இந்திய விண்வெளித்துறை சிற்பி சதீஷ் தவான் !


இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் விக்ரம் சாராபாய்,அப்துல் கலாம் ஆகிய பெயர்களுக்கு இணையாக உச்சரிக்கப்படவேண்டிய ஒரு பெயர் சதீஷ் தவான் அவர்களுடையது.

பஞ்சாப் பல்கலையில் கல்லூரிப்படிப்பை படித்தார் அவர். ஆங்கில இலக்கியம்,இயற்பியல்,கணிதம்ஆகியவற்றில் பட்டங்கள் பெற்ற பின்பு இயந்திரப்பொறியியல் துறையில் அமெரிக்காவில் பட்டம் பெற்றார். வானூர்திவியல்,மற்றும் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பி இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக,பின்னர் இயக்குனராக பணியாற்றினார். அதன் இயக்குனராக ஆன பொழுது அவருக்கு வயது நாற்பத்தி இரண்டு !

தான் படித்த அமெரிக்காவின் கால்டெக் பல்கலையிலேயே பேராசிரியராக இடையே ஒரு வருடகாலம் பணியாற்றினார். இந்திய விண்வெளி ஆய்வுக்கான அடித்தளமிட்ட விக்ரம் சாராபாய் மரணமடைந்து விடவே இவருக்கு இந்திரா காந்தியிடம் இருந்து இந்திய விண்வெளித்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்க திரும்பச்சொல்லி அழைப்பு வந்தது,

இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பொறுப்போடு இணைத்தே விண்வெளி ஆய்வுப்பணிகளை பார்த்துக்கொள்வதாக சொல்ல தலைமையகம் பெங்களூருவுக்கு மாறியது. இஸ்ரோ அமைப்பு உருவானது.

அணுசக்தித் துறையில் இருந்த பிரம்மபிரகாஷ் அழைக்கப்பட்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராக்கினார். ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்.

அப்துல் கலாமையும் இஸ்ரோ அமைப்புக்குள் கொண்டு வந்ததும் சதீஷ் தவான் அவர்களே. இன்சாட்,பி.எஸ்.எல்.வி.,ஐ.ஆர்.எஸ் முதலிய பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்கள் அவர் தலைமையில் தான் நிகழ்த்தப்பட்டன

தோல்விகளுக்கு தான் பொறுப்பேற்றுக்கொண்டு வெற்றிகளுக்கு தன்னுடைய சகாக்கள்,அந்தந்த திட்டத்தலைவர்களை முன்னிலைப்படுத்துவார். எஸ்.எல்.வி. 3 ராக்கெட் முதல் முறை தோல்வியடைந்ததும் அந்த திட்டத்தின் தலைவர் கலாமை மற்ற இ=விஞ்ஞானிகளோடு இருக்கவிட்டு ,பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தானே பதில் சொன்னார். “ஒழுங்கான தொழில்நுட்பத்தை தர இன்னமும் காலமாகும். அடுத்த முறை வெல்வோம் !” என்றவர் அடுத்த ஏவுதல் வெற்றி பெற்றதும் தான் ஒதுங்கிக்கொண்டு கலாமை பேச வைத்தார்


வானூர்திகளின் பாகங்களோடு காற்றால் உண்டாகும் உராய்வு பற்றி ஆய்வுகள் செய்து துல்லியமாக அவற்றின் அளவைக் கணக்கிட்டார். (skin friction) அவை உலகெங்கும் பல்வேறு ஆய்வகங்களால் பயன்படுத்தப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விண்வெளித்துறை சாதிப்பதற்கான அடித்தளத்தை அமைத்தார். பல்வேறு அமைப்புகளுக்கு திட்டத்தலைவர்களை நியமித்ததோடு நில்லாமல் வெளியில் இருந்து வல்லுநர்களை பயன்படுத்திக்கொள்ளவும்,கூர்மையான விமர்சனங்கள் மற்றும் சுய மதிப்பீடு செய்யும் முறையையும் கொண்டு வந்து சாதித்தார்.

பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று அறிவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஓய்வெடுக்க கிளம்பினால் புலிகாட் ஏரிக்கு போய் அங்கிருக்கும் பறவைகளை கவனித்து படங்கள் வரைவார். அவற்றையெல்லாம் ‘ Bird Flight’ என்கிற நூலாகவும் வெளியிட்டார். அதற்குஎன்று பெயர். ஓய்வுக்குப் பின்னர் அரசாங்கத்தின் எந்த பொறுப்பையும் வகிக்காமல் விலகிக்கொண்டார் அவர். என்றாலும் இந்திய விண்ணியல் துறையில் அவர் ஒரு தனித்த சகாப்தம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s