பாப் மார்லி எனும் இசைப்போராளி!

மார்லியின் அப்பா ஆங்கிலேயர், அம்மா ஜமைக்கா பகுதியில் வாழ்ந்த ஆப்ரிக்கர். உலகம் முழுக்க அப்பா சுற்றிக்கொண்டே இருந்தவர் . அவரை அரிதிலும் அரிதாகத்தான் பார்த்தார்; பத்து வயதாகும் பொழுது தந்தை இறந்தே போனார் .

அம்மா எவ்வளவோ கடினப்பட்டுப் படிக்க வைத்தார். இவரின் நாட்டமோ இசைமீது போனது. ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத காலம் அது; ரப்பர்தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால் உள்ளாக்கப்பட்டார்கள். மார்லி தெருவோரம்,கடைநிலை மக்கள் வாழும் இடங்களில் ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார், தன் இசையால் பிரபலம் ஆனார். ஆனால் ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டார்; ஒழுங்காகப் பணம் வர ஆரம்பித்தது .

அவரின் இசை மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது. ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார். எளிய மக்களின் இசையாகப் பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்கப் பிரபலம் ஆனது. இவரின் இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை இவருக்கு வழங்கியது
நாடு முழுக்க வன்முறை சூழல் நிறைந்திருந்த பொழுது அன்பு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வதாக இவரின் பாடல்கள் இருந்தன. ‘அன்பினால் ஒரே உலகம் செய்வோம் !’ என்கிற தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன .”கோபம் குறை ! போர்களில் வலிமை பெறு!” என்று அவரின் கீதங்கள் அறிவுறுத்தின.

இவர் அமெரிக்கா போன பொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள் . காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து நாடுவந்து சேர்ந்தார் .
பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர் ; பலநாள் தான் வளர்ந்த அழுக்கு நிறைந்த சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் எனப் பூரிப்பார் . இறப்பதற்கு முன்னர்த் தன் மகனிடம் ,”பணத்தால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது !” என்று சொன்னார். அவரின் மறைவுக்குப்பின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது ; அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மிகச்சிறந்த இசைக்கோர்வைகளாகக் கொண்டாடப்படுகின்றன .

போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே ஆபத்தானது .விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்த் துப்பாக்கி ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர் பாடினார். 80,000 பேர் திரண்டார்கள் …
ஸ்மைல் ஜமைக்கா இசைநிகழ்வின் பொழுது “நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா ?” எனக்கட்டுகளோடு வந்த இவரைக் கேட்ட பொழுது “உலகத்துக்குத் தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும் ?” எனக்கேட்டார். அதுதான் மார்லி
அவரின் Get up, stand up பாடலின் மொழிபெயர்ப்பு உங்களுக்காக :
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
போதிக்கும் ஆசாமியே ! சொர்க்கம் பூமிக்கடியில் என்று சொல்லாதே எங்களிடம் !
வாழ்க்கையின் அர்த்தம் உனக்குத் தெரியாது
என நான் அறிவேன்
தகதகப்பது எல்லாம் தங்கமில்லை அல்லவா ?
பாதிக்கதை எப்பொழுதும் பாடப்படுவதே இல்லை
இப்பொழுது தெரிகிறதில்லையா வெளிச்சம் ?உன் உரிமைக்காக எழுந்து நில் ! துணிந்து வா
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு,வாழ்க்கை உன் உரிமை
ஆகவே,போரிடுவதை நிறுத்திட முடியாது !
உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
இறைவா இறைவா
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு போரை தொடர்ந்து நிகழ்த்து
போராடுவதை நிறுத்தாதே
உங்கள் இசங்களும்,போலி ஆட்டங்களும் எங்களுக்கு அலுத்துவிட்டன
இறந்திடு,சொர்க்கத்துக்குக் கர்த்தரின் பெயரால் சென்றிடு,இறைவா
எங்களுக்குப் புரியும் பொழுது எங்களுக்குத் தெரியும்
எல்லாம் வல்ல இறைவன் வாழும் மனிதன்
சிலரை சில நேரம் ஏமாற்றலாம்
எல்லாரும் எல்லாக் கணங்களிலும் ஏமாற மாட்டார்கள்
ஆகவே பேரொளியை பாருங்கள்

நாம் நம்மின் உரிமைக்காக உறுதியாக நிமிர்ந்து நின்றிடுவோம்
ஆகவே நீ எழுந்திடு,நின்றிடு,உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே

நான் உன்னை காதலிக்கவில்லை என்பதால் காதலிக்கின்றேன்!

நான் உன்னை காதலிக்கிறேன் என்பதனால் காதலிக்கவில்லை
நான் அன்பு செய்வதில் இருந்து அன்பின்மைக்குப் போகிறேன்
உனக்காகக் காத்திருத்தலில் இருந்து காத்தலை விடுத்தலுக்கு
என் இதயம் பனியில் இருந்து நெருப்புக்கு நகர்கிறது
உன்னை மட்டுமே காதலிக்கிறேன், ஏனெனில், நீ தான் நான் காதலிக்கும் ஒரே ஒருத்தி…
உன்னை நான் ஆழமாக வெறுக்கிறேன், வெறுத்துக்கொண்டே இருக்கிறேன்
உன்னை நோக்கி குனிகிறேன், என் மாறிக்கொண்டே இருக்கும் காதலின் அளவீடு தெரியுமா உனக்கு
உன்னைக் காணாமல் கண்மூடித்தனமாக நேசிப்பது தான் அது…

ஜனவரி மாத வெளிச்சம் என்னை உண்ணட்டும்
தன்னுடைய இரக்கமற்ற கதிரால் என் இதயம் தின்னட்டும்
முழு அமைதிக்கான என் சாவியைத் திருடிக்கொண்டு போகட்டும்

கதையின் இந்தப் பகுதியில் நான் மட்டுமே சாகிறேன்..
நான் ஒருவன் மட்டுமே உயிரை இழக்கிறேன்
நான் உன்னைக் காதலிப்பதால் இறந்து போவேன்
ஏனெனில் உன்னை நான் அன்பு செய்கிறேன், நெருப்பிலும், ரத்தத்திலும் காதல் புரிகிறேன்.- பாப்லோ நெரூதா

ஜெருசலேம் :

என் கண்ணீர் காய்கிற வரை நான் அழுதேன்
மெழுகுவர்த்தியின் தீபங்கள் அணைகிற வரை நான் பிரார்த்தித்தேன்
தரையில் உராய்கிற அளவுக்கு நான் மண்டியிட்டேன்
நான் முகமது பற்றியும்,கிறிஸ்து பற்றியும் கேட்டேன்
ஓ ஜெருசலமே ! இறைத்தூதர்களின் சுகந்தமே
பூமிக்கும்,வானுக்கும் இடையே ஆன மிகச்சிறிய பாதையே
ஓ ஜெருசலமே ! நீதிகளின் நகரமே
நீ கருகிய விரல்கள்
கலங்கிய விழிகளோடு இருக்கிற அழகிய குழந்தை
புனிதர்கள் கடந்து போன பாலைவன பழச்சோலை நீ
உன் தெருக்கள் சோககீதங்கள்
உன் கோபுரங்கள் துக்கம் அனுசரிக்கின்றன
நீ கறுப்பாடை உடுத்திய இளங்குமரி
உள்ளூரில் மணிகள் ஒலிக்கின்றாய் நீ
சனிக்கிழமை காலையில் ?
கிறிஸ்த்துமஸ் மாலையில் யார் பிள்ளைகளுக்கு
பொம்மைகள் தருவார்
ஓ ஜெருசலமே ! சோகத்தின் நகரமே
கண்களில் பெருங்கண்ணீர் அலைகிறது
யார் உன் மீதான எல்லா ஆக்கிரமிப்பையும் நிறுத்துவார்
மதங்களின் முத்தே ?
உன் ரத்தம் படிந்த சுவர்களை யார் கழுவிடுவார் ?
யார் திருவிவிலியத்தை காப்பார்
யார் குரானை மீட்பார்
யார் மனிதரை பாதுகாப்பார் ?
ஓ ஜெருசலமே என் நகரமே
ஓ ஜெருசலமே என் காதலே
நாளை எலுமிச்சை மரங்கள் பூக்கும்
ஒலிவ மரங்கள் குதூகலிக்கும்
உன் கண்கள் நடனமிடும்
உன் புனித கூரைகளுக்கு
புலம்பெயர்ந்த புறாக்கள் மீண்டும் வரும்
உன் பிள்ளைகள் மீண்டும் விளையாடுவார்கள்
உன் சிவந்த மலைகளில்
தந்தைகளும்.மகன்களும் சந்திப்பார்கள்
என் நகரமே
என் அமைதி மற்றும் ஒலிவங்களின் நகரமே

நிஸார் கப்பானி

தமிழில் : பூ.கொ.சரவணன்

கல்லறைக்கால காதல் கவலைகள் !

Funeral Blues:
எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள் ,தொலைபேசிகளை துண்டித்து விடுங்கள்
கொழுப்பு மிகுந்த எலும்புத்துண்டை வீசி நாய் குரைப்பதை நிறுத்துங்கள்
பியானோக்களை,மேளங்களை அமைதிப்படுத்துங்கள்
சவப்பெட்டியை கொண்டுவாருங்கள் ; துக்கம் கொண்டாடுபவர்கள் வரட்டும்

தலைக்கு மேலே விமானங்கள் வட்டமிட்டு முனகட்டும்
வானில் “அவர் இறந்துவிட்டார் !” என்கிற வரியை கிறுக்கட்டும்
புறாக்களின் வெள்ளை கழுத்தில் அலங்காரத்துணிகள் சுற்றப்படட்டும்
போக்குவரத்து காவலதிகாரிகள் கருப்பு பஞ்சு கையுறைகள் அணியட்டும்

அவனே என்னுடைய கிழக்கு,என்னுடைய தெற்கு,என்னுடைய வடக்கு மற்றும் மேற்கு
என் வேலை வாரமும்,ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வெடுக்கட்டும்
என் மதியம்,என் நள்ளிரவு,என் பேச்சு,என் பாடல் ;
நான் என் காதல் இறுதிவரை இருக்கும் என்றிருந்தேன் ; நான் தவறிழைத்து விட்டேன்

நட்சத்திரங்கள் இப்பொழுது தேவையில்லை ; அவை எல்லாவற்றையும் வெளியே அள்ளி வீசுங்கள்
நிலவை மூட்டை கட்டி அனுப்புங்கள் ; சூரியனை சுக்குநூறாக்குங்கள்
பெருங்கடலை ஊற்றி விடுங்கள்,காடுகளை கழித்து விடுங்கள்
இவையெதுவும் எந்த நலத்துக்கும் வரப்போவதில்லை ! – W. H. Auden
தமிழில் : பூ.கொ.சரவணன்

நாம் அகதிகள் :

நான் இசையாலான இடத்தில் இருந்து வருகிறேன்
என் பாடலுக்காக அங்கே என்னை சுடுவார்கள்
எங்கள் நிலத்தில் தன்னுடைய சகோதரனாலேயே
என் சகோதரன் கொடுமைப்படுத்தப்பட்டான்

நான் அழகிய இடத்தில் இருந்து வருகிறேன்
என் தோலின் நிறத்துக்காக என்னை அங்கே வெறுக்கிறார்கள்
நான் பிரார்த்தனை செய்யும் முறை அவர்களுக்கு பிடிப்பதில்லை
அவர்கள் கட்டற்ற கவிதையை தடை செய்கிறார்கள்

நான் அழகிய பகுதியில் இருந்து வருகிறேன்
இங்கே பெண்கள் பள்ளிக்கு போக முடிவதில்லை
சொல்வதை அப்படியே அங்கே நம்ப சொல்லித்தருகிறார்கள்
மேலும் சிறுவர்களும் தாடிகள் வளர்க்க வேண்டும் என்கிறார்கள்

நான் பழைய பெருங்காட்டில் இருந்து வருகிறேன்
அது இப்பொழுது வயலாகி விட்டது என்று எண்ணுகிறேன்
நான் ஒரு காலத்தில் அறிந்திருந்த மக்கள்
இப்பொழுது யாரும் அங்கில்லை

நாம் யார் வேண்டுமானாலும் அகதி ஆகலாம்
யாரும் பாதுகாப்பாக இல்லை
ஒரே ஒரு பைத்தியக்கார தலைவன் போதும்
அல்லது வராத மழையால் கிடைக்காமல் போன உணவு போதும்
நாம் எல்லாம் அகதிகம் ஆகலாம்
நாம் அனைவரும் போகச்சொல்லப்படலாம்
நாம் யாரோ ஒருவரால்
யாரோ ஒருவராக இருப்பதற்கு வெறுக்கப்படலாம்

நான் அழகிய பிரேதசத்தில் இருந்து வருகிறேன்
ஒவ்வொரு வருடமும் பள்ளத்தாக்குகள் வெள்ளத்தால் நிறையும்
ஒவ்வொரு வருட புயலும் நாங்கள்
தொடர்ந்து நகரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்

நான் ஒரு ஆதி இடத்தில் இருந்து வருகிறேன்
என் ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே பிறந்தது
நான் அங்கே போக விரும்புகிறேன்
அங்கே உண்மையில் வாழ நான் ஆசைப்படுகிறேன்

சுட்டெரிக்கும் மணல் சூழ்ந்த பகுதியில் இருந்து நான் வருகிறேன்
அங்கே தோலை கருப்பாக்க சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்
தரகர்கள் துப்பாக்கிகள் விற்க விரும்புவார்கள்
நான் உங்களுக்கு அவை என்ன விலை என்று மட்டும் சொல்ல முடியாது

எனக்கு இப்போது தேசமில்லை என்று என்னிடம் சொல்லப்படுகிறது
நான் ஒரு பொய் என்று எனக்கு அறிவிக்கப்படுகிறது
நவீன வரலாற்று புத்தகங்கள் என் பெயரை
மறந்துவிடலாம் என்று எனக்கு தெரிவிக்கப்படுகிறது

நாம் அனைவரும் அகதிகள் ஆகலாம்
சில சமயங்களில் ஒரு நாள் மட்டுமே ஆகலாம்
சில சமயங்களில் ஒரு கைகுலுக்கல் மட்டுமே போதுமானது
அல்லது கையொப்பம் இடப்பட்ட ஒரு தாள் போதும்.

நாமனைவரும் அகதிகளில் இருந்தே வந்தோம்
யாரும் எளிமையாக தோன்றிவிடவில்லை
யாரும் போராடாமல் இங்கே வந்துவிடவில்லை
பின்னர் ஏன் பயத்தோடு நாம் வாழ்ந்திட வேண்டும்
வானிலை மற்றும் இன்னல்கள் பற்றி எண்ணியவாறு
நாம் எல்லாரும் எங்கிருந்தோ இங்கு வந்தோம்.- Benjamin Zephaniah

முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே !

சாவித்திரிபாய் புலே என்கிற இந்த பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .. மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் .

Photo: சாவித்திரிபாய் புலே என்கிற இந்த பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .. மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் .

இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர்

அதைச்சொல்லி புலம்பியதும் "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !"என்றார் அவ்வாறே செய்தார் இவர் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய

நடைமுறை அமலில் இருந்தது ; அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் சாவித்ரிபாய் புலே. சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே

துவங்குகிறது. இயற்கை,சமூகம்,வரலாறு,கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன

1852ல் இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. 1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக

உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.

மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை

ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர்

காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்வே சேவையாகிப்போன அவரின் பிறந்த நாள் ஜனவரி மூன்று. .அவரின் கவிதை கீழே :

போ கல்வி கல்

சொந்தக்காலில் நில்,சோராமல் உலை

உழை-ஞானத்தை,செல்வதை சேர்

அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்

ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்

இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய் கல்வி பெறுக !

ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக

கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது

கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக

பிராமண நூல்களை வேகமாக தூக்கி எறிக !
இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர்
அதைச்சொல்லி புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் இவர் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய
நடைமுறை அமலில் இருந்தது ; அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் சாவித்ரிபாய் புலே. சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே
துவங்குகிறது. இயற்கை,சமூகம்,வரலாறு,கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன

1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. 1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக
உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.

மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை
ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர்
காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்வே சேவையாகிப்போன அவரின் பிறந்த நாள் ஜனவரி மூன்று. .அவரின் கவிதை கீழே :

போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உலை
உழை-ஞானத்தை,செல்வதை சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாக தூக்கி எறிக !

நினைவு கொள் என்னை !

நான் வெகுதூரம் போன பின்னர்
என்னை நினைவு கொள்
அமைதி நிலத்துக்குள் வெகுதூரம் நான் போன பின்னர் ;
போக பாதி திரும்பிய பின்னும்,ஆனாலும்,காத்திருக்க திரும்பும்
என் கரங்களை நீ பிடித்துக்கொள்ள முடியாத தருணம் வரும் பொழுது
என்னை நினைவுகொள் !
உன் வருங்காலத்தை பற்றிய நீ திட்டமிட்டவற்றை
அனுதினமும் சொல்ல முடியாத கணம் வருகிற பொழுது
என்னை நினைவுபடுத்திக்கொள் !
என்னை நினைவுபடுத்திக்கொள்வதை மட்டும் செய் ; உனக்குப்புரியும் !
ஆறுதல்படுத்தவோ,பிரார்த்தனை செய்யவோ தாமதமாகியிருக்கும் அப்பொழுது !
ஆனாலும்,என்னை ஒரு கணம் கட்டாயம் மறக்க வேண்டும் என்றால் மறந்துபின்னர் நினைத்து துக்கப்படாதே !
இருட்டும்,ஏமாற்றும் விட்டுச்செல்லும்
நினைவுகளின் அடிச்சுவட்டை மறந்து நீ புன்னகை..
அவற்றை எண்ணி துன்பப்படாதே ! -கிறிஸ்டியனா ரோஸ்ஸேட்டி

காம்யு எனும் மகத்தான கலைஞன்

ஆல்பர்ட் காம்யு எனும் மகத்தான ஆளுமை சாலை விபத்தில் மறைந்த தினம் ஜனவரி நான்கு. நோபல் பரிசை இலக்கியத்துக்காக பெற்றவர் அவர் . அவரின் வாழ்க்கை முழுக்க அன்பு செய்ய சொன்னார் ; எளியவர்களின் வாழ்க்கை முன்னேறி விடாதா என கவலைப்பட்டார் . தனி நபர்களின் விருப்பங்கள் சார்ந்து சுயநலமாக இயங்குவதை தாண்டி மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.கண்டிப்பாக மனித சிக்கல்களை நம்மால் முழுமையாக தீர்க்க முடியாது ; அதற்காக செயல்படாமல் இருக்க முடியுமா என்று கேட்டார் . செயல்பட்டே ஆகவேண்டும் ; வெளிச்சம் வராவிட்டாலும் நம்பிக்கையை விதைத்து கொண்டே இருங்கள் என சொன்ன அவரின் அந்நியன் நாவலை அவசியம் வாசியுங்கள். ‘தி மித் ஆஃப் சிசிபஸ்’ கட்டுரையில் சிசிபஸ் மலை வரை பாறைகளை உருட்டிக்கொண்டு போவான்,பின்னர் அந்த பாறை மலைமீதிருந்து கீழே விழும். இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறான் சிசிபஸ் ; நம்மில் எத்தனை சிசிபஸ்கள் ?

காம்யு நோபல் பரிசு பெற்றதும் அவரின் பள்ளிக்கால ஆசானுக்கு இப்படிக்கடிதம் எழுதினார். :

அன்பு மிகுந்த மான்ஸர் ஜெர்மைன் அவர்களுக்கு,

என் இதயத்தின் அடியில் இருந்து உங்களுடன் பேச நான் சில நாட்கள் எடுத்துக்கொண்டேன். என் மனதில் பொங்கிக்கொண்டு இருந்த பதற்றம் தணியட்டும் என்று தான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் நாடாத,தேடிப்போகாத மிகப்பெரிய மரியாதை எனக்கு தரப்பட்டிருக்கிறது.

இந்த நோபல் பரிசு கிடைத்தது என்கிற செய்தியை கேள்விப்பட்டதும் என் அன்னைக்கு அடுத்தபடியாக எனக்கு நினைவுக்கு வந்தது நீங்கள் தான். நீங்களில்லாமல்,இந்த ஏழை சிறுவனை நோக்கி நீண்ட அந்த அன்பு மிகுந்த கரங்கள் இல்லாமல்,உங்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்காது. இந்த விருதை பெற நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை.

இருந்தாலும் இந்த விருது உங்களிடம் நீங்கள் எனக்கு என்னவாக இருந்தீர்கள் இன்னமும் எப்படி என்னை நெகிழ வைக்கிறீர்கள் என்ற சொல்ல வாய்ப்பாக அமைந்தது என்று ஆனந்தம் அடைகிறேன். உங்களின் முயற்சிகள்,ஓயாத உழைப்பு,எங்களைப்போன்ற குட்டி பள்ளி குழந்தைகளிடம் நீங்கள் காட்டிய ஈடில்லா கருணை இத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்களை உங்கள் மீது நன்றி கொண்டிருக்க செய்கிறது என்று சொல்லிக்கொள்ள இந்த பரிசு உதவியது என்று நெகிழ்கிறேன்

இதயத்தால் தங்களை தழுவிக்கொள்ளும்,

ஆல்பர்ட் காம்யு

அவரின் சில புகழ்பெற்ற வாசகங்கள் உங்களுக்காக
Photo: ஆல்பர்ட் காம்யு எனும் மகத்தான ஆளுமை சாலை விபத்தில் மறைந்த தினம் ஜனவரி நான்கு. நோபல் பரிசை இலக்கியத்துக்காக பெற்றவர் அவர் . அவரின் வாழ்க்கை முழுக்க அன்பு செய்ய சொன்னார் ; எளியவர்களின் வாழ்க்கை முன்னேறி விடாதா என கவலைப்பட்டார் . தனி நபர்களின் விருப்பங்கள் சார்ந்து சுயநலமாக இயங்குவதை தாண்டி மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.கண்டிப்பாக மனித சிக்கல்களை நம்மால் முழுமையாக தீர்க்க முடியாது ; அதற்காக செயல்படாமல் இருக்க முடியுமா என்று கேட்டார் . செயல்பட்டே ஆகவேண்டும் ; வெளிச்சம் வராவிட்டாலும் நம்பிக்கையை விதைத்து கொண்டே இருங்கள் என சொன்ன அவரின் அந்நியன் நாவலை அவசியம் வாசியுங்கள். 'தி மித் ஆஃப் சிசிபஸ்' கட்டுரையில் சிசிபஸ் மலை வரை பாறைகளை உருட்டிக்கொண்டு போவான்,பின்னர் அந்த பாறை மலைமீதிருந்து கீழே விழும். இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறான் சிசிபஸ் ; நம்மில் எத்தனை சிசிபஸ்கள் ?

காம்யு நோபல் பரிசு பெற்றதும் அவரின் பள்ளிக்கால ஆசானுக்கு இப்படிக்கடிதம் எழுதினார். :

அன்பு மிகுந்த மான்ஸர் ஜெர்மைன் அவர்களுக்கு,

என் இதயத்தின் அடியில் இருந்து உங்களுடன் பேச நான் சில நாட்கள் எடுத்துக்கொண்டேன். என் மனதில் பொங்கிக்கொண்டு இருந்த பதற்றம் தணியட்டும் என்று தான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் நாடாத,தேடிப்போகாத மிகப்பெரிய மரியாதை எனக்கு தரப்பட்டிருக்கிறது.

இந்த நோபல் பரிசு கிடைத்தது என்கிற செய்தியை கேள்விப்பட்டதும் என் அன்னைக்கு அடுத்தபடியாக எனக்கு நினைவுக்கு வந்தது நீங்கள் தான். நீங்களில்லாமல்,இந்த ஏழை சிறுவனை நோக்கி நீண்ட அந்த அன்பு மிகுந்த கரங்கள் இல்லாமல்,உங்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்காது. இந்த விருதை பெற நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை.

இருந்தாலும் இந்த விருது உங்களிடம் நீங்கள் எனக்கு என்னவாக இருந்தீர்கள் இன்னமும் எப்படி என்னை நெகிழ வைக்கிறீர்கள் என்ற சொல்ல வாய்ப்பாக அமைந்தது என்று ஆனந்தம் அடைகிறேன். உங்களின் முயற்சிகள்,ஓயாத உழைப்பு,எங்களைப்போன்ற குட்டி பள்ளி குழந்தைகளிடம் நீங்கள் காட்டிய ஈடில்லா கருணை இத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்களை உங்கள் மீது நன்றி கொண்டிருக்க செய்கிறது என்று சொல்லிக்கொள்ள இந்த பரிசு உதவியது என்று நெகிழ்கிறேன்

இதயத்தால் தங்களை தழுவிக்கொள்ளும்,

ஆல்பர்ட் காம்யு (நோபல் பரிசு பெற்றதும் காம்யு தன் ஆசானுக்கு எழுதிய கடிதம் இது ) அவரின் சில புகழ்பெற்ற வாசகங்கள் உங்களுக்காக

என் பின்னால் நடக்காதே ;வழிகாட்டாமல் போகலாம் நான் .முன்னே நடக்காதே ;பின்பற்றாமல் போகலாம் நான் .என் அருகே பிணைந்து நட .என் நண்பனாக இரு

மகிழ்ச்சி எதை கொண்டிருக்கிறது என தேடினால் நீங்கள் மகிழ்ச்சியை கண்டடைய மாட்டீர்கள் ;வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று ஒவ்வொரு கணமும் தேடினால் ;நீங்கள் வாழவே மாட்டீர்கள்

நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு துரதிஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்

நாம் இறப்பதற்கு தகுதியான காரணங்கள் பல உண்டு ; கொல்வதற்கு என்று தகுந்த காரணங்கள் எதுவுமே இல்லவே இல்லை

வளையக்கூடிய,ஆனால்,உடைபடா உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை

இலையுதிர் காலம் இன்னுமொரு வசந்தம் அங்கே உதிரும் ஒவ்வொரு இலையும் இன்னொரு மலர்

எனக்குள்ள ஒரே கடமை எல்லாரையும் எப்பொழுதும் அன்பு செய்வது தான்

மனிதன் வாழ வேண்டும் ;படைக்க வேண்டும் – கண்ணீர் துளிகள் அவன் நெஞ்சை நிறைக்கும் வரை

எனக்கு இரண்டே தேர்வுகள் தான் ,”ஒன்று தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அல்லது ருசித்து ஒரு கோப்பை காபி பருக வேண்டும் !” . எதை செய்யலாம் நான் ?

புரட்சிக்காரன் என்பவன் யார் தெரியுமா ? இது இப்படி இருக்கக்கூடாது என உரத்துக்குரல் கொடுக்கிறவனே !

எப்பொழுதும் தனித்து தவறு செய்ய பழகுகிற பொழுது தான் நீங்கள் முன்னேற்றத்தை அடைய ஆரம்பிக்கிறீர்கள்

கொலையாளிகளும் பலியாடுகளும் வாழும் ஒரு சமூகத்தில், சிந்திக்கத் தெரிந்தவர்கள் கொலையாளிகளின் பக்கம் நிற்கக்கூடாது.

பார்வை போனாலும் பாடிய மில்டன் !

ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று. ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் கவித்துவம் கொண்டவர் அவர். மில்டன் இளம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை,மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

நாட்டில் சிவில் போருக்கான சூழல் இருந்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மற்றும் மன்னர் ப்ரோட்டஸ்டன்ட் மக்களை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களை படுகொலை செய்து தள்ளினார்கள். மில்டன் கொதித்துப்போனார். அன்பு செய்ய வேண்டிய மதபீடங்கள் வன்முறையை தூண்டிவிடுவதை கண்டித்து கவிதைகள் எழுதினார். அவரை நாத்திகவாதி என்று வசைபாடினார்கள்.

சொர்க்க நீக்கம் என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து,இழைத்து உருவாக்கினார். அன்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம் மக்களை கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது.

நூல்களை தணிக்கை செய்தபின்னரே வெளியிடுவோம் என்று அரசு சொன்னது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய எரோபேஜிடிகா நூலை அவர் துண்டு பிரசுரமாக வெளியிட்டார். மில்டனின் இந்த செயல்கள் அவரின் முதல் மணவாழ்வை பாதித்தது. இவரைவிட்டு அவரின் மனைவி நீங்கினார். இவரோ கண்டுகொள்ளவே இல்லை. மூன்று வருடங்கள் கழித்து திரும்பி வந்த அவர் மரணமடைந்தார். அடுத்த திருமணம் நிகழ்ந்தது. அந்த மனைவியும் சீக்கிரம் இறந்து போனார். கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது மில்டனுக்கு. அடுத்த திருமணத்தை வயதான காலத்தில் இவர் செய்து கொண்டது இவரின் மகள்களை கடுப்பேற்றியது. வெறுப்பை கொட்டினார்கள்.

“பருவங்கள் வருடத்தோடு வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மோட்டோ,கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள்,மங்காத ஒளி ததும்பும் மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்கு தெரியவில்லையே ! என்னை மேகங்கள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கும் இருட்டு,இருட்டு,இருட்டு மட்டுமே !” என்று பார்வையை இழந்த மில்டன் எழுதினார். அவரின் புது மனைவி அன்பை பொழிந்தார்.

இருளில் மூழ்கி போயிருந்த அவர் எப்படி அதைப்பார்த்தார் என்று ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.
“வாழ்வின் பாதிப்பொழுது பேரிருளில் போனது எனக்கு
என் வெளிச்சத்தை எப்படி வெளியிட்டேன் நான் ?
என் அறிவை அழிக்க வருகிறது மரணம்
பயனற்று,பொலிவிழந்து வளைந்து நிற்கும் ஆன்மாவோடு
“எனக்கான வெளிச்சம் மறுக்கப்பட்டதா இறைவனே ?” என்று கேட்கிறேன் நான்
முணுமுணுப்போடு
பதில் வருகிறது
“இறைவன் இதை செய்யவில்லை.
மனிதனின் செயல்கள் மகத்தானதை தருகின்றன.
சிறுசுமையை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள்.
எவன் நிலத்திலும்,நீரிலும் ஓயாமல் உழைக்கிறானோ,காத்திருந்து,பொறுத்திருந்து போராடுகிறானோ பேருலகே கொண்டாடும் அவனை !”

“நரகம் சொர்க்கமாவதும்,சொர்க்கம் நரகமாவதும் நன்னெஞ்சின் நளினச்செயலே !” என்று எழுதினார் மில்டன். வாழ்க்கையை பார்வை போனபின் கொண்டாடினார் மில்டன். மீண்ட சொர்க்கம் என்று இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் எழுதினார். அவரின் கவிதைகளை உலகமே கொண்டாட ஆரம்பித்தது. மில்டனின் தாக்கம் அவரின் காலங்களை கடந்தும் சென்றது. அவருக்கு முன்னூறு ஆண்டுகள் கழித்து செவித்திறன்,பார்வை,பேச்சு என எவையும் இல்லாத நிலையிலும் சாதிக்க முனைந்த ஹெலன் கெல்லருக்கு மில்டனே வெளிச்சம் ஆனார். ஜான் மில்டன் அமைப்பு ஒன்றைத்தொடங்கினார் கெல்லர்.

மில்டனின் காதல் ததும்பும் கவிதை ஒன்று :

அறுபது வருடங்களில் காதலை
கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன்

பிரியம் சொல்லும் பெருஞ்சொற்கள் பிரிந்தே ஏமாற்றம் தருகின்றன

எது அது எனும் கேள்விகள் தவிர்த்து

மலர்வனத்தின் ரோஜா நறுமணம் போல பொழிகிறது அது…

நீ போய்விட்டாய்

பெருங்கடலும்,கண்டமும் நடுவில்
நின்று நகைக்கின்றன

நாம் இணைந்து பார்த்த எல்லாவற்றில் இருந்து
எதோ சில ஏனோ திரும்பவருகின்றன

வென்ற ஒரு புது படைப்பை பின்னுகிறோம் நாம்
விசித்திரமான,விரகம் தரும் ஒன்று நடக்கிறது

எதிர்த்தும்,வாதிட்டும் வதைந்த
வாழ்க்கையின் சிக்கல்கள் உடைத்து விடுதலை வருகிறது

பெருவாழ்வின் புதுகீதம் பாடுவோம் நாம் :
கடவுள் பின்னும் இழைகளில் பிணைந்த
புத்துலகு பிறந்தது,அதன் பிரிக்க முடியா அங்கம் நாம் !