மைக்கேல் பாரடே எனும் அறிவியல் மேதை


மைக்கேல் பாரடே வறுமையான சூழலில் கொல்லரின் மகனாக பிறந்து வளர்ந்தார். ஒரே ஒரு பாக்கெட் பிரெட்டை ஒரு வாரத்துக்கு உண்டு வாழ்கிற அளவுக்கு வறுமை வீட்டை வாட்டியது.
புத்தக பைண்டிங் செய்யும் ஜார்ஜ் ரிபோவிடம் வேலைக்கு சேர்ந்தார். புத்தகங்கள் பைண்டிங் செய்து பசியைப் போக்கிக்கொண்டார்.
பல்வேறு அறிவியல் அறிஞர்களின் நூல்களை வாசித்தார்.
M Faraday Th Phillips oil 1842.jpg
ஹம்ப்ரே டேவியின் எழுத்துக்கள் கவர்ந்தது. அவரின் பேச்சைக்கேட்டார். பின்னர் அதை  தொகுத்து அவருக்கே அனுப்பி அசத்தினார். டேவியின் சீடராக இவர் சேர்ந்து பின்னர் அவர் வகித்த வேதியியல் பேராசிரியர் பொறுப்பை ஏற்றுகொண்டார். “என்னுடைய மிகச்சிறந்த கண்டுபிடிப்பு பாரடே தான்” என்று சொன்னார் டேவி
காந்தவியல் மற்றும் மின்சாரவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் மூலம் நிரூபித்த மேதை. உலகின் முதல் மின்சார டைனமோ அவராலேயே உருவாக்கப்பட்டது.
மின் மோட்டார்கள் என்பதை நிஜமாக்கிய  மின்தூண்டல் என்பதை உண்டாக்கி சாதித்ததும் அவரே. உலோகங்களை பிரித்தெடுக்கும் மின்பகுப்பு முறையையும் அவர் செம்மைப்படுத்தினார்..
கம்பிச்சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார் . இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர் மற்றும் மின்மாற்றி எனப்படும் transformer ஆகியவற்றையும் உருவாக்கினார்
நல்ல எழுத்தாளரும் கூட. அவரின் மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு நூல் அறிவியலை எப்படி எளிய மனிதனுக்கும் புரிகிற வகையில் சொல்ல வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு,
அவரின் பாரடே விளைவு இன்றைக்கு மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்க பயன்படுகிறது. வாயுக்களை முதன்முதலில் திரவமாகி மாற்றி சாதித்தவரும் பாரடே தான் !
உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படுகிறார். எட்டாண்டுகள் ஓயாமல் ஆய்வு செய்து ஒரு ஆறு வருடங்கள் படுத்த படுக்கையாக இருக்கிற அளவுக்கு அறிவியல் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s