சூழலியல் – எங்கே போகிறோம் நாம் ?


வானில் பறக்கும் புள்ளெல்லாம் எனும் தியோடர் பாஸ்கரன் அவர்களின் கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தேன். ஏற்கனவே  வாசித்திருந்த கட்டுரைகள் என்றாலும் முழுமையாக ஒரே மூச்சில் வாசிப்பது தனி அனுபவம் தான். இந்தியாவின் வர்த்தகத்தை மொத்தமாக முறித்துப்போட்டு அதன் வளத்தை சூறையாடிய ஆங்கிலேயர் எப்படி இங்கே இருந்த எண்ணற்ற மரங்களை வெட்டிபோய் போர்களில் ஈடுபடும் கப்பல்கள் செய்ய பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும்,மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் போட்டி போட்டு பல்லுயிரிகளை அழித்து ஒழித்தார்கள் என்பது நெஞ்சை கனக்க வைக்கிறது. நீர்நிலைகளில் பறவைகள் இருந்தால் அந்த நீர்நிலை மாசுபடவில்லை என்று அர்த்தம். அப்படி எத்தனை நீர்நிலைகள் இருக்கின்றன ? சேலத்தின் பேருந்து நிலையம் எழுந்தது பெரிய ஏரி இருந்த இடத்தில் ; இப்படி எத்தனை நீர் நிலைகள் காணடிக்கப்பட்டுள்ளன ?

பின்ச் பறவைகளின் அலகை பார்த்து தான் டார்வின் பரிணாமக்கொள்கையை வகுத்தார். அப்படியில்லாமல் போயிருந்தால் கடவுள் தான் படைத்தார் என்று இன்னமும் நெடுங்காலத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்திருப்போம். இதைவைத்து பின்ச்சின் அலகு என்கிற நூல் எழுதப்பட்டு அதற்கு புலிட்சர் பரிசு வேறு கிடைத்திருக்கிறது. காடுகளை மனிதரின் செயல்பாடுகளே பெரும்பாலும் தீக்கு இரையாக்குகின்றன அதிலும் இந்தியாவில் அப்படி நடந்த அற்புதமான காட்டு வளத்தை எப்படி இழக்கிறோம் என்பது அதிரவைக்கிறது. பறவைகளின் வலசை பற்றிய கட்டுரை விறுவிறுப்பானது. உலகின் இரு முனைகளை வெறும் ஒன்பதே நாட்களில் கடக்கும் பறவைகள் ; அவற்றின் பாதையை காட்டும் skywalk படங்கள் ஆகியன வியப்பைத்தரும் 

பிராணி நலன்,விலங்குரிமை,காட்டுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை போட்டு குழப்பி கொள்கிறோம் நாம் என்கிற அற்புதமான கருத்தை பதிகிறார் ஆசிரியர் . வீட்டுப்பூனைகள் எல்லாவற்றுக்கும் கருத்தடை செய்ததை பெல்ஜியம் செய்தது போல நாய்கள் சார்ந்து இங்கே செயல்படவேண்டும் என்றும் பதிவு செய்கிறார் . 

ஓங்கில் என்று டால்பினை பண்டைக்காலத்தில் அழைத்தவர்கள் நாம் ; சூழலியல் சார்ந்து நிலங்களையும் வகுத்திருந்த  நாம் இன்றைக்கு பதினாறு சதவிகிதம் கூட காடுகளை கொண்டிருக்கவில்லை. ஒரே ஒரு மரத்தை பெரிய பரப்பில் பயிரிட்டும் தவறு செய்கிறோம் . அலையாத்தி காடுகள் என்று நம்மிடம் இருந்த வழக்குசொல்லை,கருநாகம் என்று நாம் அழைத்த பாரம்பரியத்தை அறியாமலே கடக்கிறோம். முட்டையில் இருந்து ஆம்லேட் வரும் என்றும்,வீடுகள் விலங்குகளிடம் இருந்து காக்க என்றும்,பாம்புகள் நம்மின் எதிரிகள் எனவும்,பூச்சிகள் அடித்துக்கொல்லவேண்டியவை என்றும் கருத்தாக்கம் விதைக்கும் நாம் எப்படி அவற்றை சரி செய்ய போகிறோம் ? 

 
சூழலியல் கல்வியை அப்படியே மேற்கின் தாக்கத்தில் பிரதி எடுக்கிறோம். எளிமையான நடையில் அமையாததுடன், என்னென்ன தீங்குகள் விளைந்துள்ளன என்றும் சொல்லித்தருவதில்லை. இங்கே இருந்து தான் மணல் கொள்ளையர்கள்,நீர் வியாபாரிகள்,மரக்கடத்தல் காரர்கள் உருவெடுக்கிறார்கள் என்பதை நாம் கணக்கிலேயே எடுப்பதில்லை என்பது நியாயமான வாதம். அவசியம் வாசிக்க வேண்டிய நூல் 
 நூல் : வானில் பறக்கும் புள்ளெல்லாம் 
விலை : ரூபாய் 115 
உயிர்மை பதிப்பகம் 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s