ரோட்னி ராபர்ட் போர்ட்டர்-நோபல் பெற்ற நோய் எதிர்ப்பியல் ஆய்வாளர் !


ரோட்னி ராபர்ட் போர்ட்டர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்றவர். அவரின் வாழ்க்கையின் பத்து முத்துக்கள் :
இங்கிலாந்தின் லான்செசைர் நகரில் ரயில் சாலைப் பணியில் எழுத்தராக வேலை பார்த்த ஜோசப் போர்ட்டரின் மகனாக பிறந்தார். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி துறையில் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வை இரண்டு முறை நோபல் பரிசை வேதியியலுக்காக வென்ற பிரெடெரிக் சாங்கரிடம் செய்தார். அப்படி அவரிடம் முனைவர் பட்ட ஆய்வு செய்த முதல் நபர் இவரே
உலகப்போரால் கல்வி இடையில் பாதிக்கப்பட்டது
உலகப்போர் சமயத்தில் ஆறு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றினார். அல்ஜீரியா,சிசிலி,இத்தாலி என்று பல்வேறு போர்க்களங்களை உலகப்போர் சமயத்தில் கண்டவர் அவர். மீண்டும் வந்து ஆய்வுகளைத் தொடர்ந்தார். ரத்த வகைகளை கண்டுபிடித்த கார்ல் லான்ட்ஸ்டெய்னரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆய்வுகள் செய்ய ஆரம்பித்த அவர் நோய் எதிர்ப்பியலில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.
உடம்பில் ஏதேனும் அன்னியப்பொருள் புகுந்தால் அதை எதிர்த்து ஆன்டிபாடிக்களை உடம்பு சுரந்து அந்த அன்னியப்பொருளை வெளியேற்றுகிறது. இதற்கு காரணமான இம்முனோக்ளோபுளின் அவர் ஆய்ந்தார் இம்முனோக்ளோபுளின் உள்ளே மணி,மணியாக எக்கச்சக்க சங்கதிகள் இருந்தன. அவையே நோய் எதிர்ப்புத் திறனை உறுதி செய்தன. முயலின் உடம்பில் இருந்த இந்த வஸ்துவை பப்பையின் என்கிற நொதியை கொண்டு மூன்று பாகங்களாக பிரித்து சாதித்தார்.
இம்முனோக்ளோபுளின் Y வடிவம் கொண்டிருப்பதையும் அதில் பெரிய துண்டுப்பகுதி எல்லா மூலக்கூறுகளிலும் ஒன்றாகவும்,சிறிய இரண்டு துண்டுகள் எந்த அன்னியப்பொருளை உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்க்கிறதோ அதற்கேற்பவும் அமைவதை கண்டறிந்து சொன்னார்.
இம்முனோக்ளோபுளினை உடைத்து ஆய்வு செய்த அவர் ஜெரால்ட் எடேல்மான் ஆய்வு முடிவுகளை இணைத்து இம்முனோக்ளோபுளினில் இருந்த ஆயிரத்தி முன்னூறு அமினோஅமிலங்களையும் வரிசையாக கண்டறிந்தார்கள். இதனால் பல்வேறு தடுப்பு மருந்துகள்,நோய் எதிர்ப்பு அதிகரிப்பு ஆகியன சாத்தியாமாகிற்று
அதோடு நில்லாமல் செல்களோடு வெவ்வேறு வினை புரிந்து நோய் தொற்றில் இருந்து உடம்பைக் காக்கும் துணை புரதங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். க்ளைகோஉயிரியல் துறையை ஆக்ஸ்போர்டில் நிறுவி ஆய்வுகள் செய்தார். மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற பிறகும் ஓயாமல் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். ஓய்வுக்கு ஒரு மாதம் இருந்த பொழுது கார் விபத்தில் இறந்து போனார்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s