கர்ணனின் கவசம் நாவல் அறிமுகம்


கர்ணனின் கவசம் நாவலை ஒரு இரண்டரை மணிநேரத்தில் படித்து ஒரு இனம் புரியாத உணர்வோடு தான் இந்தப்பதிவை அடிக்கிறேன். நான் புனைவை அவ்வளவாக இப்பொழுதெல்லாம் வாசிப்பதில்லை ; என்னுடைய முதல் பத்தாண்டு வாசிப்பு பெரும்பாலும் புனைவிலேயே கழிந்தது. நிறைய சாகச நாவல்களை படித்தவன் என்கிற முறையில் கொஞ்சம் கர்வத்தோடு தான் இந்த நாவலை எடுத்தேன். 

ஆனால்,ஆசிரியர் பிரமிக்க வைத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை. இப்படித்தான் கதையில் திருப்பம் வரும் என்று யூகிக்கவே முடியாத வகையில் சரசரவென்று ட்விஸ்ட்களை தெறிக்க விடுகிறார் ஒருபுறம் என்றால் யார் எப்பொழுது வில்லனாக மாறுவார்,யார் உருவத்தில் யார் இருப்பார் என்று யோசித்தே பல புள்ளிகளில் அசந்து போனேன். பொன்னியின் செல்வன்,மகாபாரதம் அப்புறம் ஹாலிவுட் சினிமா தாக்கத்தில் எழுந்த சூப்பர் வில்லன்கள் என்று கதாப்பாத்திரங்கள் கதையில் விறுவிறுப்பை கூட்டிக்கொண்ட போகிறார்கள்.

கர்ணனின் கவசம் எங்கிருக்கிறது,அதை அடைய வந்திருக்கும் ஜெர்மானிய,சீன உளவாளிகள் என்ன செய்வார்கள் ? திசை மாறியிருக்கும் சிலைகள் காட்டும் வழியெங்கே போய் முடியும் என்றெல்லாம் எதற்கும் நகங்கடித்து கவலைப்பட முடியாது ! அதற்குள் அடுத்த மாற்றம் நடந்து முடிந்திருக்கும். பிரதிபிம்பம் தான் உலகம் என்பதை வைத்துகொண்டு சிவராமன் சார் பின்னியிருக்கும் கதைச்சரடு சொல்லிப்புரியப்போவதில்லை.

வில்லன் தோற்கப்போகிறோம் என்கிற கவலையே இல்லாமல் இறுதி வரை முயல்வதும் இன்னொரு பக்கம் ஆயியின் கம்பீரம் என்னவோ செய்கிறது. விமலானந்தர் தருகிற இறுதிகட்ட அதிர்ச்சி கூடவே ராஜி,ஆயி யார் என்கிற விவரிப்புகள் முதல் அத்தியாய வரிகள் மீண்டும் வந்து ஹலோ சொல்வது என்று நவீன இலக்கிய பாணியில் கதையை நகர்த்திப்போகும் ஆசிரியர் விறுவிறுப்பாக வாசகன் வாசிக்க வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு இருக்கிறார். 

என்னை இந்த புத்தகம் ஏமாற்றவில்லை. சில சமயங்களில் அந்த ஸ்லோகத்தை நானும் தாராவுடன் சேர்ந்து சொன்னேன் . Ramesh Vaidya அண்ணனின் மின்னியைக்கொன்று விடுவில் இப்படி கடைசியாக மந்திரம் உச்சரித்தாக ஞாபகம். குழந்தை தான் நீ என்று இந்த நாவலின் சாகச நடை சொல்லிவிட்டது. திருப்பி இந்த கதையை அப்படியே கோர்வையாக சொல்லமுடியாது என்பதில் இருக்கிறது இதன் வெற்றி ! இதையே நீங்கள் தோல்வியாகவும் பார்க்கலாம்-சில நண்பர்கள் அப்படி சொன்னார்கள் 

கதையின் இறுதி அத்தியாயம் திருப்தியான முடிவைத்தரவில்லை என்று சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு படித்து முடித்தபின் தோன்றியது. தம்பி அனிமேசன் துறையில் கலக்கிக்கொண்டு இருப்பவன் ; கேமிங்கிலும் புலி ,”அண்ணா நம்ம நாட்டோட மித்தாலிஜியை வைச்சு கேமிங் க்ரியேட் பண்ண நல்ல கதையிருக்கா ?” என்று கேட்டான் நாவலை வாசிக்க ஆரம்பித்த நூறாவது பக்கத்தில் ,”இதுதான் அந்த நாவல் தம்பி !” என்று அவனுக்கு அழைத்து சொன்னேன்.  வாழ்த்துகள் அண்ணா !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s