RAW அமைப்பில் ஒரு ரவுண்ட் !


குகன் அவர்கள் எழுதியிருக்கும் இந்திய உளவுத்துறை ரா எவ்வாறு இயங்குகிறது ? என்கிற நூலை படித்து முடித்தேன். ரா என்கிற இந்திய உளவு அமைப்பைப்பற்றி இத்தனை ஆழமான அதே சமயம் சுருக்கமான நூல் இதுவரை தமிழில் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும் . அறுபத்தி ஐந்தின் போருக்கு பின்னர் உருவான ரா அமைப்பு வங்கதேச உருவாக்கத்துக்கு தேவையான ராணுவ பயிற்சி,தகவல் சேகரிப்பு,பிரசாரம் ஆகியவற்றை செய்து சாதித்தது. 

கங்கா என்கிற விமானத்தை பாகிஸ்தானில் வெடிக்க விட்டு அதன் மூலமும் இரு பாகிஸ்தான் பகுதிகளுக்கு இடையே தொடர்பு ஏற்படாமல் சாதித்திருக்கிறார்கள். கவ்ஹாடாவில் பாகிஸ்தான் அணுசக்தி சார்ந்து இயங்குவதையும் இந்தியா அறிந்து வைத்திருந்தது. சீனாவை கவனிக்க வைக்கப்பட்ட அமெரிக்க உதவியுடன் தயாரான கருவி காணாமல் போனது திகிலான பக்கம். மாலத்தீவில் உமா மகேஸ்வரன் ஆட்சியை கைப்பற்ற முயன்ற பொழுது அதை இந்தியா ராவின் உதவியுடன் முறியடித்தது சுவையான பக்கம் என்றால் அப்படி நடக்க ப்ளான் போட்டு கொடுத்ததே ரா தான் என்கிற வாதத்தையும் சேர்த்தே நூல் பதிவு செய்கிறது. அந்த மீட்பின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து விலகி மாலத்தீவை இந்தியா பக்கம் சேர்க்கும் கச்சிதமாக நிறைவேறியது !

இந்திரா படுகொலை,ராஜீவ் படுகொலை,மும்பை குண்டுவெடிப்புகள்,கார்கில் யுத்தம்,மும்பை தாக்குதல் ஆகியவற்றில் கோட்டை விடுகிற வேலையையும் ரா செய்திருக்கிறது என்பதையும் நூல் விருப்பு வெறுப்பில்லாமல் சொல்கிறது நூல் . 

சியாச்சினில் பாகிஸ்தானுக்கு முன்னர் முந்திக்கொண்டு போய் நின்றது,இரண்டாவது முறை சீக்கிய பொற்கோயில் உள்ளிருந்து தீவிரவாதிகள் எடுத்துக்கொண்ட பொழுது தொடர் முற்றுகையில் கோயிலை அசுத்தப்படுதவிட்டு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவித்து காலிஸ்தான் இயக்கத்தின் போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தது,போக்ரான் குண்டு வெடிப்பை அமெரிக்காவுக்கு தெரியாமல் நிகழ்த்தியது என்று நீளும் ராவின் சாதனைகள் இந்தியா ஒரு நாடாக நீடித்திருக்க அவசியம் என்று அழுத்தமாக பதிவு செய்து நூல் முடிகிறது 
ஆசிரியர் : குகன் 
விலை : தொன்னூறு
சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு 
பக்கங்கள் :128

 

வானைத்தொட்ட பெண்களின் கதை !


ராஷ்மி பன்சாலின் எழுத்தில் உருவான ,”FOLLOW EVERY RAINBOW” நூலை வாசித்து முடித்தேன். வெற்றிகரமான இருபத்தி ஐந்து பெண் தொழில் முனைவோர் பற்றிய நூல் இது. அதிலிருந்து நெஞ்சை நிறைத்த சில பெண்மணிகள் பற்றிய தொகுப்பு மட்டும் இங்கே !
வசூலி என்கிற அமைப்பின் மூலம் பெண்களை கொண்டே 

மென்மையாக பேசி கடன்களை திரும்பப்பெறும் கதையில் நிமிர்ந்து உட்கார்ந்தால் மார்வாரி குடும்பத்தில் பிறந்து ராஜஸ்தானின் சேரிகளில் வாழும் மக்களுக்கு உதவபோய் அவர்களின் நீல பானை செய்யும் முறையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்ற பிரான்சுக்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்யும் லீலா போர்டியா அது தோற்றதும் மெக்சிகோ வரைப்போய் தரமான பானைகள் தயாரிக்கும் முறையை கற்றுவந்து அம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறார். 

எவரெஸ்ட் சிகரத்தை ஏற பெண்களுக்கு முப்பத்தி ஐந்து வயது வரை மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்டு இருக்கும் நாற்பத்தி ஏழு வயது பிரேமலதா அகர்வால் தனக்கு முப்பத்தி ஐந்து வயது என்று சொல்லி எவரெஸ்ட் நோக்கி போகிறார். உச்சியை தொட கொஞ்சம் உயரம் இருக்கும் பொழுது நீரிழப்பு அதிகமாகி விடுகிறது. பசி வேறு ; மரணத்தின் வாசலில் நிற்பது போல உணர்கிறார். தன் கணவருக்கு போனில் அழைக்க ,”என்றாவது சாகத்தான் போகிறோம் ; நாளைக்கே கூட சாலை விபத்தில் மரணம் உண்டாகலாம் ! சாதித்துவிட்டு செத்துப்போ !” என்று சொல்ல உத்வேகம் பொங்க எவரெஸ்டை தொட்டு சாதித்தார் அவர் 

ஜாசு சில்பி எனும் பெண் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை அவர் யாருமற்றவர் என்று தெரிந்தும் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். அவருடன் பத்தொன்பது ஆண்டுகள் நிறைவான வாழ்வு. ஒரு சிறிய சண்டை கூட இல்லை. அவர் இவருக்காக மதம் மாறியிருக்கிறார். இவர் வெண்கல சிற்பங்கள் வடித்து முடித்துவிட்டு வந்த பெண் வெந்நீர் வைத்து கால்களில் ஒத்தடம் கொடுப்பார் அவர். ஒருநாள் கேன்சரால் அவர் இறந்து போக தானே தைரியமாக நின்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கல சிலைகள் செய்கிற ஆர்டரை எல்லாம் ஒற்றை ஆளாக பிடித்து தன் கணவர் தான் எப்படி சிறகடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படியே பரந்த ஜாசு இந்த நூல் அச்சுக்கு போவதற்கு இருநாட்கள் முன் மாரடைப்பால் இறந்து போனார் ! 

தென் ஆப்ரிக்காவில் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட தன் மகளை எல்லாரின் எதிர்ப்பையும் மீறி அன்போடு பார்த்துக்கொண்ட சோனா இப்படி துன்பப்படும் எண்ணற்ற பிள்ளைகள் அமருவதற்கு ஏற்ற இருக்கைகளை சோனுகுவிப் என்கிற பெயரில் வடிவமைத்து நாடு முழுக்க விற்று பலரின் வலியை போக்கியிருக்கிறார் 

வீட்டை விட்டு மாலைக்கு மேல் போகவிடாத பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த நினா லெகி மாலை ஐந்து மணிக்கு கல்லூரி முடிந்ததும் வீடு அடைந்து இரண்டு ஆண் தையல் காரர்களுடன் இணைந்து அற்புதமான பேக்குகளை BAGGIT என்கிற பெயரில் தயாரித்து அதை பலகோடி மதிப்புள்ள பிசினஸ் ஆக்கியிருக்கிறார். 

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று களமிறங்கி தென் அமெரிக்கா போகிற பொழுது ஓரிரு வாசகங்களை உச்சரிப்பு என்ன என்று கூட தெரியாமல் கற்று அற்புதமாக பதில் சொல்லி ஈர்த்த நள்ளிரவில் ஹோட்டலில் தாங்கும் பொழுது ஆண்கள் உள்ளே நுழைய முயன்ற பொழுது கணவருக்கும் போலீசுக்கும் அழைத்து தன்னை காத்துக்கொள்ளும் பெண் இன்னமும் ஆர்வம் மாறாமல் சாதிப்பது நமக்கான அற்புதமான பாடம் ! 

நீதி தாஹ் எனும் பெண் இருபத்தி ஆறு வயதிலேயே பழங்குடியின மக்களின் கைத்திறமையை பயன்படுத்தி அவர்களுக்கு வருமானம் பெருக்க அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை விற்கும் கடை ஆரம்பித்து அதிலிருந்து பல லட்சங்களை அவர்களுக்கு பெற வழிவகுத்திருக்கிறார். 

குடிகார கணவனின் அத்தனை தொல்லைகளுக்கு நடுவிலும் பீச்சில் காபி விற்க ஆரம்பித்து பின்னர் துறைமுகத்தில் ஹோட்டல் என்று நகர்ந்து இறுதியில் ஒரே நாளில் இரண்டு லட்சம் வருமானம் தருகிற உணவகம் நடத்துகிற அளவுக்கு நகர்ந்த தமிழகத்து பெட்ரிசியா மற்றும் பி ஜெ பி தொழிற்சாலை என்கிற பெயரில் கோத்ரேஜ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிற அளவுக்கு தன் ஒற்றை ஆளின் உழைப்பால் உயர்ந்த தமிழகத்து பெண் அமீனாவின் கதையும் அற்புதம் (அமீனாவின் கதையில் மட்டும் ஆங்கிலம் அநியாயத்துக்கு பிழையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 
!

எலா பட்டின் கதை தான் உச்சம் ! சேவா என்கிற பெண் சுய தொழிலாளர் அமைப்பை தொடங்கி பதினேழு லட்சம் குப்பை பொறுக்கும்,காய்கறி விற்கும்,பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேலை உறுதி,சம்பள உயர்வு,சமூக பாதுகாப்பு,இன்சூரன்ஸ் என்று ஏகத்துக்கும் சாதித்திருக்கும் வாழ்க்கையில் நடுத்தெருவில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசிய பொழுது அதுவரை ஆதரித்த தொழிலாளர் சங்கம் கைவிட்ட பொழுதும் சேவாவை வெற்றிகரமாக எளிய பெண்களின் உதவியோடு நடத்தி இருக்கிறார். கணவன் உணவருந்தும் இடைவெளியில் வேலை செய்து வருமானம் ஈட்டி அடிவாங்கிய பெண் ஒரு காலத்துக்கு பிறகு அவரே மதிய உணவு கொண்டு வருகிற அளவுக்கு சாதிக்கிற பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலையில் பட்டம் பெற்ற பெண்,ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று எல்லாமும் விட்டுவிட்டு சேவாவில் சேவை செய்ய வந்தவர்களின் கதையோடு நூலை முடிக்கிற பொழுது நாமும் ஏதேனும் வானவில்லை துரத்த வேண்டும் ,அதை துரத்துகிற பெண்களுக்கு ஊக்குவிப்பை தரவேண்டும் என்றே தோன்றுகிறது 

ஆசிரியர் : ராஷ்மி பன்சால் 
பக்கங்கள் : 360 
விலை : 250
WESTLAND வெளியீடு

பிரிவினையில் கரைந்து போன பெண்களின் அலறல் !


ஊர்வசி புட்டாலியாவின் ,”THE OTHER SIDE OF SILENCE” நூலை பாதி தமிழிலும் மீதத்தை அந்த நூலின் வெம்மை தாங்காமல் ஆங்கிலத்திலும் படித்து முடித்தேன். வரலாறு என்பது என்னென்ன எந்தெந்த வருடத்தில் நடந்தது என்றும்,எவ்வளவு மக்கள் செத்தார்கள் என்கிற ரீதியிலேயே முடிந்து விடுகிறது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பத்து லட்சம் மக்கள் இறந்து போனதாக அறியப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன ? 
அவர்கள் எந்த மாதிரியான சிக்கல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள் என்று அறியும் ஒரு சிறிய முயற்சியே பிரிவினையால் தாக்கப்பட்ட எழுபது பேரிடம் நேர்முகம் செய்து உருவான இந்நூல் 

ஊர்வசியின் தாய் சுபத்ரா மற்றும் அவரின் சகோதரர் ரானா இருவரும் பிரிவினையால் பிரிந்து போகிறார்கள். ரானா பாகிஸ்தானில் இருக்கும் வீட்டை விட்டுவிட மனமில்லாமல் அங்கேயே இருந்து கொள்கிறார். சுபத்ராவிடம் இருந்து அம்மாவை கூட்டிப்போனவர் அப்படியே அவருடனே அவரைப்போலவே இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி வைத்துக்கொள்கிறார். சுபத்ரா கேட்டும் தரமறுக்கிறார் அவர். அவரை வெகுகாலம் வரை தொடர்புகொள்ளவே விருப்பமில்லாமல் கழிகிறது.

ஊர்வசி அங்கே அவரைப்பார்க்க போன பொழுது அன்பாக அவரை எதிர்கொள்கிறார்கள் அவரின் அற்றுப்போன உறவுகள். மாமாவிடம் பேசுகிற பொழுது இஸ்லாமியனாக மாறினாலும் தன்னை ஒரு இந்து போலவே பார்த்து ஒதுக்கி வைத்திருப்பதையும் அவருக்கு எதிராக மகனே கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதையும் சொல்கிறார். அன்னையின் கல்லறை பக்கம் மீண்டும் போகிற தைரியம் அவருக்கு வந்ததா என்று ஊர்வசி கேட்க அவருக்கு அது இயலவில்லை என்றே கண்ணீர் வடிய சொல்கிறார். 

ஊர்வசியின் அம்மாவை பாகிஸ்தான் அழைத்து போனதும் அவருக்கு பிடித்த சீஸ் துண்டுகளை ப்ரிட்ஜில் இருந்து பலவருடம் கழித்து ரானா நீட்ட நெகிழ்ந்து போகிறார் அம்மா. என்றாலும் அவர்கள் வந்துபோனபின்னர் கெடுபிடிகள் காரணமாக தொடர்பற்று போகிறது. அம்மா மற்றும் பாட்டியின் கதைகளும்தான் !

தமயந்தி சாகல் என்கிற பிரிவினையின் பொழுது உறவுகளை விட்டு நீங்கி திருமணமே செய்துகொள்ளாமல் பல்வேறு சமூக பணிகள் செய்தவர் தன்னுடைய கதையை பதிவு செய்கிறார். பெண்கள் பாலியல் ரீதியான் வன்முறைக்கு உள்ளான பிறகு அவர்களின் கருக்கலைப்பை சஃபாயா என்கிற பெயரில் அரசே செய்ததையும்,அவர்களின் மறுவாழ்வுக்கு அமைக்கப்பட்ட குழுவில் தமயந்தி தலைவர் ஆவதையும் நாடகம் போல சொல்லிக்கொண்டு வருகிறார். 

அரசாங்க பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சிகள் வழங்க வழிகள் செய்திருந்தது. அந்த பயிற்சிகள் மட்டுமே முகாமை விட்டு வெளியே போனதும் போதாது என்று தமயந்தி நினைக்கிறார். ஆகவே,அவர்கள் எல்லாருக்கும் இருக்கிற பெண்களை கொண்டு கல்வி போதிக்கிறார். கல்வித்துறை தேர்வெழுத அரசு அதிகாரியின் கையெழுத்து வேண்டும் என்கிற சூழலில் போய் நிற்கிறார். எல்லாரின் வயதும் முப்பத்தைந்துக்குள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கக் முடியும் என்று சட்டம் பேசுகிறார் அவர். “இவர்களின் சரியான வயதை சொல்லுங்கள் ; நான் அதையே பதிவு செய்கிறேன். நமக்கு அது தெரியாது. பல் போன,நரை விழுந்த இவர்களுக்காக கடவுளின் கையெழுத்தை போடுங்கள் !” என்று அழுத்தமாக தமயந்தி சொல்ல அனுமதி கிடைக்கிறது. எல்லா பெண்களும் தேர்வில் வெல்கிறார்கள் 

அரசாங்கங்கள் பிரிவினையின் வன்முறைகள் முடிந்ததும் நாட்டின் இருபுறமும் எப்படி இரு மதங்களின் பெண்களும் கடத்தப்பட்டிருப்பார்கள் என்று உணர்ந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. அந்த குழுவில் இருக்கும் பெண்கள் பாகிஸ்தான் நோக்கி போய் வேலைக்காரி போல,தெருவில் விற்பனை செய்பவள் போல எங்கெங்கே பெண்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை மீட்டு வருவார்கள். ஆனால்,பல பெண்களால் திரும்ப வர விருப்பமில்லாத அல்லது வரமுடியாத சூழலே இருந்தது. அவர்களை அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒருபுறம்,இந்த புதிய உறவுடன் ஒரு நெருக்கமும் சிலருக்கு உண்டாகி இருந்தது. பலபேர் கருவுற்று வேறு இருந்தார்கள். ஆனாலும்,கட்டாயமாக பெண்கள் நாடு மாற்றப்பட்டார்கள். பதினாறு வயது நிறைந்த பிரிவினை காலத்தில் பாதிக்கப்பட்ட ஆண்மகன் தான் விரும்புகிறவாறு யாருடனும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன அரசு அதே உரிமையை பெண்களுக்கு தரவில்லை. 

நேற்றுவரை ஒன்றுக்குள் ஒன்றாக பழகிக்கொண்டு இருந்த மக்கள் ஒரே நாளில் மதத்தின் பெயரால் பிரிந்து கொண்டு வெட்டிக்கொண்டு இறந்தார்கள். தங்கள் வீட்டு பெண்கள் இன்னொரு மதத்தின் ஆணால் வன்புணர்வுக்கோ,கொல்லுதலுக்கோ,அவமானப்படுத்தலுக்கோ உள்ளாவதற்கு பதிலாக தாங்களே கொல்வதை பல இடங்களில் செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கைகள் நடுங்க அப்பாவால் வெட்ட முடியாமல் போக மகள் தலைகுனிந்து நன்றாக வெட்ட ஒத்துழைக்கிறாள். ஒரே கிணற்றில் நீர் அருந்திவிட்டு தங்கள் முன்னால் வருகிறோம் என்று மாற்று மதத்து ஆளிடம் சொல்லிவிட்டு கிணற்றில் குதித்து பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். அந்த பெண்களைப்பற்றி பெருமையாக பேசும் ஆண்கள் அதில் தப்பிய பெண்களை பற்றி வாயையே திறக்காமல் அமைதியாகவே கடக்கிறார்கள் !

ஓரிரு எளிய மக்கள் ஏன் பாகிஸ்தான் உருவானது என்று சொல்லும் காரணங்கள் கவனிக்கத்தக்கவை ,”ஒரு இஸ்லாமியன் நம்மை சமமாக நடத்தினான். நாமோ அவனுக்கு தனி பாத்திரத்தில் தான் உணவு தந்தோம். அவனை வீட்டுக்குள் விடவே யோசித்தோம் !”,”வெள்ளைக்காரன் நம்மைவிட்டு நீங்குவதற்கு முன் நமக்குள் முன்னே இல்லாத பிரிவினையை உண்டு செய்துவிடுவதில் வென்றிருக்கிறான் !”. மற்ற மதத்தினர் என்று மட்டுமில்லை அந்த ஊரை சேர்ந்த ஆண்களுமே தங்கள் மத பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு உள்ளாக்கி இருப்பதும் நேர்முகங்களில் தெரிய வருகிறது ! 

பிரிவினையால் பிறந்த,பிரிந்த குழந்தைகளின் நிலைமையும் பரிதாபம். இந்தியாவில் தூய்மை கெட்டுவிட்டதாக சொல்லி அந்த பிள்ளைகள் ஆசிரமதுக்கோ அல்லது அரசாங்க பொறுப்பிலோ விடப்பட்டார்கள். அப்படிப்பட்ட பல பிள்ளைகளை அடையாள சீட்டோடு விமானத்தில் கூடைகளில் ஏற்றி அனுப்பி இருக்கிறார்கள். இந்து,முஸ்லீம்,சீக்கியர் சிக்கல் என்றே பிரிவினையை பார்க்கும் நம்மில் பலரும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையென்ன என்று பார்ப்பதில்லை. 

ராமேஸ்வரி நேரு கிடைத்த நாற்பத்தி ஐந்து லட்ச பஞ்சாபின் நிலத்தில் ஐந்து சதவிகிதமாவது தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் விவசாய கூலிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்க கடிதம் வரைகிறார். காண்டேகர் பிரிவினைக்கு பிந்திய அமைச்சரவையில் தங்களுக்கு இடமே இல்லாத பொழுது தங்களின் கவலைகள் எங்கே கண்டுகொள்ளப்படும் என்று ஆதங்கப்படுகிறார். பல இடங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு என்று தெரிந்தால் அவர்களை தொடாமலே தீண்டாமையை வன்முறை காலத்திலும் கடைப்பிடித்து இருக்கிறார்கள் ! தங்களுக்கு என்று அச்சுதஸ்தான் கேட்டிருக்கிறார்கள் இம்மக்கள். 

இந்தியாவில் தான் தீண்டாமை இருக்கிறது ; பாகிஸ்தான் போகலாம் என்று போன மக்கள் அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடு போக கிளம்ப மலம் அள்ள இன்ன பிற கடுமையான உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய ஆளில்லை என்கிற சூழல் உண்டாக லாகூரில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் கடல் கடந்து போவது தடை செய்யப்பட்டு அவர்கள் வாழ்வுக்கு சிக்கலை உண்டு செய்கிறார்கள் !
இம்மக்களை பற்றியாவது விரிவான பதிவுகள் பிரிவினை காலத்தில் காணக்கிடைக்கிறது. எந்த மதத்தில் பிறந்தாலும் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் பற்றி யாருமே [பேசவில்லை என்பது தான் கசப்பான முரண்

தினாநகர் எனும் ஊரில் அந்த ஊர் பாகிஸ்தானுக்கு எனறு சொன்னதும் முஸ்லீம்கள் இந்துக்களை கொல்கிறார்கள். பின்னர் சில மணிநேரம் கழித்து தவறான தகவல் அந்த ஊர் இந்தியாவுக்கு என்று அறிந்ததும் இந்துக்கள் முஸ்லீம்களை கொல்கிறார்கள். அதிகாரம் கைமாறும் பொழுது வன்முறையும் கைமாறியிருக்கிறது.

“எந்த ஊர் ?” என்று கேட்டால் ,”இப்பவா ,அப்பவா ?” என்று கேட்கிற அளவுக்கு நாற்பது ஆண்டுகளை கடந்தும் பலரை பிரிவினை பிடுங்கி தின்கிறது. பல பெண்கள் சொன்ன கதைகளை அதற்கு முன் யாருமே காது கொடுத்து கேட்கவில்லை. மிருதுளா சாராபாய்,கமல்பென் படேல்,அனீஸ் கித்வாய் என பிரிவினை காலத்தில் நலப்பணி ஆற்றிய பெண்களும் அதிகம். ஆனாலும்,அட்டியா ஹூசைன் எனும் எழுத்தாளர் பிரிவினைக்கு பின்னர் அதைப்பற்றி எழுதவே முடியவில்லை என்று எழுதுவதை நிறுத்திக்கொண்டது போலதான் பல பெண்கள் தங்களின் சோகத்தை புதைத்து கொண்டார்கள். 

ஆண்டர்சன் மற்றும் ஜாக் எனும் இரு ஆய்வாளர்கள் சொல்வது போல இந்த பெண்களால் தங்களின் சோகங்களை,வலிகளை ஆணாதிக்க மனப்போக்கை உள்வாங்கிய படியால் சொல்ல முடியாது. அவர்களின் மவுனத்தில் ஆயிரம் விஷயங்கள் பொதிந்து இருக்கின்றன. அவற்றையும் இணைத்தே புரிந்துகொள்ள வேண்டும் ! 

ஒரு சுவையான சம்பவத்தோடு நூல் முடிகிறது. ஹர்கிஷன் தாஸ் பேடி எனும் அறிஞர் தன்னுடைய வடிவியல் குறிப்புகளை தன்னுடைய பாகிஸ்தான் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். அதை எடுக்க காவல் துறையிடம் கெஞ்சிய பொழுது அவர்கள் அனுமதிக்கவில்லை. சவுத்ரி லத்தீப் எனும் இஸ்லாமியர் அவரின் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு இந்த அறையில் இந்த பெட்டியில் அந்த குறிப்புகள் இருக்கிறது ; எடுத்து அனுப்புங்கள் என்று கடிதம் எழுதிய பேடி ,”எப்படி நான் இஸ்லாமியர்களோடு சகோதரனாக இருந்தேன் என்பதையும் அண்டை வீட்டு இஸ்லாமியரின் வீட்டை எப்படி கலவரங்களின் பொழுது காத்தேன் என்றும் கேட்டுபாருங்கள் !” என்றும் குறிப்பு அனுப்புகிறார். எல்லா குறிப்புகளும் அழகாக வந்து சேர்கிறது. அவர்களின் கடிதமொன்றில் ,” நாம் நம்மின் நட்பை அப்படியே கைக்கொண்டு இருந்தால் கலவரங்கள் வந்திருக்காதே ! கடவுளின் திட்டங்கள் வேறு ! மதத்தின் பெயரால் இவை நிகழ்ந்தது தான் வருத்தமானது ! எந்த மதமும் ரத்தம் சிந்துவதை ஆதரிக்கவில்லையே !”என்று முடிகிறது. 

அமைதி மட்டும் மாண்ட்டோவின் கதையில் வரும் தோல் தேக் சிங் போல யாருமற்று பெண்களின் மனதில் உறைந்து,இறந்துகொண்டு அலறிக்கொண்டு இருக்கிறது ! இந்நூலை தமிழில் கே.ஜி.ஜவர்லால் விறுவிறுப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். 
ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடு 
விலை,பக்கங்கள் :450,371
தமிழில் : கிழக்கு பதிப்பகம் 
விலை : 350,250

எத்தனை மனிதர்கள் !


சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய எத்தனை மனிதர்கள் நூலை வாசிக்க நேர்ந்தது. அதில் அவர் படித்த நூல்களின் வழியே கண்டுகொண்ட அற்புத மனிதர்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து சில இங்கே :
முதன்முதலில் செட்டிநாட்டில் செய்து வைக்கப்பட்ட சுயமரியாதை திருமணத்துக்கு உரியவர் நீலாவதி அம்மையார். அவரின் திருமணத்துக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல எழுந்ததே பெரியாரின் ,’பெண் ஏன் அடிமையானாள் ?’ நூல் மற்றும் திரு.வி.க.வின்,’பெண்ணின் பெருமை’ ஆகிய நூல்கள். காமராஜர் நீலாவதி அவர்களுக்கு அமைச்சர் பதவி தர விரும்பிய பொழுது காந்தியடிகளுக்கு கொடுத்த வாக்கின்படி அப்பதவியை ஏற்க மறுத்தார் அவர். 

பி.ஸ்ரீ.ஆச்சார்யா அரவிந்தரை உளவு பார்க்க அனுப்பப்பட்ட அதிகாரி. அவரால் கவரப்பட்டு காவல் துறை வேலையை துறந்து விடுதலைப்போரில் ஈடுபட்டார் அவர். பாரதியின் சில காலம் பழக நேர்ந்த பொழுதுகளை அவர் பதிவு செய்கிற இடங்களில் கண்ணீர் முட்டுகிறது. கிழிந்த கோட்,பொத்தானில்லாத சட்டை ஆகியவற்றோடு அவர் பாடிய பாடல்கள் ஹிப்னாடிஸ்ட் சஞ்சீவியை மயக்க அவருக்கு காபி அருந்த பத்து ரூபாய் தர மருத்துவரை காசை உள்ளங்கையில் வைக்க சொல்லி தன் கரம் மேலே இருக்குமாறு பணத்தை எடுத்துக்கொண்டார் பாரதி !

இறுதிவரை கட்சியின் தலைவர் பதவியை பெரியாரின் நினைவாக காலியாக வைத்திருந்த அண்ணா,பெரியாரை பத்தொன்பது வருடத்துக்கு பிறகு பார்க்க போவதற்கு முன்பு அவர் வைத்த விமர்சனங்களை மறந்து ,”தமிழ் நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார் ,அவரின் மாணவர்கள் நாம் !” என்று சொல்லிவிட்டு திருச்சி செல்கிறார். 

பலமுறை தேர்தல்களில் தொகுதி பக்கம் போகாமலே தேர்ந்தெடுக்கப்பட்ட,இந்திய முஸ்லீம் லீக் தலைவராக இருந்த காயிதே மில்லத் மின்சார ரயில் வண்டியில் பயணம் செய்து பின்னர் ரிக்ஷா பிடித்து அலுவலகம் சேருவாராம். பாகிஸ்தான் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஜின்னா அழைத்த பொழுது ,”இந்தியாவுக்கு நீங்கள் எதிரி என்றால் உங்களுக்கும் நான் எதிரி தான் ! நான் இந்தியன் !” என்று சொன்னவர் போர் சமயத்திலும் அவ்வாறே தேசபக்தி பொங்க நிதி திரட்டியிருக்கிறார்.

திரு.வி.க தொடர்ந்து நீதிக்கட்சியை விமர்சித்த பொழுதும் அவரை தொழிற்சங்க போராட்டத்தை முன்னின்று நடத்தியமைக்காக ஆங்கிலேய அரசு நாடு கடத்த முயன்ற பொழுது அதை தீர்க்கமாக தியாகராயர் மற்றும் பனகல் அரசர் பண்போடு தடுத்திருக்கிறார்கள். 
அய்யாமுத்து கவுண்டர் எனும் காந்தியாவதி சர்க்கா சங்கத்தில் சிறு சிறு கொள்ளைகள் அடிப்பதாக புகார் போனதும் விசாரிக்காமல் அவர் மீது குற்றம் என்கிற பாணியில் காந்தியை பார்க்க அழைக்கப்பட,”பல லட்சம் வருமானம் வரும் இந்த சங்கத்தில் அப்படி தவறான எண்ணமிருந்தால் என்னென்னவோ கொள்ளை அடித்திருக்கலாமே ! எண்ணெய் திருடுவது,விளக்கை அதிகமாக எரிப்பது ஆகியன மாதிரி செயல்களையா செய்வேன் பாபுஜி !” என்று கண்கள் கலங்க நிற்க உண்மை புரிந்து தன்னுடைய அகில இந்திய சர்க்கா சங்க பதவியை ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதத்தை அப்பொழுதே அவர் வசம் ஒப்படைக்கிறார் காந்தியடிகள் !
Photo: சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய எத்தனை மனிதர்கள் நூலை வாசிக்க நேர்ந்தது. அதில் அவர் படித்த நூல்களின் வழியே கண்டுகொண்ட அற்புத மனிதர்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து சில இங்கே :
முதன்முதலில் செட்டிநாட்டில் செய்து வைக்கப்பட்ட சுயமரியாதை திருமணத்துக்கு உரியவர் நீலாவதி அம்மையார். அவரின் திருமணத்துக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல எழுந்ததே பெரியாரின் ,’பெண் ஏன் அடிமையானாள் ?’ நூல் மற்றும் திரு.வி.க.வின்,’பெண்ணின் பெருமை’ ஆகிய நூல்கள். காமராஜர் நீலாவதி அவர்களுக்கு அமைச்சர் பதவி தர விரும்பிய பொழுது காந்தியடிகளுக்கு கொடுத்த வாக்கின்படி அப்பதவியை ஏற்க மறுத்தார் அவர். 

பி.ஸ்ரீ.ஆச்சார்யா அரவிந்தரை உளவு பார்க்க அனுப்பப்பட்ட அதிகாரி. அவரால் கவரப்பட்டு காவல் துறை வேலையை துறந்து விடுதலைப்போரில் ஈடுபட்டார் அவர். பாரதியின் சில காலம் பழக நேர்ந்த பொழுதுகளை அவர் பதிவு செய்கிற இடங்களில் கண்ணீர் முட்டுகிறது. கிழிந்த கோட்,பொத்தானில்லாத சட்டை ஆகியவற்றோடு அவர் பாடிய பாடல்கள் ஹிப்னாடிஸ்ட் சஞ்சீவியை மயக்க அவருக்கு காபி அருந்த பத்து ரூபாய் தர மருத்துவரை காசை உள்ளங்கையில் வைக்க சொல்லி  தன் கரம் மேலே இருக்குமாறு பணத்தை எடுத்துக்கொண்டார் பாரதி !

இறுதிவரை கட்சியின் தலைவர் பதவியை பெரியாரின் நினைவாக காலியாக வைத்திருந்த அண்ணா,பெரியாரை பத்தொன்பது வருடத்துக்கு பிறகு பார்க்க போவதற்கு முன்பு அவர் வைத்த விமர்சனங்களை மறந்து ,”தமிழ் நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார் ,அவரின் மாணவர்கள் நாம் !” என்று சொல்லிவிட்டு திருச்சி செல்கிறார். 

பலமுறை தேர்தல்களில் தொகுதி பக்கம் போகாமலே  தேர்ந்தெடுக்கப்பட்ட,இந்திய முஸ்லீம் லீக் தலைவராக இருந்த காயிதே மில்லத் மின்சார ரயில் வண்டியில் பயணம் செய்து பின்னர் ரிக்ஷா பிடித்து அலுவலகம் சேருவாராம். பாகிஸ்தான் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஜின்னா அழைத்த பொழுது ,”இந்தியாவுக்கு நீங்கள் எதிரி என்றால் உங்களுக்கும் நான் எதிரி தான் ! நான் இந்தியன் !” என்று சொன்னவர் போர் சமயத்திலும் அவ்வாறே தேசபக்தி பொங்க நிதி திரட்டியிருக்கிறார்.

திரு.வி.க தொடர்ந்து நீதிக்கட்சியை விமர்சித்த பொழுதும் அவரை தொழிற்சங்க போராட்டத்தை முன்னின்று நடத்தியமைக்காக ஆங்கிலேய அரசு நாடு கடத்த முயன்ற பொழுது அதை தீர்க்கமாக தியாகராயர் மற்றும் பனகல் அரசர் பண்போடு தடுத்திருக்கிறார்கள். 
அய்யாமுத்து கவுண்டர் எனும் காந்தியாவதி சர்க்கா சங்கத்தில் சிறு சிறு கொள்ளைகள் அடிப்பதாக புகார் போனதும் விசாரிக்காமல் அவர் மீது குற்றம் என்கிற பாணியில் காந்தியை பார்க்க அழைக்கப்பட,”பல லட்சம் வருமானம் வரும் இந்த சங்கத்தில் அப்படி தவறான எண்ணமிருந்தால் என்னென்னவோ கொள்ளை அடித்திருக்கலாமே ! எண்ணெய் திருடுவது,விளக்கை அதிகமாக எரிப்பது ஆகியன மாதிரி செயல்களையா செய்வேன் பாபுஜி !” என்று கண்கள் கலங்க நிற்க உண்மை புரிந்து தன்னுடைய அகில இந்திய சர்க்கா சங்க பதவியை ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதத்தை அப்பொழுதே அவர் வசம் ஒப்படைக்கிறார் காந்தியடிகள் !

தமிழகத்தின் முதல் கட்சித்தாவலை அரங்கேற்றிய பெருமை சுயராஜ்ய கட்சியை சேரும் ! அதில் கலந்து சிறப்பு செய்தவர் நீதிக்கட்சியை சேர்ந்த சுப்பராயன்.

கடவுள் நம்பிக்கையில்லாத கோரா ராமச்சந்திர ராவை தன்னுடன் இருக்க வைத்து அவரிடம் தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு ,”யார் வழியும் முழுக்க சரியென்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து நமக்கு சரியென்று படுகிற வழியில் நகர்வோம். புதிய வழி கூட புலப்படலாம் !” என்று சொன்னவர் காந்தியே !

ராகுகாலத்தில் எல்லார் தடுக்கவும் போய் தேர்வெழுதி மாநிலத்தில் புலவர் தேர்வில் முதலிடம் பெற்றார் மு.வ,காதலித்த பெண்ணை நேரில் கூட பார்க்காமல் அவரின் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு தாலி கூட கட்டாத எளிய சுய மரியாதை திருமணத்தை பெரியார் தலைமையில் நிகழ்த்திக்கொண்டார் காமராஜர் காலத்தில் கல்வித்துறையில் மகத்தான மாற்றங்களை முன்னெடுத்த நெ.து. சுந்தரவடிவேலு 

கால்கள் உணர்விழந்த நிலையில் காரல் மார்க்ஸ் வரலாற்றையும்,பர்மாவில் பதுங்குக்குழியில் தங்கிக்கொண்டு பிளேட்டோவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதிய ஆச்சரியம் தருகிற ஆளுமை சாமிநாத சர்மா !
தமிழகத்தின் முதல் கட்சித்தாவலை அரங்கேற்றிய பெருமை சுயராஜ்ய கட்சியை சேரும் ! அதில் கலந்து சிறப்பு செய்தவர் நீதிக்கட்சியை சேர்ந்த சுப்பராயன்.

கடவுள் நம்பிக்கையில்லாத கோரா ராமச்சந்திர ராவை தன்னுடன் இருக்க வைத்து அவரிடம் தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு ,”யார் வழியும் முழுக்க சரியென்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து நமக்கு சரியென்று படுகிற வழியில் நகர்வோம். புதிய வழி கூட புலப்படலாம் !” என்று சொன்னவர் காந்தியே !

ராகுகாலத்தில் எல்லார் தடுக்கவும் போய் தேர்வெழுதி மாநிலத்தில் புலவர் தேர்வில் முதலிடம் பெற்றார் மு.வ,காதலித்த பெண்ணை நேரில் கூட பார்க்காமல் அவரின் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு தாலி கூட கட்டாத எளிய சுய மரியாதை திருமணத்தை பெரியார் தலைமையில் நிகழ்த்திக்கொண்டார் காமராஜர் காலத்தில் கல்வித்துறையில் மகத்தான மாற்றங்களை முன்னெடுத்த நெ.து. சுந்தரவடிவேலு 

பெரும்பாலும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாத அண்ணாவே துளைக்கிறார்,துளைக்கிறார் என்று பதில் எழுதுகிற அளவுக்கு கூர்மையான எழுத்து குத்தூசி குருசாமி அவர்களுடையது 

கால்கள் உணர்விழந்த நிலையில் காரல் மார்க்ஸ் வரலாற்றையும்,பர்மாவில் பதுங்குக்குழியில் தங்கிக்கொண்டு பிளேட்டோவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதிய ஆச்சரியம் தருகிற ஆளுமை சாமிநாத சர்மா !

சர்ச்சில் 360 டிகிரி ;)


வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் ஜனவரி இருபத்தி நான்கு . உலகப்போரின் மாபெரும் நாயகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் மனிதர் இவர் . இந்தியா உட்பட பல தேசங்களில் ஆங்கிலேய அரசின் சார்பாக வீரராக பணியாற்றிய இவர் அப்பாவின் பின்புலம் கைகொடுக்க அரசியலில் குதித்து 1900 இல் எம் பி ஆனார் . ஆனால்,ஒரு காலத்திற்கு பிறகு இவரின் அரசியல் செல்வாக்கு மங்கியது .

அப்பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதை எதிர்த்தே அரசியலில் கவனம் பெற ஆரம்பித்தார் . கன்சர்வேடிவ் கட்சியின் பால்ட்வின் அமைச்சரவையில் கருவூலம் இவர் கட்டுப்பாட்டில் வந்தது . 1940 களின் ஆரம்ப கட்டத்தில் ஹிட்லரோடு ஜாலியாக பேசி சிக்கல்களை தீர்த்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த சாம்பர்லைன் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தார் .

நாடு முழுக்க அவரின் வழ வழ,கொழ கொழ பாணி எதிர்ப்புக்கு உள்ளாக இவர் பிரதமர் ஆனார் . உலகப்போரில் பிரான்ஸ் வீழ்ந்து இருந்தது ;இங்கிலாந்தில் குண்டுகள் வீசப்பட்டன . இவரே பல சமயம் பயந்து கொண்டு வானொலி நிலையம் போன கூத்தெல்லாம் நடந்தது .

“நான் உங்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை -உதிரம்,வியர்வை,உழைப்பு, கண்ணீர் ஆகியவற்றை தவிர” என சொல்லி மக்களை உசுப்பேற்றினார் . எங்கெங்கும் போராடுவோம் ;இறுதிவரை போராடுவோம் என எழுச்சி ஊட்டினார் .

வீரர்களின் கூடாரம் ஒன்றிற்கு போனார் -ஒரே நிமிடம் ,”நெவெர் நெவெர் அண்ட் நெவெர் கிவ் இன் !”என சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார் .ஒரு மாபெரும் வீரராக ஆங்கிலேயர் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் இவர் தன் நாடு அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் அடுத்த நிலையிலேயே இருப்பதை உணர்ந்தே இருந்தார். நம்பிக்கையோடு நாட்டை வழிநடத்தினாலும் உண்மையான போர் நிலவரங்களை அறிந்துகொள்ள தன்னை புகழ்கிற நபர்களை ஒதுக்கி வைத்துவிட்டு லண்டனுக்கு வெளியே தனி இலாகா ஒன்றை அமைத்து அதனிடமிருந்து நிதர்சனமான தகவல்களை பெற்றார்.

பல களங்களில் அமெரிக்காவின் “lend-lease “உதவி இல்லாமல் போயிருந்தால் பிரிட்டன் திண்டாடி இருக்கும். காலனி நாடுகளின் வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நிலை ஏற்பட்டிருக்கும் . அடிபட்டாலும் அடிபடாத மாதிரியே விக்டரிக்கான வி முத்திரையை காட்டினார் .

சர்ச்சிலுக்கு ஷாம்பெய்ன்’ இல்லாமல் பொழுது போகாது. கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஒருமுறை அமெரிக்கா போயிருந்த பொழுது அவரை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த திட்டத்தை கண்டறிந்த மேனஜேர் அதை அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்லவேண்டும் என்ற பொழுது ,”முதலில் ஷாம்பெய்ன் பாட்டிலுக்கு ஆர்டர் சொல்லுங்கள். குடித்துவிட்டு போலீசிடம் சொல்லிக்கொள்ளலாம் !” என்றார் சர்ச்சில்

இந்தியாவுக்கு விடுதலை தருவதை வலிமையாக எதிர்த்தார் ;காந்தியை அரைநிர்வாண பக்கிரி என கொச்சையாக விமர்சனம் செய்தார் ; காந்தி உண்ணாநோன்பு இருந்த பொழுது “இன்னும் சாகவில்லையா இவர் ?” என வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார் .

அவரின் நையாண்டி வெகு பிரசித்தமானது. ஒரு பெண்மணி நாடாளுமன்றத்தில் ,”நீங்கள் என் கணவராக இருந்திருந்தால் விஷத்தை கொடுத்திருப்பேன் உங்களுக்கு !” என்று சொல்ல ,”நீ என் மனைவியாக இருந்தால் விஷத்தை குடித்து நிம்மதியாக கண்ணை மூடியிருப்பேன் !” என்றார் இவர்

பெர்னார்ட் ஷா இவரை தன் நாடகத்துக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை அனுப்பி அழைத்திருந்தார். கூடவே ஒரு சீட்டும் இணைத்திருந்தார். ,”உங்கள் நண்பருடன் வரவும் ! அப்படியொருவர் இருந்தால் !” இவர் டிக்கெட்டுகளை திருப்பி ஒரு துண்டுசீட்டை மட்டும் இணைத்து அனுப்பினார். “நாளை வரமுடியாது. அடுத்த வாரம் வரப்பார்க்கிறேன். அதுவரை நாடகம் இருந்தால் !”

இந்தியா மக்கள் பஞ்சத்தால் இறந்த பொழுது உணவுக்கப்பல் அனுப்பமாட்டேன் என சொல்லி பல லட்சம் மக்களை சாகவிட்டவர் இவர் . உலகப்போரில் இங்கிலாந்தை வெற்றியடைய செய்தாலும் இவரை விட்டு நாட்டை மறுநிர்மாணம் செய்ய அட்லியை மக்கள் பிரதமர் ஆக்கினார்கள் .

மீண்டும் பத்து வருடம் கழித்து பிரதமர் ஆனார் .இவரின் எழுத்து அசாத்தியமானது .உலகப்போர் பற்றிய இவரின் நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது . மூன்று தடவை மாரடைப்பு,எட்டு தடவை நிமோனியா ஆகியவற்றில் இருந்து தப்பி சாதித்த சர்ச்சில் உடல் நிலை கெட்டு இதே நாளில் 90 வயதில் மரணமடைந்தார்

இப்படி சொன்னார் பேகன் !


பிரான்சிஸ் பேகன் எனும் சிந்தனையாளர் பிறந்த தினம் ஜனவரி இருபத்தி இரண்டு  . அவரின் சில புகழ்பெற்ற பொன்மொழிகள் உங்களுக்காக 

Photo: பிரான்சிஸ் பேகன் எனும் சிந்தனையாளர்  பிறந்த தினம் இன்று . அவரின் சில புகழ்பெற்ற பொன்மொழிகள் உங்களுக்காக 

சில புத்தகங்களை சுவைக்க வேண்டும் ;சிலவற்றை விழுங்கிவிட வேண்டும் .சிலவற்றை நன்றாக மென்று செரிக்க விட வேண்டும் .அதாவது பகுதி பகுதியாக படிக்க வேண்டும் .சில நூல்களை ஆர்வம் இல்லாமல் படிக்கலாம் ;சிலவற்றை முழுவதுமாக அக்கறையோடும்,கவனத்தோடும் படிக்க வேண்டும் .

இயற்கையான குணங்கள் செடிகளை போன்றவை ;அவற்றை பண்படுத்த வாசிப்பு தேவை 

வாசித்தல் முழு மனிதனை உருவாக்குகிறது ;கூட்டங்கள் தயாராக இருக்கும் மனிதனை உருவாக்குகின்றன  ;எழுத்து தான் கச்சிதமான மனிதனை உருவாக்குகிறது 

அறிவே ஆற்றல் -(Ipsa Scientia Potestas Est)

குழந்தைகள் இருளில் செல்ல பயப்படுவது போலவே மனிதன் மரணத்தை கண்டு அஞ்சுகிறான் .இரண்டின் மீதான பயமும் கதைகளால் இன்னமும் அதிகரிக்கப்படுகிறது .

எதிர்க்கவும்,தவறென சுட்டவும் வாசிக்காதீர்கள் ;பேசவும்,சொற்பொழிவு ஆற்றவும் வாசிக்காதீர்கள் .புரிந்துகொள்ளவும்,ஆலோசிக்கவும் வாசியுங்கள் 

முடிவு செய்துகொண்டு செயலில் இறங்கினால் சந்தேகங்களோடு முடிப்பீர்கள் ;சந்தேகங்களோடு இறங்கி தேடலை தொடருங்கள்;முடிவான இலக்கை அடைவீர்கள் 

மிகப்பயனுள்ள வாழ்தலை தேர்ந்தெடுங்கள் ;பண்புகள் அதை மிகச்சிறந்த வாழ்வாக மாற்றும்

சில புத்தகங்களை சுவைக்க வேண்டும் ;சிலவற்றை விழுங்கிவிட வேண்டும் .சிலவற்றை நன்றாக மென்று செரிக்க விட வேண்டும் .அதாவது பகுதி பகுதியாக படிக்க வேண்டும் .சில நூல்களை ஆர்வம் இல்லாமல் படிக்கலாம் ;சிலவற்றை முழுவதுமாக அக்கறையோடும்,கவனத்தோடும் படிக்க வேண்டும் .

இயற்கையான குணங்கள் செடிகளை போன்றவை ;அவற்றை பண்படுத்த வாசிப்பு தேவை 

வாசித்தல் முழு மனிதனை உருவாக்குகிறது ;கூட்டங்கள் தயாராக இருக்கும் மனிதனை உருவாக்குகின்றன ;எழுத்து தான் கச்சிதமான மனிதனை உருவாக்குகிறது 

அறிவே ஆற்றல் -(Ipsa Scientia Potestas Est)

குழந்தைகள் இருளில் செல்ல பயப்படுவது போலவே மனிதன் மரணத்தை கண்டு அஞ்சுகிறான் .இரண்டின் மீதான பயமும் கதைகளால் இன்னமும் அதிகரிக்கப்படுகிறது .

எதிர்க்கவும்,தவறென சுட்டவும் வாசிக்காதீர்கள் ;பேசவும்,சொற்பொழிவு ஆற்றவும் வாசிக்காதீர்கள் .புரிந்துகொள்ளவும்,ஆலோசிக்கவும் வாசியுங்கள் 

முடிவு செய்துகொண்டு செயலில் இறங்கினால் சந்தேகங்களோடு முடிப்பீர்கள் ;சந்தேகங்களோடு இறங்கி தேடலை தொடருங்கள்;முடிவான இலக்கை அடைவீர்கள் 

மிகப்பயனுள்ள வாழ்தலை தேர்ந்தெடுங்கள் ;பண்புகள் அதை மிகச்சிறந்த வாழ்வாக மாற்றும்

காதல் தாஜ்மகால் தந்த ஷாஜகான் !


ஷாஜகானின் நினைவுதினம் ஜனவரி இருபத்தி இரண்டு  ; வரலாற்று ஆசிரியர்கள் அவரின் ஆட்சியை முகலாய மன்னர்களிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர் . இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார் .

அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார் ; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார் . ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ; அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார் .

பதினான்கு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள் ;அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான் ; கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை,இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் . அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது;தங்கம்,வைரம்,வைடூரியம்,ரத்தினங்கள்,மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது 

இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் மூத்த மகன் தாரா ஷுகோ ஆனால்,தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார்; மகள் தீவிபத்தில் காயமுற்ற பொழுது பலநாள் கழித்து அவுரங்கசீப் வர அது இன்னமும் பகைமையை வளர்த்தது .இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார். சில நாள் முற்றுகையில் தண்ணீர் மற்றும் உணவுப்பஞ்சம் உண்டானது. “நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன்” என புலம்பினார் 

அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,; அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ; கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன் .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்

தாஜ்மகால் பற்றி சில சுவையான டிட் பிட்ஸ் இங்கே :

தாஜ்மகாலுக்கான நிலத்தை அம்பர் ராஜா மான்சிங்கின் இடம். அங்கே பெறப்பட்ட நிலத்துக்கு பதிலாக நான்கு அரண்மனைகள் அவருக்கு தரப்பட்டன. 

மும்தாஜின் உடலை தாஜ்மகாலின் அடித்தளம் அமைக்கிற பொழுது மூன்றாவது முறையாக அடக்கம் செய்தார்கள். அதற்கு முன்னர் செய்னாபாத் தோட்டம்,ஆக்ரா ஆகிய இடங்களில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்து பிறகே தாஜ்மகால் உருவாக்கம் நிகழ்ந்ததும் வந்து சேர்ந்தது. உண்மையில் அடையாள சமாதி ஒன்றும்,நிஜ சமாதி அடித்தளத்திலும் மும்தாஜுக்கு உண்டு. ஷாஜகானின் சமாதி மன்னர் என்பதால் சற்றே உயரமாக இருக்கும். 

தாஜ்மகாலின் மினார்கள் அதனருகில் இருப்பதை பார்த்திருக்கலாம். அவை நிலநடுக்கும் வந்து சாய நேரிட்டால் வெளிப்புறமாக சாயும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கிறது. தாஜ்மகாலுக்கு சேதம் வராமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு. 

வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத் ஆகியோர் தாஜ்மகாலுக்கு வரைபடம் போட்டவர்களாக உச்சரிக்கப்படும் பெயர்கள் 

அமனாத்கான் எனும் இரானிய வல்லுனரின் கையெழுத்தில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தாஜ்மகாலில் இருக்கும் ஒரே கையெழுத்து அவருடையது தான். 

நுழைவாயில் கட்ட ஆறுவருடம்,தோட்டத்தை முடிக்க ஐந்து வருடம் என்று எல்லாமும் சேர்ந்து இருபத்தி இரண்டு வருடங்களில் தாஜ்மகால் எழுந்தது 

தாஜ்மகாலை அப்படியே கழட்டிக்கொண்டு ஐரோப்பாவுக்கு எடுத்துப்போய் விடலாம் என்றும்,இடித்து விடலாம் என்றும் திட்டங்கள் பென்டின்க் காலத்தில் எழுந்தன. பின்னர் அவை கைவிடப்பட்டன

Photo: ஷாஜகானின் நினைவுதினம் இன்று ; வரலாற்று ஆசிரியர்கள் அவரின் ஆட்சியை முகலாய மன்னர்களிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர் . இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார் .

அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார் ; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார் . ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ; அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார் .

பதினான்கு  பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள் ;அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான் ; கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை,இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் . அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது;தங்கம்,வைரம்,வைடூரியம்,ரத்தினங்கள்,மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது 

 இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் மூத்த மகன் தாரா ஷுகோ ஆனால்,தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார்; மகள் தீவிபத்தில் காயமுற்ற பொழுது பலநாள் கழித்து அவுரங்கசீப் வர அது இன்னமும் பகைமையை வளர்த்தது .இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார். சில நாள் முற்றுகையில் தண்ணீர் மற்றும் உணவுப்பஞ்சம் உண்டானது. "நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன்" என புலம்பினார் 

அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,; அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ; கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன்  .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்

தாஜ்மகால் பற்றி சில சுவையான டிட் பிட்ஸ் இங்கே :

தாஜ்மகாலுக்கான நிலத்தை அம்பர் ராஜா மான்சிங்கின் இடம். அங்கே பெறப்பட்ட நிலத்துக்கு பதிலாக நான்கு அரண்மனைகள் அவருக்கு தரப்பட்டன. 

மும்தாஜின் உடலை தாஜ்மகாலின் அடித்தளம் அமைக்கிற பொழுது மூன்றாவது முறையாக அடக்கம் செய்தார்கள். அதற்கு முன்னர் செய்னாபாத் தோட்டம்,ஆக்ரா ஆகிய இடங்களில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்து பிறகே தாஜ்மகால் உருவாக்கம் நிகழ்ந்ததும் வந்து சேர்ந்தது. உண்மையில் அடையாள சமாதி ஒன்றும்,நிஜ சமாதி அடித்தளத்திலும் மும்தாஜுக்கு உண்டு. ஷாஜகானின் சமாதி மன்னர் என்பதால் சற்றே உயரமாக இருக்கும்.  

தாஜ்மகாலின் மினார்கள் அதனருகில் இருப்பதை பார்த்திருக்கலாம். அவை நிலநடுக்கும் வந்து சாய நேரிட்டால் வெளிப்புறமாக சாயும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கிறது. தாஜ்மகாலுக்கு சேதம் வராமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு. 

வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத் ஆகியோர் தாஜ்மகாலுக்கு வரைபடம் போட்டவர்களாக உச்சரிக்கப்படும் பெயர்கள் 

அமனாத்கான் எனும் இரானிய வல்லுனரின் கையெழுத்தில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தாஜ்மகாலில் இருக்கும் ஒரே கையெழுத்து அவருடையது தான். 

நுழைவாயில் கட்ட ஆறுவருடம்,தோட்டத்தை முடிக்க ஐந்து வருடம் என்று எல்லாமும் சேர்ந்து இருபத்தி இரண்டு வருடங்களில் தாஜ்மகால் எழுந்தது 

தாஜ்மகாலை அப்படியே கழட்டிக்கொண்டு ஐரோப்பாவுக்கு எடுத்துப்போய் விடலாம் என்றும்,இடித்து விடலாம் என்றும் திட்டங்கள் பென்டின்க் காலத்தில் எழுந்தன. பின்னர் அவை கைவிடப்பட்டன

நேதாஜி எனும் வீரர் !


கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார்.

மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,”ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !” என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.

பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அதில் நான்காம் இடம் பெற்ற போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு கீழே வேலை பார்க்க விருப்பமில்லை என்பது ஒரு புறம் இன்னொரு  புறம் ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்திருந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசபந்து சித்தரஞ்சன் தாஸை சந்தித்தார். அவரின் முதன்மை சீடரானார். கல்கத்தாவின் மேயராக சித்தரஞ்சன் தாஸ் ஆனதும் போஸ் அதன் தலைமை நிர்வாக அலுவலராக கலக்கி எடுத்தார்.

சித்தரஞ்சன் தாஸின் மறைவுக்கு பின்னர் சுயராஜ்ய கட்சி வங்கத்தில் யுகந்தார் மற்றும் அனுஷிலன் என்கிற இரண்டு புரட்சிகர அமைப்புகளாக பிரிந்து கொண்டன. அதில் நேதாஜி யுகந்தார் அமைப்பில் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தார். டே என்கிற ஆங்கிலேய அதிகாரி சார்லஸ் டேகர்ட் எனும் கொடுமைக்கார காவல்துறை கமிஷனருக்கு பதிலாக தவறுதலாக கொல்லப்பட போஸ் முதலிய பலர் கைது செய்யப்பட்டார்கள். அவரை நாடு கடத்தியது ஆங்கிலேய அரசு. உடல்நிலை சரியில்லாமல் போகவே பாதியிலேயே விடுதலை செய்யப்பட்டார் போஸ்.

சைமன் கமிஷனில் இந்தியர் ஒருவரும் இல்லாமல் போனதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட பல்வேறு ஊர்களுக்கு போஸ் மற்றும் ஜவகர்லால் நேரு பயணித்தார்கள். இளைஞர்களின் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.

ஜவகர்லால் நேரு காங்கிரசின் ஆங்கிலேய அரசு டொமினியன் அந்தஸ்து கொடுத்தால் போதும் என்கிற கோரிக்கையை முழு சுதந்திரம் என்று ஆக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதை போஸ் ஆதரித்தார்.   உப்பு சத்தியாகிரகத்தில் பங்குகொண்டார். அப்பொழுது காந்தியடிகள் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்தியதும்,பகத் சிங் தூக்கு தண்டனை விவகாரத்தில் இன்னமும் முனைப்பாக காந்தி செயலாற்றி காப்பற்றியிருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. ஐரோப்பாவில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “காந்தி அரசியல் தலைவராக தோல்வியடைந்து விட்டார் ; தீவிரப்போக்கு கொண்ட புதிய சித்தாந்தம்,வழிமுறைகள் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் புதிய தலைவரோடு எழ வேண்டும் !” என்று குறித்தார்.

1938 ஆம் வருடம் போஸ் காங்கிரசின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ” எல்லாமும் வேண்டும் ; இல்லை எதுவுமே வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை !” என்று பதவியேற்றதும் முழக்கமிட்டார் அவர். அவருக்கு நேதாஜி என்கிற பட்டத்தை சாந்தி நிகேதனில் விழா எடுத்து தாகூர் வழங்கினார். நேதாஜி என்றால் வணங்கத்தகுந்த தலைவர் என்று அர்த்தம். அடுத்த வருடம் சிக்கல்கள் அவருக்கு காத்திருந்தன.

காந்தி நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிறுத்தினார். போஸ் தேர்தலில் தமிழக காங்கிரசாரின் பெருத்த ஆதரவோடு  1,580-1,377 என்கிற விகிதத்தில் வென்றார் ! “சீதாராமையாவின் தோல்வி அவருடையது என்பதை விட என்னுடையது என்பதே சரியாக இருக்கும் !” என்று காந்தி குறித்தார். போஸ் பூரண விடுதலையை நோக்கி நாம் நகர் வேண்டும் ,இன்னமும் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது தேர்தலில் நின்று ஆட்சிக்கு வருவதில் பிற தலைவர்கள் முனைப்பாக இருப்பதை பார்த்து அவர்களை எல்லாம் வலதுசாரிகள் என்று போஸ் குறித்தார். “நீங்கள் ஒரு இடதுசாரி தலைமை பொறுப்புக்கு வருவதை விரும்ப மறுக்கிறீர்கள் ! உங்களுக்கும் அரசுக்கும் இடையேயான சமரசத்தில் நான் முள் போல இருப்பேன் என்று கருதுகிறீர்கள் !” என்றார். போஸின் நெருங்கிய நண்பரான நேரு கூட இப்படி பொதுவாக வலதுசாரிகள் என்று குறித்ததற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்து கடிதம் எழுதினார்.

ஜி.பி.பந்த் பழைய செயற்குழுவின் மீது முழுநம்பிக்கை இருக்கிறது என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். அது பெருத்த ஆதரவோடு வெற்றி பெற்றது. ஆனால்,காந்தி  போஸ் விரும்புகிற செயற்குழுவை அமைத்துக்கொள்ளட்டும் என்றார். போஸ் ,”காந்தியார் போராட்டத்துக்கு தலைமை தாங்கட்டும் ! ஆனால்,இடதுசாரிகள் மற்றும் நான் வகுத்திருக்கும் சித்தாந்தம் மற்றும் வழிமுறைகளை அவர் கைக்கொள்ளட்டும் !” என கோரினார்.

காந்தி போஸ் தலைமையேற்று அவரின் வழிமுறையில் போராட்டத்தை நடத்தட்டும் என்று அறிவிக்க அதற்கு காங்கிரஸ் கட்சியில் ஆதரவில்லாத சூழல் உண்டானது. போஸ் வெறுத்துப்போய் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பார்வர்ட் ப்ளாக் கட்சியை துவங்கினார். அனைத்திந்திய போராட்டதத்துக்கு அனைவரும் வாருங்கள் என்று அவர் குரல் கொடுக்க கட்சியை விட்டு அவரை நீக்கினார்கள்.

போஸ் மனம் நொந்து போனார். வேறு வழியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரை அரசு வீட்டுக்காவலில் வைத்திருந்தது.  சத்தமேயில்லாமல் தப்பிப்போனார். அவரின் வீட்டை அரசு ஏலம் விட்டதும் அதை யாருமே ஏலம் எடுக்க முன்வராததும் தனி அத்தியாயம். பெஷாவர் நகருக்குள் நுழைந்து அங்கிருந்து ஆப்கானுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் வழியாக இத்தாலி போகலாம் என்று திட்டமிட்டு இருந்த போஸ் ஹிட்லர் அழைக்கிறார் என்பதை அறிந்து அவரை சந்திக்க மாஸ்கோவில் இருந்து ஜெர்மனி போய் சேர்ந்தார். எழுபத்தி ஒரு நாட்களில் அவர் செய்த இந்த சாகசத்தை ‘Great Escape ‘  என்று ஆச்சரியத்தோடு பதிவு செய்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஹிட்லர் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆள தகுதியற்றவர்கள் என்றார். அதற்கு போஸ் ஆட்சேபத்தை பதிவு செய்தார். ஹிட்லர் போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரில் உதவுவதாக உத்தரவாதம் தந்தார், ஆனால்,எந்த உதவியும் கிட்டாமல் போனது.

ஜப்பான் போனார் நேதாஜி. ராஷ் பிஹாரி போஸ் உருவாக்கி செயலற்று போயிருந்த இந்திய தேசிய ராணுவத்துக்கு உயிர் தந்தார். போரில் பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை கொண்டு படையை கட்டமைத்தார். பெண்களையும் போர்ப்படையில் இணைத்துக்கொண்டார்.

“ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன் “என்று முழங்கினார். அக்டோபர் இருபத்தி ஒன்றில் சுதந்திர இந்தியாவுக்கான அறிவிப்பை சிங்கப்பூரில் வெளியிட்டார் போஸ். அங்கே இருந்து வானொலியில் ,”தேசப்பிதா காந்தியடிகளிடம் எங்களின் போராட்டத்துக்கு ஆசீர்வாதம் கோருகிறேன் !” என்று பண்போடு சொன்னார். காந்தி போஸ் அவர்களை ,”தேசபக்தர்களுள் இளவரசர் !” என்று பூரித்தார். டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி இந்திய தேசிய அரசின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்தி கொண்டார். தேசியக்கொடியை ஏற்றினார். அவரை ஜெர்மனி, ஜப்பான், சீனா, இத்தாலி நாடுகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. அந்தாமான் மற்றும் நிகோபார் தீவுகள் இவர் பொறுப்பில் விடப்பட்டதும் அவற்றுக்கு ‘ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் ‘ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயரிட்டார்.

பர்மாவில் இருந்து மொய்ராங் என்கிற மணிப்பூரின் பகுதியை இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றியது. நாகலாந்து அடுத்து வீழ்ந்தது. தென்மேற்கு பருவ மழை போரின் போக்கை திருப்பியது. தகவல் துண்டிப்பு,ஒழுங்காக ஆயுதங்கள் வந்து சேராமை எல்லாம் தோல்வியை நோக்கி படையை தள்ளியது. போஸ் ஜப்பானின் உதவியோடு மீண்டு வந்து போராடலாம் என்று முடிவு செய்து கொண்டு சிங்கப்பூர் வரை சென்று அங்கிருந்து சைகோன் போனார். சைகோனில் இருந்து மன்ச்சூரியா நோக்கி இருவர் மட்டும் போகக்கூடிய குண்டு வீச்சு விமானத்தில் தோழர் , தோழர் ஹபீப்புடன்  ஏறினார். தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கமிஷன்கள் வந்தும் அவரின் மரணம் குறித்த மர்மம் அப்படியே இருக்கிறது.

நேதாஜிக்கு சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உண்டு என்பது ஒரு பரவலான வாதம். அவரை ஹிட்லர் இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரி என்று அழைத்த பொழுது அதை கடுமையாக ஆட்சேபித்தார் அவர். ஆங் சானின் விடுதலைக்காக போராடிய புரட்சி படைகளை ஒடுக்க ஜப்பான் உதவி கேட்ட பொழுது கூலிப்படையாக செயல்படாது இந்திய தேசிய ராணுவம் என்று மறுத்த போஸ் ஜப்பானின் பிரதமர் இந்தியாவின் விடுதலைக்கு பின்னர் போஸ் எல்லாமுமாக இருப்பார் என்கிற வாதத்தையும் நிராகரித்தார்.

“ஒரு தனி மனிதன் ஒரு சிந்தனைக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்யலாம். ஆனால்,அவன் இறப்புக்கு பின்னர் அந்த சிந்தனை பல்லாயிரம் உயிர்களில் மீண்டும் மறுபிறப்பெடுக்கும். இப்படித்தான் பரிணாமத்தின் சக்கரம் நகர்கிறது ; ஒரு தேசத்தின் சிந்தனையும்,கனவுகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன !” என்று முழங்கிய அசல் வீரர் போஸ் இந்தியர்களிடையே வீர எழுச்சியையும்,தன்னம்பிக்கையும் விதைத்து அடிமையின் உடம்பில் வலிமைகள் ஏற்றினார் அவர் என்றால் அது மிகையில்லை.

வெட்டுப்புலி-நூல் அறிமுகம்


தமிழ்மகன் அவர்களின் வெட்டுப்புலி நாவல் படித்துவிட்டு அது தந்த தாக்கம் அகலாமலே இந்த பதிவை பதிகிறேன். ஒரு எழுபத்தைந்து ஆண்டுகால சினிமா,திராவிட இயக்கத்தின் தாக்கம்,வெட்டுப்புலி எனும் சிறுத்தையை கொன்ற கொள்ளுத்தாத்தாவின் படம் தாங்கிய தீப்பெட்டியின் மாற்றம் தேடி போகும் பேரன் ஆகியவற்றைக்கொண்டு எந்த திணிப்பையும் மேற்கொள்ளாமல் மனதுக்கு மிகநெருக்கமான ஒரு நாவலை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர். 

எதையும் திருடிக்கொண்டு வந்துவிடும் படவேட்டான்,சாதி மாறி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அதை சாதிக்க இருக்கும் மன மற்றும் சமூகத்தடைகளை உணரும் லட்சுமணன்,பெரியாருக்கும்,காமராஜருக்கும் இருந்த நெருங்கிய பந்தத்தை மூன்று பார்வையில் காட்டும் நுணுக்கம்,திராவிட இயக்கத்தில் கணவனும்,அதிமுகவில் மனைவியும் இணைந்து இறுதியில் அன்னையின் பக்தர்களாக இருவரும் மாறிநிற்கும் வேடிக்கை என்று பல ரசமான பின்னல்கள். 

“எம்.ஜி.ஆர் ஒழுங்கா செய்ஞ்ச ஒரே விஷயம் பெரியாரோட எழுத்து சீர்திருத்தத்தை அமல்படுத்தினது தானே ?”
“பெரியார் ரொம்ப பிரக்ரசிவ் ! அவர் சொன்னதுக்கு ஈடா வேற யாரும் சிந்திச்சது இல்லை ? எங்களை எதிர்த்த அவர் இன்னைக்கு இருந்திருந்தா நீங்க பண்ணுற வேலைகளை பார்த்து உங்களைத்தான் முழுமூச்சா எதிர்த்திருப்பார் ! உண்மையில் பெரியார் இந்து மதத்துக்குள் இருந்து தானே எதிர்த்தார். அவர் மற்ற மதங்களை எதிர்க்கலையே ? இந்த மதத்தை மாற்ற வந்த முனிவர் அவர் ” என்று பிராமணர்களின் பார்வையாக பதிவு செய்யப்படும் வரிகள் எல்லாமே கைதட்டல் போடவைக்கும் ராகம் 

வண்ணத்திரை இதழில் இடைப்பக்கத்தை வளமான படங்களால் நிறைக்கும் திராவிட இயக்க வாரிசு என்று நகரும் நாவலில் சினிமாவின் போக்கும் அது ஏற்படுத்திய தாக்கமும் கூடவே கடத்தப்படுகிறது. தியாகராஜ பாகவதர்,லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு,எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு,பாலச்சந்தர்,ரஜினி,கமல் ஆகியோர் மேற்கொண்ட ப்ரவேசம்,ஈழத்தமிழர் போராட்டம் எல்லாமும் உண்டு. ஆனால்,எதுவுமே தனித்து தெரியாது. கதைப்போக்கில் வெகு இயல்பாக அவை உங்களை பயணம் கூட்டிப்போகும் 

திராவிட இயக்கத்திலேயே ஊறிப்போனவர்களுக்கு இது ஒரு நினைவுக்குறிப்பை போலவே தோன்றும். தமிழகத்தின் சமூக மாற்ற வரலாற்றை அறியாதவர்கள் இந்த நாவலை படித்தால் அது தரும் தூண்டுகோலில் இன்னமும் தீவிர வாசிப்புக்கு போவார்கள். “ஒருத்தன் பக்கத்தில் வெட்டுப்பட்டு செத்துக்கிடக்க நிம்மதியா எப்படி தான் தூங்கறீங்களோ?” என்று கேட்கிற நாவலின் இறுதிவரிகள் திராவிட இயக்கத்தின் அடிப்படைகள் அரசியல் நுழைவில் காலப்போக்கில் கைகழுவப்பட்டதை நினைவுபடுத்தியபடியே நாவலை முடிக்க வைக்கிறது
உயிர்மை வெளியீடு 
ஆசிரியர் : தமிழ்மகன்
370 பக்கங்கள் 
ரூபாய்.240

 

உலகை மாற்றிய ஜேம்ஸ் வாட்


ஜேம்ஸ் வாட் எனும் நீராவி இன்ஜினில் மாற்றங்கள் கொண்டுவந்த உலகையே திருப்பிபோட்ட அற்புத பொறியியல் வல்லுநர் பிறந்த தினம் இன்று . ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்காட்லாந்து வறுமையில் வாடியது ; இவரின் குடும்பமும் அவ்வாறே துன்பப்பட்டது . இளவயதில் இருந்தே வடிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் வரைய தாளில்லாமல் தரையில் வரைந்து பழகினார் . உடல் நலம் அடிக்கடி சரியில்லாமல் போய்விடும் இவருக்கு ;பல பிள்ளைகள் கொள்ளை நோயில் இறப்பதை கண்ட இவர் அம்மா பள்ளிக்கு இவரை அனுப்ப மாட்டார் -பள்ளிக்கல்வியே தடைபட்டது .

வேலையை செய்ய விலங்குகள். மனிதர்கள் பயன்படுத்த பட்ட பொழுது பல மாற்றங்கள் வந்தது . 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவியை உருவாக்கினார் . அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து மேம்பட்ட நீராவி இயந்திரத்தை பதினான்கு ஆண்டுகள் கழித்து உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன் . ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன. 

படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அதற்கு பின் கிளாஸ்கோ பல்கலைகழகத்தில் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பில் சேர்ந்தார் அவர் . தாமஸ் நியூகோமன் உருவாக்கிய இயந்திரம் பல்வேறு குறைகளோடு இருந்தன ;ஆற்றல் விரயம் வேறானது . 

ஜேம்ஸ் வாட் வீட்டில் கெட்டிலை அடுப்பில் வைத்திருந்த பொழுது நீராவி கெட்டிலின் மூடியை தூக்கி நிலையாக நிற்க வைப்பதை பார்த்தார் விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார். பதினேழு ஆண்டு உழைப்பில் சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது. 

இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் ‘centrifugal governor’ ,அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது;தொழிற்புரட்சியின் மாபெரும் பங்களிப்பை தந்தவர் வாட் என நாடே கொண்டாடியது .ஏழ்மை ,உடல்நலமின்மை ஆகியனவற்றை வென்று சாதித்த அவரை நினைவுகூர்வோம்