இசைக்குயில் லதா மங்கேஷ்கர் !


லதா மங்கேஷ்கர் தற்போதைய மத்திய பிரதேசத்தின் இந்தோரில் பிறந்தார். தந்தை தீனநாத் மங்கேஷ்கர்,தாய் சுதமதி. அப்பா நாடகங்கள் பலவற்றை எழுதியவர். பாடல்கள் பாடுவதிலும் வல்லவர். முதலில் ஹேமா என்று இவருக்கு பெயர் சூட்டப்பட்டு பின்னர் தீனநாத்தின் நாடகத்தில் வரம் லத்திகா நினைவாக லதா என்று பெயர் சூட்டப்பட்டது

இளம் வயதிலேயே தந்தை இறந்து போனதால் குடும்பத்தின் மொத்த சுமையையும் தாங்க வேண்டிய கட்டாயம் லதா அவர்களுக்கு ஏற்பட்டது. படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவை பெரிதாக போகவில்லை, பாடல்கள் பாட ஆரம்பித்தார். நூர்ஜகான் மற்றும் ஷம்சாத் பேகம் ஆகிய இரண்டு பாடகிகள் பின்னிக்கொண்டு இருந்தார்கள். “அவர்களைப்போல உன் குரல் கனமாக இல்லையே லதா. மென்மையான குரல் எங்களுக்கு வேண்டாம் !” என்று திருப்பின் பலர் அனுப்பி வைத்தார்கள். உச்சமாக ஒ.பி.நய்யார் இறுதிவரை இவரை இந்த காரணத்துக்காக பாடல் பாடவே அழைக்கவில்லை.

முதல் படத்தில் பாடிய பாடல் வெளிவரவில்லை. ஷாஹீத் படத்தில் பாட அவருக்கு வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் மறுக்க குலாம் ஹைதர் என்கிற இசையமைப்பாளர் சிகரெட் டப்பாவில் ஒரு ட்யூன் போட்டு பாடச்சொன்னார். அந்தப்பாடல் லதா மங்கேஷ்கரின் முதல் ஹிட்டாக அமைந்தது.

அவரின்முதல் பெரிய ஹிட் மஹால் படத்தில் வந்தது. ஆனால்,இசைத்தட்டில் அப்பாடலை பாடியவர் என்று படத்தில் நடித்த நடிகை காமினியின் பெயர் குறிக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்கவே நேரமில்லை என்கிற அளவுக்கு ஐம்பது வருடங்கள் ஆதிக்கம் செலுத்தினார். மெலடியின் ராணி என்று சொல்கிற அளவுக்கு ரசிகர்களை கட்டிப்போட்டார். சம்பள விஷயத்தில் கறாராக இருந்தவரும் கூட.

இளமைக்கால கனவாக படிப்பை முடிக்க முடியாமல் போனதை ஏக்கத்துடன் சொல்வார். “குடும்பத்தின் சுமைகளை சுமக்க வேண்டிய சூழலில் வேறு எதையும் என்னால் யோசிக்க முடியவில்லை. எனக்கு பேராசிரியராக மாறத்தான் ஆசை இருந்தது !” என்றார்.

சமையல் செய்வது பிடித்தமான பொழுதுபோக்கு. அல்வா மற்றும் பாசண்டா இரண்டும் அவர் கைப்பக்குவத்தில் மணக்கும். அற்புதமாக புகைப்படங்கள் எடுப்பார். டிஜிட்டல் கேமிராக்கள் வந்த பிறகு படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டார் சிவாஜி கணேசனை வருடாவருடம் சென்னைக்கு வந்து சந்தித்து ராக்கி கட்டுகிற வழக்கம் இவர் மற்றும் இவரின் சகோதரி ஆஷா இருவருக்கும் இருந்தது.

உலகப்புகழ் பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் பாட அழைக்கப்பட்ட முதல் இந்தியர் லதா அவர்களே. அங்கே பாகிஸ்தானியர்கள்,வங்கதேச மக்கள் மற்றும் இந்தியர்கள் எல்லாரும் டிக்கெட்களை வாங்கி ஹாலை நிறைத்து திக்குமுக்காட வைத்தார்கள்.

சில மராத்தி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதில் ஒரு படம் மாநில அரசின் விருதையும் வென்றது. ஆனால்,படத்தின் இசையமைப்பாளரின் பெயராக ஆனந்த் கான் குறிக்கப்பட்டு இருக்கும். லதா மங்கேஷ்கரின் புனைப்பெயர் தான் அது ! பாரத ரத்னா துவங்கி இந்தியாவின் பெரும்பாலான உயரிய விருதுகளை வென்றிருக்கும் அவரின் பெயரால் மகாராஷ்டிரா,கோவா,மத்திய பிரேதச அரசுகள் வருடாவருடம் விருதுகள் வழங்குகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s