ராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கர் !

உலக அரசியலை செலுத்துவதில் ராஜதந்திரத்துக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்த வகையில் கடந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த ராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கர். ஜெர்மனியில் பிறந்த இவர் யூதர் என்பதால் பல சமயங்களில் ஜெர்மனியில் மட்டம் தட்டப்பட்டார். ஹிட்லரின் நாஜிப்படைகளின் யூத ஒழிப்பு கொள்கையால் குடும்பத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தார். வறுமையில் குடும்பம் வாடிக்கொண்டு இருந்த பொழுது ஷேவிங் ப்ரெஷ் நிறுவனத்தில் கூட வேலை பார்த்தார். அமெரிக்க குடிமகனாக ஆனபின்பு உலகப்போரில் ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் ஹார்வர்ட் பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவும்,சோவியத் ரஷ்யாவும் நீயா நானா என்று பனிப்போரில் முஷ்டி முறுக்கி கொண்டிருந்தார்கள். ஜான் டல்லாஸ் எனும் வெளியுறவுத்துறை செயலாளர் அணு ஆயுதங்களின் மூலமே சோவியத் ரஷ்யாவுக்கு பதிலடி தரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அதை கடுமையாக கிஸ்ஸிங்கர் எதிர்த்தார். ரஷ்யாவுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் முன்னேறுகிற அதே சமயம் அமைதி
வழிமுறைகளையும் கைக்கொள்ள வேண்டும் என்றார். நிக்சன் காலத்தில் அமெரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கையை முடிவு செய்யும் ஆளுமை ஆனார். ஆயுத குறைப்பு
பேச்சுவார்த்தையான சால்ட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் குறைப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகள் அவரின் வழிகாட்டுதலில் நடைபெற்றன.

வியட்நாம் போரில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்ட பொழுது படைகளை படிப்படியாக விலக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இன்னொரு புறம் கம்யூனுஸ் படைகளுக்கு அடைக்கலம் கொடுத்த கம்போடியா நாட்டின் மீது குண்டு வீசவும் வழிகாட்டினார். நாற்பாதாயிரம் மக்கள் இறந்து போனார்கள். சீனாவுடன் முட்டிக்கொண்டு இருந்த உறவை பாகிஸ்தான் உதவியோடு மீட்டார் இவர். சீனாவை அமெரிக்கா அங்கீகரித்தது. பாகிஸ்தான் அமெரிக்காவின் நெருங்கிய உறவானது. 1971 இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்தார் அவர். கப்பலை அனுப்பி இந்தியாவை மிரட்ட எல்லாம் செய்தார்கள். ஆனாலும்,வங்க தேசம் எழுந்தது.

எகிப்து மற்றும் சிரியா இஸ்ரேல் மீது போர் தொடுத்த பொழுது அமைதியை நிலைநாட்டுவதை இவர் சாதித்தார். ஏழு வருட பகைமையை மறந்து எகிப்துடன் கைகோர்ப்பதை உறுதி செய்தார். சோவியத் ரஷ்யாவை சீனாவை அங்கீகரித்தது,அதனோடு பல்வேறு தொடர்புகள் கொண்டது ஆகிவற்றின் மூலம் எதிர்கொண்டார். சிலி நாட்டில் அலண்டேவின் ஜனநாயக அரசு வீழ்த்தியதற்கு பின்னர் இவரின் ராஜதந்திரம் இருந்தது.

வியாட்நாமில் அமைதியை கொண்டு வருகிறேன் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ஓயாமல் அமெரிக்கா குண்டு போட்டது. பல்லாயிரம் வியட்நாமியர்கள் மற்றும்
அமெரிக்கா வீரர்கள் இறந்து போனார்கள். அமைதி வந்ததாக நிக்சன் மற்றும் இவர் நாடகம் ஆடினார்கள். நோபல் கமிட்டி கிஸ்ஸிங்கர் மற்றும் லே டேக் தோ எனும் வியட்நாமிய தலைவருக்கும் நோபல் அறிவித்தது. லே டேக் தோ அமைதி
திரும்பவில்லை என்று அதை ஏற்க மறுத்தார். இவர் மட்டுமே நோபல் பரிசை தன்னடக்கத்தோடு பெற்றுக்கொள்வதாக சொன்னார்.

கிஸ்ஸிங்கர் பல்வேறு ஆட்சி கவிழ்ப்புகள்,போர்கள்,மரணங்கள் ஆகியவற்றுக்குகாரணமான மூளை என்பது உண்மையே ! அதே சமயம் ஒரு ராஜதந்திரியின் வழிகாட்டுதல் எப்படி உலக அரசியலை புரட்டும் என்பதற்கு கச்சிதமான உதாரணம் அவர்

செஞ்சிலுவை அமைப்பை உருவாக்கியவரின் சிறந்த வாழ்க்கை !

ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் பிறந்த தினம் இன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர்
;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தார். பிரான்ஸ் அரசின் ஆளுகைக்குள் இருந்த அல்ஜீரியா நாட்டில் வியாபாரம் துவங்க முடிவு செய்தார்
அவர். வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக பிரெஞ்சு மன்னரை காணக்கிளம்பினார்.

இத்தாலியிலுள்ள சோல்பெரினோ என்ற இடத்தில், பிரான்ஸ் மற்றும் சார்டீனீயாவின் கூட்டுப் படைகளுக்கும், அப்பகுதியைக் கைப்பற்றியிருந்த ஆஸ்திரியப் படைகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. ஒரு நாளில் நடைபெற்ற
அப்போரில் சுமார் 15 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருபத்தைந்து ஆயிரம் வீரர்கள் காயமுற்றார்கள். வந்த நோக்கத்தை மறந்துவிட்டு போரில் காயமுற்ற வீரர்களுக்கு உதவ அவ்வூர் மக்களை இணைத்துக்கொண்டு பணியாற்றினார் ஹென்றி டூனன்ட்.

போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க
வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;த ன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் . நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர் இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள்.

அதை அவர் வரிகளிலேயே பாருங்கள்,” நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி
கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக [படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்.

முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட
கொடுத்துவிட்டார் ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை
காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்; அதுதானே வெற்றி ?

பசுமைத்தாய் வங்காரி மாத்தாய்

வங்காரி மாத்தாய் எனும் ஆப்ரிக்க மர அன்னை பிறந்தநாள் இன்று . அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .
Photo: வங்காரி மாத்தாய் எனும் ஆப்ரிக்க மர அன்னை பிறந்தநாள் இன்று . அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .

மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ளியது .மூன்றில் ஒரு பங்கு காடுகள் ஒரு காலத்தில் கென்யா முழுக்க போர்த்தி இருந்தன .நிலைமை இவர் வந்த பொழுது தலைகீழ் மூன்று சதவிகிதத்துக்கு போயிருந்தது . பெண்கள் தேசிய இயக்கத்தில் சேர்ந்த இவர் கிரீன் பெல்ட் இயக்கத்தை ஆரம்பித்தார் .

மரத்தை வெட்டினால் பணம் என அரசாங்கம் சொன்ன பொழுது மரத்தை நட்டால் பணம் என முழங்கினார் .மக்களின் வீடுகளுக்கு போய் பேசினார் ;பெண்களை தன் பின்னே அணிவகுக்க செய்தார் ; வனத்துறை உதவியது . ஒரு வீட்டில் கணவன் மனைவி என இரண்டு கன்றுகள் என ஆரமபித்த இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளில் நான்கு கோடியே முப்பது லட்சம் கன்றுகளை நாட்டு பெரும்பாலும் அவை பராமரிக்கப்பட்டு பசுமைக்கோலம் பூண்டது நாடு

.அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு 2004 இல் வழங்கப்பட்டது .அவரின் செயல்களை இரண்டாவது விடுதலைப்போர் என வர்ணிக்கிற அளவுக்கு சாதித்த மரங்களோடு மந்தகாச மொழி பேசிய அவரின் பிறந்தநாள் இன்று

பெனிசிலின் தந்த பிளெமிங்

எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் இளம் வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின்னர் வறுமையான சூழலிலேயே படித்து வந்தார். போலோ மற்றும் நீச்சலில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர் இவர். ஒருநாள் நீர்நிலையில் ஒரு சிறுவன் தத்தளிப்பதை பார்த்து உதவினார் இவர், அந்த சிறுவன் பிரபு வீடு பிள்ளை. அவரின் அப்பா பிளெமிங்கின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். அந்த தத்தளித்த சிறுவன் வருங்காலத்தில் பிரிட்டனின் பிரதமர் ஆன சர்ச்சில் !

பாலிடெக்னிக் படித்துவிட்டு புனித மேரி மருத்துவப்பள்ளியில் மருத்துவ படிப்பை மேற்கொண்ட பின்னர் ஆல்மோத் ரைட் எனும் நுண்ணுயிரி ஆய்வாளரிடம் வேலைக்கு சேர்ந்தார். அங்கே டைபாய்ட் நோய்க்கு தடுப்பூசி போடும் முறையை கண்டறிந்தார். பின் தன் துறை சார்ந்தே பேராசிரியர் ஆனார். லைசோசோம் நோய்களை தடுப்பதையும்,நோய் எதிர்ப்புக்கும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்தார்.

ஸ்டைபாலோ காகஸ் பாக்டீரியா இருந்த ஒரு தட்டை மூடாமல் அப்படியே திறந்துவிட்டு நகர்ந்துவிட்டார் இவரின் உதவியாளர். அடுத்த நாள் காலையில் அப்படியே திறந்து கிடப்பதை கண்டு உதவியாளரை கடிந்து கொண்டார். அவர் அதை கொட்ட எடுத்துக்கொண்டு போன பொழுது அவசரப்படாமல் அந்த தட்டை வாங்கி நுண்ணோக்கியில் வைத்து பார்த்தார்.

நீல நிறத்தில் எதோ ஒன்று பாக்டீரியவை தின்று தீர்த்து இருந்தது. அந்த நீல நிற பூஞ்சை தான் பெனிசிலின் எனும் அற்புதம். உலகின் முதல் ஆண்டி பயாடிக் கண்டறியப்பட்டது. அந்த பூஞ்சையின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார்நிமோனியா,தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்கு தீர்வு தருகிற அற்புதத்தை பென்சிலின் செய்கிறது. பதினான்கு வருடங்கள் கழித்து அதை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் முறையை வேறிரு அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு நாள் இன்று

சி.வி.ராமனிடம் படிக்க பத்து பாடங்கள் !

திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன்.
அவரிடம் படிக்க பத்து பாடங்கள்
எங்கிருந்தும் சாதிக்கலாம் :
படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

வாசிப்பை நேசி!
அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!
இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், ‘பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!
அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!
மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!
இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். ‘அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!
ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ”அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே” என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!
”கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ”கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே” என்றார் ராமன்.

துணிவு கொள்!
ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!
”ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்” என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கட்டுப்படுத்திய கம்யூனிச ரஷ்யா,கதறி விழுந்த எழுத்து நாயகன் !

பிப்ரவரி 10: போரிஸ் பாஸ்டர்நாக் பிறந்த தின சிறப்பு பகிர்வு

Posted Date : 08:11 (10/02/2014)Last updated : 08:11 (10/02/2014)

எழுத்தின் மூலம் தான் எண்ணியதை துணிந்து சொன்ன எழுத்தாளன் அவர் . ரஷ்யாவில் பிறந்த அவர் இளம் வயதில் இசை மீது நாட்டம் கொண்டார் . அதற்கு பின் அவருக்கு கவிதை பிடித்துப்போனது .

ஜெர்மனிக்கு படிக்கப்போனவர் அங்கே ஒரு பெண்ணின் மீது  பூண்டார் .காதலை சொன்னார் ;அது நிராகரிக்கப்பட்டது ; நாடு திரும்பினார். முதல் உலகப்போர் சமயத்தில் காலில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கட்டாய ராணுவ சேவைக்கு அனுப்பபடாமல் ஆரல் மலை இருந்த பகுதியில் வேலை பார்த்தார்  .ரஷ்ய புரட்சியை கொண்டாடினார் அவர் ; ஆனால் ஸ்டாலின் காலத்து படுகொலைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவரை வெறுப்புக்குள்ளாக்கின .

டாக்டர் ஷிவாகோ எனும்  நாவலை படைத்தார் .நாவலின் நாயகன் ரஷ்ய புரட்சியை வரவேற்கிறான் ;அதை கொண்டாடுகிறான் .மருத்துவனாகி வேலை செய்கிறான் . எனினும் அரசு அவனை எப்படி சிந்திக்க வேண்டும் என்றும்,எப்படி புரட்சி செய்ய வேண்டும் என கற்பிப்பதை வெறுக்கிறான் . விடுதலையை நாடி ஆரல்  மலை நோக்கி போகிறான் .

அங்கே ஒரு பெண்ணோடு காதல் பூக்கிறது . அவளை அரசு மஞ்சூரியாவுக்கு நாடு கடத்தி விடுகிறது ;மனமுடைந்து மாஸ்கோ திரும்புகிற அவன் நடுத்தெருவில் மனமுடைந்து மாரடைப்பு வந்து அனாதையாக செத்துப்போகிறான் . இந்த நாவல் ரஷ்யாவில் வெளியாக விடவில்லை அரசு .

அவரைப்பார்க்க வந்த இத்தாலி நண்பரிடம் நூலின் ஒரு பிரதியை தர அதை வாங்கி சென்று அவர் வெளியிட அது விற்று தீர்த்தது .பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது . அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது .அதை வாங்கிக்கொள்ள நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது ;நாட்டை விட்டு வெளியேறி வாங்கிக்கொள்ளட்டும் என்றார்கள் .

அவர் இப்படி  அதிபர் குருஷேவுக்கு கடிதம் எழுதினார் “என் நாட்டை மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிக்கிறேன் .எனக்கு பரிசு  வேண்டாம் என சொல்லி விடுகிறேன் “என முடித்திருந்தார் . நோபல் கமிட்டியிடம்  அரசின் நிர்பந்தத்தால் பரிசை வாங்கிக்கொள்ள முடியாது என்றார் . அவர் நுரையீரல்  புற்றுநோயால் அவதிப்பட்டு அவமானத்துக்கு உள்ளாகி தாகூரின் கவிதை தொகுப்பை மொழிபெயர்க்கும் கனவை கைவிட்டார் .அப்படியே சொந்த நாட்டிலேயே  அகதிபோல் மறைந்தும் போனார்

அவருக்கு மட்டுமல்ல அவரைப்போலவே நவீன ரஷ்யாவின் மிகச் சிறந்த  கவிஞரான ஓசிப் மெண்டல்ஷ்டாம் சிறை முகாம் ஒன்றிற்கு போகும்  வழியில் சைபீரியாவில் இறந்து போனார். கவிதைக்காக நோபல் பரிசு பெற்ற ஜோசப் ப்ராட்ஸ்கி ‘‘சமுதாய ஒட்டுண்ணி” என பட்டம் தரப்பட்டு சிறை முகாம்களில் மிகவும் துன்புறுத்தப்பட்டு பின் நாட்டை விட்டு வெளியேறினார் . பாஸ்டர்நாக்கை பின்பற்றி எழுதிய  அலெக்ஸாண்டர்  சோல்செனிட்ஸினுக்கு நோபல் பரிசு
அறிவிக்கப்பட்ட போதும் அதனை ஏற்க ரஷ்ய அரசு அனுமதி மறுத்து விட்டது. எழுத்தின் சுதந்திரம் பெரிதென அடக்குமுறைக்கு எதிராக நின்ற பாஸ்டர்நாக் பிறந்த தினம் இன்று .

காம்யு எனும் மகத்தான கலைஞன்

ஆல்பர்ட் காம்யு எனும் மகத்தான ஆளுமை சாலை விபத்தில் மறைந்த தினம் ஜனவரி நான்கு. நோபல் பரிசை இலக்கியத்துக்காக பெற்றவர் அவர் . அவரின் வாழ்க்கை முழுக்க அன்பு செய்ய சொன்னார் ; எளியவர்களின் வாழ்க்கை முன்னேறி விடாதா என கவலைப்பட்டார் . தனி நபர்களின் விருப்பங்கள் சார்ந்து சுயநலமாக இயங்குவதை தாண்டி மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.கண்டிப்பாக மனித சிக்கல்களை நம்மால் முழுமையாக தீர்க்க முடியாது ; அதற்காக செயல்படாமல் இருக்க முடியுமா என்று கேட்டார் . செயல்பட்டே ஆகவேண்டும் ; வெளிச்சம் வராவிட்டாலும் நம்பிக்கையை விதைத்து கொண்டே இருங்கள் என சொன்ன அவரின் அந்நியன் நாவலை அவசியம் வாசியுங்கள். ‘தி மித் ஆஃப் சிசிபஸ்’ கட்டுரையில் சிசிபஸ் மலை வரை பாறைகளை உருட்டிக்கொண்டு போவான்,பின்னர் அந்த பாறை மலைமீதிருந்து கீழே விழும். இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறான் சிசிபஸ் ; நம்மில் எத்தனை சிசிபஸ்கள் ?

காம்யு நோபல் பரிசு பெற்றதும் அவரின் பள்ளிக்கால ஆசானுக்கு இப்படிக்கடிதம் எழுதினார். :

அன்பு மிகுந்த மான்ஸர் ஜெர்மைன் அவர்களுக்கு,

என் இதயத்தின் அடியில் இருந்து உங்களுடன் பேச நான் சில நாட்கள் எடுத்துக்கொண்டேன். என் மனதில் பொங்கிக்கொண்டு இருந்த பதற்றம் தணியட்டும் என்று தான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் நாடாத,தேடிப்போகாத மிகப்பெரிய மரியாதை எனக்கு தரப்பட்டிருக்கிறது.

இந்த நோபல் பரிசு கிடைத்தது என்கிற செய்தியை கேள்விப்பட்டதும் என் அன்னைக்கு அடுத்தபடியாக எனக்கு நினைவுக்கு வந்தது நீங்கள் தான். நீங்களில்லாமல்,இந்த ஏழை சிறுவனை நோக்கி நீண்ட அந்த அன்பு மிகுந்த கரங்கள் இல்லாமல்,உங்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்காது. இந்த விருதை பெற நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை.

இருந்தாலும் இந்த விருது உங்களிடம் நீங்கள் எனக்கு என்னவாக இருந்தீர்கள் இன்னமும் எப்படி என்னை நெகிழ வைக்கிறீர்கள் என்ற சொல்ல வாய்ப்பாக அமைந்தது என்று ஆனந்தம் அடைகிறேன். உங்களின் முயற்சிகள்,ஓயாத உழைப்பு,எங்களைப்போன்ற குட்டி பள்ளி குழந்தைகளிடம் நீங்கள் காட்டிய ஈடில்லா கருணை இத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்களை உங்கள் மீது நன்றி கொண்டிருக்க செய்கிறது என்று சொல்லிக்கொள்ள இந்த பரிசு உதவியது என்று நெகிழ்கிறேன்

இதயத்தால் தங்களை தழுவிக்கொள்ளும்,

ஆல்பர்ட் காம்யு

அவரின் சில புகழ்பெற்ற வாசகங்கள் உங்களுக்காக
Photo: ஆல்பர்ட் காம்யு எனும் மகத்தான ஆளுமை சாலை விபத்தில் மறைந்த தினம் ஜனவரி நான்கு.  நோபல் பரிசை இலக்கியத்துக்காக பெற்றவர் அவர் . அவரின் வாழ்க்கை முழுக்க அன்பு செய்ய சொன்னார் ; எளியவர்களின் வாழ்க்கை முன்னேறி விடாதா என கவலைப்பட்டார் .  தனி நபர்களின் விருப்பங்கள் சார்ந்து சுயநலமாக இயங்குவதை தாண்டி மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.கண்டிப்பாக மனித சிக்கல்களை நம்மால் முழுமையாக தீர்க்க முடியாது ; அதற்காக செயல்படாமல் இருக்க முடியுமா என்று கேட்டார் . செயல்பட்டே ஆகவேண்டும் ; வெளிச்சம் வராவிட்டாலும் நம்பிக்கையை விதைத்து கொண்டே இருங்கள் என சொன்ன அவரின் அந்நியன் நாவலை அவசியம் வாசியுங்கள். 'தி மித் ஆஃப் சிசிபஸ்' கட்டுரையில் சிசிபஸ் மலை வரை பாறைகளை உருட்டிக்கொண்டு போவான்,பின்னர் அந்த பாறை மலைமீதிருந்து கீழே விழும். இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறான் சிசிபஸ் ; நம்மில் எத்தனை சிசிபஸ்கள் ?

காம்யு நோபல் பரிசு பெற்றதும் அவரின் பள்ளிக்கால ஆசானுக்கு இப்படிக்கடிதம் எழுதினார். :

அன்பு மிகுந்த மான்ஸர் ஜெர்மைன் அவர்களுக்கு,

என் இதயத்தின் அடியில் இருந்து உங்களுடன் பேச நான் சில நாட்கள் எடுத்துக்கொண்டேன். என் மனதில் பொங்கிக்கொண்டு இருந்த பதற்றம் தணியட்டும் என்று தான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் நாடாத,தேடிப்போகாத மிகப்பெரிய மரியாதை எனக்கு தரப்பட்டிருக்கிறது.

இந்த நோபல் பரிசு கிடைத்தது என்கிற செய்தியை கேள்விப்பட்டதும் என் அன்னைக்கு அடுத்தபடியாக எனக்கு நினைவுக்கு வந்தது நீங்கள் தான். நீங்களில்லாமல்,இந்த ஏழை சிறுவனை நோக்கி நீண்ட அந்த அன்பு மிகுந்த கரங்கள் இல்லாமல்,உங்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்காது. இந்த விருதை பெற நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை.

இருந்தாலும் இந்த விருது உங்களிடம் நீங்கள் எனக்கு என்னவாக இருந்தீர்கள் இன்னமும் எப்படி என்னை நெகிழ வைக்கிறீர்கள் என்ற சொல்ல வாய்ப்பாக அமைந்தது என்று ஆனந்தம் அடைகிறேன். உங்களின் முயற்சிகள்,ஓயாத உழைப்பு,எங்களைப்போன்ற குட்டி பள்ளி குழந்தைகளிடம் நீங்கள் காட்டிய ஈடில்லா கருணை இத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்களை உங்கள் மீது நன்றி கொண்டிருக்க செய்கிறது என்று சொல்லிக்கொள்ள இந்த பரிசு உதவியது என்று நெகிழ்கிறேன்

இதயத்தால் தங்களை தழுவிக்கொள்ளும்,

ஆல்பர்ட் காம்யு  (நோபல் பரிசு பெற்றதும் காம்யு தன் ஆசானுக்கு எழுதிய கடிதம் இது ) அவரின் சில புகழ்பெற்ற வாசகங்கள் உங்களுக்காக

என் பின்னால் நடக்காதே ;வழிகாட்டாமல் போகலாம் நான் .முன்னே நடக்காதே ;பின்பற்றாமல் போகலாம் நான் .என் அருகே பிணைந்து நட .என் நண்பனாக இரு

மகிழ்ச்சி எதை கொண்டிருக்கிறது என தேடினால் நீங்கள் மகிழ்ச்சியை கண்டடைய மாட்டீர்கள் ;வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று ஒவ்வொரு கணமும் தேடினால் ;நீங்கள் வாழவே மாட்டீர்கள்

நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு துரதிஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்

நாம் இறப்பதற்கு தகுதியான காரணங்கள் பல உண்டு ; கொல்வதற்கு என்று தகுந்த காரணங்கள் எதுவுமே இல்லவே இல்லை

வளையக்கூடிய,ஆனால்,உடைபடா உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை

இலையுதிர் காலம் இன்னுமொரு வசந்தம் அங்கே உதிரும் ஒவ்வொரு இலையும் இன்னொரு மலர்

எனக்குள்ள ஒரே கடமை எல்லாரையும் எப்பொழுதும் அன்பு செய்வது தான்

மனிதன் வாழ வேண்டும் ;படைக்க வேண்டும் – கண்ணீர் துளிகள் அவன் நெஞ்சை நிறைக்கும் வரை

எனக்கு இரண்டே தேர்வுகள் தான் ,”ஒன்று தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அல்லது ருசித்து ஒரு கோப்பை காபி பருக வேண்டும் !” . எதை செய்யலாம் நான் ?

புரட்சிக்காரன் என்பவன் யார் தெரியுமா ? இது இப்படி இருக்கக்கூடாது என உரத்துக்குரல் கொடுக்கிறவனே !

எப்பொழுதும் தனித்து தவறு செய்ய பழகுகிற பொழுது தான் நீங்கள் முன்னேற்றத்தை அடைய ஆரம்பிக்கிறீர்கள்

கொலையாளிகளும் பலியாடுகளும் வாழும் ஒரு சமூகத்தில், சிந்திக்கத் தெரிந்தவர்கள் கொலையாளிகளின் பக்கம் நிற்கக்கூடாது.

ஜங்கிள் புக் ஜாலிதாத்தா கிப்ளிங் !

ரூட்யார்ட் கிப்ளிங் எனும் அற்புதமான கதைசொல்லி பிறந்தநாள் டிசம்பர் முப்பது. இந்தியாவில் விடுதலைக்கு முந்தி அவரின் பெற்றோர் இருந்தனர் ;இவர் மும்பையில் பிறந்தார் . பின்னர் இங்கிலாந்துக்கு இவரைக்கொண்டு போனார்கள். இங்கிலாந்தில் இருந்த ரூட்யார்ட் ஏரியின் அழகில் மயங்கி இவருக்கு அந்த பெயரை வைத்தார்கள் .

மீண்டும் பதினேழு வயதில் இந்தியா வந்தார் ;பத்திரிக்கைகளில் எண்ணற்ற கதைகள் எழுதினார் . காடுகள் ,மலைகள் என பல்வேறு இடங்களில் சுற்றினார் .அவர் வெளியிட்ட நூல்களில் ஒரு ஸ்வஸ்திக் சின்னமும்,யானை தாமரைப்பூ ஏந்தி இருப்பதும் இணைந்தே இருக்கும் .இந்தியாவில் ஸ்வஸ்திக் அதிர்ஷ்டத்தை உணர்த்தியதால் அதை பயன்படுத்தினார் ;நாஜிக்கள் அதையே முத்திரை ஆக்கியதும் அதை நீக்கி விட்டார் .

ஜங்கிள் புக் மற்றும் தி செகண்ட் ஜங்கிள் புக் இவற்றில் காட்டிலுள்ள மிருகங்கள் மனிதர்களை போலவே பேசி பல அற்புதமான கருத்துக்களை சுவாரஸ்யமாக சொல்லுமாறு வடிவமைத்தார் . இந்த புத்தகத்தை சாரணர் இயக்கத்தை உருவாக்கிய பேடன் பாவல் பயன்படுத்தினார். கிப்ளிங் அறிவியல் புனைகதைகளும் எழுதினார் ,நாவல்களும் எழுதி தள்ளினார் .ஒருமுறை இவர் இறந்துவிட்டதாக ஒரு பத்திரிக்கை தவறாக செய்தி வெளியிட ,”நல்லது ;உங்கள் சந்தாதாரர் லிஸ்டில் இருந்து என்னை எடுத்து விடுங்கள் “என பதில் அனுப்பினார் .

முதல் உலகப்போரில் மகன் இறந்த பிறகு உருக்குலைந்து போனார் ; பின் மீண்டு பல வீரர்களுக்கு நினைவு சின்னம் எழுப்பும் குழுவில் பணியாற்றினா. .இந்தியர்கள் மீது நல்ல அபிப்ராயம் இவருக்கு இல்லை ;”இந்தியர்கள் சுயாட்சியை ஏற்படுத்தி கொள்ள முடியாதவர்கள். அவர்கள் நான்காயிரம் வருடம் பழமையானவர்கள். சுயாட்சி பற்றியெல்லாம் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகப்பழமையானவர்கள். அவர்கள் வேண்டுவது சட்டம் ஒழுங்கு.அதை அளிக்க நாம் இருக்கிறோம். !” என்றார்

.இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அவரின் பிறந்தநாள் இன்று. தோல்விகளால்,காயங்களால் வீழ்கிற எல்லாருக்கும் உத்வேகம் தருகிற கவிதையாக அவரின் if கவிதை திகழ்கிறது. அதையே இந்திய பாதுகாப்பு அகாடமியில் எழுதி வைத்திருக்கிறார்கள். அக்கவிதை :

எல்லாரும் தோற்கையில்
தோல்விக்கு நீதான் காரணம் என்று விமர்சனங்கள்
உன்னை நோக்கி வீசப்படுகையில்
தலை நிமிர்த்தி நீ நடப்பாய் என்றால் ;
எல்லாரும் உன்னை சந்தேகிக்கையில்
நீ உன்னை நம்புவாய் என்றால் ;
அவர்களின் அச்சங்களை ஆமோதிப்பாய் என்றால்
காத்திருக்க உன்னால் முடியுமென்றால் ;
காத்திருப்பதால் களைப்படைய மாட்டாயானால்
பொய்கள் உன்னிடம் சொல்லப்பட்டாலும்
நீ பொய்யால் எதிர்கொள்ள மாட்டாயெனில்
வெறுக்கப்பட்டாலும் வெறுப்பு உன்னை வெல்ல முடியாதெனில்
நீ நல்லவனாக தெரியாவிடினும்,புத்திசாலியாக பேசாவிட்டாலும்

நீ கனவுகள் கண்டால்,கனவுகள் உன் எஜமானன் ஆகவிட விட்டால்
நீ சிந்தித்தால்,சிந்தனைகள் மட்டுமே குறிக்கோளாகவிடின்
பெருவெற்றியை,பெருந்தோல்வியை சந்தித்தாலும்
இரண்டையும் ஒன்றாக நடத்த முடியுமென்றால்
நீ பேசிய உண்மையை
பொய்யர்கள் திரித்து முட்டாள்களுக்கு
வலை விரிப்பதை தாங்குவாய் என்றால் ;
அத்தனையும் அர்ப்பணித்தவை கண்முன்னால் காணாமல் போகையில்
இடிபாடுகளில் இருந்து மீண்டும் சேர்த்து,தேய்ந்த கருவிகளோடு கட்டுவிப்பாய் கனவுகளை என்றால்

வெற்றிகளையெல்லாம் குவித்து
புது சூதாட்டம் ஒன்றினில் முயன்று
வீழ்வாயெனில்; வீழ்ந்த பின் முதலில் இருந்து முயல்வாய் எனின்
தோல்வி பற்றி ஒரு மூச்சும் விடமாட்டாய் என்றால்
உன் தருணங்கள் போய் வெகுகாலம் ஆனபின்னும்
எல்லாமும் போனபின்னர் எதுவும் உன்னிடம் இல்லையென்றாலும்
“விடாமல் இரு” எனும் இதயக்குரல் மட்டும் கேட்டு
கொண்ட கனவுக்காக நன்னெஞ்சு,நரம்பு,நாடி செலுத்தி
ஓயாமல் உழைப்பாய் எனின்

கூட்டங்களோடு பேசினாலும் ; உன் குணநலனை காப்பாய் என்றால்
அரசர்களோடு நடந்தாலும் எளிமைக்குணம் இழக்க மாட்டாய் எனின்
எல்லா மனிதரும் முக்கியம் என்றாலும் யாரும் அதிமுக்கியமில்லை எனின்
மன்னிக்க முடியா ஒரு நிமிடத்தை
வேறெங்கோ ஓடிப்போகும் அறுபது நொடியால் நிறைப்பாய் எனின்
உலகமும் அதில் உள்ளவையும் உன்னுடையவை
வேறென்ன வேண்டும் நீ மனிதனனாய் மகனே

நானோ தந்த நாயகன்

நானோ தொழில்நுட்பம் எனும் துறை உருவாவதற்கான வித்தை போட்டவர் ரிச்சர்ட் ஃபெய்ன்மான் . யூதக்குடும்பத்தில் பிறந்த இவர்,இளம் வயதிலேயே மத நம்பிக்கை இல்லாதவராக வளர்க்கப்பட்டார் ,பேசும் திறன் இவருக்கு மூன்று வயது வரை கிட்டாது இருந்ததால் இவருடன் தொடர்ந்து இவரின் தந்தை பேசிக்கொண்டே இருப்பார் . வீட்டில் இருந்தே இவர் கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை கற்றுத்தேர்ந்தார் .

கொலும்பியா பல்கலைகழகத்துக்கு விண்ணப்பம் போட்டால் போ வெளியே என நிராகரித்து விட்டார்கள் . எம் ஐ டியில் சேர்ந்தார் ;இயற்பியலின் அத்தனை துறையிலும் சேர்ந்து பாடம் கற்றார் வரலாறு,ஆங்கிலம் இரண்டும் மனிதரை பாடாய் படுத்தின ; இரண்டிலும் கஷ்டப்பட்டு பாஸ் ஆனார் . அவர் முனைவர் பட்டத்துக்காக எடுத்துக்கொண்ட தலைப்பின் விளைவாக மின்னியக்கவிசையியலின் முக்கிய தத்துவமான வீலர்-ஃபெய்ன்மான் உட்கவர் தத்துவம் உருவானது .மனிதர் ஏகத்துக்கும் குறும்புக்காரர் .

அணுகுண்டை உருவாக்கிய மன்ஹட்டன் திட்டத்தில் பணியாற்றிய பொழுது சில குறிப்புகளை சங்கேத மொழியில் அங்கங்கே விட்டு சகாக்களை முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க வைப்பார் .இதனால் பலபேர் உளவாளி யாரோ நுழைந்து விட்டதாக பீதியாகி எல்லாம் இருக்கிறார்கள் .அணுகுண்டு வெடித்ததும் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளானார் ;இத்தனை உயிர்கள் இறந்து விட்டதே என்கிற கவலை அவருக்கு தான் வேலை பார்த்த பல்கலைகழகம் வேலைக்கு வர சொன்ன பொழுது அவர் போகாததால் வேலையும் போனது .

அதற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார் குவாண்டம் மின்னியக்கவிசையியலின் மீது அவரின் ஆர்வம் மீண்டும் பொங்கியது ;ஃபெய்ன்மான் வரைபடங்களை உருவாக்கினார் ;அவற்றை இன்டக்ரல் பாதை தொகுப்பின் கொண்டு வரையறுத்தார் .அவற்றைக்கொண்டு இணை அணு துகள்களின் இடையே நடக்கும் உள்வினைகள் பற்றி துல்லியமாக விளக்கினார் .இதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது . அவருக்கு அப்பொழுது வயது 38 !

ஹீலியம் மிகக்குறைந்த வெப்பநிலையில் பாகுநிலை இல்லாத சூப்பர் திரவத்தன்மையை ஏன் கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார் .பாதை இன்டக்ரல்களை துல்லியமாக கணிக்கும் தத்துவத்தை இவர் உருவாக்கி தர அது செயற்கைக்கோள் செலுத்துதலை மிக துல்லியமானதாக ஆக்கிற்று .1959 இல் .”There’s plenty of room in the bottom “எனும் இவரின் புகழ்பெற்ற உரை நானோ தொழில்நுட்பத்துக்கான கதவுகளை திறந்து விட்டது . தன்னை அறிவியலின் மகத்தான பிள்ளைகளில் ஒருவராக தன்னைக்கருதிக்கொண்ட அவர் மதம் சார்ந்தோ,இனம் சார்ந்தோ தன்னை குறிப்பதை எதிர்த்தார் .நான் மனிதன் என்றார் அவர். அவரின் “There’s plenty of room in the bottom ” உரை நிகழ்த்தப்பட்ட தினம் இன்று .