திருமண உறவில் நடைபெறும் வன்புணர்வுக்கு தண்டனை வேண்டும்!


ஐ.நா. சபையின் மக்கள்தொகை நிதியுதவி அமைப்பு, சர்வதேச பெண்கள் மையம் ஆகியன குறிப்பிடுவது போல இந்தியாவில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள் பாதிக்கப்படும் பெண்களின் கணவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய அமைச்சர் இந்தியாவில் கல்வியறிவு அளவு, கல்லாமை, வறுமை, சமூக சடங்குகள், மதிப்பீடுகள், மத நம்பிக்கைகள், சமூகத்தின் மனோநிலை என்று எக்கச்கக்க காரணங்களால் ஐ.நா. சபை பரிந்துரைத்தாலும் திருமண உறவில் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்வை கிரிமினல் குற்றமாக
ஆக்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார். திருமணம் புனிதம் ஸோ இப்படியெல்லாம் தண்டனை வாங்கித்தர முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

தனிமனிதர்களின் சுதந்திரத்தை மதிக்காத எந்த உறவுமுறைக்கும் புனிதம் என்கிற டேகை சுமத்த வேண்டிய அவசியமில்லை. கட்டிய கணவன் ஒன்றும் நினைத்ததை எல்லாம் செய்ய பெண் சோதனை எலி இல்லை. தனக்கு விருப்பமில்லை என்றால் உறவுக்கு மறுக்க அவளுக்கு எல்லா உரிமைகளும் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் கணவன் கட்டாயப்படுத்தினால் இணங்கிப் போ என்பதை இப்படி சுற்றி வளைத்து சொல்லியிருக்க வேண்டாம். கல்வியறிவு இல்லை என்பதற்காக எய்ட்ஸ் விழிப்புணர்வை உண்டு செய்யாமல் விட்டு விட்டோமா? பாலியல் வாழ்க்கை என்பது எல்லாருக்கும் தேவையானது, அப்படியிருக்க எளிமையாக அதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது கடமையே அன்றி இப்படி சப்பைக்கட்டு கட்டுவது சரியான அணுகுமுறை இல்லை.

இந்த கல்வியறிவில்லாத பெண்களின் ஓட்டுக்களும் தான் ஆட்சிபீடத்தில் அமரவைத்துள்ளது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளலாம். மனைவிக்கு விருப்பமில்லை, என்றாலும், நீ என் பொண்டாட்டி அதனால் படுத்துத்தான் ஆகவேண்டும் என்பது எத்தனை கடைநிலையான வன்முறை? ஒரு சட்டரீதியான, சடங்குரீதியான அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக அந்த பெண்ணின் உடலை நாம் நினைப்பது போல வளைப்பது எப்படி சரியாகும்? விருப்பமில்லாத பாலியல் நிலைகளுக்கு ஒரு பெண்ணை உட்படுத்துவதும் வன்முறையே. இதையே வேறொரு ஆண் செய்தால் வன்புணர்வு என்று பொங்கிக்கொண்டு வழக்கு போடும் காவல்துறை, இந்த மாண்புமிகு கணவன்மார்களை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைக்கும். நிர்பயாவின் வன்புணர்வுக்கு பின்னர் அமைக்கப்பட்ட வர்மா கமிட்டி தூக்கு தண்டனை வேண்டாம் என்ற பரிந்துரையை மீறி தூக்கு தண்டனையை ஏற்படுத்தினோம். அதே சமயம், திருமண உறவில் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்வை கிரிமினல் குற்றமாக ஆக்கவேண்டும் என்கிற பரிந்துரையை காற்றில் பறக்க விட்டுவிட்டோம்.

படுக்கை என்பது ஆண்களுக்கான இடம் என்கிறீர்கள் என்றால் செக்ஸ் டாய் சிறந்த மருந்தாக இருக்கும், இல்லையென்றால் கையே தெய்வம் என்று சுபம் போட்டுக்கொள்ளுங்கள். ஏற்கனவே பெண்கள் பல சட்டங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று கண்ணீர் வடிக்கும் நியாயவான்கள் இந்த திருமணம் என்கிற பெயரில் கணவர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுப்பது தான் முழுமையான சமத்துவத்துக்கு வழிவகுக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s