கஸ்தூரிபா காந்தியின் கதை !


கஸ்தூரிபா காந்தி எனும் தியாகப்பெண்மணி மறைந்த தினம் இன்று ,காந்தியடிகளை விட சில மாதம்மூத்தவரான இவரை காந்தியடிகள் 13 வயதில் திருமணம் செய்து கொண்டார் . படிப்பறிவில்லாத இவருக்கு ஆங்கிலம் சொல்லித்தருகிற வேலையை காந்தியே செய்தார் . முதலில் அடக்குமுறையை நிகழ்த்துகிற ஒரு சராசரி இந்திய கணவனாக இருந்த காந்தி படிப்படியாக அடைந்த மாற்றத்துக்கு கஸ்தூரிபா காந்தி முக்கிய காரணம் .

பல சமயங்களில் தனக்கு ஒப்புமை இல்லையென்றால் வாதாடி தனக்கான உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் குணம் அவருக்கு இருந்தது. காந்தி பொது வாழ்வில் பெண்கள் ஈடுபட எது தடை என யோசித்து பார்த்த பொழுது அவர்களுக்கு பாதுகாப்பின்மை தான் முக்கிய காரணம் என உணர்ந்தார் . ஆகவே முன்னுதாரணமாக ,1906 இல் பிரம்மச்சரியத்தை தன் ,மண வாழ்வில் கஸ்தூரிபா காந்தி விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டார் .தென் ஆப்ரிக்காவில் ஆஸ்ரமம் அமைத்து காந்தி தங்கிருந்த பொழுது ,லாரன்ஸ் எனும் காந்தியின் முதன்மை செயலாளர் ஆன தமிழர் ஒரு நாள் சிறுநீர் கழிக்கும் சட்டியை சுத்தம் செய்ய மறந்து வெளியேறி விட்டார் .காந்தி இவரை அதை சுத்தம் செய்ய சொன்னார் ;இவரோ மறுத்தார் .

பின் இறுகிய முகத்தோடு அவ்வேலையை செய்ய போனபொழுது சிரித்த முகத்தோடு வேலையை செய்ய வேண்டும் என காந்தி சொல்ல ,இவர் ஒரு பரிதாபமான பார்வை பார்க்க .”இப்படி என்றால் வீட்டை விட்டு வெளியேறு என்றார் .தென் ஆப்ரிக்காவில் எங்கே நான் போவது என கேள்வி எழுப்பினார் இவர் .பின் அதை செய்தும் முடித்தார் . மகன்கள் மற்றும் காந்திக்கிடையே நடந்த பல போராட்டங்களில் சிக்கிக்கொண்டு அல்லடினார் இவர் .எனினும் பெரும்பாலும்
இவர் காந்தியடிகள் பக்கமே நின்றார் .

பல்வேறு போராட்டங்களில் கலந்து சிறை சென்றார் உடல்நிலை சரியில்லாமல் போன பொழுது உப்பையும்,பருப்பையும் துறக்க இவர் மறுத்த பொழுது காந்தியே துறந்து இவரையும் அவ்வாறே செய்ய வைத்தார் . இலங்கைக்கு போயிருந்த பொழுது நோயால் மங்கிப்போய் இருந்த இவரின் முகத்தை பார்த்து இவர் காந்தியின் அம்மா என ஒரு நபர் அறிவித்து விட காந்தி ,”ஆம் !அவர் என் அம்மாவை போன்றவர் தான் !”என்றார் .

வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் சிறை சென்ற பொழுது உடல்நலம் குன்றி நிமோனியாவால் பாதிக்கபட்ட அவருக்கு ஆங்கில மருத்துவ முறையின் மீது பெரிய நம்பிக்கை இல்லாத காந்தியடிகள் பெனிசிலின் போட அனுமதி மறுத்து விட்டார் . கஸ்தூரிபா காந்தியின் உயிர் இதே தினத்தில் அடங்கியது .