சுனிதா வில்லியம்ஸ் என்று விண்வெளி தேவதை !


அப்பா தீபக் பாந்த்யா நரம்பியல் வல்லுநர். அம்மா போன்னி பாந்த்யா, ஸ்லோவேனிய அமெரிக்கர். கணவர் மைக்கேல் ஜே.வில்லியம்ஸ் போலீஸ் அதிகாரி. வீட்டில் எக்கச்சக்க மூளை வரைபடங்களால் ஆர்வம் ஏற்பட்டு சுனிதா பாண்டியா கிருஷ்ணா ஆசைப்பட்டதோ கால்நடை மருத்துவராக !
\அண்ணன் கடல்சார் பல்கலையில் படித்துக்கொண்டிருந்தார். அவரின் அறிவுரையின் பெயரில் அங்கே படித்து பட்டம் பெற்றார்.
கப்பற்படையில் இணைந்து பணியாற்றுகிற பொழுது செங்கடல்,மத்திய தரைக்கடல் பகுதியில் பைலட்ட்டாக பணியாற்றி ஒரு கப்பலை விட்டு இன்னொரு கப்பலுக்கு குண்டுகள்,உணவுப்பொருட்கள் என்று சகலமும் விமானத்தின் மூலம் மாற்றுகிற சாகசத்தில் ஈடுபட்டார்.
விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் அவரே. அப்பொழுது அவருக்கு உண்ண ஆரஞ்சுப்பழங்கள் கொடுத்து அவரின் சகாக்கள் உற்சாகப்படுத்தினார்கள். அங்கே இருந்தபடியே சுட்டிகளுக்கு வானொலியில் ஹாய் சொல்லி பேசவும் செய்தார்
 விண்வெளியில் ஓடிக்கொண்டே இருக்கும் பொழுதே தன்னுடைய தலைமுடியை கத்தரித்து பல்வேறு நோய்களால் இழந்துவிடும் சிறுவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கேசத்தை பெற்றுத்தரும் ‘லாக்ஸ் ஆப் லவ் அமைப்புக்கு’ வழங்கி விழிப்புணர்வு உண்டு செய்தார்.
விண்வெளிப்பயணத்துக்கு கிளம்பிய பொழுது கொண்டு சென்றது ஒரு பகவத் கீதை புத்தகம்,விநாயகர் சிலை மற்றும் சமோசாக்கள் ! பனிச்சறுக்கு,நீச்சல்,பைக் ஓட்டுதல்,ட்ரையாத்லான் ஆகியவை அவரின் குறிப்பிடத்தகுந்த பொழுதுபோக்குகள்.
நாசாவுக்கு விண்ணப்பம் செய்து ஒன்றரை வருடங்கழித்து அழைப்பு வந்தது. அதற்குப் பின்னர் சர்வதேச விண்வெளி மையத்தில் வேலைப் பார்த்தார். அப்பொழுது ரஷ்யர்களுடன் இணைந்து பணியாற்றி ரஷ்யன் மொழி பேசியது வேடிக்கையான அனுபவமாக அவருக்கு அமைந்தது.
மூவாயிரம் மணிநேரத்துக்கு மேல் விண்வெளியில் இருந்தவர் என்கிற சாதனைக்குரிய சுனிதா கடல் மற்றும் அதன் அமைதியை  ரொம்பவே மிஸ் செய்வதாக சொல்கிறார்.
 இந்தியப்பெண் ஒருவரை தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரின் நெடுநாள் ஆசை
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s