மட்டத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் மீன்பிடி உரிமைகள் தடை செய்யப்பட்டு மொத்தமாக கச்சத்தீவு இலங்கை வசமானது. பெரு பாரி யூனியன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒரு பகுதியை வேறொரு நாட்டுக்கு கொடுக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற அனுமதி வேண்டும் என்கிற விதி பின்பற்றப்படவில்லை. கூடவே சர்வதேச கோர்ட்களில் கொடுக்கப்பட்ட மின்கொயர்ஸ் மற்றும் கிளிப்பர்ட்டன் தீவு சார்ந்துதீர்ப்புகள் ஆவணங்கள் ஒரு நாட்டின் பகுதி என்று சொன்னால் மற்றும் அதிகாரிகள் அல்லது மக்கள் தொடர்ந்து போகாமல் இருந்தாலும் அப்பகுதி பாரம்பரிய உரிமை கொண்ட நாட்டுக்கே சொந்தம் என்கிறது. அரசோ அதை எதையும் கணக்கில் கொள்ளவில்லை. அரசியல் காரணங்கள் என்று சமாளித்து உள்ளார்கள். கூடவே வாட்ஜ் பேங்க் பகுதியில் மீன்பிடிக்க இலங்கைக்கு அதை குத்தகைக்கு விட்டுள்ளார்கள்.

அறுநூறு தமிழக மீனவர்கள் கடந்த முப்பது ஆண்டுகாலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். நம்மின் தீவிர எதிரி நாடான பாகிஸ்தான் கூட அப்படி செய்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர் கேரளாவை சேர்ந்த மீனவரோடு சேர்ந்தது இறந்து போனதால் கவனம் பெற்றது அது. இல்லையென்றால் மீன்கள் இறப்பது போலவே தமிழர்களின் மரணம் எப்பொழுதும் போல கடந்திருக்கும் என்பதே உண்மை. தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தாலும் மத்திய அரசை மாநில அரசுகள் ஒன்றும் செய்ய முடியாது என்கிற நிலையில் இந்திரா ஆடிய ஆட்டத்தின் கோர விளைவே கச்சத்தீவு தாரைவார்ப்பு.

வாசிக்க வேண்டிய நூல்

சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு

விலை ரூபாய் நூறு