ஷெர்லாக் ஹோம்சை உருவாக்கிய தோல்வியுற்ற மருத்துவர் !


ஷெர்லாக் ஹோம்ஸ் காதலரா நீங்கள் ?அப்பொழுது நீங்கள் நன்றி சொல்லவேண்டியது சர் ஆர்தர் கானன்டெயில் எனும் தோற்றுப்போன மருத்துவருக்கு தான்
!மருத்துவத்தில் மாபெரும் தோல்வி அடைந்த கானன்டாயில் தான் பார்த்த ஒரு நண்பரின் தாக்கத்தில் உருவாக்கிய கதாப்பாத்திரம் காலத்தை கடந்து நிற்கும் என்று அவரே எதிர்பார்க்கவில்லை தான் 

ஹோம்ஸ் பறந்து பறந்து
சாகசங்கள் செய்ய மாட்டார் ,இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் அப்பொழுது இல்லை !அவரிடம் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை;காதலிகள் இல்லை 
ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு ஜீனியஸ் ;விழுந்து கிடக்கும் களிமண்ணை வைத்தே அது லண்டனின் எந்த பகுதி களிமண் என சொல்கிற அளவிற்கு அறிவு உண்டு .தன்னை
பார்க்க வருகிறவரை பற்றி ஒவ்வொரு கதையிலும் மிக துல்லியமாக சொல்லும் ஆற்றலும் இவருக்கு உண்டு.ஆனால் இதில் எந்த மாயாஜாலமும் இல்லை என்பதை
ஹோம்ஸ் வாட்சனிடம் விவரிக்கும் பொழுதே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளும்

எல்லா குற்றங்களைப்பற்றியும் தகவல் ஹோம்ஸ் வைத்திருப்பார் . “எல்லா
குற்றங்களும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டன “என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம் மொத்தம் 56 சிறுகதைகள் மற்றும் நான்கு நாவல்களில்
வந்து சாகா வரம் பெற்று விட்ட இந்த கதாபத்திரத்தை தற்போழுது திரைப்படங்களின் மூலமும் சீரியல்கள் மூலமும் தற்போதும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். .

கானன்டாயில் மேலும் பல கதைகளையும் எழுதி உள்ளார்.அவரின் இழந்த உலகம் என்னும் கதையில் டினோசர் எல்லாம் வந்து பயம் காட்டும்..அதில் நடக்கும்
சாகசங்கள் எல்லாம் த்ரில்லிங் ஆக இருந்தாலும் ஷெர்லாக் ஹோம்ஸ் மயக்கத்தில் இருந்த மக்கள் இதை சட்டை செய்யவே இல்லை/பார்த்தார் மனுஷன்

கடுப்பாகி அவர் தோற்ற கேஸ்கள் என நூல் வெளியிட்டார் !அதுவும் ஹிட்,அவர் இறந்தே விட்டார் எனவும்
முடித்தார் ; ஷெர்லாக் தன் எதிரி மரியார்டியுடன் சண்டை போட்டு இறந்து விட்டதாக எழுதி விட்டார்.அது வரை ஷெர்லாக் ஹோம்ஸ்கதைகள் தொடர்ந்து வந்து கொண்டு
இருந்த strand magazine விற்பனை சர் என விழுந்து விட்டது .பல நாட்களுக்கு டாக்ஸி டிரைவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்

கடும் எதிர்ப்புக்கு பின் ஹோம்ஸை மீண்டும் கொண்டுவந்தார். ஆனால் கதை முன்னமே நடப்பது போல வடிவமைத்தார் 221 B பேக்கர்தெரு என்னும் இல்லாத ஷெர்லாக் ஹோம்ஸின் முகவரிக்கு இன்று வரை
பல்வேறு குற்றங்களை கண்டுபிடிக்க சொல்லி வரும் கடிதங்கள் ஏராளம்.அந்த ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய கானான்டாயில் பிறந்த தினம் மே 22

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s