கிரிக்கெட் பெருஞ்சுவர் திராவிடின் பேச்சுவன்மை!


களத்தில் மட்டுமல்ல ராகுல் திராவிட் பேச்சிலும் காட்டுகிற சிரத்தை, ஆடம்பரமற்ற அழுத்தமான மொழி, எளிய எடுத்துக்காட்டுகள் எல்லாம் அவரின் ஆட்டத்தைப் பார்ப்பதை போலவே ஒரு தனி அனுபவம். சீன மூங்கில் கதையையும், தன்னுடைய ஐந்தாண்டு காலக் காத்திருப்பையும் இணைத்துப் பேசிய உரையை எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்கும். (https://www.youtube.com/watch?v=8XNmIirpSs4 ) https://saravananagathan.wordpress.com/2013/11/30/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

 

ஒரு கண்ணில் பார்வையை இருபத்தி ஒரு வயதில் இழந்த பின்னும் கிரிக்கெட்டில் ஜொலித்து, இந்திய அணியின் கேப்டனாகத் திகழ்ந்த மன்சூர் அலிகான் பட்டோடி எனப்படும் டைகர் பட்டோடியின் நினைவுச் சொற்பொழிவில் திராவிட் பேசிய உரை எப்படிக் கிரிக்கெட்டின் வளர்ச்சியை அவர் மூச்சாகக் கொண்டிருக்கிறார் என்று காட்டும்.

கிரிக்கெட்டை விட்டு பல இளம் தலைமுறையினர் விலகுவதைக் கவலையோடு பதிவு செய்யும் திராவிட் அதைச் சரி செய்யச் சொல்லும் தீர்வுகள் கவனிக்கத்தக்கவை. எண்ணற்ற கிராமத்து, ஏழைப்பிள்ளைகளைக் கிரிக்கெட் ஆடச்செய்து சிறந்த திறமைசாலிகளை ஊக்குவிக்கக் கோருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இலவச டிக்கெட்களைத் தந்து அந்த மாணவர்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். ஒரு இளைஞன் ஐம்பது ரன்கள் அடித்தால் ஓய்வு தரப்பட்டு மற்ற மாணவர்களுக்கும் வாய்ப்புத் தரவேண்டும். மூன்று விக்கெட்டுகள் போனபின்பே அவன் மீண்டும் ஆடவர வேண்டும். இளம் பிள்ளைகளை இருபத்தி இரண்டு யார்ட் தூரத்துக்குப் பந்து வீசச் செய்து சோர்வடைய வைக்கக்கூடாது. பிறந்தநாள் சான்றிதழில் ஏமாற்று வேலை செய்பவர்களை எலும்பு அடர்த்தியைக் கொண்டு கண்டறிய வேண்டும் என்கிறார்.

மேலும், மாணவர்களின் கல்வியும் முக்கியம் என்பதால் கல்வி சார்ந்தும், உளவியல் சார்ந்தும் உதவக்கூடிய வல்லுனர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்றும் ஆலோசனை தருகிறார். அதே போல வெகுவேகமாகப் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்று தவறான முறையில் பந்து வீசுகிற மாணவனைச் சரி செய்யாமல் விட்டு பத்தொன்பது வயதில் இந்திய அணியில் ஆடவேண்டியவனைத் தவறான கோணத்தில் பந்து வீசுவதற்காகச் சரி செய்யும் பயிற்சியில் ஈடுபடும் கொடுமையைச் சுட்டிக்காட்டி நடுவர்களும், பயிற்சியாளர்களும் முறையற்ற முறைகளைக் கையாண்டு பிள்ளைகளின் வாழ்க்கையை நாசம் செய்யக் கூடாது என்று கவலைப்படுகிறார்.

பெற்றோர்கள் வேகமாகத் தன்னுடைய பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை நோக்கி பதினேழு வயது வரை சீசன் பந்தை தொடாதவர் ஜாகீர் கான், அண்டர்-19 அணியில் இடம்பெறாதவர் ஜவகல் ஸ்ரீநாத். அவர்கள் தங்களின் பதினெட்டு வயதுக்கு மேல்தான் கிரிக்கெட்டில் தங்களுக்கான பாணியை வார்த்தெடுத்தார்கள். அவர்கள் ஆரம்பத்தில் வெற்றி பெறாத பொழுது அவர்களின் பெற்றோர் நம்பிக்கை இழந்திருந்தால் 1,131 விக்கெட்டுகள் 3,915 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்திருக்காது. பிள்ளைகளின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று சொல்லிச் செல்லும் திராவிடின் இந்த உரையை அவசியம் கிரிக்கெட் காதலர்கள் கேட்க வேண்டும்.

http://indianexpress.com/article/sports/cricket/rahul-dravid-at-mak-pataudi-memorial-lecture-2015-16/

https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=video&cd=3&cad=rja&uact=8&ved=0ahUKEwiu-KiMq5XKAhURCY4KHTo2CzwQtwIIJDAC&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DLc9HOYN8SPo&usg=AFQjCNF9zXDJ9M4xMIHjG-1JlwFGmJvIYA&sig2=dFWPXL5ED2UXoI1hQL-Hhg

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s