உலக சுற்றுச்சூழல் தினம்


உயிர்கள் வாழ்கிற ஒரே கோளான நம் பூமி எல்லாருக்கும் ஆனது. அதன் வளங்களால்  நாம் வாழ்கிறோம், வளர்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள  இந்த உலகை பற்றி நாம் கவனிக்கிறோமா? நேசிக்கிறோமா? கவலை கொள்கிறோமா? இவற்றை செய்ய வேண்டியதை வலியுறுத்தும் நாள் தான் உலக சுற்றுச்சூழல் தினம். ஜூன் 5 அன்று வருடாவருடம் கொண்டாடப்படும் இந்த தினம் ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்டத்தினால் துவங்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் இந்த நாளை கொண்டாடலாம். 

 

எப்பொழுது துவங்கியது?

 

1972-ல் ஸ்டாக்ஹோமில் கூடிய ஐ.நா.வின் மனித சுற்றுச் சூழல் மாநாடு வருடாவருடம் இப்படியொரு தினத்தைக் கொண்டாடுவது என்று முடிவு செய்ததது. ஒவ்வொரு வருடமும் ஒரு பேசுபொருள், முழக்கம் சுற்றுச் சூழல் தினத்துக்கு வழங்கப்படுகிறது.  உலக சுற்றுச்சூழல் தினத்தை சுருக்கமாக WED  என்று அழைக்கிறார்கள். இந்த வருட WED -ன்  பேசுபொருள் நிலையான உற்பத்தி, நுகர்வு என்பதாகும். முழக்கம்  ‘ஏழு பில்லியன் கனவுகள். ஒரே கோள். கவனமாக செலவிடுங்கள்!’   

 

ஏன் வளங்களை நாம் கவனமாக செலவிட வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது இல்லையா? 

 

உலகத்தின் மக்கள் தொகை இன்னமும் 35 வருடங்களில் 9600 கோடியாக  உயர்ந்து விடும். அவ்வளவு மக்கள் தொகையின் தேவையை சமாளிக்க மூன்று பூமி அளவுக்கு வளங்கள் தேவைப்படும்!  தண்ணீர், உணவு, ஆற்றலை வீணாக்கி கொண்டே இருந்தால் உலகமும், நாமும் பெரிய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிக்கனமாக, சாமர்த்தியமாக வளங்களை பயன்படுத்துவது அதனால் அவசியமாகிறது. 

 

நீர்: 

 

உலகின் நீரில் 0.5% மட்டுமே மனித பயன்பாட்டுக்கு உரிய நல்ல நீராக இருக்கிறது. உலகம் முழுக்க நீரை பெருமளவில் வீணடித்துக் கொண்டும், மாசுபடுத்திக்கொண்டும் இருக்கிறோம்.  இப்போதே  100 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு சுத்தமான தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும், பயன்படுத்தவும் கிடைப்பதில்லை. 

 

குழாயில் நீர் வீணாக ஓடிக்கொண்டு இருந்தால் நிறுத்துங்கள். வீட்டில் குழாயில் ஓட்டைகள் இருந்தால் உடனே அடைக்க சொல்லுங்கள். எப்படியெல்லாம் தண்ணீரை சேமிக்கலாம் என்று நண்பர்களோடு விவாதியுங்கள். செயல்படுத்துங்கள். 

 

உணவு: 

 

1.3 பில்லியன் டன் உணவு ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுக்க வீணாக்கப்படுகிறது. நூறு கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், இன்னொரு நூறு கோடி மக்கள் மூன்று வேளை  உணவில்லாமல் துன்புறுகிறார்கள். நில, நீர் வள இழப்பு, கடல்வள  பாதிப்பு ஆகியவற்றால் உணவுப் பற்றாக்குறை பெருகிக்கொண்டே போகிறது என்பது இன்னமும் கவலை தருவது.  இனிமேல் சாப்பாட்டை வேண்டாம் என்று வீணாக்க மாட்டீர்கள் தானே? 

 

 ஆற்றல்: 

 

உலகின் மொத்த மோட்டார் வாகனங்கள் இன்னமும் ஐந்தே வருடத்தில் 40% அளவுக்கு அதிகரிக்கும். 32% அளவுக்கு வாகனங்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை எகிற  உள்ளது.ஆனால், பெட்ரோல் முதலிய வளங்கள் ஒரு காலத்துக்குப் பிறகு தீர்ந்து போகும் என்பதால்  சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

 

 வெவ்வேறு வருடத்தின் உலக சுற்றுச்சூழல் கொண்டாட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் துவக்குவது வழக்கம். அதற்கொரு பேசுபொருள் உண்டு.  

2006 பாலைவனம், பாலைவனமாக்கல்  – வறண்ட நிலங்களை பாலைவனமாக்காதீர்கள் அல்ஜியர்ஸ், அல்ஜீரியா
2007 உருகும் பனி- தீவிரமான சிக்கலா? லண்டன், இங்கிலாந்து
2008 குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி- பண்பை  வளர்த்துக்கொள்ளுங்கள் வெல்லிங்க்டன் , நியூசிலாந்து
2009 உலகத்துக்கு நீங்கள் தேவை  – பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வோம் மெக்சிகோ
2010 பல உயிரிங்கள். ஒரே கோள் . ஒரே எதிர்காலம் ராங்பூர்  ,வங்கதேசம்
2011 காடுகள்: உங்களின் சேவைக்காக இயற்கை! புது டெல்லி
2012 பசுமை பொருளாதாரம்- உங்களின் பங்களிப்பு இல்லாமலா? பிரேசில்
2013 யோசியுங்கள் உண்ணுங்கள் சேமியுங்கள். உங்களின் உணவுப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் மங்கோலியா
2014 குரலை உயர்த்துங்கள், கடல் மட்டத்தை அல்ல லாகூர், பாகிஸ்தான்
2015 ஒரே உலகம், ஒரே சுற்றுச்சூழல் சில்ஹெட்,வங்கதேசம்
2016 நம் உலகம், நம் கவனிப்பு சௌதி  அரேபியா

உலகச் சுற்றுசூழல் தினத்துக்காக உலக கீதத்தை இந்திய  வெளியுறவுத்துறை அதிகாரி அபய்  இயற்றியுள்ளார். அது உலகம் முழுக்க பாடப்படுகிறது. அதன் மொழியாக்கம்: 

 
நம் பிரபஞ்ச சோலை, பிரபஞ்ச நீல முத்து 
அண்டத்தின் அழகிய கோள்  பூமி 
உலகின் கண்டங்களும், கடல்களும் 
நாம் இணைந்து மலர்களாகவும், மிருகங்களாகவும் நிற்கிறோம் 
இணைந்து ஒரே உலகின் ஒரே இனமாகவும் நிற்கிறோம்
கருப்பு, பழுப்பு, வெண்மை,  பல்வகை வண்ணங்கள் 
நாம் மனிதர்கள், பூமி நம் இல்லம் 
நம் பிரபஞ்ச சோலை, பிரபஞ்ச நீல முத்து 
அண்டத்தின் அழகிய கோள்  பூமி 

உலகின் எல்லா மக்களும், கிரகங்களும்

அனைவருக்கும் ஒன்று, ஒன்று அனைவருக்கும் 
இணைந்து நாம் நீல பளிங்குக். கொடியை  விரிப்போம்

கருப்பு, பழுப்பு, வெண்மை,  பல்வகை வண்ணங்கள் 
நாம் மனிதர்கள், பூமி நம் இல்லம் 
(உலக சுற்றுச்சூழல் தினத்துக்காக சுட்டி விகடனில் வெளிவந்த கட்டுரை)

 


 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s