ஏப்ரல் ஒன்று அன்று ஏமாற்றிய கதைகள் !


எப்படி ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று ஆக்கினார்கள் என்பதைப்பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. கிரிகோரியன் காலண்டருக்கு மாறாமல் ஏப்ரல் ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிய பிரெஞ்சு காரர்களை கிண்டல் செய்ய அந்த விழா உண்டானது என்று சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் உறுதியாக  இல்லை. மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது. கவனமாக படியுங்கள் :

ஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரொம்பவும் சீரியஸாக தொலைகாட்சி முன்னர் தோன்றிய தொகுப்பாளர் எல்லா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளையும் நைலான் உறையொன்றை பொருத்தி நீக்குவதன் மூலம் வண்ணத்தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று அறிவிக்க பற்றிக்கொண்டது ஸ்வீடன். அப்புறம் ஜாலியாக ஸாரி சொன்னார்கள் !

ஏப்ரல் 1, 1998 அன்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலையை வால்ட் டிஸ்னியின் நிறுவனத்திடம் விற்று விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அக்கல்வி நிறுவன தளம் தெரிவித்தது. பல்கலை இடிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அதன் கிளைகள் ஏற்படுத்தப்படும் என்று அது அறிவித்த பொழுது அதிர்ந்து போனார்கள். அப்புறம் அக்கல்விக்கூட மாணவர்கள் தளத்தை ஹாக் செய்த விஷயம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.

ஏப்ரல்  1, 1976 அன்று பிபிசியின் ரேடியோ வானவியல்  அறிவிப்பாளர் சனி மற்றும் ப்ளூட்டோவுக்கு இடையே ஏற்படும் இணைப்பால் புவியின் புவி ஈர்ப்பு விசை குறையும் என்றும்  9:47 a.m க்கும் சரியாக குதித்தால் மக்கள் மிதக்கலாம் என்று அறிவித்து அதை அப்படியே செய்து விழுந்தார்கள் பலபேர் !

அதே பிபிசி 1957 இல் நூடுல்ஸ் போன்ற உணவான ஸ்பாகாட்டி ஸ்விட்சர்லாந்து நாட்டில் மரத்தில் விளைவதாக அறிவிக்க அந்த மரத்தின் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா என்று போன் கால்கள் ஓயாமல் வந்து சேர்ந்தன

1980 இல் பிக் பென் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போவதாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பெரிய கூத்து ஜப்பானிய பிபிசி அந்த கடிகாரத்தின் பாகங்களை முதலில் அழைக்கும் நாலு பேருக்கு விற்பதாக சொல்ல அட்லாண்டிக் கடலின் நடுவில் இருந்து ஒரு நேயர் அழைத்து அசடு வழிந்தார் !

ஆறு வருடங்களுக்கு முன்னர் அண்டார்டிகாவில் பென்குயின்கள் பறக்கின்றன பாஸ் என்று இன்னொரு போலி வீடியோவோடு வந்தது பிபிசி. அதையும் நம்பினார்கள் மக்கள் !

பொலிடிகன் எனும் கோபன்ஹெகன் நகர செய்தித்தாள் டேனிஷ் அரசு நாய்கள் எல்லாவற்றுக்கும் வெள்ளை பெய்ன்ட் அடித்து இரவில் அவற்றின் மீது வாகனங்கள் மோதாமல் தடுக்க சட்டம் கொண்டு வந்திருப்பதை சொல்ல பல் நாய்கள்
பாவம் வெள்ளை பூச்சுக்கு மாறின !

ஐரீஷ் டைம்ஸ் 1995 இல் டிஸ்னி நிறுவனம் லெனினின் பாதுகாக்கப்பட்ட உடலை வாங்கி தன்னுடைய பொழுது போக்கு மையத்தில் வைக்க இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் குரல் கசியும் என்று வதந்தியை கசிய விட்டது !

The China Youth Daily பத்திரிக்கை சீனாவில் முனைவர் ஆய்வில் ஈடுபடுவர்கள் ஒரு பிள்ளை மட்டுமே என்கிற சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கிளப்பிவிட்டு அதை சில செய்தி நிறுவனங்கள் உலகம் ழுக்க கொண்டு போய் சேர்த்தன.

முதல் உலகப்போரின்  April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது. வெகுநேரம் வெடிக்காமலே இருக்கவே,அருகில் போய் அதை பார்த்தால் கால்பந்தை சியிருக்கிறார்கள் ! அதில் “ஏப்ரல் ஃபூல் !” என்று எழுதி வேறு ஒட்டியிருந்தார்கள் !

பர்கர் கிங் எனும் அமெரிக்க நிறுவனம் இடது கைப்பழக்கம் உள்ள மூன்றரை கோடி அமெரிக்கர்கள் உன்ன இடக்கை வோப்பர் எனும் உணவுப்பண்டத்தை கொண்டு வந்திருப்பதாக சொல்ல வலக்கை பழக்கம் உள்ளவர்கள் சண்டைக்கு வந்துவிடவே அதுவே புரூடா என்று புரிய வைத்தார்கள்.

கூகுள் ஏப்ரல் தினத்தில் குறிப்பிட்ட தயாரிப்பை வெளியிடுவதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 1, 2004 இல் மின்னஞ்சல் சேவையை துவங்குவதாக சொல்ல எல்லாரும் ஏமாற்றப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகியிருந்தார்கள். ஜிமெயிலை மெய்யாலுமே உருவாக்கி ஷாக் தந்தது கூகுள் ! இப்படியும் ஏமாற்றலாம் பாஸ் !

லண்டன் டைம்ஸ் இதழ் 1992  இல் பெல்ஜியத்தின் ஒரு பாதியை நெதர்லாந்தும் இன்னொரு பாதியை பிரான்சும் பிரித்துக்கொள்ளும் என்று அறிவிக்க அதை பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி உண்மை என்று நம்பி டிவி ஷோவில் வாதிக்க கிளம்பி விட்டார். அப்புறம் அஸ்கு,புஸ்கு சொன்னார்கள் அவருக்கு!

இந்தியாவின் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பிப்பதாக கிளப்பி விட்டார்கள்.

லேஸ் சிப்ஸ் நிறுவனம் செய்தித்தாளில் வெளிச்சத்தால் இயங்கும்  டிவி பார்க்கலாம் என்றொரு விளம்பரம் தர அதை உண்மையென்று செய்தித்தாளை ஆட்டிப்பார்த்து ஏமாந்து போனார்கள் எண்ணற்ற வாசகர்கள் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s