நாடு போற்றும் கோகலே

மரியா மாண்டிசோரி : குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று
நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள்
ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர்.

அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர்.
இருந்தாலும் மருதுவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.

கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர் அவர்.
அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார்.

நோட்டு புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில்
பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக
வைத்துக்கொண்டார். மாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது,ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று
சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார்.

வண்ண அட்டைகள்,ஒலி எழுப்பும் கருவிகள்,ஓவியங்கள்,வண்ணத்தாள்கள்,புட்டிகள்
என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக இந்த வகுப்புகள் மாற்றின. அவரின் கல்விமுறையில் படித்து சாதித்தவர்கள் தான் கூகுள் மற்றும்
அமேசான் நிறுவனர்கள் ஆகியோர் இவரின் கல்விமுறையில் படித்தவர்களே. இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது

காந்தியின் குரு கோகலே !

February 19 · Edited 

கோபால கிருஷ்ண கோகலே எனும் விடுதலை போரட்ட வீரர் மறைந்த தினம் இன்று .வறுமையான சூழலில் பிறந்தார் இவர் ; அப்பாவை இளம் வயதிலேயே இவர் இழந்துவிட அண்ணன் வேலைபார்த்து இவரை படிக்க வைத்தார் . மின்சாரம் இல்லாத அக்காலத்தில் தெரு விளக்கில் ஒண்டி படித்தார் .ஒரே டிராயர், சட்டை, ஒருவேளை மட்டும் சாப்பாடு மட்டுமே வாழ்க்கைக்கு வாய்த்தது .அந்த ஒருவேளை சாப்பாட்டையும் இவரே தான் சமைக்க வேண்டும் இப்படி படித்தே பி ஏ பட்டம் பெற்றார் .

அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்த பொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணினார் .காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ;அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார் .வன்முறை இல்லாத போராட்ட முறைகள்,இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார். நேரடி போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டும் என்பது திலகரின் கோஷமாக இருந்தது . குழந்தைத்திருமணத்தை தடை செய்யும் ஆங்கிலேய அரசின் சட்டத்தை இவர் ஆதரித்தார் .இந்துக்களின் நம்பிக்கைகளில் தலையிடுகிறார்கள் என அச்சட்டத்தை திலகர் நிராகரித்தார் .

மோதல் வலுத்தது ;இனிமேல் இணைந்து செயல்பட முடியாது என காங்கிரஸ் இரண்டு பிரிவாக உடைந்தது.மிதவாதிகளின் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கினார் ; சமூகத்தின் சேவகர்கள் எனும் அமைப்பை தொடங்கினார் . அதில் சேர்ந்தவர்கள் தங்களின் சொத்துக்களை நாட்டுக்கு எழுதி வைத்து விடவேண்டும் .இந்த அமைப்பு கல்வியறிவை எளிய மக்களுக்கு போதித்தது நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது,பல பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கவும் செய்தார் கோகலே .

மகாத்மா காந்தியடிகள் தன்னுடைய குரு என இவரைத்தான் வாஞ்சையோடு குறிக்கிறார் ;முதல் உலகப்போரில் ஈடுபட்டு பட்டயம் எல்லாம் பெற்ற காந்தி கோகலேவை சந்தித்தது திருப்பம் . மக்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் எப்படி இருக்கிறார்கள் என உணர இந்த தேசம் முழுக்க பயணி என அவரின் அறிவுறுத்தலே காந்தியை மகாத்மா ஆக்கியது. இருபது வயதில் பொதுவாழ்வில் நுழைந்த கோகலே ஆஸ்துமா,நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு இருந்த போதிலும் விடாது நாட்டுக்காக உழைத்தார் .இங்கிலாந்து போயிருந்த பொழுது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று . 

காந்தியின் அரசியல் குருவான அவரை நாமக்கல் கவிஞரின் வரிகளோடு நினைவு கூர்வோம் 

பெருநிலக் கிழவியிந்த பேதையாம் இந்து தேசம்
பலபல துன்பமுற்றுப் பஞ்சையாய் வாடிநிற்க 
வெறுமனே யிருந்துநாங்கள் வீணரா யலைந்து கெட்டோம்
வேண்டினோம் தேசபக்தி விமலனார் எமக்குத் தந்த
பெருமானே கோகலே நீ பின்னையும் பிறந்து வந்து
பெற்றதாய் இந்துமாதின் பிணியெலாம் அறுத்து வைப்பாய்.