காதல் தாஜ்மகால் தந்த ஷாஜகான் !

ஷாஜகானின் நினைவுதினம் ஜனவரி இருபத்தி இரண்டு  ; வரலாற்று ஆசிரியர்கள் அவரின் ஆட்சியை முகலாய மன்னர்களிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர் . இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார் .

அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார் ; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார் . ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ; அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார் .

பதினான்கு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள் ;அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான் ; கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை,இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் . அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது;தங்கம்,வைரம்,வைடூரியம்,ரத்தினங்கள்,மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது 

இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் மூத்த மகன் தாரா ஷுகோ ஆனால்,தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார்; மகள் தீவிபத்தில் காயமுற்ற பொழுது பலநாள் கழித்து அவுரங்கசீப் வர அது இன்னமும் பகைமையை வளர்த்தது .இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார். சில நாள் முற்றுகையில் தண்ணீர் மற்றும் உணவுப்பஞ்சம் உண்டானது. “நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன்” என புலம்பினார் 

அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,; அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ; கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன் .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்

தாஜ்மகால் பற்றி சில சுவையான டிட் பிட்ஸ் இங்கே :

தாஜ்மகாலுக்கான நிலத்தை அம்பர் ராஜா மான்சிங்கின் இடம். அங்கே பெறப்பட்ட நிலத்துக்கு பதிலாக நான்கு அரண்மனைகள் அவருக்கு தரப்பட்டன. 

மும்தாஜின் உடலை தாஜ்மகாலின் அடித்தளம் அமைக்கிற பொழுது மூன்றாவது முறையாக அடக்கம் செய்தார்கள். அதற்கு முன்னர் செய்னாபாத் தோட்டம்,ஆக்ரா ஆகிய இடங்களில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்து பிறகே தாஜ்மகால் உருவாக்கம் நிகழ்ந்ததும் வந்து சேர்ந்தது. உண்மையில் அடையாள சமாதி ஒன்றும்,நிஜ சமாதி அடித்தளத்திலும் மும்தாஜுக்கு உண்டு. ஷாஜகானின் சமாதி மன்னர் என்பதால் சற்றே உயரமாக இருக்கும். 

தாஜ்மகாலின் மினார்கள் அதனருகில் இருப்பதை பார்த்திருக்கலாம். அவை நிலநடுக்கும் வந்து சாய நேரிட்டால் வெளிப்புறமாக சாயும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கிறது. தாஜ்மகாலுக்கு சேதம் வராமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு. 

வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத் ஆகியோர் தாஜ்மகாலுக்கு வரைபடம் போட்டவர்களாக உச்சரிக்கப்படும் பெயர்கள் 

அமனாத்கான் எனும் இரானிய வல்லுனரின் கையெழுத்தில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தாஜ்மகாலில் இருக்கும் ஒரே கையெழுத்து அவருடையது தான். 

நுழைவாயில் கட்ட ஆறுவருடம்,தோட்டத்தை முடிக்க ஐந்து வருடம் என்று எல்லாமும் சேர்ந்து இருபத்தி இரண்டு வருடங்களில் தாஜ்மகால் எழுந்தது 

தாஜ்மகாலை அப்படியே கழட்டிக்கொண்டு ஐரோப்பாவுக்கு எடுத்துப்போய் விடலாம் என்றும்,இடித்து விடலாம் என்றும் திட்டங்கள் பென்டின்க் காலத்தில் எழுந்தன. பின்னர் அவை கைவிடப்பட்டன

Photo: ஷாஜகானின் நினைவுதினம் இன்று ; வரலாற்று ஆசிரியர்கள் அவரின் ஆட்சியை முகலாய மன்னர்களிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர் . இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார் .

அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார் ; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார் . ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ; அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார் .

பதினான்கு  பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள் ;அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான் ; கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை,இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் . அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது;தங்கம்,வைரம்,வைடூரியம்,ரத்தினங்கள்,மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது 

 இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் மூத்த மகன் தாரா ஷுகோ ஆனால்,தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார்; மகள் தீவிபத்தில் காயமுற்ற பொழுது பலநாள் கழித்து அவுரங்கசீப் வர அது இன்னமும் பகைமையை வளர்த்தது .இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார். சில நாள் முற்றுகையில் தண்ணீர் மற்றும் உணவுப்பஞ்சம் உண்டானது. "நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன்" என புலம்பினார் 

அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,; அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ; கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன்  .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்

தாஜ்மகால் பற்றி சில சுவையான டிட் பிட்ஸ் இங்கே :

தாஜ்மகாலுக்கான நிலத்தை அம்பர் ராஜா மான்சிங்கின் இடம். அங்கே பெறப்பட்ட நிலத்துக்கு பதிலாக நான்கு அரண்மனைகள் அவருக்கு தரப்பட்டன. 

மும்தாஜின் உடலை தாஜ்மகாலின் அடித்தளம் அமைக்கிற பொழுது மூன்றாவது முறையாக அடக்கம் செய்தார்கள். அதற்கு முன்னர் செய்னாபாத் தோட்டம்,ஆக்ரா ஆகிய இடங்களில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்து பிறகே தாஜ்மகால் உருவாக்கம் நிகழ்ந்ததும் வந்து சேர்ந்தது. உண்மையில் அடையாள சமாதி ஒன்றும்,நிஜ சமாதி அடித்தளத்திலும் மும்தாஜுக்கு உண்டு. ஷாஜகானின் சமாதி மன்னர் என்பதால் சற்றே உயரமாக இருக்கும்.  

தாஜ்மகாலின் மினார்கள் அதனருகில் இருப்பதை பார்த்திருக்கலாம். அவை நிலநடுக்கும் வந்து சாய நேரிட்டால் வெளிப்புறமாக சாயும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கிறது. தாஜ்மகாலுக்கு சேதம் வராமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு. 

வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத் ஆகியோர் தாஜ்மகாலுக்கு வரைபடம் போட்டவர்களாக உச்சரிக்கப்படும் பெயர்கள் 

அமனாத்கான் எனும் இரானிய வல்லுனரின் கையெழுத்தில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தாஜ்மகாலில் இருக்கும் ஒரே கையெழுத்து அவருடையது தான். 

நுழைவாயில் கட்ட ஆறுவருடம்,தோட்டத்தை முடிக்க ஐந்து வருடம் என்று எல்லாமும் சேர்ந்து இருபத்தி இரண்டு வருடங்களில் தாஜ்மகால் எழுந்தது 

தாஜ்மகாலை அப்படியே கழட்டிக்கொண்டு ஐரோப்பாவுக்கு எடுத்துப்போய் விடலாம் என்றும்,இடித்து விடலாம் என்றும் திட்டங்கள் பென்டின்க் காலத்தில் எழுந்தன. பின்னர் அவை கைவிடப்பட்டன

பின்னூட்டமொன்றை இடுக