‘அம்பேத்கரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கமும்’ – கிறிஸ்தோஃபி ஜாப்ரிலா’


‘நல்ல உயரம், கட்டுகோப்பான உடல், கரிய நிறம். லாவகமாகவும், துரிதமாகவும் இயங்கும் மூளைக்குச் சொந்தக்காரர். அவர் அறிவின் பேருரு. வெளியே கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மானுடம் மிகைத்த பண்பாளர். இன்னல்கள் இடைவிடாது துரத்தினாலும், எப்போதும் வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடுக்காத தீரம் மிக்கவர். ஒரு காலத்தில் சமூகத்தில் மேல்தட்டினர் வாழும் பகுதியில் அவர் கீழ்சாதி என்பதால் தங்க கூட இடம் தரப்படவில்லை. அவரின் மனவுறுதியின் தீரம் அவரை மகத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்றது.’ (ஹரி ஷரண் சப்ரா (தொகுப்பாசிரியர்) Opposition in the Parliament, Delhi, New Publishers, 1952, பக்கம் 142)

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பத்தி ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பிராமண எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இது அப்போது அம்பேத்கர் தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தார் என்பதைத் தெளிவாக நிறுவுகிறது. இப்படிப்பட்ட அங்கீகாரம் அம்பேத்கருக்கு கிடைத்தற்கு அவர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புக்கு உரிய ‘வரைவுக்குழு’வின் தலைவராக அம்பேத்கர் திகழ்ந்ததும் காரணம். அந்த வரைவுக்குழுவில் சட்ட நிபுணரான அம்பேத்கர் உன்னதமான உச்சத்தை எட்டினார். அதுவே அம்பேத்கரின் வாழ்வின் பெருமைமிகு காலமாகும். இறுக்கமான சூட், டை, வட்ட வடிவிலான கண்ணாடி, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, கையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற அம்பேத்கரின் உருவமே பொதுமக்களின் மனக்கண்ணில் இன்றும் அகலாமல் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இப்படி அம்பேத்கரை சிலையாகச் செதுக்குவதும் வழக்கமானது. 1

தீண்டப்படாத சாதியை சேர்ந்த ஒருவர் தேசிய அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்துகிற நிலையை அடைந்தார் என்பதே உயர் சாதி இந்துக்களிடமிருந்து கசப்பான விமர்சனங்களை ஊற்றெடுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார் என்பதையே நிராகரிக்கிற அளவிற்குச் சிலர் சென்றார்கள்.

அம்பேத்கர் ‘போலி மனுவா’?

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவிற்கு அம்பேத்கர் நியமிக்கப்பட்டதால், அவருக்கு ‘நவீன மனு’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது. இப்பட்டம் மனுநீதியை இயற்றிய புரதான மனுவை நினைவுபடுத்தியது. மனுநீதியை 1927-ல் நடைபெற்ற மகத் சத்தியாகிரகத்தின் போது அம்பேத்கர் எரித்தார் என்பதை நினைவுகூர்ந்தால் இந்தப்பட்டம் வேடிக்கையான ஒன்றாகத் தெரியும்.
அம்பேத்கர் குறித்த தன்னுடைய குற்றப்பத்திரிகையில் அருண் ஷோரி, அம்பேத்கரை ‘போலி மனு’ என்று முத்திரை குத்துகிறார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் பல்வேறு துணை குழுக்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளைச் செப்பனிடும் பொறுப்பு மட்டுமே வரைவுக்குழுவிற்கு இருந்தது. வரைவுக்குழுவின் பரிந்துரைகளையும் கூட அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முழு அமர்வு விவாதித்தே முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தவில்லை என்பது அருண் ஷோரியின் வாதம். மேலும் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. அக்கட்சியினருக்குள் தான் ஒவ்வொரு சட்டப்பிரிவின் முக்கியமான அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன என்பது அருண் ஷோரியின் வாதம்.2 அம்பேத்கர் துணை குழுக்கள், வரைவு குழு, முழு அமர்வு ஆகிய பல இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் தோற்கிற பக்கமே இருந்தார் என்று ஷோரி வாதிடுகிறார். அருண் ஷோரியின் இக்கருத்துகள் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதே என்னுடைய வாதமாகும். காங்கிரஸ் தலைவர்கள் முன்னரே பேசி வைத்துக்கொண்டு சில சட்டப்பிரிவுகளை வேகமாக நிறைவேற்ற முயன்றார்கள் என்று அம்பேத்கர் அவ்வப்போது குறைபட்டுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கர் மற்றவர்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளை வெறுமனே செப்பனிடுவதொடு மட்டும் நின்றுவிடவில்லை. 3

அருண் ஷோரி அம்பேத்கரை சித்தரிக்கும் விதத்தில் இருந்து அறிஞர்கள் ஹெச்.எஸ்.வர்மா, நீதா வர்மா முற்றிலும் முரண்படுகிறார்கள். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவரின் ஆட்சி நிர்வாகத்திறனும், அரசியல் தாக்கமும் தான் காரணம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.4 அம்பேத்கரை வரைவுக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 1946-ல் சபையில் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அம்பேத்கரின் தலையீடு பலரையும் கவர்ந்தது. நேரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டார். சபையின் இன்னொரு உறுப்பினராக ஜெயகர் ஒரு பிரச்சினையை எழுப்பினார் பாகிஸ்தானா, இந்தியாவா என்று இன்னமும் ஊசலாடிக்கொண்டிருந்த முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சபையில் இணைவதா, வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலையில் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார் ஜெயகர். அடுத்து எழுந்த அம்பேத்கர், மிகவும் அற்புதமானதொரு ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை நடுநிலைமையோடு திகழ்ந்ததோடு, அம்பேத்கருக்கு இருந்த கச்சிதமான, ஆழ்ந்த சட்ட அறிவையும் புலப்படுத்தியது. அம்பேத்கர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரசத்தீர்வை முன்வைத்தார். ஆகவே, அம்பேத்கரின் திறமையினால் தான் அவரை அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்கள் என்று வர்மாக்கள் வாதிடுகிறார்கள்.

அடுத்ததாக, நாம் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இக்குழு அடிப்படையான சட்டங்களை இயற்றுகிற பணியில் ஈடுபடவில்லை. பல்வேறு துணைக்குழுக்கள் பரிந்துரைத்த சட்டப்பிரிவுகளை, செம்மைப்படுத்தி, செப்பனிட்டு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன்னால் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பே வரைவுக்குழுவுக்கு உரியது. சபையானது பல்வேறு வரைவுகளை வாசிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் சட்டப்பிரிவுகள் குறித்து நிகழ்ந்த விவாதங்களை நெறிப்படுத்தி, வழிநடத்தும் பணியில் வரைவுக்குழுவின் உறுப்பினர்கள், அதிலும் அடிக்கடி அம்பேத்கரே ஈடுபட்டார். மேலும், அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் வரைவுக்குழுவின் உறுப்பினராகவும், பதினைந்து குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினராகவும் திகழ்ந்த வெகு சில உறுப்பினர்களில் அம்பேத்கரும் ஒருவர்.5 ஆகவே, அம்பேத்கரால் அனைத்து சட்டப்பிரிவுகள் சார்ந்து நடைபெற்ற விவாதங்களையும் கவனிக்க முடிந்தது. சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவுகள் சார்ந்த விவாதங்களையும் கூர்ந்து நோக்க முடிந்தது.

பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் வரைவுக்குழுவின் தலைவர் என்கிற முறையில் அம்பேத்கருக்கும், குழுக்களின் செயலாளராகத் திகழ்ந்த எஸ்.என்.முகர்ஜிக்கும் (இவருக்கு இறுதியாக அம்பேத்கர் நெகிழவைக்கும் புகழாரத்தைச் சூட்டினார்) அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் சட்டப்பிரிவுகளைத் திருத்தியமைப்பதோடு,பல சட்டப்பிரிவுகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிற போது அவற்றைப் பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறுகிற பொறுப்பும் இருவருக்கும் உரியதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே இல்லை. இதனால், இந்தத் திருத்தியமைக்கும் பணிச்சுமைகள் பெரும்பாலும் அம்பேத்கரின் தோளிலேயே விழுந்தன. இந்த வரைவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நவம்பர் 1948-ல் சபையின் முன்னால் இப்படிப் பேசினார்:

‘நீங்கள் வரைவுக்குழுவிற்கு நியமித்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் பதவியை விட்டு விலகியதால், அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமனம் செய்தீர்கள். ஒரு உறுப்பினர் காலமானார். அவரின் இடம் நிரப்பப்படவில்லை. இன்னொரு உறுப்பினரோ அமெரிக்காவில் இருந்தார். அவரின் இடத்திற்கும் யாரும் கொண்டுவரப்படவில்லை. இன்னொரு நபரோ அரசாங்க அலுவல்களில் மும்முரமாக மூழ்கிவிட்டார். ஓரிரு உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்தார்கள். அவர்களின் உடல்நலக்குறைவால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் டாக்டர்.அம்பேத்கரின் தலைமேல் விழுந்தது. இப்பணியை மெச்சத்தக்க வகையில் சிறப்பாகச் செய்து முடித்திருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.’ 6
அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதவில்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் அவரின் கைவண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அவர் குழுக்களின் பரிந்துரைகளைத் திருத்தியமைப்பதோடு நிம்மதியடையவில்லை. சபையின் முழு அமர்வில் கலந்து கொண்டு, பொறி பறக்கும் விவாதங்களில் சட்டப்பிரிவின் ஒரு வரைவு ஏன் மற்றொன்றை விட மேம்பட்டது என விளக்கினார். விவாதங்களின் போக்கையே தொடர்ந்து திசைமாற்றும் பணியிலும் அவர் அயராது ஈடுபட்டார். ஆகவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார். இதுவே, ஏன் அருண் ஷோரி அவர் மீது இத்தனை வன்மமிகுந்த விமர்சனங்களை வைக்கிறார் என்பதை விளக்குகிறது. அருண் ஷோரியின் இன்னொரு வாதமான, காந்திய சிந்தனைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார் என்பதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது.

காந்தியை பழிதீர்த்த மேற்கத்திய ஜனநாயகவாதி:

அம்பேத்கர் இளவயதில் வெளிநாட்டில் படித்த போது தான் உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களையும், அரசியல் மாதிரிகளையும் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நியாயப்படுத்தினார். அவர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவில், இந்தியாவைச் ‘சோசியலிஸ்ட்’ என அறிவிப்பதில் துவங்கி, இந்திய குடியரசை முழுவதும் மாற்றியமைக்க முயன்ற இடதுசாரிகளை அம்பேத்கர் எதிர்த்தார். அப்படி, இந்தியக்குடியரசை சோசியலிஸ்ட் என்று அறிவித்து விட்டால், ‘அது ஜனநாயகத்தை எளிதாக அழித்துவிடும்’ என்று அவர் எண்ணினார்.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே எது மிகச்சிறந்த சமூக அமைப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை, அவர் நவம்பர் 19, 1948 அன்று கீழ்கண்டவாறு விளக்கினார்:

‘ நாம் நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவும் தொடர்ந்து சர்வாதிகாரத்தோடு கோலோச்ச கூடாது என்கிற காரணத்துக்காகவே அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். நாம் அரசியல் ஜனநாயகத்தை நிறுவி விட்டோம் என்பதால், லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்… […] [இப்போது], பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு மக்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். தனி உரிமை கோட்பாடே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று சிலர் நம்புகிறார்கள்; வேறு சிலரோ சோசியலிச அரசே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று கருதுகிறார்கள்; இன்னும் சிலர், கம்யூனிச சிந்தனைகளே மிகக் கச்சிதமான பொருளாதார ஜனநாயக வடிவம் என்று எண்ணுகிறார்கள் […] [இப்படிப்பட்ட சூழல்களில்] வழிகாட்டு நெறிமுறைகளில் நாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி திட்டமிட்டே இறுக்கமானதாக, நிலையானதாக எழுதப்படவில்லை. பல்வேறு வகையான சிந்தனைகள் கொண்ட பல்வேறு மக்களுக்குப் போதுமான இடத்தை வழங்கியுள்ளோம். லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தை அடைய அவரவரும் அவர்களின் சொந்த வழியில் முயற்சிக்கலாம். அவர்களின் வழியே பொருளாதார ஜனநாயகத்தை எட்டுவதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்று பொதுமக்களை நம்பவைக்க அவர்கள் முயலட்டும்.’8

இந்த வாதத்திற்குத் தன்னை உளமார ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவர் எதிர்த்தார். அந்தச் சட்டத்திருத்தம் வாக்களிப்பிற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எத்தகைய அறரீதியான வல்லமை மிக்கவராக திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.9 அம்பேத்கர் தாராளவாத ஜனநாயகத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. எப்போதும், வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவத்தை நியாயப்படுத்துவதையே அம்பேத்கர் செய்வார். ஆனால், ஒருமுறை அவ்வாறு சட்ட வடிவத்தைத் தாக்கல் செய்த போது, அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்று முழு அமர்வை கேட்டுக்கொண்டார். அவர் தாக்கல் செய்த சட்டவடிவத்தைத் திருத்தி, அரசு நிர்வாக அதிகாரத்தையும் , நீதித்துறையையும் முழுமையாகப் பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.10 சில உறுப்பினர்கள், அரசின் அதிகாரத்துக்கு ஆதரவாக வாதிடுவதாகச் சொல்லிக்கொண்டு, நீதித்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடு அரசை பலவீனப்படுத்தும் என்றார்கள். நிற்க கூட நேரமின்றிப் பிரதமராக பல்வேறு பொறுப்புகளோடு இயங்கிக்கொண்டு இருந்த நேரு கூட, அம்பேத்கரின் சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் பொருட்டு விவாதத்தில் கலந்து கொண்டார்.11 இதன் விளைவாக, அம்பேத்கரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்த முழுமையான அதிகாரப் பிரிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் சட்டப்பிரிவு 50 ஆனது. பிரிட்டிஷ் நீதித்துறையின் தாக்கத்தில் ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தி இருப்பதை அம்பேத்கர் பின்னர் நியாயப்படுத்திப் பேசினார்.12 அதிகாரங்களைப் பிரித்து வைப்பது, எந்த வகையிலும் அரசை பலவீனப்படுத்தி விடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

கூட்டாட்சி முறையினால் ஏற்படும் அதீதமான அதிகாரப்பரவலாக்கம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிக்கும் என்பதால் அம்பேத்கர் வலிமைமிக்க மத்திய அரசையே ஆதரித்தார். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்குக் கூடுதலான சுயாட்சி கிடைத்தால், தீண்டாமை ஒழிப்பை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரி அமல்படுத்தாமல் போகக்கூடும் என்று வாதிட்டார்.13 காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற முடிவு, இயல்பாகவே காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார், அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்.

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத உபயோகப்படுத்திய எழுத்துக்கள் பெரும்பாலும் காந்திய பார்வை கொண்டவையாக இருக்கவில்லை. நேரு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்டது. பல்வேறு குழுக்கள், துணைக்குழுக்களின் அறிக்கைகள் (இவற்றில் முக்கியமான குழுக்கள், துணைக்குழுக்களுக்கு நேரு, படேல் தலைமை தாங்கினார்கள்) காந்தி குறித்து மூச்சே விடவில்லை. இவற்றால் மட்டுமே, நவம்பர் 1948-ல் அம்பேத்கர் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தில் காந்தியத்தின் முத்திரை இல்லாமல் போனது என்பதற்கு இல்லை. அம்பேத்கர் தாக்கல் செய்த சட்ட வடிவத்தில், மலைப்பை ஏற்படுத்தும் வகையில் 315 சட்டப்பிரிவுகள் இருந்தன. இதனால் தான், அம்பேத்கர் அப்பட்டமான நிறைவோடு, ‘உலகத்தின் வேறு எந்த அரசியலமைப்பு சட்டமும் இத்தனை பெரிதில்லை.’ என்றார்.14 அதற்குப் பின்னர், அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தில் கிராமங்களுக்கு இடமில்லை என்கிற காந்தியவாதிகளின் விமர்சனத்தைக் கீழ்கண்டவாறு தவிடுபொடியாக்கினார்:

‘வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் இன்னுமொரு குற்றச்சாட்டு உண்டு. அது பண்டைய இந்திய ஆட்சியமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பண்டைய இந்து அரசை மாதிரியாகக் கொண்டு உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். மேற்கின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னமும் தீவிரமான காந்தியப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மத்திய, மாநில அரசுகளும் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான கிராம அரசுகள் மட்டும் இருந்தால் போதுமானது. அறிவார்ந்த இந்தியர்கள் கிராம சமூகத்தின் மீது கொண்டிருக்கும் காதல் பரிதாபப்படும்படியாக இல்லாவிடினும், அளவில்லாததாக இருக்கிறது. […] கிராமம் என்னவாக இருக்கிறது? உள்ளூர் பெருமிதம் ஊற்றெடுக்கும் சாக்கடையாக, அறியாமை, குறுகிய மனப்பான்மை, வகுப்புவாதத்தின் கிடங்காக அல்லவா இருக்கிறது. வரைவு அரசியலமைப்புச் சட்டம் கிராமத்தை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய அடிப்படையாகத் தனிமனிதனை ஏற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.’15

தமிழில்: பூ.கொ.சரவணன்

(இப்பகுதிகள் ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ எனும் மொழியாக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நூலை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=mp_s_a_1_1?keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&qid=1574734728&sprefix=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&sr=8-1#mediaMatrix_secondary_view_div_1574734735906)

இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு?


நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது.

 

மெய்ப்பொருள்:

சீனாவின் ஐநா நுழைவு வரலாறு இடியாப்ப சிக்கலானது. சீனாவில் உள்நாட்டுப் போர் ஒன்று நடைபெற்றது. சியாங் ஷேக் தலைமையிலான சீனக்குடியரசு அமெரிக்க ஆதரவோடு உலகப்போருக்கு பின்னர் ஆண்டுக் கொண்டிருந்தது. அதனை எதிர்த்து மாவோ தலைமையிலான கம்யூனிச கட்சியினர் போராடி வென்றார்கள். அவர்கள் தைவான் தவிர்த்த ஒட்டுமொத்த சீனாவையும் தங்கள் வசப்படுத்தினார்கள். இவர்களுக்குச் சோவியத் ரஷ்யாவின் ஆதரவு இருந்தது. ஆனால், தைவானில் தஞ்சம் புகுந்த சீனக்குடியரசு தான் ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவாக இருந்தது. மேலும், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாகவும் இருந்தது. அதன் இடத்திற்கு மாவோ தலைமையிலான சீன மக்கள் குடியரசை கொண்டுவர வேண்டும் என்கிற சோவியத் ரஷ்யாவின் முயற்சிகள் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டது.

Image result for nehru and mao

வீட்டோ எனப்படும் ஒரு எதிர் வாக்கு ஒட்டுமொத்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் என்கிற வினோதமான வாக்கு முறையைப் பாதுகாப்புக் கவுன்சில் பின்பற்றியது இதற்கு முக்கியக் காரணம். கடும்கோபத்தோடு 1950 ல் ஐநாவை விட்டு சோவியத் ரஷ்யா சிறிது காலத்திற்கு விலகியது. ஒரு வழியாக, ரிச்சர்ட் நிக்சனின் காலத்தில் அமெரிக்கா சீன மக்கள் குடியரசோடு நல்லுறவு பாராட்டியது. இதனையடுத்து ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவின் இடத்தை 1971-ல் சீன மக்கள் குடியரசு பெற்றுக்கொண்டது.

இப்போது நேரு பாதுகாப்புக் கவுன்சிலில் சீனாவிற்கு இடமில்லாமல் நிரந்தர இடத்தைப் பெற மறுத்தார் என்கிற கூற்றை எடுத்துக்கொள்வோம். இந்தக் கருத்தை பாஜகவினர் மட்டும் எடுத்துரைக்கவில்லை. சசி தரூர் தன்னுடைய ‘Nehru-The invention of India’ நூலில் இதே கருத்தை முன்வைக்கிறார். இந்திய அயலுறவு அதிகாரிகள் ஆகஸ்ட் 1950-ல் இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்தைச் சீனாவிற்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாக அமெரிக்கா அழைத்தது. அதனை நேரு ஏற்க மறுத்தார், இது பெரும்பிழை என்று கோப்புகளைப் பார்த்த அயலுறவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சசி தரூர் எழுதுகிறார்.

அடுத்து இன்னொரு முறை, 1955-ல் சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் செய்த போது (கவனிக்க அமெரிக்கா இல்லை) இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஆறாவது நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று யோசனை இருப்பதாகத் தெரிவித்தது. இதனையும் இந்தியா ஏற்கவில்லை. ஏன் என்று விரிவாகப் பார்ப்போம்.

முதலில் அமெரிக்கா சீனாவின் இடத்தைப் பாதுகாப்புக் கவுன்சிலில் எடுத்துக் கொள்ள வழங்கிய வாய்ப்பு. இது பரிந்துரைக்கப்பட்டது 1950-ல். அதாவது காஷ்மீர் பிரச்சினை ஐநாவில் இந்தியாவின் உள்நாட்டு சிக்கலாக அணுகப்படாமல், இந்திய-பாகிஸ்தான் பிரச்சினையாகப் பிரிட்டன், அமெரிக்காவால் மாற்றப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வு. ஆகஸ்ட் 24 1950-ல் சீனாவின் இடத்தை இந்தியா எடுத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சிலர் பரிந்துரைப்பதை அமெரிக்காவின் தூதுவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் நேருவிற்குத் தெரியப்படுத்துகிறார்.

இது இந்தியாவிற்கும்-சீனாவிற்கும் இடையே மோதலை மூட்டிவிடும், மேலும், ஐநா சபையை விட்டு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வெளியேறுவதும், ஐநா சபையே கலைவதற்கும் இது வழிகோலும் என்றும் நேரு அஞ்சினார். இந்தியாவிற்கு ஐநாவில் நிரந்தர இடம் வேண்டும், ஆனால், இப்படி அமெரிக்காவின் காய் நகர்த்தல் ஐநா சபைக்கும், உலக அமைதிக்கும் கேடாக முடியும் என்கிற அச்சம் நேருவிற்கு இருந்தது.

பேராசிரியர் நபரூன் ராய் வேறு சிலவற்றைக் கவனப்படுத்துகிறார். எகிப்திய தலைவர் நாசருடன் நேரு பேசுகிற போது, ‘சீனா பல லட்சம் மக்களை இழப்பதை குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னோடு உரையாடிக்கொண்டிருந்த மாவோ வெகு சாவகசமாகச் சில கோடி மக்களை இழப்பதற்கு நாங்கள் தயார்’ என நினைவுகூர்வதைக் கவனப்படுத்துகிறார். பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதும் சீனாவின் ஆக்ரோஷத்திற்குக் காரணம் என்று நேரு கருதினார்.

சீனா இந்தியாவின் அயலுறவு கொள்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும், அதனோடு உரையாடல், நல்லுறவு, அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதன் மூலமே ஐநா இயங்க முடியும் என்று நேரு கருதினார் என்கிறார் 1949-1962 காலத்தைய இந்திய சீன உறவுகள் குறித்து ஆய்வு செய்த ஆண்டன் ஹார்டர்.

மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்கா வழங்குவதாகச் சொன்ன பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை ஏற்றிருந்தாலும் இதனைச் சோவியத் ரஷ்யா வீட்டோ செய்திருக்கக் கூடும். (ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்குள் வந்து விட்டது)

ஜவகர்லால் நேரு லண்டனில் 1960-ல் நிகழ்த்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீன மக்கள் குடியரசு ஐநாவின் பகுதியானால் உலகின் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் எளிதாகிவிடும்’ என்றார். தன்னுடைய முதலமைச்சர்களுக்கு நேரு 1950-ல் எழுதிய கடிதத்தில், ‘….உலகின் அதிகாரச்சமநிலை புதிய சீனாவின் வருகைக்குப் பிறகு கிழக்கில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் மாறியிருக்கிறது. இதனை மேற்கத்திய நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்த உண்மையை உணர்வது துரிதமாக நடப்பது பேரிழப்புகளைத் தவிர்க்கும்’ என்று அக்கறையோடு எழுதினார்.

Image result for nehru and china security council

ஜனவரி 1950-ல் சீன மக்கள் குடியரசை ஐநாவில் சேர்க்காத போக்கை கண்டித்துச் சோவியத் ரஷ்யா ஐநாவை விட்டு வெளியேறி இருந்தது. இதே காலகட்டத்தில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா பங்குகொண்ட கொரியப்போரில் ஆரம்பத்தில் இந்தியா அமெரிக்காவிற்குச் சாதகமாக இயங்கியது. போக, போக நிலைமைக்கு ஏற்ப தன்னுடைய அமெரிக்க ஆதரவை இந்தியா குறைத்துக்கொண்டது. கொரியப்போர் குறித்த ஐநாவின் மூன்றாவது தீர்மானம் முழுக்க, முழுக்க அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்த போது அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்கு வந்து சேர்ந்திருந்தது. இத்தகைய நிலையில் இந்தியா அமெரிக்காவின் அழைப்பை ஏற்றிருந்தால் அது முழுக்க அமெரிக்காவின் கையாளாக மாறியிருக்க வேண்டியிருக்கும். மேலும், சோவியத் ரஷ்யா, சீனாவின் பகையை ஒருங்கே பெற்றுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். சர்வதேச அமைதியை குலைக்கிற செயலில் இந்தியா ஈடுபடாது என்று நேரு உறுதியாக இருந்தார்.

இதே காலகட்டத்தில் தான் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க அமெரிக்கா அழைத்தது. காஷ்மீர் பிரச்சினை ஐநாவிற்குச் சென்ற போது, விஜயலட்சுமி பண்டிட் ‘இந்தியா ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்றால் காஷ்மீரை கைகழுவ வேண்டியிருக்கும் போல’ என்று 2 செப்டம்பர் , 1949-ல் எழுதியிருந்தார். (விஜயலட்சுமி பண்டிட் தாள்கள் கோப்பு எண். 59, 47, NMML). ராணுவ ரீதியாகத் தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருப்பது புதிதாக உதித்த ஒரு நாட்டிற்கு உகந்தது அல்ல என்பது நேருவின் அக்கறையாக இருந்தது என்பது ராணுவ, அயலுறவு வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை.

சமீபத்தில் வந்த தி இந்து செய்தித்தாளின் பழைய கட்டுரையொன்றை மாலன் மேற்கோள் காட்டி நேரு பொய் சொல்லியிருக்கிறார் என்று எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நேருவிடம் உறுப்பினர் பரேக் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதற்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? என்கிற கேள்விக்கு ‘அப்படி எந்த அழைப்பும் வரவில்லை’ என்று நேரு செப்டம்பர் 1955-ல் உறுதிபட மறுத்திருக்கிறார். இதனைத்தான் ஏ.ஜி.நூரனி விஜயலட்சுமி பண்டிட் தாள்களை வாசித்து எழுதிய கட்டுரையைக் கொண்டு பொய்யர் நேரு என்கிற ரீதியில் மாலன் எழுதிச் செல்கிறார். (The Nehruvian approach)

என்ன நிகழ்ந்தது 1955-ல்?

சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் போயிருந்த போது அந்நாட்டின் பிரீமியர் புல்கானின் இந்தியாவை ஐநாவின் ஆறாவது பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராகச் சேர்க்க எண்ணம் என்கிறார். நேரு அதனை ஏற்க மறுக்கிறார். இதற்குப் பிந்தைய நாடாளுமன்ற விவாதத்தின் போது இதை அப்படியே நேரு மறைத்துவிட்டார் என்பது மாலன் முன்வைக்கிற பார்வை.

அந்த உரையாடலின் சில பகுதிகளை மட்டும் மாலன் பதிவு செய்கிறார். ஆனால், சோவியத் ரஷ்யா எப்படிச் சாதுரியமாக இந்தியாவைக் குழப்ப பார்த்தது என்பதையும், அதில் இருந்து நேரு எப்படிச் சாமர்த்தியமாகத் தப்பினார் என்பதையும் விளக்கும் உரையாடலின் பகுதியை மாலன் அறியாமல் விட்டுவிட்டார். சர்வபள்ளி கோபால் எழுதியிருக்கும் Jawaharlal Nehru; எனும் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றின் Volume II; பக்கம் 248-ல் வரும் “He (Jawaharlal Nehru) rejected the Soviet offer to propose India as the sixth permanent member of the Security Council and insisted that priority be given to China’s admission to the United Nations” என்கிற வரியை பிடித்துக் கொள்கிறார். சீனாவிற்காக இந்தியா ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்தது என்கிற பார்வையை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார் மாலன்.

Image result for nehru bulganin

இப்போது புல்கானின், நேரு இடையே நடந்த உரையாடலை பார்ப்போம்:

புல்கானின்: “நான்கு சக்திகள் மாநாடு குறித்த உங்களுடைய பரிந்துரையைக் கணக்கில் கொண்டு தேவையான நடவடிக்கையை எடுப்போம்.உலகளவில் நிலவி வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், பதற்றத்தை தணிக்கும் பொருட்டும், பிற்காலத்தில் இந்தியாவைப் பாதுகாப்பு கவுன்சிலின் ஆறாவது உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று எண்ணுகிறோம்…

நேரு: அமெரிக்காவில் சிலர் ஏற்கனவே சீனாவிற்குப் பதிலாக இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைத்ததைப் புல்கானின் அறிந்திருக்கலாம். அது எங்களுக்கும், சீனாவுக்கும் இடையே பகையைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டது. அதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அதேபோல, சில இடங்களைப் பிடிப்பதற்க வேகமாக முந்திக்கொண்டு செல்லவும் விரும்பவில்லை. அது பிரச்சினைகளை உண்டு செய்வதோடு, இந்தியாவையே சர்ச்சைக்கான பேசுபொருளாக மாற்றக்கூடும். இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் இணைக்க வேண்டுமென்றால், ஐநாவின் சாசனத்தைத் திருத்தி எழுத வேண்டும். அதற்கு முன்பு சீனாவை அனுமதிப்பது குறித்த சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். முதலில் சீனாவை சேர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். சாசனத்தைத் திருத்துவது குறித்துப் புல்கானின் அவர்களின் கருது என்ன? அதனைத் திருத்த இது சரியான நேரம் இதுவல்ல என்று நாங்கள் எண்ணுகிறோம்.

புல்கானின்: நாங்கள் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்ப்பது குறித்து உங்களின் கருத்துக்களை அறியவே இப்படிப்பட்ட பரிந்துரையை முன்வைத்தோம். இது அதற்கான நேரமில்லை, காலம் கனிந்து வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொன்றாகக் காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

மேற்சொன்ன உரையாடலில் சீனாவை நேரு அதிகமாக முன்னிறுத்துவது நமக்கு உறுத்தலை தரலாம். ஆனால், சாசனத்தைத் திருத்துவது கவனத்துக்கு உரியது. சாசனத்தைத் திருத்த ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து உறுப்பினர்களோடு பொதுக்குழுவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இது சாத்தியமில்லை என்பது நேருவுக்கு நன்றாகவே தெரியும். சோவியத் ரஷ்யா இந்தியா அமெரிக்கா பக்கம் சாய உள்ளதா? அது பாதுகாப்புக் கவுன்சிலில் தான் மட்டும் இடம்பெற கணக்கு போடுகிறதா என்று ஆழம் பார்த்தது. நேரு கச்சிதமாகச் சிக்காமல் தப்பினார். நேரு அயலுறவு சார்ந்த விஷயங்களை உள்நாட்டு பிரச்சினையாக்கி வாக்குச் சேகரிப்பதில் ஈடுபடாத மகத்தான தலைவர் என்று அதே கட்டுரையில் நூரனி புகழாரம் சூட்டுகிறார். இதை மாலன் வசதியாக மறந்துவிடுகிறார்.

உரையாடலின் போது வருகிற ஒரு பரிந்துரை ஏற்கப்படாத போது, அது நம் நாட்டை ஆழம் பார்க்கிற ஒன்றாக இருக்கிற போது அதனைப் பொதுச்சபையில் வைப்பது தேசத்தின் நலனிற்கும், அயலுறவு கொள்கைக்கும் மாறானதாக முடியக்கூடும் என்பது இந்திய அயலுறவு கொள்கையின் தந்தையான நேருவுக்கு நன்றாகத் தெரியும். நேருவுக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பு அமெரிக்காவின் நலனிற்கு உகந்ததாக இருந்திருக்கும். அதனால் சீனா, ரஷ்யாவின் பகைமையோடு வீட்டோவால் பாதுகாப்புக் கவுன்சில் இடமும் இந்தியாவிற்குக் கிடைக்காமல் போயிருக்கும். இன்னொரு முறை ரஷ்யா வாய்ப்பை வழங்கிய போது, அது கண்துடைப்பாகவே இருந்தது என்பதையும், அதை நிறைவேற்றுவது அப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா நன்றாகவே உணர்ந்திருந்தது.

இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்கிற அக்கறை நேருவிற்கு இருந்தது. அதே வேளையில், ஐநாவை கூறுபோட்டு, தன்னுடைய சீன, ரஷ்ய உறவுகளைக் கெடுத்துக்கொண்டு இன்னொரு போருக்கான சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்கிற தீர்க்கமும் நேருவிற்கு இருந்தது. இந்தச் சிக்கலான வரலாற்றை ‘நேரு பொய்யர்’, ‘சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை நேரு தாரைவார்த்து விட்டார்’ முதலிய அரைகுறை வரிகளால் விளங்கிக்கொள்ள முடியாது. ஐநாவில் சீனா அதன் தோற்றத்தில் இருந்தே இடம்பெற்று இருந்தது. எந்தச் சீனா என்பது தான் சிக்கலாக இருந்தது. சீனாவை தூக்கி எறிய வேண்டும் என்கிற அமெரிக்காவின் கணக்கிற்கு இந்தியா பலியாகாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது. சோவியத் ரஷ்யா சொன்னதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை இந்தியா தெளிவாக உணர்ந்திருந்தது. சாசனத்தைத் திருத்த தான் தயார் என்று புல்கானின் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், பிற்காலத்தில் இந்தியாவை ஆறாவது உறுப்பினராக ஆக்குகிறோம் என்கிற வரியின் ராஜதந்திர சதுரங்கத்தில் நேரு வெட்டுப்படாமல் தப்பினார். நேரு காஷ்மீர், சீனாவில் பிழைகள் புரிந்தார், அவர் அவற்றில் சரியாகவும் காய்களை நகர்த்திய தருணங்கள் உண்டு. வரலாறு சிக்கலானது மட்டுமல்ல, வெறுப்பினால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல.

காண்க:

Not at the Cost of China: India and the United Nations Security Council, 1950

In the Shadow of Great Power Politics: Why Nehru Supported PRC’s Admission to the Security Council

The Nehruvian approach

UN seat: Nehru clarifies

இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்

 

கருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2



ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:
இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Image result for republic of rhetoric
Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.
        அதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது.  அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.
Image result for boris becker aveek sarkar
   குஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
Image result for khusboo and supreme court
ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.

        கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.

Image result for contempt of court india

நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

            இது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.
மான நஷ்ட வழக்கு:
இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

Image result for nakheeran rajagopal auto shankar

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

         மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவில்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.
Image result for rangeela rasool           

               ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.

இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.

          ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

Image result for periyar  ramayana

அதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது. 

பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.

Continue reading

மெய்ப்பொய்கை – பேசப்படாத பாலியல் பெண்களின் துயரம்!


ருச்சிரா குப்தா தொகுத்த ‘River Of Flesh’நூலை வாசித்து  முடித்தேன். இந்நூல் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும், அதில் ஈடுபடும் பெண்களின் உலகத்தைப் பன்னிரெண்டு மொழிகளில் வெளிவந்த 21 சிறுகதைகளின் மூலம் கண்முன் நிறுத்துகிறது. முன்னுரையில் பேராசிரியர் ருச்சிரா எழுப்பும் கேள்விகள் மனதை உலுக்குபவை. பாலியல் தொழில் என்பது கல்லூரி பெண்கள் நுகர்வு வெறிக்காக மேற்கொள்வது என்றும், அதுவும் ரத்தத்தை உறிஞ்சும் தொழில்கள், கொடுமைக்கார திருமணங்கள் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு தரவும் பாலியல் தொழில் பயன்படுகிறது என்கிற தொனியில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், கள நிலவரம் வேறானது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அடிப்படைத்தேவைகளுக்கே அல்லாடுகிறார்கள். கடனில் சிக்கி இறுதிவரை வெளிவர முடியாமலே இறந்து போகிற பெண்கள் பலர். ஆனால், அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர்கள், உறவுக்காரர்கள் பெரும்பணம் ஈட்டுகிறார்கள். 9-13 வயதுக்குள் பெண்கள் இதற்குள் தள்ளப்படுகிறார்கள். கண்ணில் ரத்தம் வரவைக்கும் முறைகளைக்கொண்டு அவர்களைப் பருவம் எய்த வைக்கிறார்கள். அடித்தும், பட்டினி போட்டும், போதை மருந்துகள் கொடுத்தும் அவர்கள் காலத்துக்கும் பாலியல் தொழிலேயெ உழல வைக்கப்படுகிறார்கள்.

தூக்கமின்மை, உடற்பிணி அவர்களைப் பிடுங்கி தின்கிறது. சமீபத்திய ஆய்வுகள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்புகள் போர்க்களத்தில் வீரர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை விட மோசமானவை என நிறுவுகின்றன. இவர்களின் உலகை வெவ்வேறு சிறுகதைகளின் மூலம் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளும் முயற்சியே இத்தொகுப்பு என்கிறார் ருச்சிரா குப்தா.

கமலா தாஸின் கதையில் பலதரப்பட்ட பெண்களும், ஆண்களும்,குழந்தைகளும் நடமாடுகிறார்கள். பாலியல் வேட்கை மிகுந்த ஆணுக்குள் எட்டிப்பார்க்கும் தந்தையின் பிரியம் சில வரிகளில் கடத்தப்படுகிறது. மோகத்தின் வெம்மையில் போலி வாக்குறுதி தந்து பெண்ணின் மனதை உருக்குலைக்கும் இளைஞன் ஒருவன் கடந்து வந்த பல முகங்களை நினைவுபடுத்துகிறான். 

Image may contain: text

பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் தாய்மார்களின் பதைபதைக்க வைக்கும் வாழ்க்கையை இரு கதைகள் கண்முன் நிறுத்துகின்றன. அதிலும் நாயனா அட்டர்கரின் கொங்கனி கதையில் குழந்தை காலடியில் அழுது கொண்டிருக்க, ஆடவன் ஒருவன் அக்குழந்தையின் அன்னையோடு புணர்ந்தபடி இருக்கிறான். அவனின் மோகத்திற்கும், குழந்தையின் கதறலுக்கும் இடையே தவிக்கும் அந்தத் தாயை போல எத்தனை அன்னைகள்?

ஆண் வெறுப்பு மட்டுமே கதைகளின் மையமில்லை. அப்பெண்களின் உலகின் அன்பும், கனிவும், தயக்கங்களும், துயர்களும் அழகியலோடு கடத்தப்படும் கதைகள் அநேகம். பிபூதிபுஷன் பண்டோபாத்தியாயா கதையில் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் சூழல் எந்தப் பரப்புரையும் இல்லாமல் புரிய வைக்கப்படுகிறது. ஒரு பிராமணச் சிறுவனுக்கு அன்போடு தீண்டாமைக்கும், சாதி கட்டுப்பாடுகளுக்கும் பயந்து கொண்டே தின்பண்டங்கள் கொடுத்து அன்பை பொழியும் பெண்கள் நெகிழ வைக்கிறார்கள். முப்பது வருடங்கள் கழித்து அவர்களைச் சந்திக்கும் கணத்தை இப்படிக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்:

‘எனக்கு ஞாபகம் இருக்கு. அந்தப் பைத்தியக்கார வாண்டு பிராமணப் பையன் தானே நீ. எப்படி வளந்துட்டே? அம்மா அப்பாலாம் உயிரோட இருக்காங்களா?’
‘யாரும் உயிரோட இல்லை’
‘எத்தனை பசங்க’
‘அஞ்சு பேரு’
‘உட்காரு ஐயா. இங்கே உக்காரு. இந்தா வந்துடறேன்.’

அந்தப் பெண் திரும்புகையில் என்ன தந்தாள், அவனின் முகம் மறந்து போயிருந்தாலும் பேரன்பை எப்படிப் பத்திரப்படுத்தித் தந்தாள் என்பவை எல்லாம் அற்புத கணங்கள்.

மான்டோவின் கதையில் வரும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்ணின் கெஞ்சலும், அவள் தலைக்கு மேலே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் நூறு மெழுகுவர்த்தி வெளிச்சமும் பரிதாபத்தைக் கோரவில்லை. தூக்கம் தொலைத்து தரகர்களுக்குப் பணம் ஈட்டித்தரும் அடிமையாக மாற்றப்பட்டாலும் தன்னைப் பார்த்து யாரும் இரக்கப்படுவதற்கு அவள் அனுமதிக்கவில்லை. தூக்கத்திற்காக, நிம்மதிக்காக அலையும் அவள் கதையின் இறுதியில் செய்யும் செயலும், கொள்ளும் பேருறக்கமும் அதிர வைக்கும்.

கமலேஸ்வரின் இந்தி கதையில் வருகிற நாயகி தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடனை எப்படியாவது அடைத்து விடுவது என உறுதியோடு இருக்கிறாள். உயிரை எடுக்கும் வலியிலும் தன்னை நாடிவரும் தோழனுக்கு இன்பம் தர முயலும் அவளின் கரிசனம் கலங்க வைக்கிறது. அக்கதையின் இவ்வரிகள் எத்தனை ஆழமானவை?:

ஆயிரம் ஆண்கள் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய மிச்ச வாழ்க்கை முழுக்க அடைக்கலம் தரும் நிழலுடையவர்களாக அவர்கள் யாரும் இருக்கவில்லை.

அவளுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் கடன் வாங்கினாள், ஆனால், அங்கேயும் நம்பிக்கை இல்லை. என்றோ ஒருநாள் காணாமல் போகப்போகும் அவர்களை எப்படி அவளால் நம்ப முடியும்? முதுமை அவளைத் தீண்டியதும் ஆண்கள் அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அவர்களின் குழந்தைகள் வளர்ந்ததும் அவளிடம் வருவதை நிறுத்திக்கொள்வார்கள்….அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கடன் கொடுத்தவர்கள் அவளைக் காண வருவது தான். 

Image result for river of flesh
ருச்சிரா குப்தா, படம் நன்றி: http://speakingtigerbooks.com/books/river-of-flesh-and-other-stories-the-prostituted-women-in-indian-short-fiction/

பிரேம் சந்தின் கதையின் கவித்துவமும், அதில் நிரம்பி வழியும் பேரன்பும், வன்மமும் சொற்களில் அடங்காதவை. ஆண் தன்னுடைய தாபங்களுக்கு ஏற்ப பெண்களை நாடுவது போல, அவனுடைய காதலியும் நாடினால் என்னாகும் எனத் துரிதமாக விவரிக்கும் இக்கதையில் நின்று தரிசிப்பதற்குள் காட்சிகள் கடந்து விடுகின்றன.

குர்அதுல்ஐன் ஹைதரின் கதை முழுக்கப் பழம்பெருமை மிக்க ஒரு பெண்ணே நிறைந்திருக்கிறாள். கதையின் இறுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இறை நம்பிக்கையுள்ள பெண்ணின் குரல் அத்தனை வலிமிக்கதாக ஒலிக்கிறது:

நம்முடைய செயல்கள் எல்லாம் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மைப் படைத்தவனால் தீர்ப்பளிக்கப்படும். இந்த மும்பையில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள், எல்லா வகையான விஷயங்கள் இங்கேயும் நடக்கின்றன. …குரானை ஓதி நியாயத்தீர்ப்பு நாளில் எங்களுக்குக் கருணை காட்ட பிரார்த்தனை செய்.

சித்திக் ஆலமின் கதை மாய யதார்த்தவாத பாணியில் பயணித்துக் கிளர்ச்சியாக வாசிப்பு அனுபவத்தைப் பரிசளிக்கிறது. இஸ்மத் சுக்தாயின் கதையில் வரும் நாயகி லஜ்ஜோ கொண்டாட்டத்தின் திரு உரு. அவள் விதிகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டள்ளவள். அவளின் கசடுகளை விட அவளின் விடுதலையும், இன்ப நாட்டமும், குறும்புமே நம்மை நிறைக்கிறது. திருமணத் தளை அவளைக் கட்டிப்போட முயல்கையில் அவள் புரிபவை சுவையானவை. வெறும் ஒப்பாரித்தன்மையோடு தான் அவர்களின் வாழ்க்கை அணுகப்படும் என்கிற பொதுப்பார்வையை உடைத்துப்போடும் மகத்தான உருது சிறுகதை அது.

நபேந்து கோஷின் கதையின் இறுதி வரிகள் பெண்களின் நம்பிக்கையைத் தங்களின் வேட்கைகளுக்காகப் பலியிடும் ஆண்களின் உலகையும், பெண்ணின் வாழ்க்கையையும் சில வரிகளில் நம்முன் நிறுத்தி நகர்கிறது:

அவனைச் சைய்யா சுலபமாக மறக்க மாட்டாள். தீன்காரி தாஸ் என்கிற பல்ராம் சௌத்ரி அவளை அர்ஜுனனாக மயங்கினான். அந்த மயக்கம் அவள் வயிற்றினில் நாளும் வளர்கிறது. அது அவள் கருப்பையை விட்டு வெளிவந்த பின்பும் நாளும் வளரும். அது வளர்ந்து கொண்டே இருக்கும், அவளுடைய இறுதி மூச்சுவரை அவளின் ஆன்மாவை கடித்துக் குதறிக்கொண்டே இருக்கும். பல்ராம் சைய்யாவை மறந்தாலும், அவளால் அவனை மறக்கவே முடியாது.

மனிஷா குல்ஷரேஷ்தாவின் கதை மகன், தாய் ஆகிய இருவரின் குரல்களில் ஒலிக்கிறது. அவனைப் பெற்று, தனியாளாகத் துரோகத்தின் நிழலில் வளர்த்த அன்னையைப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவள் என்பதால் அம்மா என்று அழைக்க மறுத்து மகன் தான் கண்டதை விவரிக்கிறான். அன்னையின் குரல் அவனுக்கு உண்மையைச் சொல்ல மறுக்கிறது. அவனுடைய கேள்விகளுக்கும், முன்முடிவான போலி அறத்துக்கும் அவளின் ஆன்மா அடிபணிய மறுக்கிறது. இக்கதையின் ரகசியத்தை விடவும் அதன் நெருக்கமும், நேர்மையும் மொழிபெயர்ப்பிலும் அப்படியே கடத்தப்பட்டு இருக்கிறது.

மாதுரிமா சின்ஹாவின் கதை நெஞ்சில் அறம் இன்றி, போலித்தன்மை மிக்க மனிதர்கள் பிரியத்தின் சிறு நிழலையாவது கண்டு விட மாட்டோமா எனக் கொடிய வாழ்க்கைக்கு இடையே பரிதவிக்கும் பாலியல் தொழிலில் சிக்குண்டு நிற்கும் பெண்களை ‘மோசமானவர்கள்’ என்கிற அபத்தத்தை எளிய கதையமைப்பில் சாடி செல்கிறார்.

கடிதங்களால் ஆன இரு கதைகள் தொகுப்பை அலங்கரிக்கின்றன. புரியாத மொழியில் இருவரும் எழுதிக்கொள்ளும் கடிதங்களை வாசித்து, பேரன்பை சுவாசித்து, மீண்டும் அவற்றை எழுதியவர்களே எடுத்துச் செல்லும் வலி கண்களைக் கசிய வைக்கிறது. தந்தையின் காதலியை தேடிச்செல்லும் மகளுக்குக் கிடைக்கும் அன்னையின் வாசனை நம் நாசியையும் நிறைக்கிறது.

கிஷன் சந்தரின் கதை பிரிவினை காலத்தில் ஒரு பாலியல் தொழிலாளி ஜின்னா, நேரு இருவருக்கும் எழுதும் கடிதமாக நீள்கிறது. மத வெறி எப்படி இளம் சிறுமிகளின், பெண்களின், குடும்பங்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போடுகிறது என்பதை விட அந்தப் பாலியல் தொழிலாளியின் கடிதத்தின் இரு பத்திகள் சூடுபவை. அவற்றோடு நம்மை உலுக்கும், இன்னமும் கரிசனத்தோடு, கவலையோடு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்களை அணுகும் இந்தச் சிறுகதை தொகுப்பின் அறிமுகத்தை முடிக்கலாம்:

“கொடுமைக்கார முஸ்லீம்கள் பேலாவின் அம்மாவுடைய மார்பகங்களை அறுத்து எறிந்தார்கள். ஒரு அன்னையின் மார்பகங்கள் தன்னுடைய பிள்ளை இந்துவா,முஸ்லீமா, சீக்கியனா, யூதனா எனப்பார்க்காமல் பசி தீர்க்க பாலூட்டுகிறது. உலகத்தின் அகன்ற பரப்பினில் படைப்பின் புதிய அத்தியாயத்தை அது கொண்டு வருகிறது. இந்தப் பால் கசியும் மார்பகங்களை அல்லா உ அக்பர் என உச்சரிக்கும் மக்களே வெட்டினார்கள். அறியாமை அவர்களின் ஆன்மாவை கருத்த நஞ்சால் நிறைத்து விட்டது. நான் புனித குரானை வாசித்து இருக்கிறேன். பேலாவின் பெற்றோருக்கு ராவல்பிண்டியில் நிகழ்த்தப்பட்டவற்றை இஸ்லாம் ஒன்றும் கற்பிக்கவில்லை என எனக்குத் தெரியும். அது மனிதமும் இல்லை, பகைமையும் இல்லை, பழிவாங்கலும் இல்லை. அது மிருகத்தனமான, கோழைத்தனமான, கொடூரமிகுந்த, சாத்தானை ஒத்த செயல். அது இருளின் நெஞ்சத்தில் இருந்து வெளிப்பட்டுக் கடைசிக் கீற்று நம்பிக்கையையும் கறைப்படுத்தி விட்டது.’
———————————————————————————————————-
ரெஹனா, மர்ஜானா, சூசன் பேகம் அவர்களின் தந்தையின் பிணத்தின் முன்னால் ஒவ்வொருவராக வன்புணர்வு செய்யப்பட்டார்கள். தங்களுக்குத் தாலாட்டு பாடிய, கண்ணியம், பக்தி, வெட்கத்தோடு தங்கள் முன் தலைகுனிந்து நடந்த அம்மாக்களை, சகோதரிகளை வன்புணர்வு செய்தார்கள் அந்த ஆண்கள்.

இந்து மதத்தின் புனிதம் பறிபோனது. அதன் அறங்கள், நம்பிக்கைகள் அழிக்கப்பட்டன. இப்போது அமைதி மட்டுமே நிலவுகிறது. க்ராந்த் சாஹிபின் ஒவ்வொரு வரியும் அவமானப்பட்டு இருக்கிறது. கீதையின் ஒவ்வொரு வரியும் காயப்பட்டு இருக்கிறது. அஜந்தாவின் கலையழகு குறித்து என்னிடம் யார் பேச முடியும்? அசோகரின் எழுத்துக்கள் குறித்து யார் என்னிடம் சொல்ல முடியும்? எல்லோராவின் சிற்பி குறித்து யார் கீதமிசைக்க முடியும். அந்த ஆதரவற்ற பட்டுல் சிறுமியின் கடித்துக் குதறப்பட்ட உதடுகளில், மிருகங்கள்,அரக்கர்களின் பல்தடங்கள் இருக்கும் அவளின் கரங்களில் உங்கள் அஜந்தாவின் மரணம் தெரிகிறது, உங்கள் எல்லோராவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, உங்கள் நாகரீக சமூகம் பிண ஆடை போர்த்திக்கொண்டு நகர்கிறது…

அவர்களை என் தொழிலுக்குள் நான் தள்ளமுடியும். ஆனால், ராவல்பிண்டியும், ஜலந்தரும் அவர்களுக்குப் புரிந்ததை நான் செய்ய மாட்டேன். 

Image result for மெய்ப்பொய்கை

River Of Flesh
தொகுப்பாசிரியர்: ருச்சிரா குப்தா
Speaking Tiger
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350

(இத்தொகுப்பின் ஒரு முக்கியமான குறை பல்வேறு மொழிகளின் சொற்களுக்கு பொருள் இறுதியில் கூட தரப்படவில்லை. இது வாசிப்பை சமயங்களில் தடைப்படுத்துகிறது. இந்நூல் தமிழில் மெய்ப்பொய்கை என்கிற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. நான் ஆங்கிலத்திலேயே நூலை வாசித்தேன். )

 

தேசியம்-ஒரு உரையாடல்


#விடுதலை தினத்தைப் புறக்கணிக்க வேண்டும், இது கருப்பு தினம் என்றெல்லாம் பகிர்கிறார்கள். அரசுக்கும், தேசத்திற்கும் வேறுபாடு உண்டு. அது முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிய நாடு இது. இதன் பெருமைகளும், சிறுமைகளும் நமக்குரியவை. ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ எனக் கேட்டார் வரலாற்றாசிரியர் முகுல் கேசவன். நம் அனைவருக்குமான கேள்வி அது.#
 
இப்படியொரு பதிவை விடுதலை திருநாள் அன்று எழுதினேன். இந்தியா ஒரு நாடா? இந்தத் தேசியத்தை ஏற்கனவே பெரும்பான்மைவாதமாக மாற்றிவிட்டார்கள், பின் என்ன செய்வது? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். இவற்றுக்கு முழுமையாகச் சில பத்திகளில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனினும், வரலாற்று ஆசிரியர்கள் முகுல் கேசவன், ஸ்ரீநாத் ராகவன், அரசியல் அறிஞர் சுனில் கில்னானி ஆகியோரின் வாதங்களை இணைத்து எழுதுகிறேன். த. பெனடிக்ட் ஆண்டர்சன் தேசியம் குறித்துச் செய்த ஆய்வுகள், முன்வைத்த கருத்துக்கள் தேசியம் என்பதே தீங்கானது என்கிற பார்வையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. பதிவை நீள வைத்துவிடும் என்பதால் அது இன்னொரு நாள். ற்காலம் குறித்து நான் விரிவாக எழுத முடியாது என்றாலும், இந்தப் பதிவின் மூலம் தேசியம் குறித்த அசூயை குறைந்து, அதில் நமக்கான பங்கை, உரிமையை உணர்ந்து உரையாடுவதன் அவசியம் புரியும் என நம்புகிறேன்
 
தற்போதைய இந்தியா எக்காலத்திலும் ஒரே தேசமாக இருந்தது கிடையாது என்பது பலரின் வாதம். முழுக்க உண்மை. இந்தியாவை அரசியல் அறிஞர்கள் ‘உருவாகி கொண்டிருக்கும் தேசம் ‘ என்பார்கள். தேசியம் என்பது பன்னெடுங்காலமாக இருப்பது என்கிற வாதத்தை நவீன அரசியல் அறிவியல் ஏற்பது இல்லை. வரலாற்று ஆசிரியர்களும் அதனோடு ஒப்புகிறார்கள். தேசியங்கள் என்பவை கட்டமைக்கப்படுபவை. ஐரோப்பாவின் தேசியங்கள் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நாடு என்கிற ரீதியில் கட்டமைக்கப்பட்டன. மாஜினி. கரிபால்டி, பிஸ்மார்க் எனப் பல்வேறு ஆளுமைகள் ஐரோப்பாவில் உருவாக்கிய தேசியங்கள் வேற்றுமைகளைத் துடைத்து எறிந்து விட்டு, ஒற்றைப்படையாக மக்களை ஒன்று சேர்க்க முயன்றன.
 
1878-ல் டெல்லியில் லிட்டனால் தர்பார் கூட்டப்பட்டது. அதில் பல்வேறு சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள். இந்தியா என்கிற வனவிலங்கு சரணாலயத்தின் பல்வேறு விலங்குகளும் அங்கே இருந்தன என்று முகுல் கேசவன் குறிப்பிடுகிறார். இதே பாணியில், ஆனால் , ஆங்கிலேயருக்கு வந்தனம் என்று சொல்லாத ஒரு இந்திய வனவிலங்கு கூட்டத்தைக் காங்கிரஸ் நடத்த முயன்றது. காங்கிரசில் ஆதிக்க ஜாதியினரே ஆரம்பக் காலங்களில் நிரம்பி இருந்தார்கள். அது தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என அழைத்துக் கொண்டது. இந்தியாவுக்கே பேசுகிறேன் என்று எப்படி நிரூபிப்பது? நோவாவின் கதை தெரியும் இல்லையா? உலகை இறைவன் அழிக்க எண்ணிய போது, ஒரு பெரிய கப்பலை படைத்து அதில் ஒவ்வொரு உயிரினத்தின் ஜோடிகளை மட்டும் ஏற்றுக்கொண்டார் நோவா என்கிறது விவிலியம். அப்படி இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பிய காங்கிரஸ், எல்லாரையும் பெயரளவில் ஆவது தன்னுடைய உறுப்பினராக ஆக்கிக்கொண்டது. இப்படி நோவாவின் மிதவையைப் போல அனைவரையும் உள்ளடக்கக் காங்கிரசின் தேசியம் முயன்றது. இதையே முகுல் கேசவன், ‘Noah’s Ark of Nationalism’ என்கிறார்.
Image result for முகுல் கேசவன்
 
இந்தத் தேசியம் எல்லாருக்குமான தேசியம் இல்லை என்பது உண்மை. ஒரு குடையின் கீழ் எல்லா இனங்கள், மொழியினரையும் கொண்டு வர இது முயன்றது. இந்தக் குடையில் ஒதுங்க முடியாது என்று வெவ்வேறு தரப்பினர் குரல் கொடுத்தார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், தலித்துகள் என்று பலரும் தங்களுடைய தேசியம் இதுவல்ல என்று எண்ணினார்கள், போராடினார்கள்.
 
காங்கிரசின் இந்தத் தேசியத்தை எப்படி வர்ணிப்பது? இதை முகுல் கேசவன், ‘சந்தர்ப்பவாதம், திட்டமிடல், லட்சியவாதம் ஆகியவற்றின் கலவை. ஆங்கிலக் காதல் கொண்ட மக்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடிய படித்த மேல்தட்டினர் ஆரம்பக் காலத்தில் சமைத்த தேசியம்.’ என்கிறார். இந்தத் தேசியம் அடுத்தக் கட்டத்துக்குத் தாதாபாய் நவ்ரோஜி, ஆர்.சி.தத் முதலியோரால் நகர்ந்தது. இந்தியா என்கிற எங்கள் கனவில் அனைவருக்கும் இடம் என்று மட்டும் சொன்னால் போதுமா? ஆங்கிலேய அரசை எதிர்ப்பது எப்படி? எல்லா இந்தியர்களையும் ஒரே மதம் என்று சொல்லி சேர்க்க முடியாது. அனைவருக்கும் பொதுவான வரலாறு என்று ஒன்றில்லை. மொழி ரீதியாகவும் ஐரோப்பாவை போல ஒன்று திரட்ட முடியாது. தலை சுற்றியிருக்கும் இல்லையா?
 
மொழி, மதம், வர்க்கம் என்றெல்லாம் கிளம்பினால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குப் புரிந்தது. எல்லா இந்தியர்களையும் பாதிக்கும் ஒன்றை முன்னிறுத்த எண்ணினார்கள். இஸ்லாமிய வியாபாரிகள், ஜாட் விவசாயிகள், பார்சி முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று அனைவரையும் பாதித்தது காலனியம். ஆங்கிலேய அரசு எப்படித் தன்னுடைய காலனிய ஆட்சியின் மூலம் சுரண்டுகிறது என்பதை எடுத்துரைத்தும், பரப்புரை செய்தும் மக்களை ஒன்று திரட்டினார்கள். காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தைப் பேசியதே அன்றிக் கலாசார தேசியத்தைப் பேசவில்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவர்க்கும் அது குரல் கொடுத்தது. வரி விதிப்பு, கட்டணங்கள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் என்று பலவற்றைச் சாடி மக்களை ஒன்று சேர்த்தது.
 
காங்கிரஸ் கனவு கண்ட இந்திய தேசியத்தை இந்துத்வர்கள் மேற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பார்கள். ஆனால், காங்கிரஸ் கனவு கண்ட, பெருமளவில் சாதித்த இந்திய தேசியம் அசலானது. அதற்கு முன் எங்கும் முன்மாதிரி இல்லாதது. ஆச்சரியம் தருவது. இந்துத்வமே உண்மையில் ஐரோப்பிய தேசியத்தின் இறக்குமதி ஆகும். இந்திய தேசியம் ஏன் வளர்ந்தது? அது யாரையும் நீ தேசியவாதி என நிரூபிக்கச் சொல்லவில்லை. ‘தேசபக்தன் என நிரூபிக்க வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தாமலே வளர்ந்த அற்புதம் அது.’ என்பார் சுனில் கில்னானி. எளிமையாகச் சொல்வது என்றால், எது ‘Idea of India?’, ‘No idea/Not one idea’. செக் தேசியவாதி ஜான் மஸர்யக் தேசியம் என்பதில் தேசமே உச்சமான அரசியல் விழுமியம் என்றார். ஆனால், எண்ணற்ற இந்திய தேசியவாதிகள் தேசம் உச்சமான அரசியல் விழுமியம் என்று பேச மறுத்தார்கள். தேசியம் என்கிற வார்த்தையை வரையறை செய்யாமல் காங்கிரஸ் சாமர்த்தியமாக நடந்து கொண்டது.
Image result for srinath raghavan mukul kesavan
 
இந்தத் தேசியம் இஸ்லாமியர்களை இணைத்துக் கொள்ள விடுதலைக்கு முன்னர்த் தவறியது. அது ஆதிக்க ஜாதியினர் பெரும்பாலும் கோலோச்சும் ஒன்றாக இருந்தது. எனினும், இவற்றைத் தாண்டி இந்தத் தேசியம் இந்தியாவை விடுதலைக்குப் பிறகு மதச்சார்பற்ற தேசமாகக் கட்டமைத்தது. தாராளவாதம் மிகுந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைப் பரிசளித்தது. இட ஒதுக்கீடு, சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என்று பலவற்றை அது கட்டமைத்தது. காங்கிரசின் தேசியத்தின் ஆதிக்க ஜாதி பண்பு, பல்வேறு தரப்பின் கவலைகளைக் கவனிக்காமல் இருந்தது, அதன் போதாமைகளைத் தாண்டி இந்தச் சாதனைகளை அது செய்தது. பல தரப்பையும் ஓரளவுக்காவது அது இணைப்பதை சாதித்தது.
 
ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தின் மூலம் மக்களைத் திரட்டிய காங்கிரஸ் அவர்கள் நாட்டை விட்டு விலகியதும் சவால்களை எதிர்கொண்டது. மக்களை ஒன்றிணைத்த ஆங்கிலேய எதிர்ப்பு விடுதலையோடு முடிந்து போயிருந்தது. எல்லா மக்களுக்கும் பயன் தரும் ஆரம்பக்கல்வியைப் பற்றியோ, விவசாயிகளுக்கு உதவக்கூடிய நில சீர்திருத்தங்கள் குறித்தோ காங்கிரஸ் கவலை கொள்ளவில்லை. அதன் கனவுகள் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதாக இருந்தது. சோட்டு ராம், சரண் சிங் முதலியோர் எப்படி இந்தியா நகர்ப்புற இந்தியா, கிராமங்களின் இந்தியா என்று பிளவுபட்டு நிற்கிறது எனச் சுட்டிக்காட்டி போராடினார்கள்.
 
ராம் மனோகர் லோகியா, பெரியார் ஆகியோர் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோருக்கு குரல் கொடுத்தார்கள். லோகியா பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கனவு கண்டார்.
எமெர்ஜென்சி இந்துத்துவர்களை அரசியல் மையத்துக்குக் கொண்டு வந்தது. அந்தப் பிளவுபடுத்தும் தேசியத்திற்கான மாற்றான காங்கிரஸ் தேசியம் நேருவுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் அரித்துக்கொண்டே போனது. முகுல் கேசவன் வரியில் சொல்வது என்றால், முன்னையது பட்டவர்த்தனமாக மதவாதம் போற்றுவது, காங்கிரஸோ சமயம், சந்தர்ப்பம் பார்த்து மதவாதத்தைப் பற்றிக்கொள்வது.
Image result for periyar lohia
 
இவற்றுக்கு மாற்றாக எழுந்திருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள் குரல்கள் வடக்கில் வெற்றி பெறவேவில்லை. ஸ்ரீநாத் ராகவன் தெற்கில் காங்கிரஸ், பாஜக அல்லாத வெற்றியை திமுக, அதிமுகச் சாதித்ததன் காரணம் அவை ஆட்சியில் இருந்த போது மக்கள் நலனுக்குத் தங்களால் ஆனதை செய்து காட்டியும் உள்ளன, இது வடக்கில் நிகழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
 
காங்கிரஸ் கனவு கண்ட தேசியம் தன்னிடம் பதில் இல்லாத கேள்விகளைத் தள்ளிப்போட்டது. எது தேசிய மொழி என்கிற கேள்விக்கு விடுதலைக்கு முன்னால் இந்துஸ்தானி மொழி என்றது தேசியம். அதுவும் பாரசீக, தேவநாகரி வரிவடிவங்கள் என இரண்டிலும் இடம்பெறும் என வாக்குத் தந்தது. விடுதலைக்குப் பின்னால் பிரிவினையைக் காரணம் காட்டி பாரசீக வரிவடிவத்தைக் கைவிட்டது. அதோடு நில்லாமல் உருது மொழியைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இந்தியை பின்னர் வந்தவர்கள் திணிப்பதற்கான வேர்கள் சமரசம் என்கிற பெயரில் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஊன்றப்பட்டன.
Image result for symbols of indian nationalism'
தேசிய கொடி கிட்டத்தட்ட விடுதலைக்குப் போராடிய காங்கிரசின் கொடி. அதில் அசோக சக்கரத்தை பதித்து அதற்குப் புதுப் பொருள் தரப்பட்டது. தேசிய கீதத்தை பெரும்பான்மைவாதிகள்
விடுதலைக்கு முன்னர்க் கடுமையாக எதிர்த்தார்கள். விடுதலைப்போரில் அவர்களுக்குத் தொடர்பே இல்லை. எனினும், இன்று தேசியத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். அவர்களின் பிளவுபடுத்தும் கனவுகளை நிராகரித்த தலைவர்களை உரிமை கொண்டாடுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கனவுகளின் மீது எழுந்த தேசியத்தை ஒற்றைப்படையான பார்வை தனதாக்க பார்க்கிறது. போதுமான அளவில் இல்லை என்றாலும், தன்னளவில் அனைவரையும் இணைத்துக் கொள்ள முயன்ற தேசியம் குறித்துப் பேசுவோர் இல்லை. இப்போது முகுல் கேசவனின் வரிகளை மீண்டும் படியுங்கள், ‘ ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ தேசியத்தைப் பெரும்பான்மைவாதத்தோடு தொடர்புபடுத்திகொள்வதால் நிகழ்வது அதுவே தேசியம் என அங்கீகரிப்பது தான்!
 
உதவியவை:
 
Secular Common Sense
 
Mukul Kesavan’s writings on Nationalism
 
Idea of India
 

பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU

நேருவின் நம்பிக்கை – பகுதி-5


நேரு

நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி
நேரு மதநம்பிக்கை இல்லாத அரசியல்வாதியாக இருந்தாலும் ஆழமான அறவுணர்வு மிக்கவர். மதத்தை நாடி அதன்மூலம் ஓர் அறத்தை உருவாக்க அவர் முயலவில்லை. அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயங்களுக்கு ஆளானாலும் நேரு மதத்தை நாடாமல் அறநெறியை உருவாக்க முயன்றார். நேரு அறத்தின்மீது கொண்டிருந்த நம்பிக்கையும், தன்னுடைய கொள்கைகளைக் கைவிடாத குணமுமே அவரின் அரசியல் செயல்பாடுகளை உறுதியாகத் தாங்கிக்கொண்டன.
நேரு

இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஒரு முரண்பாடு பரவலாகக் காணக் கிடைக்கிறது. ஏராளமான அரசியல்வாதிகள் ‘நாங்கள் மதநம்பிக்கை உள்ளவர்கள்’ என்று பெருமிதத்தோடு அறிவித்துக்கொள்கிறார்கள். எனினும், இவர்களிடம் ஆழமான அறவுணர்வு கொண்ட பண்புநலனோ, அறப்போராட்டங்கள் குறித்த புரிதலோ, தங்களுடையச் செயல்கள், கொள்கைகள், முடிவுகள் குறித்த சுயவிமர்சனமோ கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். அரசியலில் வெல்வது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதோடு வேலை முடிந்தது என்பது அவர்களின் பார்வையாக இருக்கக் கூடும். இது முழுக்கமுழுக்கத் தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்ள மத நம்பிக்கை, பகுத்தறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிற செயலாகும்.

மதத்தை வெறும் நம்பிக்கையாக மட்டும் காட்டிக்கொண்டு, அதன் அறவுணர்வைத் தட்டிக்கழிப்பது நடக்கிறது. இது மதம், நம்பிக்கை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் ஆழமான, அதிரவைக்கும் மாற்றங்களுக்கு அறிகுறியாகும். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தத்துவ அறிஞர்கள், அறிவுஜீவிகள் காலப்போக்கில் மதம்சார்ந்த விஷயங்கள் தனிநபர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாறும் என்று உறுதியாக நம்பினார்கள். வருங்காலத்தில் மதம் என்பது வீட்டோடு முடிந்துவிடும் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போட்டார்கள். அதற்குத் தலைகீழான ஒன்றே நடந்தது. தற்கால மதமும், நம்பிக்கையும் தனிமனிதர்களின் ஆழமானச் சிந்தனைகள், வாழ்க்கைப் போராட்டங்கள் சார்ந்தவையாக இல்லை. அவை, பொது வாழ்க்கையின் மோதல்கள், குழப்பங்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மதம் தனக்குள்ளேயே தீவிரமாகத் தொல்லைப்படுத்துகிற கேள்விகளை முன்பு எழுப்பிக்கொண்டது. அதன்மூலம் அறங்களை, நீதிநெறிகளை உருவாக்கியது. அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லாம் அரசியலில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கு மதம் தேவைப்படுகிறது. பொது வாழ்க்கையில் வெல்வதற்கு எவ்வளவு தூரம் மதம் தேவைப்படும், மதத்தை எந்தளவு தங்களின் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தலாம் என யோசிக்கவுமே மதம் பயன்படுத்தப்படுகிறது.

அரசியலில் மதத்துக்கான இடம்குறித்த நேருவின் புரிதல் முக்கியமானது. அவர் ஏன் அரசியலையும், மதத்தையும் பிரித்தேவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் என உணர்ந்துகொள்வது அவசியமானது. வருங்காலத்தில் மதச்சார்பின்மை நாட்டுக்கு நல்லது செய்யும் என்று கண்மூடித்தனமாக நேரு நம்பவில்லை. இந்திய வரலாற்றில் மதச்சார்பின்மை என்பது தவிர்க்க முடியாத சக்தி என்கிற பொன்னுலகக் கனவுகள் எல்லாம் நேருவுக்கு இல்லை. பொருளாதார முன்னேற்றத்தின்மூலம் மதத்தின் சாயலே இல்லாத அரசியலைச் சாதிக்க முடியும் என்று நேரு நம்பவில்லை. அடிப்படைவாத சக்திகளே மதத்தை அரசியலில் கலக்கின்றன; அவையே, தங்களின் தேவைகளுக்கு மதத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்கிற புரிதல் நேருவுக்கு 1930-களில் இருந்தது. அந்தப் பார்வை மார்க்ஸியத்தின் தாக்கத்தால் ஏற்பட்டது. எனினும், இதே பார்வையை அவர் தன் வாழ்நாளின் கடைசி இருபது வருடங்களில் கொண்டிருக்கவில்லை.

நேரு வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிற திறமை மிகுந்தவராக இருந்தார். மதம் என்பது இந்தியச் சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பதைக் காந்தியும், தாகூரும், மெளலானா அபுல் கலாம் ஆசாத்தும், ராஜாஜியும் உணர்ந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடிய, இணைந்து இயங்கிய நேருவும் அதனைப் புரிந்துகொண்டார். சமூகத்தை மதம் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பது கண்முன்னே காணும் தருணமாகப் பிரிவினை மாறியது. அரசு, மதம் ஆகியவை குறித்து நேரு எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருந்தார்? காலப்போக்கில் மதம் அரசியலைவிட்டு நடையைக் கட்டும் என்றோ, அதன் தேவை மங்கிவிடும் என்றோ கண்மூடித்தனமாக நேரு நம்பவில்லை. மதம் அரசியலை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கடந்தகால வரலாற்றின் மூலம் நேரு உணர்ந்துகொண்டார்.

நேரு

நவீன காலத்தில் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் கருவியாகப் பகுத்தறிவை மாற்றக்கூடிய பேராற்றல் பொருந்திய அமைப்பாக அரசு இருக்கிறது. அந்த அரசோடு மதம் கலக்கிறபோது பேராபத்துகள் ஏற்படும் என்று நேரு உணர்ந்திருந்தார். அது ஐரோப்பா, இந்தியாவில் மதம் அரசியலை என்ன பாடுபடுத்தியது என்கிற அனுபவங்களின் அடிப்படையிலான ஒன்று. நாம் உலக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போம். பால்கன் தீபகற்பத்தில் பல்வேறு நாடுகள் அவை இருந்த சுவடே இல்லாமல் சிதைந்துபோயின. அரேபிய தேசியம் வீழ்ந்துகொண்டிருப்பதை அதன் இடிபாடுகளின் இடையே நின்றபடி காண்கிறோம். அதேசமயம், மலையுச்சியின் விளிம்பில் நின்றபடி அதல பாதாளத்துக்குள் விழுந்துவிடாமல் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடும் நபரைப்போல இந்தோனேசியா போன்ற தேசங்கள் தங்களுடைய தேச ஒற்றுமையைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்டச் சவாலான காலத்தில்தான் நேரு மதம் அல்லாத நம்பிக்கையின் மீது ஒரு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் எனக் கண்ட கனவின் வலிமையை நாம் உணர்வது மிகவும் அவசியமாகிறது. மதம் உறுதியாகத் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிற காலத்தில், அது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இந்தப் புதிய நூற்றாண்டில் நாம் ஏன் நேருவின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டும் என்கிற நியாயமான கேள்வி எழலாம். இப்படிப்பட்ட காலத்தில்தான் நம்பிக்கை சார்ந்த நேருவின் கருத்துகளின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதை, நிராகரிப்பதை நாம் செய்யக் கூடாது. மதத்தின் மீது பல்வேறு தேசியங்கள் உறுதிபெற்று இருக்கும் காலத்தில், நேருவின் நம்பிக்கை சார்ந்த கருத்துகளின் இன்றைய தேவையை, முக்கியத்துவத்தை உணர்வது இன்னமும் அவசியமாகிறது. மதம் சாராத நம்பிக்கையே ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றது என்கிற நேருவின் பார்வை முழுக்கமுழுக்கச் சரியானதாகும்.

ஒவ்வொரு புதிய தலைமுறையும், போன தலைமுறையை இழிவாகப் பார்க்கிற போக்கு உண்டு. இளம் தலைமுறை ‘போன தலைமுறைக்கு என்ன தெரியும்’ என்று எள்ளி நகையாடி தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்வது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். கடந்த தலைமுறைகளைவிட எண்ணற்ற விஷயங்களை நம் தலைமுறை நன்கு புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மையே. நேருவைவிட நாம் சிறப்பாக இயங்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நேருவின் பொருளாதார முடிவுகளை நாம் ஏற்க மறுக்கலாம். அவரின் அயலுறவுக்கொள்கையை நிராகரிக்கலாம். ஆனால், மதம் குறித்து நேரு கொண்டிருந்த பார்வை இன்றைக்கும் தேவைப்படுகிறது. நம் காலத்தின் அரசியல்வாதிகள், மேதைகள் மதம் குறித்துக் கொண்டிருக்கும் புரிதலைவிட, நேருவின் புரிதல் மேலான ஒன்று. நேருவின் ஆளுமையும் பாணிகளும் நமக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். நமக்கு நேருவின் மீது விமர்சனங்கள், வெறுப்புகள் ஆகியவை இருக்கவே கூடாது என்பதில்லை. அவற்றை நேருவின் சில கருத்துகள், புரிதல்கள் ஏன் இன்றைக்கும் தேவைப்படுகிறது என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.. நம்முடைய கடந்தகாலத் தலைமுறையின் சில அனுபவங்கள், புரிதல்களுக்கு நாம் அடிப்படையில் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

நமக்கு நேருவின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதன் தேவை என்ன? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன கிடைக்கும்? அது, அவர் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பதில் இல்லை. அவர் எப்படிச் செல்வ வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காகப் பாடுபட்டார் என்பதை அறிவதிலும் இல்லை. அவர் அறிவுத்தளத்திலும், அரசியலிலும் எப்படிப்பட்ட புரிதலோடு இருந்தார் என்பதை உணர்வது நமக்குத் தேவைப்படுகிறது. தன்னுடைய புரிதலை எப்படிச் சிறப்பாக இந்தியாவில் அவர் நடைமுறைப்படுத்தினார் என்று உணர்வது இந்தியா மற்றும் இந்தியர்களின் கடமை. ஐரோப்பாவில் மதம் எப்படிப் பெருங்கேடுகளை விளைவித்தது என்கிற பாடத்தை, வரலாற்றை வாசித்து நேரு புரிந்துகொண்டார். அது, இந்தியாவுக்கும் எப்படிப் பொருந்திப்போகிறது என உணர்ந்துகொண்டார். மதத்தை அரசியலில் இருந்து பிரித்துவைக்கும் மகத்தான சாதனையை அவர் இந்தியாவில் நிகழ்த்தினார். அது, இன்றும் தொடர்கிறது. மதத்தை அரசியலைவிட்டுத் தள்ளிவைப்பது இன்றைக்கும், என்றைக்கும் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. எப்படி அறத்தோடு காலத்துக்கும் இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாகக் காந்தி திகழலாம். அவரின் மகத்தான திறமைகள் அனைத்தும் வழிமுறைகள் சார்ந்தது. எப்படி நவீன அரசின் இருப்பையும், இந்தியாவில் பெரிய வனம்போலப் பரவிக்கிடக்கும் மத நம்பிக்கைகளையும் இணைத்துக்கொண்டு பயணிப்பது என்கிற மைய கேள்விக்குக் காந்தியிடம் பதில் இல்லை. காந்தியின் அறநெறி மனித சக்திக்கு அப்பாற்பட்ட அவரின் மனோதிடத்தைச் சார்ந்தது. அந்த மனோதிடத்தைச் சாதிக்கக் காந்தியே களத்தில் இருக்க வேண்டியிருந்தது; தன்னுடைய செயல்பாடுகள் குறித்துக் காந்தியே விளக்க வேண்டியதும் இருந்தது. காந்தியைப் போலத் தன்னுடைய வாழ்க்கையை ஒரு மகத்தான அறச்சாதனையாக நேரு வாழவில்லை. நேரு பகுத்தறிவோடு யோசிக்கிற ஒரு பாரம்பர்யத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரின் அறிவார்ந்த புரிதல்கள், அரசியல் தெளிவு ஆகியவற்றுக்கு இன்றும் தேவை இருக்கிறது. அவற்றை மீட்டெடுப்பதன் மூலமே இந்தியா என்கிற கனவைக் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில், அரசியல் தொழிலாகிவிட்டது; தங்களுடைய சொந்தலாபங்களுக்காக அரசியலைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். சுனில் கில்னானிஇதனால் அரசியல் தொடர்ந்து தன்னுடைய தரத்தை இழந்துகொண்டேயிருக்கிறது. அரசியலை உடனடித் தேவைகளுக்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது, அரசியலை இன்னமும் மோசமாக்குகிறது; இந்திய அரசியல் அனுபவங்கள், அரசியல் தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொள்ளத் தயங்குவது இல்லை என்பதை உணர்த்துகிறது. நவீன அரசியல், தொழிலாக மாறிய பின்பு… அது தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முயலப்போவது இல்லை. அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் சில லட்சியங்கள், இலக்குகளுக்காகத் தொடர்ந்து அயராது உழைப்பதாகப் பாவனை செய்கிறார்கள். அவற்றுக்கு உண்மையாக இருக்கிறோமா என்று அவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யாதவரை அரசியலின் வீழ்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இந்தியா மென்பொருள் துறையில் அசத்துகிறது. இந்தியாவின் அறிவுஜீவிகள் கலைத்துறை, இயற்கை அறிவியல் ஆகியவற்றில் சாதிக்கிறார்கள். இலக்கியம், வர்த்தகம் ஆகியவற்றிலும் பெருஞ்சாதனைகள் புரிகிறோம். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் தரந்தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தேர்தலில் எப்படி வெல்வது எனத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அறம் சார்ந்து தங்களுடைய அறிவை பயன்படுத்துவது இல்லை. அரசியல்வாதிகள் தங்களுக்கு ஓட்டுப் போடுகிறவர்களைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயத்திலும், அவர்களின் மோசமான கோரிக்கைகளை ஏற்கவேண்டிய நெருக்கடியிலும் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், ஏராளமான இந்தியக் குடிமக்கள் பகுத்தறிவோடு யோசிக்கிறார்கள். நாம் அடைய வேண்டிய இலக்கு மட்டுமல்ல, அதற்கான பாதையும் முக்கியம் என்று கருதுகிற அறிவுமிகுந்த இந்தியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள், இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது என நம்மை நம்பவைக்க முயல்கிறார்கள். அது உண்மையில்லை. இப்படி அரசியல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். நம்முடைய வரலாறு, அரசியல் வாழ்க்கையை எப்படி அறத்தோடும், பகுத்தறிவோடும், முழுமையான நம்பிக்கையோடும் வாழ முடியும் என உணர்த்துகிறது.

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

நேருவின் நம்பிக்கை பகுதி-4


நேருபகுத்தறிவை பயன்படுத்திக் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்து முடிப்பது எளிமையான காரியம். அதே சமயம், ஒருவரின் அற நம்பிக்கைகளைப் பகுத்தறிவை கொண்டு எடை போடுவது சவாலான ஒன்று. எப்படிப்பட்ட அறக்கொள்கைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு விடாமுயற்சி தேவைப்படும். இதை நேருவின் வாழ்க்கை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. காந்தி அகிம்சையைத் தன் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்ததை எடுத்துக் கொள்வோம். அகிம்சை தான் உலகத்தின் உன்னதமான கொள்கையா? நவீன காலத்தில் அரசாங்கங்களின் வன்முறையின் வடிவமாகத் திகழும் சிறைச்சாலைக்குள் நேரு அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபடி ‘இந்தச் சிறைச்சாலையில் தான் ஒரு அரசாங்கத்தின் அடிப்படை குணம் என்ன என்று எனக்குத் தெளிவாகப் புரிகிறது. அது வன்முறை, கட்டாயப்படுத்துதல், ஆள்பவர்களின் வன்முறை ஆகியவையே ஆகும்.’ என்று எழுதினார் நேரு. இப்படிப்பட்ட மன உளைச்சல் தரும் வேளையில் காந்தியின் அகிம்சையை நேரு ஆய்வு செய்தார்.

காந்தியை போல அகிம்சையில் நேரு அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அகிம்சையில் காந்தி அளவுக்குப் பற்றில்லாத தன்னைப் போன்றவர்களை அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றார் நேரு. “நான் தொடர்ந்து சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுகிறேன்… எப்போதும் பயன்படும் ஒரு தத்துவம் இருக்கக்கூடாதா? அந்தத் தத்துவம் தனிமனிதனின் அறத்தை காக்க வேண்டும். அதே சமயம் சமூகத்திற்கும் பயன்படுகிற ஒன்றாகவும் அது இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.”(சுயசரிதை, பக்கம் 538). அகிம்சை அரசியலில் வேலைக்கு ஆகுமா? ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை தொடர்ந்து வன்முறை, வன்முறையின் கருவிகளோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது. “வன்முறையே நவீன அரசுகள், சமூக அமைப்புகளை இயங்க வைக்கும் ரத்தமாக இருக்கிறது…அரசுகள் கருணையின் சாயலின்றி அடிப்படையில் வன்முறையையே நம்பியே இருக்கின்றன.”, அரசுகள் நேரடியாக வன்முறையைப் பயன்படுத்துகின்றன. அது மட்டுமில்லாமல் மறைமுகமாக, நாசூக்காக, ‘வன்முறையைக் கல்வி, பத்திரிகை ஆகியவற்றின் மூலம் மறைமுகமாக, நேரடியாகப் பரப்புரை செய்கின்றன. மதத்தைக் கொண்டும், வறுமை, பஞ்சம் ஆகியவற்றைக் காரணம் காட்டியும் வன்முறையை அரசுகள் நியாயப்படுத்துகின்றன’ என்று நேரு எழுதினார். (சுயசரிதை, பக்கம் 541). ஜெர்மானிய அமெரிக்க ஆன்மீகவாதியான ரெயின்ஹோல்ட் நீபுரின் கருத்துக்களின் தாக்கம் தெரிகிற ஒரு பத்தியில் நேரு இப்படி எழுதினார். “பகுத்தறிவின் வளர்ச்சியோ, மதப்பார்வையின் எழுச்சியோ, அற உணர்வின் பெருக்கமோ எதுவுமே வன்முறையை நாடுகிற மனப்பான்மையைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை.” என்று புலம்பினார் (சுயசரிதை பக்கம்: 542).
நேரு காந்தி

அரசே வன்முறையைப் பயன்படுத்தும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது? அரசை எதிர்க்கும் நேருவைப் போன்றவர்கள் வன்முறையை எப்படிக் கையாள்வது? நாளை இந்தியர்கள் ஆட்சிக்கு வந்தால் நாம் எப்படி அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று கவலைப்படுவதா? இல்லை கண்மூடித்தனமான நம்பிக்கையோடு வன்முறை பாதையில் எப்போதும் பயணிக்கக் கூடாது என்று உறுதியோடு காந்தியின் வழியில் பயணிப்பதா? நேருவுக்கு இப்படிப் பல்வேறு கேள்விகள் குடைந்து எடுத்தன. எப்படி அதிகாரத்தை அறத்தோடு பயன்படுத்துவது என்கிற கேள்வியோடு நேரு மல்லுகட்டி கொண்டிருந்தார். (இந்தக் கவலை நேருவுக்கு அவர் வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருந்தது.)

‘நேரு உங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் எது?’ என்று ஆண்ட்ரே மால்ராக்ஸ் கேட்டார். ‘ஒரு நியாயமான சமூகத்தை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்றார் நேரு. (இதைவிட நேரு துல்லியமாக, ‘ஒரு நியாயமான அரசை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்று சொல்லியிருக்கலாம்.) ஒரு தனிமனிதனுக்கு எது அறமாக இருக்கிறதோ, அதை அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கான கொள்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா? அது ஒரு பெருங்கூட்டத்தை வழிநடத்த முடியுமா? காந்தி முடியும் என்று நம்பினார். நீபுர் அது சாத்தியமில்லை என்று எண்ணினார். நேரு நீபுர் சொன்னதே சரி என்று பெருமளவில் ஒத்துப்போனார். தனிமனிதனின் அறத்துக்கும், ஒரு பெருங்கூட்டத்தின் அறத்துக்கும் இடைவெளிகள் உண்டு என்று நீபுர் போல நேருவும் கருதினார். ஆகவே, தனிமனித அறம் அப்படியே முழுக்க முழுக்கப் பெருங்கூட்டத்துக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது.

இதுவரை நீபுர் சொன்னதோடு ஒத்துப்போன நேரு, இதற்குப் பிறகு காந்தியின் பக்கம் சாய்கிறார். ‘ஒரு இலக்கை எப்படி அடைகிறோம் என்பதும் முக்கியம். எது நடைமுறைக்கு உகந்தது என்று பார்ப்பதோடு நில்லாமல், எது அறம் என்றும் பார்க்கவேண்டும். மோசமான, அறமற்ற வழிமுறைகள் இறுதியிலும் பெரும்பாலும் தோல்வியைத் தருகின்றன. இல்லையென்றால், அவை புதிதாகப் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றன. ஒரு மனிதன் எப்படிப்பட்ட பாதையில் பயணிக்கிறான் என்பதைக் கொண்டே அவனை உண்மையாக எடை போடவேண்டும். அதைவிட்டுவிட்டு அவன் தன்னுடைய இலக்கை அடைந்ததைக் கொண்டு மட்டும் அவனைச் சீர்தூக்கி பார்க்கக் கூடாது… பயணிக்கிற பாதையும், அடைய வேண்டிய இலக்கும் பிரித்துப் பார்க்க கூடாதவை. இரண்டுமே முக்கியம்.’ (சுயசரிதை பக்கம்: 549). காந்தி தன்னுடைய அறநெறிக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த அகிம்சையைக் கூட நேரு அப்படியே ஏற்கவில்லை. அதைப் பகுத்தறிவோடு அணுக வேண்டும் என்று நேரு கருதினார். அகிம்சையைக் கேள்வி கேட்க கூடாத கொள்கையாகவோ, மத நம்பிக்கையாகவோ நேரு பார்க்க மறுத்தார். அதைத் தொடர்ந்து அறிவுப்பூர்வமாக மீளாய்வு செய்து, அதை வெவ்வேறு எடுத்துக்காட்டுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்.

தன்னைத் தொடர்ந்து சுய விமர்சனம் செய்து கொண்டிருந்த நேருவின் விழிப்புணர்வைப் புரிந்து கொள்வது முக்கியமானது. நேரு எப்படித் தனக்கான அறப்பொறுப்புகளை முடிவு செய்யப் போராடிக்கொண்டே இருந்தார் என இதுவே உணர்த்தும். எப்படி எதிரிகளைக் கையாள்வது என்கிற கவலைதருகிற கேள்வி நேருவுக்கு எழுந்தது. அது குறித்துக் காந்தியும், நேருவும் முப்பதுகளில் உரையாடிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் தான் காந்தி தீண்டாமைக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தார். காந்திக்குப் பழமைவாதிகளான சனாதனிகள் பலர் எதிரிகளாக மாறினார்கள். காந்தியை தொடர்ந்து வசைபாடும் விஷமம் மிகுந்த பரப்புரைகளை மேற்கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் நேரு 1933-ல் காந்திக்குக் கடிதம் எழுதினார். தன்னுடைய எதிரியின் முரண்பாடான கருத்துக்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லாமல் இருப்பதை நேரு சுட்டிக்காட்டினார். அந்தக் கடிதத்தில் இன்னொரு சுவையான உண்மையை நேரு வெளிப்படுத்தினார். நேருவும் சமயங்களில் எதிர்த்தரப்பின் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவராக இருந்தார் என்பதே அந்த உண்மை. “ஒருவர் கடுமையாக அழுத்தம் கொடுக்கும் பொழுது எல்லாச் சகிப்புணர்வும் காணாமல் போய்விடுகிறது. சனாதனிகள் உங்களைக் கடுமையாக வெறுப்பதற்கு என்ன காரணம்? நீங்கள் அவர்களுக்குக் கடும் அழுத்தத்தைத் தருவதன் அடையாளமே அது.” என்று நேரு எழுதினார்.

மேலும், “நான், சாப்ரூ ஆகியோர் எங்களுடைய மதச் சகிப்புத்தன்மை எப்படி உயர்ந்தது என்று பெருமையாகப் பேசிக்கொண்டே பீடுநடை போடுவோம். ஆனால், எங்களுக்கு என்று பெரிதாக மத நம்பிக்கை என்று எதுவுமில்லை… எங்கள் மனதுக்கு நெருக்கமான ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் பேசுங்கள். அப்போது எங்களுடைய சுயரூபம் தெரியும். நாங்கள் சகிப்புத்தன்மை துளிகூட இல்லாதவர்கள் என்று புரிந்துவிடும். சில விஷயங்களில் உங்களை விடப் பொறுமை இல்லாதவர் யார் இருக்கிறார்? உண்மையில் சகிப்புத்தன்மை என்பதே அரிதிலும் அரிதாகத்தான் தென்படுகிறது. சகிப்புத்தன்மை என்கிற பெயரில் அலட்சியமே நிலவுகிறது. நாம் எதை மதிக்கவில்லையோ, அவற்றைக் கொண்டு நாம் மற்றவர்களைச் சகித்துக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறோம்.” என்று நேரு எழுதினார். இந்த மேற்கோளின் மூலம் நேரு தன்னுடைய அற லட்சியங்களைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டே இருந்தார் என்பது தெளிவாகிறது. எப்போதெல்லாம் தான் தடுமாறுவதாக நேரு உணர்ந்தாரோ அப்போதெல்லாம் அதனை நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

Image result for nehru the man who saw future

அறக்கொள்கைகள் உலகத்தில் இருந்தே தோன்ற வேண்டும். அவை உலகத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். நடைமுறைத் தேவைகளை உணர்ந்த பகுத்தறிவாகவும் அறப்பகுத்தறிவு இருக்க வேண்டும். அறப்பகுத்தறிவு வெறுமனே புரியாத கொள்கைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல. அனுபவங்கள், வரலாறு ஆகியவற்றைத் தொடர்ந்து மனதுக்குள் அசை போட்டு, எடை போடுகிற தெளிவான முயற்சி அது. “இன்றைய தேவைகள் தங்களுக்கு ஏற்றவாறு புதிய அறங்களை உருவாக்க நம்மைக் கட்டாயப்படுத்தும். நாம் இந்த ஆன்மாவின் நெருக்கடிகளில் இருந்து வெளிவர விரும்பினால், உண்மையான ஆன்மீக இலட்சியங்கள் எது என்று உணர விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? நம் கண் முன்னால் நிற்கும் பிரச்சினைகளைத் திறந்த மனதோடும், தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும். மதத்தின் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய்விடக் கூடாது.” என்று நேரு தன்னுடைய சுயசரிதையில் எழுதினார். (பக்கம் 550). இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டும் என்றால் நேருவின் வாழ்க்கையை ஒரு அறிவு சார்ந்த செயல்திட்டம் எனலாம். அந்த வாழ்வில் அவர் பகுத்தறிவின் கருவிகளை, அறப்பகுத்தறிவோடு இணைக்கவும், அவற்றுக்குள் சமரசத்தை ஏற்படுத்தவும் முயன்றார்.

நேரு தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு முற்றிலும் நேர்மாறாகக் கொள்கை முடிவுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றில் செயல்பட்ட தருணங்கள் உண்டு. ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பு உரையாடுவது, பகுத்தறிவால் அச்செயலின் பல்வேறு கோணங்களை ஆய்வு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டார். அதற்குப் பின்பே அவர் செயல்பட்டார். இதற்கு அனைவரும் நன்கறிந்த, நமக்குப் பாடமாகத் திகழும் மொழிவாரி மாநில உருவாக்கமே எடுத்துக்காட்டு. ஐம்பதுகளில் இருந்தே மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்றும், இந்திய குடியரசின் பல்வேறு மாநிலங்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் எண்ணற்ற கோரிக்கைகள் எழுந்தன. நேரு தன்னுடைய ஆரம்பக் கால அரசியல் வாழ்க்கையில் மொழிவாரி மாநிலங்களை ஆதரித்தவர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவை மொழிவாரியாகப் பிரித்தால் இந்தியாவின் மாநிலங்களுக்குள் மோதல்கள் ஏற்பட்டு, நாடு பிளவுபடும் என அஞ்சினார். ஆரம்பகட்ட அரசியலமைப்பு சட்ட உருவாக்க விவாதங்களில் அழுத்தமாக நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நேரு பதிவு செய்தார். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் போராட்டங்கள் (சமயங்களில் வன்முறை போராட்டங்கள்) வாதங்கள் ஆகியவை நேருவின் பார்வையை மாற்றின. நேரு இந்த விஷயத்தில் தொடர்ந்து காலதாமதப்படுத்துபவராக, மழுப்புவராக இருந்தார் என்று சாடப்படுகிறார். பொதுமக்களின் உணர்ச்சி மிகுந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிமடுக்காமலும், இழுத்தடிக்கவும் செய்தார் நேரு. இதனால் போராடுபவர்களைத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வைத்ததோடு, படிப்படியாகக் கோரிக்கைகளை மறு ஆய்வு செய்யவும் வழிகோலினார். இப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் அவர் இந்திய குடியரசை வலிமைப்படுத்தியதோடு, அதன் ஆயுளை நீட்டிக்கவும் செய்தார்.

தாகூர், காந்தியை போல அல்லாமல் நேரு நாட்டை ஆளும் பொறுப்பைச் சுமந்தார். ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பு அதிகாரத்தை ஓரிடத்தில் அமைப்புரீதியாகக் குவித்து வைக்கிறது. நவீனகாலங்களில் பகுத்தறிவை உன்னதமான செயல்களுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை தருகிற மிகமுக்கியமான பொறுப்பு அது. இப்படிப்பட்ட அதிகாரத்தோடு எண்ணற்ற தேர்வுகள், பொறுப்புகளும் நேருவை வந்து சேர்ந்தன. இது எப்போதும் ஒரு எதிரியை கூடவே வைத்திருப்பதைப் போன்றது. அர்னால்ட் டோய்ன்பீ குறிப்பிடுவதைப் போல, “தன்னுடைய லட்சியங்களுக்காகப் பிறரை சிறையில் அடைப்பதை விடத் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தானே சிறைச்சாலையை முத்தமிடுவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. நேரு இரு வகையான அனுபவங்களுக்கும் சொந்தக்காரர்.” அதிகாரம் கட்டற்ற கண்மூடித்தனத்தோடு இயங்குகிறது என வலியோடு நேரு உணர்ந்தார். அதிகாரத்தை நியாயமான காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற தாகம் குறையாமல் நேரு இயங்கினார். அந்த உயரிய லட்சியத்திற்காக சமூகத்தின் அறநெறிக்கான தேடலைப் பகுத்தறிவை கொண்டு மேற்கொண்டார்.

இந்த அறநெறிக்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கு மற்றவர்கள் மதநூல்களை நாடியிருப்பார்கள். நேரு அப்படிச் செய்யவில்லை. பலதரப்பட்ட, தீவிரமான மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் நவீன அரசு எப்படிப்பட்ட பண்புகளோடு இருக்கும் என்கிற நேருவின் புரிதலே இதற்குக் காரணம். அவருக்கு இருந்த அசரவைக்கும் வரலாற்று அறிவோடு, அவரின் சொந்த அனுபவங்களும் கைகொடுத்தது. ஒரு அரசாங்கம் எப்படி இயங்கும் என்பதை வெகு அருகில் இருந்து பார்த்தவர் நேரு. ஒரு சிறைக்கைதியாக எப்படி மூடநம்பிக்கை அலைக்கழிக்கும் என்றும் நேருவுக்குத் தெரியும். அரசியல் அதிகாரம் எப்படித் தான் விரும்பியபடியெல்லாம் இயங்கும் என்றும் நேருவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆட்சியாளன் எப்படிப்பட்ட அதிகாரத்தைத் தன்னுடைய குடிகள் மீது செலுத்த முடியும் என்பதை நேரு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்ததால் நன்கு அறிந்திருந்தார்.

இந்தியா மேலும் மேலும் ஜனநாயகமயமாகி வருகிறது. அரசியல் செயல்பாடுகள் பலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றன. ஆகவே, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசு ஆகியவை மத நம்பிக்கையை இன்னமும் நெருக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற வாதங்கள் பல தளங்களில், வெவ்வேறு வடிவங்களில் கேட்கின்றன. ஐரோப்பியாவில் வரலாற்று அனுபவங்களில் இருந்து இரண்டு அடிப்படையான அரசியல் பாடங்களை நாம் படிக்க வேண்டியிருக்கிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அரசின் பண்பை வரையறுக்க முயல்வதில் ஒரு பேராபத்து இருக்கிறது. அரசுக்கு ஒரு மத அடையாளத்தை அது தந்துவிடுகிறது. இரண்டாவதாக, சில அவசர காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் பொது மக்கள் தங்களுடைய அதிகாரங்களைச் சில அரசியல்வாதிகளின் கையில் ஒப்படைக்க முடியாது. அதைப் போலவே மதத்தை நம்பியும் குடிமக்கள் தங்களுடைய அதிகாரங்களை ஒப்படைப்பது ஆபத்தான ஒன்று. தொடர்ந்து வெவ்வேறு ஜனநாயக அமைப்புகளின் மூலம் அரசியல் அதிகாரம் என்பது பொறுப்பு மிக்கதாக, நியாயமான முறையில் செயல்படுவதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அரசுகளை மத நம்பிக்கை கொண்டதாக மாற்றுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. இந்த இரண்டு பாடங்களுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கிறது. ஜனநாயகம், மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாத அரசு ஆகியவை உலகம் முழுக்கப் பெரும்புயலில் சிக்கிக் கொண்ட படகுகள் போல அல்லாடுகின்றன.

ஐரோப்பாவின் அரசியல் அனுபவத்தில் இருந்து பாடம் படித்த மிகச் சில இந்திய அறிவுஜீவிகளில் நேரு ஒருவர். அவர் இந்த இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டார்: ஒரு நவீன அரசுக்கு அரசியல் ஏற்பை தருகிற ஒரே அளவுகோல் ஜனநாயகம் மட்டுமே. ஒரு நவீன அரசை மதத்தோடு தொடர்புபடுத்தினால் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். நேரு ஐரோப்பிய, இந்திய வரலாறுகளை வாசித்து உணர்ந்தவர் என்பதால் அவரால் ஒரு ஒற்றுமையைக் காண முடிந்தது. இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய அரசுகள் எப்படி அதிகாரத்தையும், மதத்தையும் கையாண்டன என அவர் ஆராய்ந்து பார்த்தார். இந்த அரசுகள் எல்லாம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை முடிந்தவரை அரசியல் அதிகாரத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்தன. சமயங்களில் மதம் அரசியலில் தலையிட்டாலும், அதை அரசுகள் மட்டுப்படுத்தவே முயன்றன என நேரு உணர்ந்து கொண்டார்.

Related image

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

நேருவின் நம்பிக்கை-பகுதி 3


நேரு

நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி 

Image result for sunil khilnani profile

பகுத்தறிவுக்கு பல்வேறு பக்கங்கள் உண்டு என்பதை நேரு உணர்ந்து இருந்தார். மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பகுத்தறிவு சூழ்ந்து இருக்கிறது என்றும் அவர் அறிந்திருந்தார். எனினும், தன் வாழ்நாள் முழுக்க பகுத்தறிவையே நேரு சார்ந்திருந்தார். பகுத்தறிவின் போதாமைகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டார். பகுத்தறிவைக் கொண்டு இயங்கும் அறிவியல், அரசியல், சமூக செயல்பாடுகள் எப்படி அறத்தோடு இயங்குவது என்கிற புரிதல் இல்லாமல் செயல்படும்போது அவற்றின் அடித்தளம் அசைகின்றன.

அறிவியல் தேடலின் எல்லைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனினும், நிஜத்தில் அறிவியலுக்கு எல்லைகள் இருந்தன. அறிவியலுக்கு “எது இறுதி நோக்கம் என்பது குறித்த புரிதல் இல்லை. அதற்கு எது வாழ்க்கையின் அவசரமான நோக்கம் என்கிற புரிதல்கூட இல்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று அறிவியல் நமக்கு சொல்லித்தரவே இல்லை. அறிவியலை முன்னேற அனுமதித்தால் அதன் அசுரப்பாய்ச்சலுக்கு முடிவே இல்லை. ஆனால், அறிவியல் கூர்மையான ஆய்வுப்பார்வை எல்லா சமயங்களிலும் உதவாது. அந்த ஆய்வுப்பார்வை பலதரப்பட்ட மானுட அனுபவங்கள் அனைத்துக்கும் பொருந்தாது. அறிவியலால் நம்மைச் சூழ்ந்திருக்கும் அளக்க முடியாத பெருங்கடல்களை கடந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு பகுத்தறிவு என நாம் அழைக்கும் அறிவால் பயணிக்க முடியாது” என்று நேரு எழுதினார். (கண்டடைந்த இந்தியா, பக்கம் 452). அறிவியல் “நீதிநெறி சார்ந்த ஒழுங்கு, அறம் சார்ந்த பார்வையை கொண்டிருக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கும் என்றால் அதிகார குவிப்பு நிகழும். மேலும், பிறரை அடக்கி ஆள வெறி கொண்டிருக்கும் மோசமான, சுயநலமிக்க மனிதர்களின் கையில் அறிவியல் மிக ஆபத்தான அழிவுக் கருவியாக மாறும். இதனால், அதன் மகத்தான சாதனைகள் மண்ணோடு, மண்ணாக போகும்” என்று நேரு சரியான பார்வையைக் கொண்டிருந்தார்.(கண்டடைந்த இந்தியா பக்கம்:16).

நேருஅரசியல் பகுத்தறிவுக்கும், அதிகாரக் கனவுகளை அடைவதற்கான தேடலுக்கும் இடையே மூழ்கிப்போகும் வாழ்க்கை, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தது. அதிகாரக் கனவுகளை நோக்கிய இந்தப் பயணம் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடியது. இந்தத் தேடலில் அது ஊழல்மயமாகும் ஆபத்துகள் அதிகம். 1937-ல் ‘சாணக்கியா’ என்கிற புனைபெயரில் ‘மாடர்ன் ரீவியூ’ இதழில் ஒரு கட்டுரையை நேரு எழுதினார். மக்களின் தலைவராக கோலோச்சிக் கொண்டிருந்த நேரு, தன்னுடைய அரசியல் கனவுகளை, தானே கடுமையாக விமர்சித்துக் கொண்ட கட்டுரை அது. அக்கட்டுரையை வேறு யாரும் தன்னை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவும், தனக்கு மேலும் புகழ் தேடிக் கொள்வதற்காகவும், நேரு எழுதிக்கொண்ட கட்டுரை எனக் கருத இடமுண்டு. எனினும், அரசியல் வாழ்க்கையில் ஓயாமல் இயங்கிக்கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி, தன்னைத்தானே சீர்தூக்கிப் பார்த்து விமர்சித்துக் கொள்ளும் அரிய தருணம் அது.

‘சாணக்கியா’ மக்கள் திரளின் பேராதரவை அள்ள முடிகிற நேருவின் திறன், அவரின் அரசியல் சாதுர்யம் குறித்து எழுதினார். அதற்குப் பிறகு, நேருவுக்கு ஒரு தெளிவான இலக்கு, உற்சாகம், பெருமிதம், நிர்வாகத்திறன், கடுமை எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பேரன்பு ஆகியவை வாய்த்திருக்கின்றன. மேலும், அவருக்கு மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பண்பு இல்லை. பலவீனமானவர்களை, செயல்திறன் குறைந்தவர்களைக் கேவலமாகப் பார்க்கும் குணமும் நேருவுக்கு உள்ளது. இவை அவரை சர்வாதிகாரியாகக் காலப்போக்கில் மாற்றிவிடக்கூடும். எப்படியேனும் காரியத்தை முடித்து விடவேண்டும் என்று வேட்கைகொண்டு அலைகிறார் நேரு. தனக்கு பிடிக்காதவற்றைத் துடைத்து, அழித்துவிட்டுப் புதியவற்றைக் கட்டியெழுப்பும் வேட்கை மிகுந்திருக்கும் நபராக நேரு திகழ்கிறார். அவரால் அன்னநடை போட்டபடி நகரும் ஜனநாயகத்தின்   நடைமுறைகளை நீண்ட காலத்துக்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை…நேரு தன்னை சீஸரைப் போன்று  சர்வவல்லமை மிக்க சர்வாதிகாரியாகக் கனவு காண்கிறார் என்று சந்தேகிக்கலாம்.

நேரு தனக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருப்பதையும், அதிகாரத்தின் கருவிகளை, அரசியல் பகுத்தறிவைக் கையாளும் திறன் தனக்கு இருப்பதையும் உணர்ந்திருந்தார். மேலே குறிப்பிட்ட கட்டுரையிலும், பிரதமரான பின்னும் அதிகார வேட்கையின் ஆபத்துகள் பற்றி, தான் கொண்டிருக்கும் அச்சத்தையும், அரசியல் செயல்படும் விதங்களைக் குறித்து, தான் கொண்டிருக்கும் வெறுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அது ‘நான் அற உணர்வு மிக்கவன்’ என்று காட்டிக்கொள்ளும் ஒரு நாடகம் அல்ல; அவை அரசியலை வாழ்க்கையாகக் கொண்டதால் நேருவுக்கு ஏற்பட்ட அறம்சார்ந்த பதற்றத்தின் வெளிப்பாடு. அரசியலில் தனிப்பட்ட நபராக, கட்சியில், மாநில அளவில் தான் பெறுகிற வெற்றிகள் தலைக்கேறும் ஆபத்தை நேரு உணர்ந்திருந்தார். கண்டடைந்த இந்தியா நூலில் நேரு, “இன்றைக்குப் பொருளாதார, அரசியல் உலகில் அதிகாரத்திற்காக அலைகிறார்கள். அதிகாரம் கிட்டியதும் அறம் என்பது அரிதாகி விடுகிறது… அதிகாரத்திற்கு என்று போதாமைகள் உண்டு. அதிகாரம் தன்னைத் தானே பின்னோக்கி இழுத்துக் கொள்கிறது”, என்று எழுதினார் (பக்கம் 495). ஒரு அரசியல்வாதியின் உண்மையான வெற்றி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமில்லை; அதை எப்படி அறவழியில் செலுத்துவது என்பதில்தான் அது அடங்கி இருக்கிறது. அதை சாதிக்காவிட்டால் அரசியல் வெற்றி அறத்தின் தோல்வியாகி விடும்.

நேருநேருவுக்குப் பகுத்தறிவின் போதாமைகள் புரிந்திருந்தாலும், அவர் அதைக் கைவிடவில்லை. அதற்குப் பதிலாக, நேரு பகுத்தறிவின் எல்லைகளை விரிவுபடுத்தினார். அறம் சார்ந்த பிரச்னைகளை அவர் பகுத்தறிவைக் கொண்டு அணுகினார். பகுத்தறிவைப் பயன்படுத்தும் அணுகுமுறையை அவர், ‘அறிவின் செயல்பாடுகள்’ எழுத்துகளின் மூலம் நடைமுறையில் அமல்படுத்தினார்.

அக வாழ்க்கையில் நேருவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, பாதுகாப்பு தேவைப்பட்டது. தன்னுடைய வாழ்க்கையின் பத்தாண்டுகளை சிறைச்சாலைகளில் செலவிட்ட ஒருவருக்கு மனதளவிலும், உளவியல் ரீதியாகவும் ஏதோ ஒரு நம்பிக்கை நிச்சயம் தேவைப்படும். 1930-களில்டேராடூன், அல்மோரா சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த நேரு, மனச்சிதைவுக்கு அடிக்கடி ஆளானார். அவருடைய மனைவி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரும் நோயுற்று இருந்தார். துயரம் மிகுந்த அந்தக் காலங்களில், நேருவின் மனைவி மதப்பற்று மிக்கவராக மாறினார். நேருவின் மகள் வேறெங்கோ படித்துக் கொண்டிருந்தார். அம்மாவோ பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த காலங்களில் நேருவுக்கு உற்ற பாதுகாவலனாக இருந்த அப்பா மோதிலால் நேரு, உயிரோடு இல்லை. உண்ணாவிரதம், சட்டத்தை ரத்து செய்தது என்று இயங்கிக்கொண்டு இருந்த காந்தியின் செயல்முறைகள் அவருக்குக் கடும் கோபத்தைக் கிளப்பின. காங்கிரஸ் தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் நேருவுக்கு இருந்தன. அவருடைய தனிமையும், எதுவும் செய்ய முடியாத வெம்மையும் முழுமையடைந்து விட்டதாக அவருக்குத் தோன்றியது. தன்னுடைய நாட்குறிப்பில் நேரு, “நான் முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தனிமையாக உணர்கிறேன். என் அப்பா, ஆசை ஆசையாகக் கட்டிய வீடு இடிந்துக் கொண்டிருக்கிறது… இதுவரை என்னைத் தாங்கிக் கொண்டிருந்த தோள்களை இழந்து கொண்டே இருக்கிறேன்” என எழுதினார்.

1930-களில் அகமதுநகர் கோட்டையில் வெகுகாலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிட்டபோதும் நேரு நம்பிக்கை இழந்தவராக உணர்ந்தார். ஐரோப்பாவில் குண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. விடுதலைப் போராட்டம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை புதைகுழியில் சிக்கிக்கொண்டதாகத் தோன்றியது. அவரின் குடும்ப வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டிருந்தது. நேருவால் ஆற்றாமையை மறைக்க முடியவில்லை. “இப்படித்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என உறுதியாக தெரியும் போது, சந்தேகம் குடிபுகுந்து விடுகிறது” என எழுதினார் (கண்டடைந்த இந்தியா பக்கம்:7). இப்படிப்பட்ட அகவாழ்க்கை, உளவியல் சிக்கல்கள் மிகுந்த காலங்களிலும் நேரு மத நம்பிக்கை கொண்டவராக மாறவில்லை. “நான் உனக்குத் தலைவணங்க மாட்டேன்” என்று மதத்தின் முன் அடிபணிய மறுத்து, நேரு நிமிர்ந்து நின்றார். வாழ்வின் துயரங்களை மறக்க எழுத்துப்பணியில் அவர்தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1930-களில் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில், சுயசரிதையை எழுதினார். 1940-களில் கண்டடைந்த இந்தியா நூலை எழுதி முடித்தார்.

நேருநேரு மனதளவில் திக்கற்று நிற்கையில், சந்தேகம் சூழ்கையில், குழப்பங்கள் திகைக்க வைக்கையில் தன்னுடைய குழப்பங்களைத் தெளிவாக வெளிப்படுத்தினார். அதன்மூலம் அவர் தெளிவடைந்தார். பல வருடங்கள் நேரு குழப்பங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளக் கடிதங்கள், கட்டுரைகள், நாட்குறிப்புகளைத் தொடர்ந்து எழுதினார். பிற்காலத்தில், அவருக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் போனபோது அவர் மேடைகளில் பேசுவது, முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதுவது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தினார். நேருவும், காந்தியும் பக்கம் பக்கமாகப் பேசினார்கள், எழுதினார்கள். இதற்கு என்ன காரணம் என்று தேடினால் தங்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து விளக்கவும், அந்தக் கருத்துக்களின் பின்னுள்ள தர்க்கத்தை மக்களுக்குப் புலப்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து முயன்றார்கள் என்று புரியும்.

நேருவின் எழுத்துகளும், பேச்சுகளும் அவர் தொடர்ந்து அகவாழ்விலும், பொதுவாழ்விலும் பகுத்தறிவோடு இயங்கியதற்கான சாட்சியங்கள். இந்தியாவின் பொதுவாழ்க்கையில், பகுத்தறிவை தாகூர், நேரு, காந்தி என்கிற மூன்று ஆளுமைகளும் கட்டமைத்தார்கள். இவர்கள் அனைவரும் மிகச்சிறந்த கடித எழுத்தாளர்கள் என்பது ஒன்றும் எதேச்சையானது இல்லை. இவர்கள் தொடர்ந்து உரையாடலிலும், விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். தாகூர், காந்தி ஆகியோரின் மரணத்துக்குப் பிறகு நேருவோடு உரையாடி அவரின் மையமான நம்பிக்கைகளுக்குச் சவால் விடக்கூடிய சிறந்த ஆளுமைகள், அறிவுஜீவிகள் இல்லாமல் போனது சோகமான ஒன்று.

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்தி பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.