பதில்களில் இல்லை வாழ்க்கை,கேள்விகளில் இருக்கிறது அதன் அர்த்தம்- CALVIN AND HOBBES தந்தையின் பாடம் !


CALVIN AND HOBBES ஐ உருவாக்கிய பில் வாட்டேர்சன் தன்னுடைய பள்ளியில் ஆற்றிய உரை இது. :

 

என்னுடைய இளமைக்காலம் பற்றி எனக்கொரு கனவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அன்றைக்கு என்னுடைய வருடத்தின் முதல் வகுப்பு. நான் அஞ்சல் நிலையம் நோக்கி நடக்கிறேன். எனக்கு என்னென்ன பாடவேளைகள் என்கிற அட்டவணையை நான் மனப்பாடம் செய்ய மறந்து விட்டேன். எந்த வகுப்புகளில் உட்கார வேண்டும்,எங்கே போக வேண்டும் என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை.

நான் அஞ்சல் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஏறும் பொழுது தான் என்னுடைய தபால் பெட்டிக்கான சாவியை கொண்டு வராதது தெரிந்தது. என்னுடைய அஞ்சல் பேட்டியின் எண் என்ன என்பதும் எனக்கு ஞாபகமில்லை. எனக்கு எல்லாரும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று எனக்குத்தெரியும். ஆனால்,அவற்றை என்னால் பெற முடியாது. நான் உடைந்தும்,கடுமையான ஏமாற்றத்துக்கும் அந்த நிமிடம் ஆளாகிறேன். வந்த பாதையிலேயே திரும்பி நடக்கிறேன். நடுப்பகுதியில் நின்று கொண்டு என் மூளையை கசக்கிக்கொண்டு என்னையே கேட்டுக்கொள்கிறேன் “ நான் பட்டதாரி ஆக இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் ? நான் ஏற்கனவே பட்டம் பெறவில்லையா ? எனக்கு என்ன வயதாகிறது ?” இப்பொழுது நான் தூக்கத்தில் இருந்து எழுந்து விடுகிறேன்.

 

அனுபவம் மூளைக்கான உணவு. அந்த நான்கு வருட பள்ளிக்கால வாழ்க்கை அற்புதமான விருந்து. அந்த கனவு எனக்கு மீண்டும் மீண்டும் வருவதற்கு காரணம் அது வாழ்க்கையின் ஒரு அற்புதமான உருவகத்தின் மையமாக உள்ளது : நாம் எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருப்பது !   

நாம் நமக்காக  மட்டுமே வேலை பார்க்கிற பொழுது எவ்வளவு தீவிரமாக வேலை பார்ப்போம் என்பது ஆச்சரியத்தையே தருகிறது. பயனைக்குறிக்கோளாக கொண்டே நாம் இயங்குகிறோம் என்கிற ஜான் ஸ்டூவர்ட் மில்லின் சித்தாந்தம் அதிகமாக கொண்டாடப்படுகிறது என்று எண்ணுகிறேன். நான் கேலிச்சித்திர கலைஞராக ஒன்றை கற்றுக்கொண்டேன். படைப்பாற்றல் மற்றும் ஆனந்தத்தோடு இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது தான் அது. என் வேலையில் முன்னூற்றி அறுபத்தி ஐந்து நாட்களிலும் புதுப்புது சிந்தனைகளோடு நான் வெளிப்பட வேண்டும் .

நீங்கள் எவ்வளவு அலுப்பு தரக்கூடியவராக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒன்றே ஒன்றை செய்யுங்கள். உங்களின் சிந்தனைகளின் தரம் மற்றும் அலைவரிசை ஒத்துப்போகிற ஒரு வேலையில் சேருங்கள். அது மட்டுமே  உங்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதாக இருக்கட்டும். நான் ஓயாமல் எழுதுவதன் மூலம் பல்வேறு புதுப்புது பரப்புகளில் பயணிக்க முடிகிறது. அதை சாதிக்க நான் ஒருவகையான மனதளவிலான  விளையாட்டுப்போக்கை கடைபிடிக்கிறேன்.  . […]

பள்ளியில் ஒவ்வொரு நாளும் உங்களின் மீது ஒரு புது சிந்தனை திணிக்கப்படுகிறது இந்த உலகினில் உங்களுக்கான புதிய சிந்தனைகளை நீங்களே தேடுவதற்கான உத்வேகத்தை நீங்களே உங்களுக்குள்  பெற வேண்டும். நீங்கள் எந்த சிந்தனையையும் எடுத்துக்கொண்டு அதை அடித்து துவைக்க வேண்டியது இல்லை. நீங்கள் பிரகாசமான படைப்பாற்றல் மிகுந்தவராக இருப்பதால் உங்கள் வாழ்நாள் முழுக்க புது திட்டங்கள் மற்றும் தீர்வுகளை உங்களை தரச்சொல்வார்கள். உங்களின் மூளையை புகுந்து விளையாட விடுவதே சிறந்த வழி !   . […]

 

விளையாட்டுத்தனம் கொண்ட மூளை தேடல் நிறைந்ததாக இருக்கிறது. கற்றல் கொண்டாட்டத்துக்குரியதாக இருக்கிறது. உங்களுக்கு ஆர்வம் தருகிற விஷயங்களில் ஈடுபட்டால் ஜாலியான குணம் கொண்டவராகவும்,புதுப்புது அனுபவங்கள் பெறுகிறவராகவும் நீங்கள் இருப்பீர்கள்.

எப்படி ஆக்கப்பூர்வமாக நாம் படைப்பாற்றலை பயன்படுத்துவது என்று நமக்கு சொல்லித்தரப்படுவதில்லை. நான் மேலும் பலவகையான திருப்பங்களை தேட வேண்டும். நம்மை புதுப்பித்துக்கொள்ளவும்,விரிவாக்கிகொள்ளவும் நாம் வெவ்வேறு வகையில் முயல வேண்டும். நம்முடைய சிந்தக்கிற செயல்பாட்டை அப்படியே ஆப் செய்து வைத்துவிடுவது பயன்தராது. நம் மூளை கார் பேட்டரியை போன்றது. அதை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஓடும் !

 

உங்களின் அன்றாட செயல்கள் மற்றும் தேவைகள் எப்படி நீங்கள் அதிகாலையில் எழும் காலத்தை பெரும்பாலும் உறுஞ்சிக்கொள்கிறது என்று கவனித்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். நீங்கள் அரசியல் மற்றும் மதம் பற்றிய சங்கதிகளை வெறும் எதோ ஒரு விஷயம் என்பது போல கடந்து விடுவீர்கள். அவற்றை உங்களின் சிந்தனை மற்றும் கேள்வி கேட்கும் பண்புக்குள் வைத்து பார்க்க மாட்டீர்கள். மற்ற மக்களின் எதிர்பார்ப்புகளைக் கொண்டே நீங்கள் உங்கள் வாழ்க்கையை பார்க்கிறீர்கள் என்பதையும் உண்மையான சிக்கல்களைக்கொண்டு நீங்கள் வாழ்க்கையை அணுகுவதில்லை என்பதையும் சீக்கிரமே உணர்வீர்கள்.

 

நான் பல வருடங்களாக நிராகரிப்பு கடிதங்களை மட்டுமே பெற்றேன். அதனால் நான் ஒரு உண்மையான வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டே ன்.

உண்மையான வேலை என்பது நீங்கள் வெறுக்கிற ஒரு வேலை. நான் கார் விளம்பரங்களை வடிவமைத்தேன்,ஜன்னலில்லா அடித்தளங்களில் பலசரக்கு கடைக்கண விளம்பரங்களை உருவாக்கினேன். அந்த நாற்பத்தைந்து லட்சம் நிமிடங்களையும் நான் வெறுத்தேன். என்னுட வேலை பார்த்த மற்ற கைதிகள் எந்த வேலையையும் செய்யாமல் எப்படி தங்களுக்கான தருணம் வருகிற பொழுது எந்த வேலையும் செய்யாமல் எப்படி இருபது சென்ட்கள் சம்பாதிப்பது என்றே யோசித்தார்கள். நாம் செய்கிற வேலையை பற்றி நாம் கவலைப்படாத பொழுது அது எந்தளவுக்கு வெறுமை மற்றும் இயந்திரத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதும்,அங்கே வேலை பார்ப்பது நம்முடைய பில்களுக்கு பணம் செலுத்த மட்டுமே என்பது பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.

நான் இதையெல்லாம் ஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றால் ஒரே இரவில் வருகிற வெற்றி என்று ஒன்றுமில்லை. நீங்கள் உங்களின் வளங்களை ஒழுங்காக பண்படுத்தி வெற்றி,தோல்விகளை கடந்து ஆனந்தப்பட பழகுவது முக்கியம். நாம் எங்கே போகிறோம் என்பதை நாம் போகவேண்டிய இடத்தை அடையும் பொழுது தான் நம்மில் பெரும்பாலானோர் உணர்கிறோம். அந்த கணத்தில் நாம் திரும்பி இப்படி சொல்கிறோம் ,”இதை நோக்கித்தான் நான் பயணப்பட்டேன் !”. நாம் அந்த காட்சிகளை அனுபவிப்பது நல்லது. நீங்கள் சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என்பது நினைவில் இருக்கட்டும்

நான் எனக்கான வேலையை தருகிற படத்தை அது வரை வரைந்திருக்கவில்லை. ஐந்து வருடங்கள் எனக்கான வேலையை பெறுவதற்காக ஓயாத நிராகரிப்புகளை தாங்கிக்கொள்வது ஒன்று குழப்பத்தின் எல்லையில் நம்பிக்கையோடு இருப்பதால் இருக்கும். அல்லது செய்கிற வேலையை காதலிப்பதாக இருக்கலாம். நான் வேலையை காதலித்தேன். காமிக் ஸ்ட்ரிப்களை எந்த சம்பளமும் இல்லாமல் நான்கு வருடங்கள் வரைந்ததன் பின்னணியில் பணம் இருக்கவில்லை. அந்த வேலை தந்த சாகச உணர்வே காரணம். இந்த உண்மை புலப்பட்ட தருணமே என் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டானது.

 

விற்பது என்பது  பெருமளவில்   வாங்குவதில் சிக்கிக்கொள்வது தான். உங்களை நீங்கள் விற்கிற பொழுது இன்னொருவரின் மதிப்புகள்,விதிகள் மற்றும் பரிசுகளில் நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள். 

பல கோடி டாலர் நிறுவனம் எனக்காக வாய்ப்போடு காத்திருந்த பொழுது அதை நான் ஏற்றுக்கொண்டு இருந்தால் என்னுடைய தனித்த குரலை நான் இழந்திருப்பேன். அப்படி நான் செய்திருந்தால் என்னுடைய நோக்கம் விற்பது எதையோ மக்களுக்கு சொல்வதில் என்றாகி இருக்கும். என்னுடைய கலைத்]தன்மையை தியாகம் செய்து பெருமளவில் உற்பத்தி செய்வதிலும்,உதவியாளர்களுக்கு வேலை தருவதிலேயும் நான் தள்ளப்பட்டிருப்பேன். படைப்பாளியின் பண்பு உதவியாளர்கள் கைவசம் போயிருக்கும்.  படைப்பற்றல் பணத்துக்கான பணியாகி இருக்கு,. கலை வியாபாரம் ஆகிவிடும். மொத்தத்தில் பணம் என்னுடைய வாழ்க்கையை அர்த்தத்தின் தேவையாக மாறியிருக்கும். பணத்தை விட நல்ல அர்த்தம் மிகுந்த வாழ்க்கையை நான் தேர்வு செய்தேன்

உங்களுக்கே உரிய அற சிக்கல்களை நீங்கள் சந்திப்பீர்கள். அது சொந்த வாழ்க்கை மற்றும் தொழில்ரீதியான குழப்பமாகவும் இருக்கும். நம்முடைய தேவைகள்,விருப்பங்கள் வெவ்வேறாக இருக்கும். ஆனால்,நமக்கு நம்மிடம் என்ன தேவை என்றும்,நம் எதற்காக நிற்கிறோம் என்றும் நாம் கண்டறியாவிட்டால் நாம் அர்த்தமற்றும்,முழுமையற்றும் வாழ்கிறோம். இப்பொழுதோ அல்லது வெகு சீக்கிரமோ நாம் கவலைப்படுகிற விஷயங்கள் எல்லாவற்றிலும் நாம் சமரசம் செய்து கொள்ள உட்படுத்தப்படுவோம். உங்களுக்கு வாழ்க்கையில் என்ன தேவை என்பதையும்,இங்கே பல வகையான வெற்றிகள் உள்ளன என்பதையும் கண்டறியுங்கள்.

 

உங்களின் அறங்களை பிரதிபலிக்கும்,உங்களின் ஆன்மாவை திருப்திப்படுத்தும் ஒரு வாழ்க்கையை உருவாக்குவது அரிய சாதனை.பேராசை மற்றும் அதிக நுகர்வு ஆகியவற்றை ஓயாமல் வளர்க்கும் சமூகத்தில் தனக்கு பிடித்த வேலையை செய்கிற ஒருவன் விசித்திரமானவனாக அல்லது மோசமானவனாக பார்க்கப்படுகிறான். குறிக்கோள் என்பது கற்பனையான வெற்றி ஏணியின் உச்சத்தை அடைவது என்றே எண்ணப்படுகிறது. பெரிதாக பிழியாத வேலையை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஆர்வங்கள் மற்றும் கனவுகளை துரத்துகிற நபர் தூசியைப் போல பார்க்கப்படுகிறார். தன்னுடைய வேலையை விடுத்தது வீட்டில் பிள்ளைகளை வளர்க்க அமர்கிற மனிதர் தன்னுடைய திறனுக்கு ஏற்ப வாழவில்லை என்று கருதப்படுகிறார். ஒரு பணிப்பட்டமும்,சம்பளமும் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிக்கிறது.   

உங்களுக்கு நூறு வழிகளில் சில சமயம் மென்மையாக சில சமயம் வன்மையாக ஓயாமல் ஏறிக்கொண்டிருக்கவும், நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ,யாராக  இருக்கிறீர்களோ,என்ன செய்கிறீர்களோ இவற்றி திருப்திப்படாமல் இருக்கவே சொல்லித்தரப்படும். உங்களை விற்க லட்சம் வழிகள் உள்ளது என்று உங்களுக்கு தொடர்ந்து சொல்லப்படும் . உங்களின் வாழ்க்கையின் பொருளை கண்டறிவது சுலபமில்லை. ஆனால்,அதை நீங்கள் செய்ய முடியும். நீங்கள் வாழ்க்கையில் வரப்போகும் துயரங்களுக்காக ஆனந்தப்படுவீர்கள் என்று எண்ணுகிறேன்.  

உண்மையான உலகுக்கான தயாரிப்பு நீங்கள் கற்ற பதில்களில் நிச்சயம் இல்லை. நீங்கள் உங்களுக்குள் கேட்க பழகிக்கொண்ட கேள்விகளில் இருக்கிறது. :

மூலம் : http://www.brainpickings.org/index.php/2013/05/20/bill-watterson-1990-kenyon-speech/

 

பின்னூட்டமொன்றை இடுக