அஸ்வின் எனும் கிரிக்கெட் சுழல் வீரர் !


அப்பா தெற்கு ரயில்வேயில் வேலை பார்த்தவர். இளம் வயதில் க்ளப் அளவில் கிரிக்கெட் ஆடிய அவர் குடும்பச்சூழலால் தனக்குள் கனவுகளைப் புதைத்து கொண்ட அப்பா அஸ்வினுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் என்று புரிந்ததும் ஒரு மாதச்சம்பளத்தில் கிரிக்கெட் மட்டை வாங்கித்தருகிற அளவுக்கு ஊக்குவித்தார்.
கிரிக்கெட்டில் அஸ்வின் மின்னினாலும் வீட்டில் படிப்புக்கும் முக்கியத்துவம் தந்தார்கள். கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கையாகாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. எஸ்.எஸ்.என் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்து பட்டம் பெறுகிற அளவுக்கு அந்த கண்டிப்பு உதவியது
அஸ்வினின் டி.ஷர்ட் நம்பர் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 99. அவரின் ட்வீட்டர் அக்கவுண்டின் பெயர் ashwinravi99
ஆரம்ப காலங்களில் ஓபனிங் பேட்ஸ்மானாக இருந்த அஸ்வினுக்கு இடுப்பில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. இரண்டு மாத காலம் நடக்கவே முடியாமல் அவதிப்பட்ட அவர் எட்டு மாதங்கள் கழித்து   பள்ளி அணிக்கு திரும்பினால் அவரின் இடம் பறிபோய் இருந்தது. அதற்குப்பிறகு தான் ஸ்பின்னராக அஸ்வின் தன்னை மாற்றிக்கொண்டார்.
டென்னிஸ் பந்தைக்கொண்டு கிரிக்கெட் ஆட ஆரம்பித்த பயணம் தான் தேசிய அணி வரை கொண்டு சேர்த்தது. இப்பொழுதும் சத்தமே இல்லாமல் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கிற பொழுது நேரம் கிடைத்தால் தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு கல்லி கிரிக்கெட் ஆடப்போய் விடுவார். அங்கே இடது கையால் சுழற்பந்து வீச்சு வீசுவது மாதிரியான வித்தியாசமான முயற்சிகள் செய்வார்
அஸ்வினின் ஆயுதம் அவரின் பல்வேறு ரகமான பந்துகள். விக்கெட் எடுக்க உதவும் கேரம் பந்தின் பிரயோகத்தை சென்னைக்கு ஆட வந்த அஜந்தா மென்டிஸ் பயன்படுத்தியதைக்கண்டு தெரிந்து கொண்டார். பின்னர் தனக்கு ஏற்றவாறு மாற்றி கலக்கி எடுக்கிறார். அது ஒரு தற்காப்பு பந்து தான் என்று வாக்குமூலம் தருகிறார்,
இந்திய கிரிக்கெட் அணியில் சில காலம் சும்மாவே உட்கார வைக்கப்பட்டார். முதல் போட்டிக்கு தேர்வானதும் சச்சின் கையால் அவருக்கு கேப் தரப்பட்டது. அணிக்கான நீல ஜெர்சி கைக்கு வந்ததும் அணிந்து கொண்டு செய்த முதல் வேலை இரண்டு போட்டோக்களை சந்தோஷமாக எடுத்துக்கொண்டது தான்.
ரவிச்சந்திரன் அஸ்வின் - கோப்புப் படம் ; ஏ.எஃப்.பி
விதவிதமாக ஜீன்ஸ் அணிவது,வெவ்வேறு ஹேர்ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது,புதுப்புது டயல்கள் கொண்ட டென்னிஸ் ஆடுவது,ஜாலியாக ஒரு லாங் டிரைவ் போவது எல்லாமும் பிடிக்கும். 
 
ஜாகுவார் மற்றும் ஆடி கார்களின் தீவிர ரசிகர்.  சத்யமில் “பாப் கார்ன் சாப்பிட்டபடி படம் பார்ப்பது சொர்க்கம் பாஸ்” என்பார் !
முதன் முதலில் அறிமுகமான டெஸ்ட் தொடரில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருது பெற்றது,அதிவேக ஐம்பது டெஸ்ட் விக்கெட்கள்,நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் என்று பல்வேறு சாதனைகள் கைவசம் இருந்தாலும் ,”பத்து விக்கெட்டும் எனக்கே வேண்டும் !என்று தான் பந்தைக்கையில் எடுப்பேன் ” என்கிறார்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s