அழுவதற்கு காரணங்கள் தேவையில்லை


அழுவதற்கு காரணங்கள் அவசியமில்லை ;
ஒரு சிறு மவுனம் கூட போதுமானது
அழுகையை வர வைப்பதற்கு வன்முறைகள் தேவையில்லை ;
எதோ ஒரு பெயர் தெரியாத வருடல்
வழித்து கண்களை கசிய வைக்கலாம் ;
சிரிப்பதற்கு விளக்கங்கள் கேட்காத உலகத்தில்
அழுகையிலும் கேட்பதற்கு ஆளில்லாமல் போகையில்
பேருந்து நிறுத்தங்களில் பெருங்கோபங்கள்
இடியப்போகும் சுவர்களில்,
புதிதாக திறக்கப்பட்ட பூங்காக்களின்
ஊஞ்சல்களின்
சங்கிலியின் ஓட்டைகளில்
ஓங்கி குத்தி குமுறுகையில்,
அடுக்ககங்களின் அரையிருட்டில்
சுவர் பல்லியாய் ஒட்டி நின்று
அலைபேசியில் அலறிவிட்டு
இயல்பாகையில்,
காகம் சிரித்து,சிட்டுகுருவி மரித்த
மழையோடு விழுகையில்,
வெயில் காயும் ஊரினில் குனிந்து
நீர் பெருக்கி
மடி மட்டும் தானாக நனைகையில்
ஊர் வாதைக்கு அருந்துபவர்களின்
மதுக்கோப்பைகள் காலியாகி
தெருவோரங்கள் தேய்ந்து போன சக்கரமாக
சுழல்கையில்
தானாக பெருங்குரலெடுத்து
அழுகையில் ஏன் அத்தனை பேரும்
கண்டுகொள்ளாமல் நகர்கிறீர்கள் ?
அழுவதற்கு காரணங்கள் அவசியமில்லை என்றாலும்
அழுகையை நிறுத்திட அழுகிறேன்
என்கிற காரணமே போதுமானது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s