அபினி போர் அழித்த சீனா மற்றும் இந்தியா !


அபினுக்காக நடைபெற்ற இரண்டு போர்கள் சீனாவின் வரலாற்றை தீர்மானித்தன என்பது ஆச்சரியமாக இருக்கலாம். சீனாவின் வர்த்தகம் பதினாறாம் நூற்றாண்டு முதலே ஒரே பாணியில் இருந்தது. டீ,பட்டு,போர்சிலின் முதலிய பல்வேறு பொருட்களை அவர்கள் ஏற்றுமதி செய்வார்கள். வெளிநாட்டினர் அவர்கள் நாட்டில் வியாபாரம் செய்ய பெரும்பாலும் அனுமதியில்லை. ரஷ்யாவின் சைபீரியாவில் இருந்து தோலாடைகள் தேவைப்பட்ட பொழுது தேயிலையோடு பண்டமாற்று செய்து கொண்டார்கள். கறி,குதிரைகள்,கம்பளி எது வேண்டும் என்றாலும் பண்டமாற்று என்றே தேங்கினார்கள் அவர்கள்.

ஆனால்,தேயிலை விற்பனை ஐரோப்பாவில் சீனாவை நம்பியே இருந்தது. வெள்ளி கொடுத்தால் மட்டுமே தேயிலை என்று சீனா அடம் பிடித்தது பிரிட்டன் முதலிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு கடுப்பைத்தந்தது. பத்து லட்சம் கிலோ டீக்கு ஒரு லட்சம் கிலோ வெள்ளியை கொடுக்க வேண்டி வந்தால் தலையில் துண்டை போட்டுக்கொள்ள வேண்டியது தான் என்று எண்ணினார்கள். மேக்கர்ட்டினி என்பவரை எங்களையும் வர்த்தகம் செய்து கொள்ள அனுமதியுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். அரசரின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவருக்கு வானியல் கருவிகள் தந்துவிட்டு வியாபாரப்பேச்சை பயந்தவாறு அவர் எடுத்த பொழுது அரசர் மதிக்கவே இல்லை.

சீனாவில் ஏற்கனவே அபினி அறிமுகம் ஆகியிருந்தது. அதை பயன்படுத்துவது பண்டைய காலத்தில் அவ்வளவாக இல்லை. இந்தியாவில் அபினி மொத்தமாக ஒரு பாத்திரத்தில் கரைத்து அருந்துகிற பழக்கம் இருந்தது. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புகையிலை அறிமுகப்படுத்தப்பட்டது தான். அதற்கு பிறகு அதற்கு ரசிகர்கள் அதிகமானார்கள். ஒரு இழு இழுத்தால் போதும் என்பது பல பேரை அடிமையாக்கியது

சீனாவில் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில் ஒரே ஒரு துறைமுகத்தை மட்டும் வியாபாரத்துக்கு திறந்து விட்டார்கள். அதைக்கொண்டே வியாபாரம் சாத்தியம் என்றார்கள். அங்கே சில அதிகாரிகள் தங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட பகுதிகளை தாண்டியும் போகக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. “நீ என்னடா சொல்லுறது ?” என்று இந்தியாவில் இருந்து அபினை சீனாவுக்குள் களமிறக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.

இந்தியாவின் வங்கத்தில் தான் முதன்முதலில் அபின் உற்பத்தியை வாரன் ஹாஸ்டிங்க்ஸ் துவங்கி வைத்தார். அடுத்தடுத்து இந்தியாவின் பாரம்பரிய விவசாய நிலங்களை அபின் பிடித்துக்கொண்டது. மேற்கு இந்தியாவிலும் உற்பத்தி செழித்தது. இந்திய விடுதலைக்கு முப்பது ஆண்டுகள் முன்புவரை உலகிலேயே அதிகபட்ச அபின் உற்பத்தியாளர் இந்தியா தான் என்கிற அளவுக்கு அது செழித்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் இருபது சதவிகிதம் சீனாவை அழித்து தான் பெறப்பட்டது.

சீனாவிற்கு திருட்டுத்தனமாக கள்ளக்கடத்தலில் கொண்டு போய் கடற்கரைகளில் சீன வியாபாரிகளிடம் விற்பார்கள். அங்கே இருந்து சிறு படகுகளில் அவை சீனா முழுக்க பரவியது. அதிகாரிகள் லஞ்சம் கொடுத்து சரிக்கட்டப்பட்டார்கள். சீனாவில் காவல்படை இருக்கிறதா என்கிற கேள்வி உண்டாகிற அளவுக்கு மக்களில் பெரும்பாலானோர் போதைப்பழக்கத்துக்கு உள்ளனார்கள். ஒரு மதிப்பீடு கடற்கரையோரம் இருந்த நாற்பது வயதுக்குள் இருந்த ஆண்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் அபின் பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள் என்கிறது. லீ சே சுன் என்கிற மாகாணஅதிகாரி தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தார். பல்லாயிரம் கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் கைது செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி டாலர் மதிப்புள்ள அபினை ஒப்படைத்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என்று எல்லா ஐரோப்பியர்களையும் பிடித்து வைத்துக்கொண்டார். கைப்பற்றப்பட்ட அபின் முழுக்க எரிக்கப்பட்டது.

இனிமேல் பொறுத்தால் முதலுக்கே மோசம் என்று இங்கிலாந்து களம் புகுந்தது. கன்படகுகள் பயன்படுத்தப்பட்ட அந்த போரில் நவீன தொழில்நுட்பம்,பயிற்சி பெற்ற படைகள்,வலிமை மிகுந்த கப்பற்படை கொண்டிருந்த இங்கிலாந்து எளிதாக வென்றது. போரின் முடிவில் வரி விதிப்பு ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டு எல்லா வர்த்தக தடைகளும் நீக்கப்பட்டன. ஹாங்காங் பிரிட்டன் வசம் போனது. அந்த எரிக்கப்பட்ட அபினுக்கு தொன்னூறு லட்சம் நஷ்ட ஈடு பெறப்பட்டது. இவ்வாறாக தன்னுடைய சுயாட்சியை சீனா இழந்தது. அபின் ஒரு புறம் சீனாவை போதையால் சீரழித்தது என்றால் இந்தியாவில் விவசாயத்தை அழிக்கிற வேலையை அதுவே செய்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s