அவர் பெயர் அகஸ்டஸ் சீஸர் !


அகஸ்து சீசர்  ரோம சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர். அவரின் அசரவைக்கும் வாழ்க்கையில் இருந்து சிலத்துளிகள் :

ஆக்டேவியன் என்பது இயற்பெயர். ஜூலியஸ் சீசரின் தங்கையின் பேரன் இவர். பிறந்த நான்காம் வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.  ஹிஸ்பானியா (நவீன ஸ்பெயின் ) மீது நடந்த தாக்குதலின் பொழுது கடலில் மாட்டிக்கொண்டார். தீரமாக செயல்பட்டு தப்பிவந்த  பொழுது வயது பதினெட்டுக்குள். ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரியாக முயற்சி செய்கிறார் என்று படுகொலை செய்யப்பட்ட பின் அவரின் உயில் திறக்கப்பட்டது. அதில் இவரை அவரின் வாரிசு என்று அறிவித்து இருந்தார்.
மார்க் ஆண்டனி ,ஆக்டேவியன் இருவரும் எதிரிகளை வென்ற பின்பு இருபகுதிகளாக வெற்றி பெற்ற பகுதிகளை பிரித்துக்  கொண்டனர். ஆக்டேவியன் ஆகிய அகஸ்து சீசரின் தங்கையை மணந்திருந்த  மார்க் ஆண்டனி ஆப்ரிக்காவை ஆளப்போன இடத்தில் கிளியோபட்ராவின் அழகில் கிறங்கி அங்கேயே கிடந்தார். இவரின் தங்கையை விவாகரத்தும் செய்தார்.
மார்க் ஆண்டனியை போரில் வென்ற பின்பு நாட்டின் தலைமைப்பொறுப்புக்கு வந்தார். மன்னன் என்று சொல்லிக் கொள்ளாமல் பதவியை நோக்கி நகர்ந்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கர்ப்பமாக இருந்த தன்னுடைய காதலி லிவியாயை திருமணம் செய்து கொண்டார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் என்று மக்கள் பயந்தார்கள். செனட்டுக்கு கட்டுப்பட்டவன் என்று நாடகம் போட்டு திரைமறைவில் நாட்டை பேரரசராக ஆண்டார். ரோம சாம்ராஜ்யப் பரப்பு ஐரோப்பா,ஆசியா என பரந்து  விரிந்தது.
நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம்,காவல் துறை,தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் உலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது அகஸ்து சீசர் தான். சிறப்பு மிகுந்த திறனோடு செயல்படும் அஞ்சல் துறையையும் உருவாக்கினார். போர் நடக்கிற இடங்களில் எல்லாம் அற்புதமான சாலைகளை கட்டினார். அரசியல் சட்டத்தை உருவாக்கி இருநூறு ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார். இலக்குயம் மற்றும் கட்டிடக்கலை இவர் காலத்தில் உச்சம் அடைந்தது. விர்ஜில் மற்றும் ஹோரஸ் முதலிய மேதைகள் இவரால் பேணப்பட்டார்கள்.
மக்களுக்கு பொழுதுபோக்கைத் தர கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். பத்தாயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் பங்கு கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இறக்கும் அந்த விளையாட்டுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது.  சர்க்கஸ்க்கு ஆப்ரிக்காவில் இருந்து விலங்குகளை கொண்டு வந்து கொடுத்தார் அவர். அதில் பலவற்றை வேட்டையாடிக் கொன்றார்கள் ரோமானியர்கள்
 
ஒழுக்கத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் தந்தார். சொந்த மகளையே தன்னுடைய விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்று நாட்டை விட்டு வெளியேற்றினார். வளர்ப்பு மகன் தைபிரீயசுக்கு  தன்னுடைய மகளை திருமணம் செய்து வைத்தார். அந்த வளர்ப்பு மகனையே தனக்கு பின் வாரிசாக அறிவித்தார்.
அவர் இறந்த பொழுது அவரை ,’கடவுள்’ என்றும்,அவரையே வழிபட வேண்டும் என்றும் செனட் அறிவித்தது. நூறு வருடகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு பின்னர் இவரின் ஆட்சி அமைதியைத் தந்தது. ஆகவே ‘என்னிடம் களிமண்ணாக ரோமை கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன் !’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம். அவரின் நினைவாக செக்ஸ்ட்டிலிஸ்  ஆகஸ்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s