ஷெர்லாக் ஹோம்ஸ் நாயகன் பெனடிக்ட் கும்பர்பாட்ச் !


ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை நவீன யுகத்துக்கு ஏற்றவாறு திரையில் பி.பி.சி உருவாக்கிய பொழுது தான் பெனடிக்ட் கும்பர்பாட்ச் என்கிற அழகான தேர்ந்த நடிகரை திரையில் பார்த்து ரசிகர்கள் பிரமித்தார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதுவரை ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர்களிலேயே சிறந்தவர் என்று சொல்கிற அளவுக்கு மிரட்டி எடுக்கிறார் இவர். 

அவரின் அப்பா,அம்மா இருவருமே தொழில்முறை நடிகர்கள். தங்களைப்போல பிள்ளையும் நடிப்புத்துறை பக்கம் வந்துவிடக்கூடாது என்று எண்ணி மிகவும் பெருமை வாய்ந்த பள்ளியில் செலவு செய்து படிக்க வைத்தார்கள். தானும் படித்து முடித்து விட்டு வக்கீல் ஆகலாம் என்கிற திட்டத்தில் தான் ஆரம்பத்தில் கும்பர்பாட்ச் இருந்தார். ஆனால்,பள்ளியில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இவர் பின்னி எடுக்க ஆசிரியர்கள் எப்படிப்பட்ட மகத்தான நடிகன் நீ என்று ஊக்குவிக்க அப்படியே நடிப்புத்துறையில் பட்டப்படிப்பு படித்தார். கூடவே நடுவில் கிடைத்த இடைவெளியில் போய் திபெத்திய துறவிகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தந்து அவர்களிடம் இருந்து எதற்கும் சலனமில்லாமல் கடக்கிற வித்தையை கற்று வந்தார். 

டி.வி.சீரியல்கள் என்று துவங்கி சினிமாக்களில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். அது போக ஹாபிட் ,மடகாஸ்கர் என்று பல படங்களில் பின்னணி குரல் கொடுப்பதிலும் கலக்கி எடுத்தார். அப்பொழுது தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலில் நடிக்க வாருங்கள் என்று அழைப்பு வந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலை இவர்கள் சொதப்பி எடுக்க போகிறார்கள் என்று கிட்டத்தட்ட நோ சொல்லிவிட இருந்தார். பின்னர் ஓகே ஆன பிறகு நடந்தது வரலாறு. ஒரே ஆண்டில் பத்து லட்சம் முறை ட்வீட்டரில் அவர் பெயர் குறிக்கப்படுகிற அளவுக்கும்,ஆஸ்கருக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டு விருதே பெறாமல் போனாலும் மீடியாக்களின் கண்கள் முழுக்க அவரையே மொய்க்கிற அளவுக்கு இவர் செக்ஸி !

இன்னமும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது ஒரு காரணம். கூடவே அந்த பல்வேறு வண்ணங்கள் கொண்ட கண்கள்-ஹெடிரோக்ரோமியா என்கிற குறைபாடு அது. அதனால் நீலம்,மஞ்சள்,இளஞ்சிவப்பு என்று பல வண்ணங்களில் அவரின் கண்கள் மின்னுகிறது. ஒருமுறை To The Ends of the Earth திரைப்படத்தில் தென் ஆப்ரிக்காவில் நடித்துகொண்டு இருந்த பொழுது கூலிப்படை கைகளை கட்டி,துப்பாக்கி முனையில் காரில் தூக்கிப்போட்டுகொண்டு நகர்ந்தது. பின்னர் என்ன நினைத்தார்களோ விட்டு விட்டார்கள். 

குழந்தைகள் மீது எக்கச்சக்க பிரியம் கொண்ட இந்த நிழல் ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு முப்பத்தி இரண்டு வயதுக்குள் ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ளாதது பெரிய வருத்தம். ஆனால்,ஏழு வருடங்கள் கூட ஆகியும் இவர் சிங்கிள் தான். ரொம்பவே உணர்ச்சிகரமான நபரான இவரின் அப்பா,அம்மா இருவரும் தோன்றிய ஷெர்லாக் ஹோம்ஸ் காட்சியைக்கண்டு அழுது விட்டாராம் !

அவரின் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் சம்பவம் ஆறு வயதில் ஒரு குளவி அவரின் இடுப்புக்கு கீழே பதம் பார்க்க ஒரு பாசக்கார பெண்மணி அப்படியே கீழாடையை உருவி தலைகீழாக இவரை தூக்கி அவரின் ஆசனவாயில் வெங்காயம் தேய்த்து ஒத்தடம் கொடுத்தது தான் ! ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதில் பங்குகொள்ளும் பெனடிக்ட் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாப்பாத்திரம் ஆக எடை குறைத்து,முடியின் நிறம் மாற்றி தோன்றினார். இவரை ட்வீட்டரில் ஒரு ரசிகர் வீட்டில் என்ன செய்கிறார் என்று வேவு பார்த்து உடனுக்குடன் அப்டேட் செய்து அலறடித்தார் .விடாமல் துரத்தும் பாப்பராசிக்களால் கடுப்பாகிப்போய் ஒருமுறை இவருக்காக காத்துக்கொண்டு இருந்த அவர்கள் முன்னர் இப்படியொரு தட்டியோடு தோன்றினார்,”போய் எகிப்தை படமெடுத்து உலகத்துக்கு உபயோகமான எதையாவது காண்பியுங்கள் !” என்று. cumberbitches என்று தன்னை அழைப்பது பெண்ணியத்துக்கு எதிரானது என்று சொல்லி cumberpeople என்று தன்னை அழைக்க சொல்லும் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s