நடிப்புலகின் ராணி ஷபனா ஆஸ்மி


புதிய அலை ஒன்று இந்திய சினிமாவை எழுபதுகளில் தாக்கியது. அதில் கிடைத்த ஒரு முத்து தான் ஷபனா ஆஸ்மி :

கம்யூனிஸ்ட்கள் வீட்டில் இரவெல்லாம் கவிஞரான அப்பாவோடு கூட்டம் மற்றும் உரையாடல் நடத்திவிட்டு அங்கேயே உறங்குவதைப் பார்த்து வளர்ந்த பெண்.

இவருக்கு பின்பு பிறந்த தம்பியின் மீது வீட்டில் அதிக செல்லம் என்று இவருக்கு எக்கச்சக்க மன உளைச்சல். ஏழு வயதில் நீலத்துத்தம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காலாவதி ஆகியிருந்தது விஷம். ரயிலின் முன் குதிக்கப்போனவரை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள் 

உளவியல் துறையில் பட்ட பெற்ற பின் புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து கற்றார். வெளியே வந்ததும் பட வாய்ப்புகள் குவிந்தன. இன்னொரு ஆண் மீது ரகசியக்காதல் கொள்ளும் வேடத்தில் ஷ்யாம் பெனகலின் அங்கூர் படத்தில் நடித்ததற்கு முதல் படத்திலேயே தேசிய விருது கரங்களில் வந்து விழுந்தது. 

மரத்தை சுற்றி டூயட் பாடும் படங்களில் நடிக்க விருப்பமில்லாமல் வித்தியாசமான வேடங்களில் நடித்தார். ஒரு பாலின உறவு கொண்ட பெண்ணாக,வேசிகளைத் தரும் பெண்ணாக சர்ச்சைக்குரிய வேடங்களில் நடித்தாலும் நடிப்பால் கலக்கி எடுப்பார். 

அர்த்,காந்தார்,பார் என்று அடுத்தடுத்து மூன்று வருடங்கள் சிறந்த நடிகைக்கான விருதை அள்ளி பிரமிக்க வைத்தார். 

மொத்தமாக ஐந்து தேசிய விருதுகள் 

ஏற்கனவே திருமணமாகி இருந்த கவிஞர் ஜாவீத் அக்தர் தந்தையை அடிக்கடி காண வருவார். அப்பாவுடன் அரசியல்,கவிதை என்று பேசும் அவருடன் பேச ஆரம்பித்ததும் காதல் பூத்தது. பிரிந்து விடலாம் என்றெல்லாம் பேசிப்பேசி பிறகு திருமணம் செய்து கொண்டார்கள்.

ஹாய்,பாய் சொல்லிக்கொள்ள கூட நேரமில்லாமல் இருவரும் ஓடிக்கொண்டே இருந்த காலங்கள் உண்டு. உடலில் இருந்த சில சிக்கல்களால் பிள்ளைப்பேறு இல்லை என்று ஆன பொழுது ஷபானா,”வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை !” என்று தேற்றிக்கொண்டு முதல் தாரத்தின் பிள்ளைகளோடு நேரம் செலவழித்து அன்பு காட்டினார்.

மதவாத எதிர்ப்பு நாடகங்கள்,செயல்பாடுகளில் தீவிரமாக பங்குபெற்றவர். செப்டம்பர் பதினொன்று தாக்குதலுக்கு பின்னர் ஆப்கனில் போரிட இந்திய இஸ்லாமியர்களுக்கு ஒரு மதத்தலைவர் அழைப்பு விடுக்க அதை கடுமையாக கண்டித்தார். “ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு வீடு பெறுவது எனக்கு கடினமான வேலையாக இருக்கிறது. உண்மையான இஸ்லாம் எது என்பதை மதத்தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் !” என்றார்

கோப்புப் படம்: சுஷில் குமார் வர்மா

இவரின் பர்ஸ்,மெயில் எதையும் ஜாவீத் அக்தர் பார்க்க அனுமதியில்லை. ஆனால்,சகலத்தையும் சோதிக்கும்  உரிமை இவருக்கு உண்டு.

“படங்களை தடை செய்வதில் உடன்பாடில்லை. நிர்வாணம் மற்றும் வன்முறையை விட ஆபத்தானது பெண்களை இரண்டாம் தர மனிதர்களாக காட்டுவது. அது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் இன்னமும் தவறான எண்ணங்களை விதைக்கும். இப்படிப்பட்ட சித்தரிப்புகள் தவறான செய்திகளை கொண்டு சேர்க்கும். உழைக்கும் பெண்களின் வாழ்க்கையை திரைப்படங்கள் பதிவு செய்வதே இல்லை ” என்பது அவரின் பார்வை

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் காக்க பிரச்சாரம் ,லத்தூரில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்,காஷ்மிரி பண்டிட்களுக்கு உதவும் முயற்சிகள்,ஐம்பதாயிரம் சேரிவாழ் மக்களுக்கு வீடுகளை அரசாங்கத்தோடு இணைந்து கட்டித்தந்தது என்று நீள்கிறது இவரின் சேவைப்பட்டியல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s