விறுவிறுப்பான வாழ்க்கை இது – ஹோண்டா !


கொல்லரின் மகனாக சோய்சிரோ ஹோண்டா பிறந்தார். அப்பாவின் சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலில் இளம்வயதில் உதவிக்கொண்டு இருந்தார். டோக்கியோ நகருக்கு வேலைத் தேடி போனவருக்கு ஒரு கேரேஜில் கார் மெக்கானிக்காக வேலை கிடைத்தது.

இருபத்தி இரண்டு வயதில் ஊருக்குத் திரும்பியவர் அங்கே ஒரு வண்டிகள் பழுது பார்க்கும் கடையைத் துவங்கினார்.
ஹோண்டா உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்த பொழுது அவருக்கு ஒரு ஆசை துளிர்த்தது. டோயோட்டா அப்பொழுது அங்கே குறிப்பிடத்தகுந்த நிறுவனம். அதற்கு பிஸ்டன் வளையங்கள் செய்து விற்க வேண்டும் என்பது ஹோண்டாவின் இளவயதுக்கனவாக இருந்தது. ஒரு சிறிய தொழிற்பட்டறையை துவங்கி தன்னுடைய கனவுகளை அவர் துரத்தினார். மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பிஸ்டன் வளையத்தை உருவாக்கிக்கொண்டு போய் டோயோட்டா நிறுவனத்திடம் கொடுத்தால் அது தங்களின் தரத்துக்கு ஏற்ப இல்லை என்று கைவிரித்தார்கள்.

மீண்டும் இரண்டு வருடகாலம் விடாமல் உழைத்து ஒரு ஒப்பந்தத்தை அதே நிறுவனத்திடம் பெற்றார். சீக்கிரமாகத் தொழிற்சாலையை உருவாக்கி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்ப்பதற்குள் இரண்டு முறை குண்டுகள் உலகப்போரால் வீசப்பட்டு காலி செய்யப்பட்டது. எஃகுக்கு எங்கேப்போவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். அப்பொழுது அமெரிக்க வீரர்கள் விட்டுவிட்டுப் போன காலி கேன்களில் அவற்றை சேகரித்து மீண்டும் தொழிற்சாலையை உருவாக்க ஆரம்பித்தார்.

உலகப்போருக்கு பின்னர் பெட்ரோல் தட்டுப்பட்டால் மக்கள் சைக்கிளில் பயணம் போக ஆரம்பித்தார்கள். இவர் ஒரு இன்ஜினை பொருத்திச் சுலபமாக பயணிக்க உதவுகிறேன் என்று கலக்கினார். எண்ணற்ற நண்பர்கள் அப்படிப்பட்ட சைக்கிள்களை கேட்டார்கள். அவர்களின் விருப்பதை பூர்த்தி செய்கிற அளவுக்கு இவரிடம் பணமில்லை. மனம் சோர்ந்து போகாமல் ஜப்பானில் இருந்த சைக்கிள் விற்பனையாளர்கள் பல்லாயிரம் பேருக்கு “ஜப்பானை மீட்டெடுக்க என் மிதிவண்டி திட்டத்துக்கு உதவுங்கள் !” என்று கடிதம் எழுதினார். முப்பது சதவிகிதம் பேர் பணம் அனுப்பி உதவினார்கள். உருவாக்கப்பட்ட சைக்கிள்கள் எடை அதிகமானதாக முதலில் இருந்தது . பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு எடை குறைவனாக,இன்ஜினில் ஓடும் பைக்குகளை அவர் உருவாக்கி அமெரிக்காவுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்தார்.

எழுபதுகளில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் கூட்டணி அமைத்துக்கொண்டு எண்ணெய் விலையை ஏற்றின. தட்டுப்பாடு ஏற்பட்டது. அமெரிக்காவிலும் எண்ணெய் பஞ்சம் உண்டானது. பெரிய கார்களை விட்டு சிறிய கார்களை மக்கள் விரும்ப ஆரம்பித்தார்கள். ஏற்கனவே சிறிய இன்ஜின்களை உருவாக்கி அனுபவம் இருந்ததால் அதே பாணியில் கார்களை உருவாக்கினார். அமெரிக்காவில் அவை பெரிய ஹிட்டடித்தன. அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்க கூட நேரமில்லாமல் அவரின் நிறுவனம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வியே !” என்று சொன்ன அவரின் வாழ்க்கையே அதற்கு சான்று தானே ?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s