நாகேஸ்வர ராவ் எனும் நடிப்பு சிம்மம் !


அகிநேனி நாகேஸ்வர் ராவ் என்.டி.ஆர். அவர்களுடன் இணைந்து தெலுங்குத் திரையுலகை கலக்கிய சூப்பர் ஸ்டார்

விவசாயக்குடும்பத்தில் இருந்து சினிமா வாய்ப்புகள் தேடி வந்தவர் நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்து வந்தார். கண்டசாலா பலராமையா தன்னுடைய சீதா ராம ஜனனம் படத்தில் நடிக்க நாயகனைத்தேடியவாறு இருந்தவர் இவரை விஜயவாடா ரயில்வே நிலையத்தில் கண்டு நாயகனாக ஆக்கினார்
‘சோக நாயகன்’ என்று சொல்கிற அளவுக்கு மஜ்னு,சலீம் முதலிய வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் தேவதாசு படத்தின் நடிப்பு வெகு புகழ்பெற்றது. ஹிந்தியில் பிமல் ராய் அப்படத்தை ரீமேக் செய்த பொழுது நாயகன் திலீப் குமார் இப்படிச்சொன்னார் ,”ஒரே ஒரு தேவதாஸ் அது நாகேஸ்வர ராவ் !”
கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் புராண வேடங்களில் நடிக்க எப்பொழுதும் மறுப்பு சொன்னதில்லை. நடிகை ஜெயசுதாவுக்கு அன்போடு இயேசுவின் சிலையை பரிசளித்தார். அந்த அளவுக்கு பிறர் உணர்வுகளை மதிப்பவர்.
நான்காம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கிடைத்திருந்தாலும் கற்பதற்கு முடிவே இல்லை என்று எண்ணியவர். தி ஹிந்து செய்தித்தாளை படித்தே ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டவர். இன்னொரு நடிகர் நடிக்கிற பொழுது செட்டை விட்டு நகராமல் அவரிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா என்று பார்ப்பார்.
தெலுங்குப் படங்கள் எல்லாம் தமிழகத்திலேயே உருவாகிக்கொண்டிருந்த காலத்தில் அதை மாற்ற இருபத்தி எட்டு ஏக்கரில் அன்னபூர்ணா ஸ்டுடியோவை ஹைதரபாத்தில் உருவாக்கினார்.
தெலுங்குத் திரைப்படங்களில் நடனக்காட்சிகள் கொண்டு வந்தது,முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தது,ஒன்பது வேடங்களில் தோன்றியது எல்லாமும் அவரே !
அவர் நடித்து வெளிவந்த பிரேமபிஷேகம் திரைப்படம் 533 நாட்கள் ஓடியது இன்றுவரை டோலிவுட்டில் முறியடிக்கப்படாத சாதனை.
மகாகவி காளிதாஸ்,ஓடிசாவின் ஜெயதேவா,கர்நாடகத்தின் அமரசில்பி ஜக்கன்னா,தமிழகத்தின் விப்ரநாராயணா முதலிய பக்தியாளர்கள் வேடங்களில் நடிப்பதை பெருமையாக கருதினார். “நம்முடைய கலாசாரம்,பண்பாட்டில் எவ்வளவு செறிவு இருக்கிறது. ஏன் மேற்கை நாம் பிரதியெடுக்க வேண்டும். சீனர்கள் மற்றும் கொரியர்கள் போல அவர்கள் மண்ணைப் பிரதிபலிக்கும் படங்களை எடுக்க வேண்டும்.” என்பது அவரின் எண்ணம் 
அகிநேனி நாகேஸ்வர ராவ்
 
கலைமாமணி,அறிஞர் அண்ணா விருது,இரு முறை தேசிய விருது,தாதாசாகிப் பால்கே விருது ஆகியன பெற்றிருக்கும் அவர் தன்னுடைய பெயராலேயே ஒரு விருதை நிறுவினார். அதை பாலச்சந்தர்,ஹேமமாலினி,ஷ்யாம் பெனகல் முதலியோர் பெற்றிருக்கிறார்கள். 
கேன்சரால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த பொழுதும் அவரின் மகன் நாகர்ஜுனா மற்றும் பேரன் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த மனம் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்தார். 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s