எஜமான டைனோசர், செல்லப் பிராணி மனிதன்!

The Good Dinosaur திரைப்படம் பார்த்தேன். எதோ கிளிஷேக்கள் நிரம்பிய தமிழ் சினிமாவைப் பார்ப்பது போலப் பல்வேறு இடங்களில் தோன்றியது. மனிதன் பல்வேறு மிருகங்களைத் தனக்குச் சேவகம் செய்யப் பழக்கப்படுத்துகையில் ஒருவேளை டைனோசர் ஒன்றின் காவலனாக ஒரு ஆதிமனிதன் மாறியிருந்தால் எப்படி இருக்கும் என்பதே அடிநாதம்.

பூமியின் மீது மோதி டைனோசர் இனத்தை அழித்த எரிகல் மோதாமல் போய் டைனோசர்கள் வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் உலகம் என்பதைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். நாயக டைனோசர் பிறக்கும் பொழுதே உடலில் குறைபாடோடு பிறக்கிறது. அதனுடைய தந்தை அதற்கு இயற்கையின் அற்புதத்தையும், ‘நீ எனக்கும் மேலானவன்!’ என்கிற நம்பிக்கையும் ஊட்டுகிறார்.

வெள்ளத்தில் தந்தையை இழந்து அதற்குக் காரணமான மனிதப் பிராணியைத் தேடிக்கொண்டு போகும் நல்ல டைனோசர் அதைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் அனுபவங்கள், சாகசங்கள், தன்னுடைய மூன்று நக மலையை அது மீண்டும் கண்டடைந்ததா? என்பதே கதை. வஞ்சம், சாகசம், அன்பு, பயம் எல்லாமும் கலந்த இந்தக் காட்சி விருந்தில் படத்தின் வேகம் மிகப்பெரிய குறை. பெரிய திருப்பங்களும் கதையில் இல்லை.

ஆனால். மனிதன் என்கிற பெரும்பசி கொண்ட நுகர்வு மிருகத்திடம் உலகம் சிக்காமல் இப்படியே இருந்திருந்தால் இந்த உலகம் இன்னமும் அழகானதாக, பல உயிரினங்கள் வாழ உகந்ததாக இருந்திருக்குமே என்கிற ஏக்கத்தைக் கடத்தியிருப்பதே இத்திரைப்படத்தின் வெற்றிதான்!

பசுமைத்தாய் வங்காரி மாத்தாய்

வங்காரி மாத்தாய் எனும் ஆப்ரிக்க மர அன்னை பிறந்தநாள் இன்று . அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .
Photo: வங்காரி மாத்தாய் எனும் ஆப்ரிக்க மர அன்னை பிறந்தநாள் இன்று . அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .

மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ளியது .மூன்றில் ஒரு பங்கு காடுகள் ஒரு காலத்தில் கென்யா முழுக்க போர்த்தி இருந்தன .நிலைமை இவர் வந்த பொழுது தலைகீழ் மூன்று சதவிகிதத்துக்கு போயிருந்தது . பெண்கள் தேசிய இயக்கத்தில் சேர்ந்த இவர் கிரீன் பெல்ட் இயக்கத்தை ஆரம்பித்தார் .

மரத்தை வெட்டினால் பணம் என அரசாங்கம் சொன்ன பொழுது மரத்தை நட்டால் பணம் என முழங்கினார் .மக்களின் வீடுகளுக்கு போய் பேசினார் ;பெண்களை தன் பின்னே அணிவகுக்க செய்தார் ; வனத்துறை உதவியது . ஒரு வீட்டில் கணவன் மனைவி என இரண்டு கன்றுகள் என ஆரமபித்த இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளில் நான்கு கோடியே முப்பது லட்சம் கன்றுகளை நாட்டு பெரும்பாலும் அவை பராமரிக்கப்பட்டு பசுமைக்கோலம் பூண்டது நாடு 

.அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு 2004 இல் வழங்கப்பட்டது .அவரின் செயல்களை இரண்டாவது விடுதலைப்போர் என வர்ணிக்கிற அளவுக்கு சாதித்த மரங்களோடு மந்தகாச மொழி பேசிய அவரின் பிறந்தநாள் இன்று