சுவைத்து துப்ப சுவிங்கம் கதை


Wrigley சுவிங்கம் உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கும் ;அதை தயாரிக்கும் நிறுவனம் துவங்கப்பட்டது இன்று தான் .ஒட்டகம் புகுந்த வீடு கூடார கதை தான் இந்த சுவிங்கம் வந்ததுக்கு பின் இருக்கிறது .சோப்பை தயாரித்து முதலில் விற்றுக்கொண்டு இருந்தார்கள் ;அதனுடன் இலவசமாக பேக்கிங் பவுடர் கொடுக்க ஆரம்பித்தார்கள் .பேக்கிங் பவுடருக்கு வரவேற்பு அதிகமாக இருக்க அதை விற்க ஆரம்பித்தார்கள் .அதற்கு கூட தரப்பட்ட இலவசம் தான் சுவிங்கம் அதற்கு ஆதரவு பெருக அதை விற்க ஆரம்பித்தார்கள் .

 

பார்கோடை பயன்படுத்திய 
உலகத்தின் முதல் பொருளாக இது மாறியது .அசாபர்டமே எனும் இனிப்பானுக்கு பதிலாக குறைந்த சைலிடோல்(கலோரி குறைவு,சர்க்கரையை அமிலமாக மாற்றி பல்லை சிதைக்கும் சிக்கலும் குறைவு )
பற்சிதைவை கட்டுப்படுத்தும் பொருளை சேர்த்து ஆர்பிட்டை விட்டு இன்னமும் மார்க்கெட்டை விரிவாக்கி கொண்டது இந்நிறுவனம்