நேருவின் ஆட்சி-பதியம் போட்ட 18 ஆண்டுகள் !


நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :

தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.

பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.

சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.

காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.

காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.

இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.

மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,

முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.

சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.

அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.

சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115

புத்தகத்தை வாங்க :
http://www.wecanshopping.com/products/நேருவின்-ஆட்சி.html
—————————————————————————————————

இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.

ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.

அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.

இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.

சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.

நேரு இருக்காரே மச்சி !-நேருவைப்பற்றி ஐந்து கறபிதங்கள்


நேருவைப்பற்றிய ஐந்து கற்பிதங்கள் :
கற்பிதம் ஒன்று : நேரு வாரிசு அரசியலை ஆரம்பித்து வைத்தார் :

இந்த வாதத்துக்கு நேருவின் மகள் மற்றும் பேரன் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார்கள் என்பதும்,சோனியா காந்தி அப்பதவியை நோக்கி நகர்ந்தார் என்பதும்,அவரின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி கட்சிக்குள் சேர்ந்த பின்னர் அவரே அடுத்த வாரிசாக இருப்பார் என்று தெரிவதும் ஆதாரமாக இருக்கிறது. 

உண்மையில் நேருவுக்கும்,இந்த வாரிசு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு தன்னுடைய மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று எந்த எண்ணமும்,ஆசையும் இல்லை என்பதே உண்மை. திருமதி.இந்திரா காந்தி அவர்கள் தான் இந்திய தேசிய காங்கிரசை குடும்ப தொழிலாக மாற்றினார். அவரே தன்னுடைய மகன் சஞ்சய் மற்றும் அவரின் மறைவுக்கு பின்னர் அவரின் சகோதரர் ராஜீவ் ஆகியோரை அரசியலுக்கு கொண்டு வந்தார். 

ஒவ்வொரு முறையும் தனக்கு பிறகு தன்னுடைய மகனே ஆட்சி மற்றும் கட்சி தலைமைப்பொறுப்புக்கு வருவார் என்று தெளிவுப்படுத்தப்பட்டது. ஆகவே நேரு-காந்தி பரம்பரையை உண்மையில் இந்திரா காந்தி பரம்பரை என்றே சொல்லவேண்டும். 

கற்பிதம் 2 : நேரு காந்தியின் வாரிசாக தகுதியற்றவர். அவர் உண்மையில் தன்னுடைய தலைவருக்கு துரோகம் செய்து விட்டார். அவரின் தலைவர் அவரை தேர்வு செய்து பெருந்தவறு செய்துவிட்டார் :

இந்த கற்பிதத்தை ராஜ்மோகன் காந்தி தன்னுடைய The Good Boatman புத்தகத்தில் ஆதாரங்களோடு கச்சிதமாக உடைத்திருக்கிறார். அந்த நூலில் பல்வேறு மாற்றுகளில் இருந்து காந்தி நேருவை தேர்வு செய்ய காரணம் அவர் தான் காந்தியின் பன்முகத்தன்மை கொண்ட எல்லாரையும் இணைத்துக்கொண்டு இயங்கும் இந்தியா என்கிற கருத்தாக்கத்தை பிரதிபலித்தார். அவருக்கு மாற்றாக கருதப்பட்ட-படேல்,ராஜாஜி,ஆசாத்,கிருபாளினி,ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இதற்கு மாறாக வெவ்வேறு பிரிவுகளின் நலன்கள் மற்றும் சார்பு கொண்டவர்களாக ஓரளவுக்கேனும் இருந்தார்கள். நேரு மட்டுமே முஸ்லீகள் நம்பக்கூடிய இந்துவாக, தெற்கில் மதிக்கக்கூடிய உத்திர பிரதேச வாலாவாக,பெண்கள் நேசிக்கும் ஆணாக இருந்தார். காந்தியைப் போல ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான தலைவராக அவர் இருந்தார். 

கற்பிதம் 3 : நேரு மற்றும் படேல் எதிரிகள் மற்றும் எதிரெதிராகவே இயங்கினார்கள் :

‘வலிமை’யான இந்தியாவுக்காக தொடர்ந்து வாதாடும் ஆட்கள் இந்த வாதத்தை தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நேரு பாகிஸ்தான்,சீனா மற்றும் சிறுபான்மையினரிடம் மென்மையாக நடந்து கொண்டார் என்றும் கூடவே படேல் ஒரு வேளை இந்தியாவின் பிரதமர் ஆகியிருந்தால் அவர் இவரை விட சிறப்பான பிரதமராக இருந்திருப்பார் என்றும் அவர்கள் இணைத்தே பேசுவார்கள். 

உண்மையில்,நேரு மற்றும் படேல் ஒரு குழுவாக அற்புதமாக இணைந்து இயங்கினார்கள். இணைந்த மற்றும் வலிமை மிகுந்த இந்தியாவை விடுதலைக்கு பின்னான உருவாக்க காலத்தில் கட்டமைத்த இணை அவர்கள். அவர்கள் பொறுமை மற்றும் கருத்தியல் ரீதியாக மாறுபட்டார்கள் என்பது உண்மையே. ஆனாலும்,இந்த வேறுபாடுகளை நகர்த்தியும்,களைந்தும் அவர்கள் தங்களின் பொதுவான நோக்கமான சுதந்திரமான,ஒற்றுமையான ,மதச்சார்பற்ற,ஜனநாயக இந்தியாவுக்காக அர்ப்பணித்து இயங்கினார்கள். படேலை விட நேரு சிறப்பாக இயங்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தன -மக்களிடம் நெருங்கிப்பழகுவது,உலகோடு ஒப்பிட்டுக்கொள்வது,ஆபத்தான சூழலில் இருப்பதாக உணர்ந்த குழுக்களுக்கு (இஸ்லாமியர்கள்,பழங்குடியினர் மற்றும் தலித்துகள் )மற்ற இந்தியர்களை போல சம உரிமைகளை அவர்களும் பெறுவார்கள் என்பதை உறுதி செய்வது. நேருவை விட சிறப்பாக படேல் இயங்கக்கூடிய விஷயங்களும் இருந்தன – சுதேச சமஸ்தான ஆட்சியாளர்களை எதிர்கொள்வது,காங்கிரஸ் கட்சியை வளர்த்தல்,சட்ட உருவாக்க சபையில் எதிர்ப்பாளர்களையும் இணைத்துக்கொண்டு முன்னகர்வது. இருவருக்கும் இன்னொருவரின் திறமைகள் புரிந்திருந்தன ; அதை தாங்கள் கடக்கவோ,குறுக்கிடவோ இருவரும் விரும்பவில்லை. இப்படித்தான் பிரிவினையின் இடிபாடுகளில் இருந்து வலிமையான ஒரு புதிய தேசத்தை அவர்கள் கட்டமைத்தார்கள்

இந்த கற்பிதங்களுக்கு நேருவின் வரிகளிலேயே மிகச்சிறந்த விடை கிடைக்கிறது . காந்தியின் மறைவுக்கு பிறகு நேரு படேலுக்கு இப்படி கடிதம் எழுதினார்,”நம்முடைய பழைய முரண்பாடுகள் இன்றோடு முக்கியத்துவம் இழக்கின்றன. இந்த கணத்தில் நாம் அனைவரும் நெருக்கமாக,கூட்டுறவோடு நம்மால் முடிகிற அளவுக்கு இணைந்து பணியாற்றுவது அதி அவசியமாகிறது.” இந்த வருடங்களில் எல்லாம் தாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதையும் நினைவு கூர்ந்த நேரு ,’உங்கள் மீதான அன்பு மற்றும் மரியாதை இந்த காலங்களில் வளர்ந்திருக்கிறது. எந்த நிகழ்வும் அண்ட அன்பையும்,மரியாதையையும் குறைக்க முடியாது…என்றாலும்,இந்த சிக்கல் மிகுந்த பாபுஜியின் மரண கணத்தில் நாம் மற்றும் நம்முடைய சகாக்கள் இணைந்து பணியாற்றுவது நம்முடைய கடமை என்று நான் சொல்ல விரும்புகிறேன்.”

படேல் நேருவின் கடிதத்துக்கு பதில் எழுதும் பொழுது “தங்களின் கடிதத்தின் அன்பு மற்றும் கனிவால் மிகவும் நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும் போனேன்” என்று சொல்லிவிட்டு ,”நாம் இருவரும் வாழ்நாள் முழுக்க ஒரு பொது குறிக்கோளுக்காக இணைந்து இயங்கும் காம்ரேட்களாக இருக்கிறோம். நம் தேச நலன் மீதான அளவுகடந்த அக்கறை,இருவரும் கொண்டுள்ள அன்பு மற்றும் மரியாதை நம்முடைய பார்வை மற்றும் வேறுபாடுகளை கடந்து நம்மை இணைத்தே வைத்திருக்கிறது. ” மேலும் “காந்தியின் மரணம் நாமிருவரும் எப்படி இணைந்து பலவற்றை சாதித்துள்ளோம் என்பதையும்,இந்த நாடே சோகம் சூழ்ந்திருக்கும் தருணத்தில் மக்களின் நலனுக்காக இன்னமும் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை மீண்டும் புதிதாக உணரவைக்கும் விழித்தெழுதலாக இருக்கிறது !” என்று குறிப்பிட்டார்.- வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா 

கற்பிதம் நான்கு : நேரு ஒரு சர்வாதிகாரி :

நேருவுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பதை விடவும் தனக்கு பின் தன்னுடைய வாரிசாக ஒருவரை நேரு அறிவிக்கவில்லை என்பதே இதற்கு வலு சேர்க்கிறது.

நேரு தன்னுடன் இருந்த கட்சி மற்றும் அரசாங்க சகாக்கள் முன்னர் மேலானவராக தோற்றம் தந்திருப்பார் உண்மையே. அவர்கள் அவரின் காஸ்மோபாலிடன் பார்வையையோ,கலை,இசை,இலக்கியம்,அறிவியல் மீதான ஆர்வத்தையோ கொண்டிருக்கவில்லை. ஆனால்,நேருவை விட இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் அமைப்புகள் மற்றும் பண்புகளை யாரும் வளர்த்தெடுக்கவில்லை. அவரே வயது வந்த அனைவர்க்கும் வாக்குரிமைக்காக வாதாடினார்,ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்கட்சிகளை வரவேற்றார் , அதிகார வர்க்கம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதே இல்லை. வின்சென்ட் சீன் இப்படி ஒரு முறை குறிப்பிட்டார் : “காந்திக்கும்,நேருவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் காந்தியடிகள் தான் ஒத்துப்போகாத பெரும்பான்மை கருத்துக்கு இசைவதை காட்டிலும் ஓய்வெடுப்பது,உண்ணாவிரதம் இருப்பது,பிரார்த்தனை செய்வது,தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதும்,குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது என்று இயங்க போய்விடுவார். நேரு அப்படியில்லாமல் தன்னுடைய கட்சி மற்றும் தேசம் பெரும்பானமையாக ஒரு கருத்து கொண்டிருக்கிற பொழுது அதோடு ஒத்துப்போகா விட்டாலும் அதை மதித்து ஏற்றுக்கொண்டார். ஆகவே நேருவின் கருத்துக்கு மாற்றாக காங்கிரஸ் ஆண்ட மாநில முதல்வர்கள் எப்பொழுதும் கட்சியின் அம்மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொழிவாரி மாநிலங்களை முதலில் அவர் எதிர்த்தாலும் நாடும்,கட்சியும் அது தேவை என்றதும் ஏற்றுக்கொண்டு அப்படியே செயல்பட்டார். 

நேரு தனக்கு பின் ஒரு வாரிசை நியமிக்காமல் விலகியதற்கு காரணம் அதை மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யட்டும் என்று எண்ணியதே காரணம். நேருவை வாழ்நாள் முழுக்க தீவிரமாக விமர்சித்த D.F.கரக்கா இப்படி அவரின் உறுதியை புகழ்ந்தார் ,”நேரு தன்னுடைய வாரிசை பற்றி எந்த குறிப்பிடுதலையும் செய்யாதது மெச்சத்தக்கது. நேரு தனக்கு பின் வருகிறவர்களுக்கான பணி அது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை.”

கற்பிதம் 5 :

நேரு மையப்படுத்தப்பட்ட ஸ்டாலினிஸ்ட் பாணியிலான பொருளாதார வளர்ச்சி மாதிரியை கொண்டு வந்து நம்மை பல ஆண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி இருக்க செய்துவிட்டார் 

பொருளாதரத்தை வேகமாக மற்றும் பெரிய அளவில் திறந்துவிட வேண்டும் என்று எண்ணுவோர் இந்த வாதத்தை வலிமையாக முன்வைக்கிறார்கள். உண்மையில் இறக்குமதிக்கு மாற்றான பொருளாதார மாதிரியை கொண்டு வருவதில் விடுதலைக்கு பின்னர் கருத்து ஒற்றுமை இருந்தது என்பதே உண்மை. 

ரஷ்யா மட்டுமல்லாமல் ஜெர்மனி,ஜப்பான் ஆகிய தேசங்களும் எடுத்துக்காட்டுகளாக கொள்ளப்பட்டன. காலனியாதிக்கம் இந்தியர்களை அதிகமான மற்றும் நீளும் வெளிநாட்டு முதலீட்டின் மீது பயத்தை உண்டு செய்தது. மேலும் இந்திய தொழில் துறையே அரசின் ஆதரவு மற்றும் மானியத்தை கோரியது. 1944 இன் பம்பாய் திட்டத்தில் இந்தியாவின் முக்கிய முதலாளிகள் அனைவரும் கையெழுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆற்றல்,நீர்,போக்குவரத்து மற்றும் சுரங்கங்கள் என்று எல்லா முக்கிய துறைகளிலும் அரசின் குறிக்கீட்டையும் அதன் மூலமாக அவற்றை வளர்ப்பதையும் செய்ய சொல்லி கேட்டுக்கொண்டார்கள். தங்களிடம் அப்படி செய்ய போதுமான நிதியில்லாததால் அதை செய்வது அரசின் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள். 

இது சந்தைமயப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் இறுகிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு காலங்களுக்கு இடையயேயான போட்டி மற்றும் அவற்றின் நன்மைகள்,தீமைகள் பற்றிய வாதமில்லை. ஏன் நாம் இப்படியொரு தொழில்மய கொள்கையை தேர்ந்தெடுத்தோம் என்பதற்கான பதில் மட்டுமே இது : தொழிலதிபர்கள்,விஞ்ஞானிகள்,பொருளாதார வல்லுனர்கள்,அரசியல்வாதிகள் பல்வேறு தத்துவங்கள் மற்றும் வேறுபாடுகளை கடந்து நேருவோடு இந்த கருத்தில் பெரிதும் ஒத்துப்போனார்கள். அல்லது நேரு அவர்களோடு ஒத்துப்போனார் என்றும் சொல்லலாம். 

நேருவின் காலத்தில் அவரைப்போல நேசிக்கப்பட்டவரும் இல்லை ; அவரின் காலத்திற்கு பிறகு அவரைப்போல வில்லனாக்கப்பட்டவரும் வேறெவரும் இல்லை. வில்லனாக நேருவை காண்பிக்கும் போக்கு இப்படியான பொய்யான கற்பிதங்களால் தொடர்ந்து நீடிக்கிறது. –Ramachandra Guha

மூலம் : http://www.hindu.com/mag/2004/05/23/stories/2004052300240300.htm

இஸ்லாம்,இந்தியா,இஸ்லாமியர்கள்-விரியும் வரலாறு !


எஸ்.எஸ்.கில் அவர்களின் இஸ்லாம் மற்றும் இந்திய முஸ்லீம்கள் என்கிற நூலைப்படித்து முடித்தேன். இஸ்லாம் மற்றும் இந்திய இஸ்லாமியர்களைப்பற்றிய ஒரு ஆழமான மற்றும் தெளிவான புரிதலை பெற விரும்பினால் இந்த நூலை நீங்கள் வாசிக்கலாம்.
இஸ்லாம் என்கிற மதம் வாளை ஒருபக்கமும்,குரானை இன்னொரு பக்கமும் ஏந்திக்கொண்டு பரவியது என்பது பரவலாக வைக்கப்படுகிற குற்றச்சாட்டு. கிறிஸ்துவத்துக்கும் இது பொருந்தும் என்பதே உண்மை. ஆனால்,வெறுமனே போர்களால் மட்டுமே இந்த மதங்கள் பரவிவிடவில்லை. மிகக்கடுமையான சூழல்களில் தங்களின் மதத்தை பரப்பவும்,பலப்படுத்தவும்,காப்பாற்றிக்கொள்ளவும் போரும் ஒரு கருவியாக இருந்தது என்பதே உண்மை.இன்றைக்கும் உலகில் மிகவேகமாக பரவிக்கொண்டிருக்கும் மதமாக இஸ்லாமே இருக்கிறது. அதை ஒற்றைப்படையாக வெறுப்பாலும்,வன்முறையாலும் பரவுகிறது என்று சொல்லிக்கொண்டு இருப்பது அதைப்பற்றிய புரிதலை தராது. இஸ்லாமின் மிகப்பெரிய பலம் அதனிடம் இருக்கும் பன்முகத்தன்மை. இஸ்லாம் தோன்றிய ஆரம்பகாலத்தில் நிறம்,மொழி,இனம்,நாடு என்கிற வேறுபாடுகளை பார்க்காமல் அது தன் மதத்துக்குள் சகலரையும் இணைத்துக்கொண்டது. பல்வேறு படையெடுப்புகள் மூலம் உலக மதமாக ஆகிய இஸ்லாம் அதை திருமணங்கள்,பல்வேறு கலாசாரத்தின் அம்சங்களை உள்வாங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் சாதித்தது.

இஸ்லாமுக்காக போராடிய வீரர்களுக்கு போரில் கிடைக்கும் செல்வங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட்டது மற்றும் போரில் இறந்தால் சொர்க்கம் ஆகியன மதத்தை இன்னமும் வேகமாக பரப்பியது.
இஸ்லாம் பரவியது ஒரு மாபெரும் கலாசார புரட்சிக்கும்,ஐரோப்பியாவில் மறுமலர்ச்சி வருவதற்கு முன்பேயே ஒரு பொற்காலத்துக்கு வழிவகுத்தது. கிரேக்க-ரோம,ஈரானிய-செமிடிக் ,மலாய்-ஜாவா,சீன,இந்திய கலாசாரங்கள் கலப்பதை அது சாதித்தது. அற்புதமான அறிவியல் மற்றும் வானியல் நூல்கள் தொழில்நுட்பங்கள் எழுந்தன. இஸ்லாமின் திறந்த தன்மை அதை சாதித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் எழுந்தன.

இறைவனை தவிர மற்றவர்களின் வரிகளை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது நானொரு எளியவன் என்றே நபிகள் சொல்லிவந்திருக்கிறார். நபிகளின் வாரிசுகள் காலிபாவாக இருக்க வேண்டுமா அல்லது நியமிக்கப்படுபவர்கள் இருக்க வேண்டுமா என்கிற சிக்கலில் ஷியா மற்றும் சுன்னி இஸ்லாமிய பிரிவுகள் உண்டாகின. அவர்களுக்குள்ளேயே வாளேந்தி சண்டையிடுவது,கொன்று கொல்வது இன்றுவரை தொடர்கிறது.

பெண்களுக்கு போதுமான உரிமைகள் தருவதில்லை இஸ்லாம். அது அவர்களுக்கு பாதி சொத்துரிமை தான் தருகிறது ; ஒரு ஆண் நான்கு திருமணங்கள் செய்துகொள்ளலாம் என்று வேறு சொல்கிறது என்பதெல்லாம் இஸ்லாம் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகள். வேறு எந்த மதமும் இஸ்லாமைப்போல பெண்களுக்கு சொத்துரிமை தந்தது இல்லை என்பதையும் கூடவே இஸ்லாம் நான்கு பெண்களை நால்வரையும் சமமாக நடத்த முடியும் என்கிற பட்சத்திலேயே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொன்னது என்பதோடு சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். மொத்தமுள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வாசகங்களில் வெறும் முன்னூறு மட்டுமே கட்டாயமான வாசகங்கள்.

இந்தியாவை பொறுத்தவரை வடக்கில் காசிம்,கஜினி,கொரி ஆகியோர் பெரும் கொள்ளைகள் மற்றும் கோயில் இடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை ! அதே சமயம் எக்கச்சக்க ஹிந்து மன்னர்களும் போர் சமயங்களில் எதிரி நாட்டு கோயில்களை எப்படி சூறையாடினார்கள் என்று கல்ஹானர் பதிவு செய்து வைத்திருக்கிறார். பாபர் மற்ற மதத்தின் மக்களின் உணர்வுகளை மதி,அவர்களின் வழிபாட்டு தலங்களை எந்த தருணத்திலும் சேதப்படுத்தாதே என்று தன் மகனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அகபர் ஆறில் ஐந்து பேர் இந்துக்கள் அவர்களோடு நட்பாக இருப்பேன் நான் என்று உறுதியோடு நின்றார். ஜகாங்கீர் மதமாற்றத்தை அதிகாரப்பூர்வமாக் தடையே செய்தார். அவுரங்கசீப்,மாலிக் கபூர் என்று ஒரு சிலரை தவிர்த்துவிட்டு பார்த்தால் பெரும்பாலும் அமைதியான இணக்கமான ஆட்சியையே இஸ்லாம் மதத்தை பின்பற்றிய மன்னர்கள் தந்திருக்கிறார்கள்.

இஸ்லாம் மதம் இந்தியாவில் எவ்வாறு பரவியது என்பதிலேயே மூன்றாக பிரித்துதான் பார்க்கவேண்டும். வடக்கில் போர்களின் மூலம் உள்ளே நுழைந்த மன்னர்களின் அமைச்சரவையில்,பதவிகளில் இடம்வேண்டும் என்று மதமாற்றங்கள் நடந்தன என்பது ஒருபுறம். ஜிசியா வரி வேறு கிடையாது என்பதும் பலரை இஸ்லாமை நோக்கி செலுத்தியது. தெற்கில் வியாபாரத்தால் தான் இஸ்லாம் பரவியது. ஜாதிய கட்டமைப்பை முற்றாக ஆரம்பகாலத்தில் இந்தியாவில் நிராகரித்த இஸ்லாம் கவர்ச்சியானதாக மக்களுக்கு இருந்தது.

கேரளாவில் கடற்கரையோரம் போர் புரியும் மற்ற நாட்டவரை சமாளிக்க ஹிந்துக்கள் அவர்களின் சனதான தர்மப்படி போகமாட்டார்கள் என்பதால் அரசராக இருந்த ஜமோரின் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதை ஊக்குவித்தார். கூடவே,வங்கத்தில் காடாக இருந்த நிலங்களை எக்கச்சக்க பேருக்கு மானியமாக முகலாயர்கள் தரவே அதைப்பெற இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள் பலர். சிட்டகாங்கில் நடந்த வியாபாரமும் இஸ்லாம் பரவ முக்கிய காரணம். சூபி துறவிகளும் இஸ்லாமி எளிமைப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள்.

பலபேரால் உறுதி செய்யப்பட்ட ஒரு தகவல் அதிர்ச்சியாகவும் இஸ்லாம் வாளால் பரவியது என்கிற வாதத்துக்கு எதிரானதாகவும் இருக்கும். வெள்ளையர் இந்தியாவை முழுமையாக பிடிப்பதற்கு முந்திய முகலாயர் ஆட்சி வரை இஸ்லாமியர்கள் எழில் ஒருவர் என்கிற எண்ணிக்கையிலேயே இருந்தார்கள். பின்னர் ஐரோப்பியர் பலம்பெற்று எழ ஆரம்பித்த காலத்தில் ஆறில் ஒருவர் என்றானார்கள். விடுதலையை நோக்கி நாடு நகர்ந்த பொழுது ஐந்தில் ஒருவர் என்று அவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது. வெளிநாட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்கிற வாதத்தை வைக்கும் பலரும் தாங்களும் அவ்வாறே ஒரு காலத்தில் வெளியே இருந்து வந்த முன்னோர்களை கொண்டவர்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். கூடவே,இங்கே இருந்து இந்துக்கள் தான் இஸ்லாம் மதத்துக்கு பெருமளவில் மாறினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

இஸ்லாம் மதத்தில் இந்து மதம் அளவுக்கு வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் அங்கேயும் இந்து மதத்தின் தாக்கத்தில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. எந்த வகையான வேறுபாடுகளையும் பாராட்ட கூடாது அனைவரும் சகோதரர்கள் என்ற நபிகள் நாயகத்தின் பெயராலேயே வேறுபாடுகள் உண்டானது தான் சோகமானது. அவரின் வழித்தோன்றல்கள் அல்லது நெருங்கிய உறவுகள் என்று சொல்லிக்கொண்டவர்கள் அஷ்ரப்கள் இந்தியாவில் இருந்து மதம் மாறியவர்கள் அஜ்லப்கள். உயர்ஜாதி ஹிந்துக்கள் இஸ்லாமுக்கு மாறிய பொழுது தங்களையும் அஷ்ரப் என்று அறிவிக்குமாறு அக்பரை ஊக்குவித்து சாதித்தார்கள். மிர்ஸா என்பவர் உருவாக்கிய அகமதியா பிரிவு பாகிஸ்தானில் நிராகரிக்கப்பட்டது. மிர்சா ஒரு காலத்துக்கு அப்புறம் தன்னையே இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டது அதற்கு காரணம். இஸ்லாமியர்கள் இந்துக்களின் ஜாதியைப்போல தங்களின் பிர்தாரிக்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள்.

நான்கு முக்கியமான சீர்திருத்தவாதிகள் இஸ்லாமுக்கு பிரிக்கப்படாத இந்தியாவில் கிடைத்தார்கள். சையீத் அகமது கான் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு ஆரம்பகாலங்களில் பாடுபட்டதும் பின்னர் காங்கிரஸ் உருவாக்கம் அதன் இஸ்லாமிய தலைவர் மற்றும் தன்னுடைய அலிகார் கல்லூரிக்கு ஆங்கிலேயே அரசு கொடுத்த நிதியுதவி எல்லாமும் சேர்ந்து முஸ்லீம்களும்,இந்துக்களும் வேறு என்று பேச ஆரம்பித்தார்,. அவர்கள் சேர்ந்தே இருக்க முடியாது என்றும் முழங்கினார். என்றாலும் குர்ஆனில் சொன்னவை எல்லாமும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் நம்முடைய பகுத்தறிவை பயன்படுத்தவேண்டும் என்று அவர் அறிவித்தார்.

இஸ்லாமியர்கள் அரசுப்பணியில் சேர கல்வி பயில வேண்டும் என்றும் அவர் முழங்கினார். இக்பால் ஜனநாயகத்தை முற்றாக நிராகரித்து இஸ்லாமிய சட்டப்படியே அரசு நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். அபுல் கலாம் ஆசாத் மட்டும் பலகோடி மக்கள்தொகை கொண்ட நாம் சிறுபான்மையினர் இல்லை இந்தியா என்கிற தேசத்துக்குள் இணைந்திருப்போம் என்று சொன்னார் –கேட்கத்தான் ஆளில்லை. அல்தாப் ஹுசைன் வாலி எனும் நான்காவது சிந்தனையாளர் தான் மிக முக்கியமான ஆனால் அவ்வளவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத ஆளுமை. இந்தியா என்கிற தேசத்துக்குள் இருந்து கொண்டே உயர்கல்வி மற்றும் அறிவியல்,தொழில்நுட்பம் ஆகிய கல்விகளை பெற்று இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வாழ்நாள் முழுக்க வலியுறுத்தினார் அவர்.

பெரும்பாலான மதக்கலவரங்கள் இந்து-முஸ்லீம் சிக்கலாக ஒற்றைப்படையாக பார்க்கப்படுகின்றன. அப்படி மட்டுமே அதைப்பார்க்க கூடாது என்று ஆசிரியர் எண்ணற்ற ஆதாரங்களை அடுக்குகிறார். வளர்ச்சியின்மை,பொருளாதாரத்தில் இன்னொரு மதத்தவர் முன்னேறி இருப்பது,நிலத்தை கைப்பற்றும் குறுக்கு வழி ஆகியன முக்கியமான காரணங்கள் என்று சொல்லி மாப்ளா கிளர்சிகள் நிலமில்லாத இஸ்லாமியர்கள் நாயர் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக செலுத்திய போராட்டம் ; ஜபல்பூரில் பீடி தொழிலில் உண்டான போட்டி மதக்கலவரத்துக்கு விதைபோட்டது.

ராஞ்சியில் உருதுவை இரண்டாவது மொழியாக ஆக்க கிளம்பிய எதிர்ப்பு இஸ்லாமியர்களின் நிலங்களை ஹிந்துக்கள் எடுத்துக்கொள்வதில் முடிந்தது. பீகார்ஷாரிபில் நடந்த கலவரங்கள் இஸ்லாமியர்களின் கல்லறை இருந்த நிலத்தை கைப்பற்றும் செயலில் முடிந்தது. மொராதாபாத்தில் அதிகமான வருமானத்தை இஸ்லாமிய தொழிலாளர்கள் பெற்றுக்கொண்டு இருந்தது உண்டாக்கியது. பிரிவினைக்கு முந்திய இஸ்லாமிய அரசியல் பற்றி ஏற்கனவே நிறைய பதிவு செய்திருக்கிறேன் என்பதால் இந்த நூலைப்பற்றிய இரண்டாவது கட்டுரையில் பிரிவினைக்கு பிந்திய அரசியல் மற்றும் இஸ்லாமியர்கள் தற்பொழுது செய்யவேண்டியது என்ன என்று ஆசிரியர் வாதிடுபவற்றை பார்க்கலாம்

இந்திய முஸ்லீம் லீக் அமைப்பு விடுதலைக்கு பின்னர் உருவானதும் தனித்தொகுதிகள் கேட்ட பொழுது அதை படேல் நிராகரித்தார். இஸ்லாமியர்களின் தலைவராக ஆகி அவர்களின் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்திருக்கும் வாய்ப்பை ஆசாத் தவறவிட்டார். நேருவின் எதிர்ப்பையும் மீறி பீகார்,உ.பி மற்றும் மத்திய மாகாணங்கள் உருதுவை பலபேர் பேசினாலும் வெறும் இந்தியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன. ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டு ஒரு ஆறாத வடுவுக்கு வழிகோலின. அது நடந்ததை வேடிக்கை பார்த்த ஜி.பி.பந்த் இஸ்லாமியர்களை போலீஸ் வேலைக்கு எடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார். படேல் எப்படியெல்லாம் இயங்கினார் என்பதை அறிந்துகொள்ள இந்த சுட்டி உதவும் ( (https://saravananagathan.wordpress.com/2013/12/05/காந்திபடேல்மோடி-2/ ))

அறுபத்தி ஏழில் இஸ்லாமியர்களுக்கு பெரிதாக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்கிற கோபம் எதிரொலிக்க மற்றவர்களுக்கு ஓட்டுபோட்டார்கள் இஸ்லாமியர்கள். அது ஆர்.எஸ்.எஸ் சின் அரசியல் வால் ஜனசங்கத்திருக்கு சாதகமாக அமைந்து முப்பத்தி ஐந்து தொகுதிகளில் ஜெயித்தார்கள். எக்கச்சக்க மதக்கலவரங்கள் நடக்கவே மீண்டும் காங்கிரஸ் பக்கமே போனார்கள்.
எமெர்ஜென்சியின் பொழுது இஸ்லாமியர்கள் பலர் கட்டாய குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளானது,காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் ஆட்சியை கவிழ்த்தது. ஹிந்து கோயில்களுக்கு போக ஆரம்பித்தது,காஷ்மீரில் நடப்பது தர்ம யுத்தம் என்று இந்திரா முழங்கியது எல்லாமும் அவரின் அரசியலை நேருவின் மதச்சார்பற்ற அரசியலை விட்டு நகர்த்தி இஸ்லாமியர்களை மற்றவர்களுக்கு ஓட்டுப்போட வைத்தன. கூடவே ராஜீவ் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்த ஷா பானு வழக்கின் தீர்ப்பை மாற்றும் வகையில் ஒருபக்கம் சட்டமியற்றி விட்டு இன்னொரு புறம் பாபர் மசூதி கதவுகளை திறந்துவிட்டார்.

பாபர் மசூதி இடிப்பில் வலதுசாரிகளால் வைக்கப்படும் ஒரு முக்கிய வாதம் மசூதியை இடிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமில்லை என்பது தான். ஆனால்,இன்டெலிஜென்ஸ் பீரோவின் முன்னாள் துணை இயக்குனர் எம்.கே.தார் பி.ஜே.பி/சங் பரிவார் ஆகியோர் நிகழ்த்திய கூட்டத்தில் வைக்கப்பட்ட ஒட்டுகேட்கும் கருவிகள் ப்ரல்யா ந்ருதியா எனும் அழிப்பின் நடனத்தை நிகழ்த்த வேண்டும் என்று தெளிவாக வகுத்துக்கொண்டே களமிறங்கின அதை லிபரான் கமிஷன் கணக்கிலேயே எடுத்துக்கொண்டு அவரை சாட்சியத்துக்கு அழைக்கவில்லை என்றும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்த கலவரங்களுக்கு பின்னர் சிவசேனா அதை அப்படியே மும்பையில் மதக்கலவரங்கள் தூண்ட பயன்படுத்திக்கொண்டது. இஸ்லாமியர்கள் தொடர்ந்து இந்துக்களை உசுப்பேற்றிக்கொண்டே இருந்தார்கள். அதை அவர்கள் இப்பொழுது கலவரங்களின் மூலம் அறுவடை செய்கிறார்கள் என்று தலையங்கம் எழுதினார் பால் தாக்கரே.

ஆறு வருட காலம் ஆட்சியில் இருந்த பிஜேபி அந்த காலத்தில் பாட புத்தகங்கள்,பல்வேறு பதவிகள்,மீடியா என்று சகலத்திலும் காவி மயம் ஆக்கியது. குஜராத் கலவரங்கள் இன்னுமொரு காயமாக மாறிப்போயின. மிக அரிதான தருணங்களை தவிர பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மதசார்பற்ற தன்மையை கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் கட்சிகளுக்கே பெரும்பாலும் ஓட்டளிக்கிறார்கள். மலப்புரமில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலில் மதச்சார்பின்மை பேசி இஸ்லாமிய பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை கம்யூனிஸ்ட்கள் பெற முடிந்தது !

எல்லாருக்குமான பொது சிவில் சட்டம் இன்னமும் வரவேயில்லை. இந்த இரு காயங்களுக்கு பின்னர் அதை சாதிப்பது இன்னமும் கடினமான பணியே ! அலிகார் பல்கலை எல்லாருக்குமான பல்கலையாக இருந்ததை மாற்றி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அது என்று சொல்லி அதன் மூலம் மதவாதத்தை வளர்ப்பதை அமைதியாக செய்தார்கள் ஆட்சியாளர்கள்.

இஸ்லாமியர்களுக்கு கல்வி தருவதில் மிக முக்கிய பங்கை மதரசாக்கள் ஆற்றுகின்றன. அவை தரமான கல்வியை தராமலே இருக்கின்றன. இதனால் பொருளாதரத்தில் முன்னேறும் வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கு கிடைக்காமல் போகிறது. ஓரளவுக்கு பணமிருப்பவர்கள் இயல்பான பள்ளிகளை நோக்கி நகர்வது இப்பொழுது அதிகரித்து உள்ளது. இஸ்லாமியர்கள் மீது ஒரு வகையான வெறுப்புணர்வை அவர்களின் நம்பிக்கையை அவர்கள் தீவிரமாக் கொண்டிருப்பதன் மூலம் பிற மதத்தவர்கள் உண்டாக்கி வைத்திருப்பதையும் பதிவு செய்கிறார்.

இஸ்லாமியர்கள் தங்களுக்கான கல்வி அமைப்புகளை உருவாக்கி கல்வியை பரப்புவதை தெற்கு அளவுக்கு வடக்கில் செய்யவில்லை என்பது ஒரு கவனிக்கத்தக்க அம்சம். வக்ஃப் வாரியங்களின் கோடிக்கணக்கான சொத்துகள் ஒழுங்காக தணிக்கை செய்யப்பட்டு அவர்களின் மக்களின் சமூக,பொருளாதார முன்னேற்றத்துக்கு பயன்படும் வகையில் திட்டங்கள் தீட்டுவது அவசியம். இஸ்லாமும்,இந்து மதமும் தனித்தனியானவை என்று விஷம பிரச்சாரம் தொடர்ந்து இங்கே பரப்பப்பட்டு வருகிறது. சசூபிக்கள் ஹிந்து மற்றும் இஸ்லாமியர்கள் இருவருக்கும் பொதுவானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்து-இஸ்லாமியர்கள் என்று குஜாரத்தில் இருபது வருடங்களுக்கு முன் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இரண்டு லட்சம் பேர் பதிந்து கொண்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

இந்தியாவின் ஓவியக்கலை,கட்டிடக்கலை,இசை,உணவுப்பொருள்கள்,மொழி ஆகிய அனைத்திலும் இஸ்லாம் ஆற்றிய பங்குகள் மிகப்பெரிது.
மேற்கின் மதசார்பின்மை என்பது அரசும்,மதமும் பிரிந்திருப்பதாகவே இருந்தது. ஒற்றை மதம் என்பதால் அப்படி சொல்வது சுலபமாக இருந்தது. இந்தியாவில் அப்படிப்பட்ட அணுகுமுறை சாத்தியமில்லை என்கிற யதார்த்தத்தை நேரு மற்றும் காந்தி உணர்ந்திருந்தார்கள். எல்லா மதங்களுக்கும் சம மரியாதை என்று அவர்கள் அறிவித்தார்கள். சிறுபான்மையினரின் மதவாதம் பயத்தில் வருகிறது என்று புரிந்து கொள்ளலாம் அதை நிவர்த்தி செய்வது நம் கடமை என்று நேரு இயங்கினார்.
நபிகள் காலத்தில் வேற்று மதத்தவர் பெரும்பான்மையாக இருக்கிற இடத்தில் எப்படி இஸ்லாமியர்கள் செயல்படவேண்டும் என்று குறிக்கப்படவில்லை. தன்னுடைய நம்பிக்கையை காப்பாற்ற புனிதப்போர் செய்யவேண்டும் என்று சிக்கலான சூழலில் சொல்லப்பட்டதை இன்றைக்கு தீவிரவாத இயக்கங்கள் பற்றிக்கொண்டு செயல்படுகின்றன. இஸ்லாமிய சர்வதேசியம் வந்த பிறகு அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து இருக்கின்றன.

இந்தியாவில் வருந்தத்குந்த சம்பவங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்திருக்கலாம். அதே சமயம் இஸ்லாம் கூட்டமைப்பில் இருக்கும் ஐம்பத்தி ஏழு நாடுகளை விட இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாகவே இருக்கிறது ; சிவில் சட்டத்தில் இன்னமும் அவர்கள் நினைக்கிறபடியே இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வலதுசாரிகள் எல்லை மீற முயற்சி செய்தால் பெரும்பான்மை மக்கள் அதை நிராகரிக்கிறார்கள். சம உரிமைகள்,ஓட்டுரிமை எல்லாமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை போதாது அதே சமயம் இதற்குள் இருந்தே வெல்ல முடியும் என்பதை உணர்ந்து எல்லா மதத்தவரும் இணைந்து நகரவேண்டும். இஸ்லாமை பற்றி தவறான எண்ணங்களை உண்டு செய்யும் சக்திகளை மதத்துக்குள் இருக்கும்ஆட்கள் மற்றும் பீடங்களே எதிர்க்க வேண்டும். ஷாரியத் என்பதை தீனை விட முன்னிறுத்தி செயல்படுகிற போக்கை விட்டு நகர்ந்து இன்னமும் ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைந்து செயலாற்ற அவர்கள் முனைகிற அதே சமயம் மற்ற மதத்தவர்களும் வெறுப்பை தாண்டி உண்மையை உணர்ந்து நேசித்து இணைந்து வாழவேண்டும் என்று முடிகிறது நூல்

பென்குயின் வெளியீடு
இருநூறு பக்கங்கள்
முன்னூறு ரூபாய்

கலைக்க சொன்ன காந்தி,கரைத்த இந்திரா-காங்கிரஸ் கதை இது !


இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினமிது ; 1885 இல் ஆலன் ஆக்டேவியன் ஹீயும் மற்றும் யுமேஷ் சந்திர பானர்ஜி முதலிய பல தலைவர்கள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் . மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது .டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானதும் , ஹீயும் மற்றும் அவருக்கிடையே நடந்த கடித போக்குவரத்துகளால் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வால்வு போல செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது ;ஆனால் அதற்கு பதிய ஆதாரமில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் .

முதலில் வேண்டுகோள்கள்,விண்ணப்பங்கள்,தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக்கொண்டு இருந்தது மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்த பொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் .ஆனால்,அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு செய்தது . வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடித்துக்கொள்ள வேண்டுமா என்கிற பிரச்சனையில் தீவிரவாதிகள்,மிதவாதிகள் (கோகலே தலைமையில் ஆன குழுவும் உடைந்தது ; பின் மீண்டும் இணைந்தார்கள் .அரவிந்தர் மற்றும் திலகரின் மதவாத அரசியலை இந்திய அரங்கிலிருந்து நீக்கி அதை எல்லா மக்களுக்கான அரசியல் கட்சியாக காந்தி மாற்றினார் .

படித்தவர்களை மட்டுமே சென்றடைந்து இருந்த காங்கிரசை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் . நாலணாவாக கட்சி உறுப்பினர் நிதி குறைக்கப்பட்டது எண்ணிக்கையை மிகவும் அதிகப்படுத்தியது. தேர்தலில் நிற்க எண்ணிய 1919 மாண்டேகு செம்ஸ்போர்ட் தீர்மானம் தந்த உத்வேகத்தில் ஆட்சிபீடத்தை பிடித்து காங்கிரசில் இருந்து விலகிய சுயராஜ்ய கட்சி ஆட்சி அமைத்தது ;அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை . போஸ் பூரண சுதந்திரம் வேண்டும் அதிரடி திட்டங்களே உதவும் என சொல்லி காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்தார். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை . ‘என்னுடைய திட்டத்தை மூத்த தலைவர்கள் செயல்படுத்தட்டும் !” என்றார் போஸ். அவர் செயல்படுத்தட்டும் நாங்கள் எல்லாம் விலகி நிற்கிறோம் என்றார்கள் மற்றவர்கள். காந்தி பக்கம் நிற்பவர்கள் எல்லாரையும் வலதுசாரிகள் என்று அவர் சொன்னது இன்னமும் சிக்கலை அதிகப்படுத்தியது. விலகினார் அவர் .

பின் நேரு ,படேல் ஆகியோரின் கை ஓங்கியது .1947 இல் விடுதலை கிடைத்ததும் காங்கிரசை கலைத்து விடவேண்டும் . விடுதலைக்கு பாடுபட்ட பலர் இப்பொழுது வெவ்வேறு தளங்களில் நின்று போராட முடியாமல் விடுதலைக்கு போராடிய கட்சி என்கிற பிம்பம் காங்கிரசை அதிகாரம் பெற்ற வெற்றிக்கட்சியாக்கி விடும் என காந்தி சொன்னார் . கேட்கவில்லை இவர்கள் . படேல் நேரு இருவருக்கும் இடையே மோதல் மூண்டன. கட்சியின் கட்டுப்பாடு படேலிடமே இருந்தது. அவர் இறந்ததும் கட்சி நேரு வசம் வந்தது. 


நேருவுக்கு பின் சாஸ்திரியை காமராஜர்-நிஜலிங்கப்பா முதலிய சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். வந்தார் . அடுத்து வந்த இந்திரா -காங்கிரசை மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட பிணக்கில் உடைத்தார் . உட்கட்சி ஜனநாயகத்தை அப்படியே காணாமல் போக வைத்தார். “நீங்கள் சொன்னால் எங்கேயும் பெருக்க கூட நான் தயார் !” என்று ஒரு தலைவர் சொல்கிற அளவுக்கு விசுவாசம் கொடி கட்டிப்பறந்தது. காங்கிரஸ் தான் இந்திரா,இந்திரா தான் காங்கிரஸ் என்றானது. காங்கிரஸ் இரண்டாக உடைந்தது . காளைமாடு சின்னம் காணாமல் போனது. 

பின் எமர்ஜென்சி சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் உண்டாயின . அதற்கு பிறகு கட்சி பெரிய அளவில் பிரிவினை இல்லாமல் இருந்த பொழுது வங்கத்தில் மம்தாவும் ,மகாராஷ்ட்ராவில் சரத் பவாரும் கட்சியை உடைத்தார்கள் . ஆட்சியை இழந்த காலத்தில் இருந்து கட்சியை மீட்டெடுத்து சோனியா சாதித்தார். மொத்தம் பதினொரு ஆண்டுகள் மட்டுமே பிறகட்சிகள் ஆண்ட பொழுது நாட்டை மீதிகாலமெல்லாம் ஆண்ட காங்கிரசின் வரலாறும் இந்திய வரலாறும் பிரிக்க முடியாததும் உண்மை .

கலைக்க சொன்ன காந்தி,கரைத்த இந்திரா-காங்கிரஸ் கதை இது !


இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினமிது ; 1885 இல் ஆலன் ஆக்டேவியன் ஹீயும் மற்றும் யுமேஷ் சந்திர பானர்ஜி முதலிய பல தலைவர்கள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் . மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது .டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானதும் , ஹீயும் மற்றும் அவருக்கிடையே நடந்த கடித போக்குவரத்துகளால் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வால்வு போல செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது ;ஆனால் அதற்கு பதிய ஆதாரமில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் .

முதலில் வேண்டுகோள்கள்,விண்ணப்பங்கள்,தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக்கொண்டு இருந்தது மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்த பொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் .ஆனால்,அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு செய்தது . வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடித்துக்கொள்ள வேண்டுமா என்கிற பிரச்சனையில் தீவிரவாதிகள்,மிதவாதிகள் (கோகலே தலைமையில் ஆன குழுவும் உடைந்தது ; பின் மீண்டும் இணைந்தார்கள் .அரவிந்தர் மற்றும் திலகரின் மதவாத அரசியலை இந்திய அரங்கிலிருந்து நீக்கி அதை எல்லா மக்களுக்கான அரசியல் கட்சியாக காந்தி மாற்றினார் .

படித்தவர்களை மட்டுமே சென்றடைந்து இருந்த காங்கிரசை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் . நாலணாவாக கட்சி உறுப்பினர் நிதி குறைக்கப்பட்டது எண்ணிக்கையை மிகவும் அதிகப்படுத்தியது. தேர்தலில் நிற்க எண்ணிய 1919 மாண்டேகு செம்ஸ்போர்ட் தீர்மானம் தந்த உத்வேகத்தில் ஆட்சிபீடத்தை பிடித்து காங்கிரசில் இருந்து விலகிய சுயராஜ்ய கட்சி ஆட்சி அமைத்தது ;அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை . போஸ் பூரண சுதந்திரம் வேண்டும் அதிரடி திட்டங்களே உதவும் என சொல்லி காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்தார். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை . ‘என்னுடைய திட்டத்தை மூத்த தலைவர்கள் செயல்படுத்தட்டும் !” என்றார் போஸ். அவர் செயல்படுத்தட்டும் நாங்கள் எல்லாம் விலகி நிற்கிறோம் என்றார்கள் மற்றவர்கள். காந்தி பக்கம் நிற்பவர்கள் எல்லாரையும் வலதுசாரிகள் என்று அவர் சொன்னது இன்னமும் சிக்கலை அதிகப்படுத்தியது. விலகினார் அவர் .

பின் நேரு ,படேல் ஆகியோரின் கை ஓங்கியது .1947 இல் விடுதலை கிடைத்ததும் காங்கிரசை கலைத்து விடவேண்டும் . விடுதலைக்கு பாடுபட்ட பலர் இப்பொழுது வெவ்வேறு தளங்களில் நின்று போராட முடியாமல் விடுதலைக்கு போராடிய கட்சி என்கிற பிம்பம் காங்கிரசை அதிகாரம் பெற்ற வெற்றிக்கட்சியாக்கி விடும் என காந்தி சொன்னார் . கேட்கவில்லை இவர்கள் . படேல் நேரு இருவருக்கும் இடையே மோதல் மூண்டன. கட்சியின் கட்டுப்பாடு படேலிடமே இருந்தது. அவர் இறந்ததும் கட்சி நேரு வசம் வந்தது. 


நேருவுக்கு பின் சாஸ்திரியை காமராஜர்-நிஜலிங்கப்பா முதலிய சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். வந்தார் . அடுத்து வந்த இந்திரா -காங்கிரசை மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட பிணக்கில் உடைத்தார் . உட்கட்சி ஜனநாயகத்தை அப்படியே காணாமல் போக வைத்தார். “நீங்கள் சொன்னால் எங்கேயும் பெருக்க கூட நான் தயார் !” என்று ஒரு தலைவர் சொல்கிற அளவுக்கு விசுவாசம் கொடி கட்டிப்பறந்தது. காங்கிரஸ் தான் இந்திரா,இந்திரா தான் காங்கிரஸ் என்றானது. காங்கிரஸ் இரண்டாக உடைந்தது . காளைமாடு சின்னம் காணாமல் போனது. 

பின் எமர்ஜென்சி சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் உண்டாயின . அதற்கு பிறகு கட்சி பெரிய அளவில் பிரிவினை இல்லாமல் இருந்த பொழுது வங்கத்தில் மம்தாவும் ,மகாராஷ்ட்ராவில் சரத் பவாரும் கட்சியை உடைத்தார்கள் . ஆட்சியை இழந்த காலத்தில் இருந்து கட்சியை மீட்டெடுத்து சோனியா சாதித்தார். மொத்தம் பதினொரு ஆண்டுகள் மட்டுமே பிறகட்சிகள் ஆண்ட பொழுது நாட்டை மீதிகாலமெல்லாம் ஆண்ட காங்கிரசின் வரலாறும் இந்திய வரலாறும் பிரிக்க முடியாததும் உண்மை .

பாகிஸ்தானின் தந்தை ஜின்னாவின் பிறந்தநாள் இன்று


முகமது அலி ஜின்னா பிறந்த தினம் இன்று. ஒற்றைப்படையாக பாகிஸ்தானை உருவாக்கியவர் என்று மட்டுமே நம்மால் அறியப்படுகிற ஜின்னா சுவையான முரண்பாடுகளின் ஒட்டுமொத்த கலவை. இஸ்லாம் என்கிற மதத்தின் பெயரால்ஒரு நாட்டை கட்டமைத்த அவர் மதப்பற்றாளர் எல்லாம் இல்லை. மது அருந்துவார்,உருது ஒழுங்காக பேச வராது அவரே உண்மையில் குஜராத்தி ! காந்தி படித்த அதே சட்டக்கல்லூரியில் தான் அவரும் படித்தார். பன்றிக்கறியும் சாப்பிடுவார் என்பார்கள் ; தொழுகை எல்லாம் பெரும்பாலும் செய்யவே மாட்டார். “குரானில் ஜின்னாவை விட எனக்கு அதிகமான வாசகங்கள் தெரியும் !” என்று காந்தி சொல்கிற அளவுக்கு தான் மதத்தின் மீது அவருக்கு இருந்த பற்று. 

ஜின்னா ஷியா முஸ்லீம் குடும்பத்தில் குஜராத்தில் வணிகக்குடும்பத்தில் பிறந்தார். லிங்கன்ஸ் இன்னில் சட்டம் படித்துவிட்டு மிகப்புகழ் பெற்ற வழக்கறிஞராக மாறினார் அவர். பாம்பேவில் நடந்த முதல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். கோகலே மற்றும் தாதாபாய் நவ்ரோஜி எனும் இருவரின் கவனத்தையும் ஈர்த்தார். தேசியத்தை தூக்கிப்பிடித்த ஜின்னா முஸ்லீம் லீகில் ஆரம்ப காலங்களில் சேரவில்லை. அதன் மதவாத போக்கை உண்மையில் கண்டித்தார் அவர். திலகருக்கு எதிராக ஆங்கிலேய அரசு தொடுத்த வழக்கில் ஆஜராகி அவருக்காக சிறப்பாக வாதாடினார். ‘முஸ்லீம் கோகலே !’ என்று பட்டம் கொடுக்கிற அளவுக்கு அவரின் பணிகள் இருந்தன. “இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்கான தூதர்” என்று சரோஜினி நாயுடு போற்றுகிற அளவுக்கு செயல்பட்டார் .

மின்டோ-மார்லி சீர்த்திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இம்பீரியல் சட்ட கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே காந்தியின் தென் ஆப்ரிக்க போராட்டத்தை ஆதரித்து பேசினார். முஸ்லீம் லீக் கட்சியின் மதவாத போக்கை எதிர்த்து தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் வசம் கட்சி வந்திருந்தது ; ஜின்னா அதனால் இரண்டு கட்சிகளிலும் உறுப்பினராக இருந்தார்.

ஹோம் ரூல் இயக்கத்தின் போராட்டங்களில் தளபதியாக செயல்பட்டார். தனித்தனி தொகுதிகள் என்பதை எதிர்த்தார் ஜின்னா ,இந்துக்களும்,இஸ்லாமியர்களும் தனித்தனி அங்கங்கள் இல்லை என்று தெளிவாக பேசினார். ஆனால்,காங்கிரஸ் மற்றும் லீக் ஒப்பந்தம் லக்னோவில் கையெழுத்து ஆன பொழுது தனித்தொகுதிகள்,மத ரீதியான இட ஒதுக்கீடு ஆகியவற்றை காங்கிரஸ் ஏற்க செய்தார். காந்தி காங்கிரசின் போராட்ட முறையை அமைதி வழிக்கு திருப்பியதை ஜின்னாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்ட ரீதியான போராட்டம் தேவை என்று அவர் சொன்னார் ; சட்டத்தை உடைக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். நாக்பூர் காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மேடையை விட்டு அவரைத்தள்ளியது அவரைக்காயப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். 

இதுவரை இஸ்லாமியர்களும்,இந்துக்களும் இணைந்திருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்த ஜின்னா இஸ்லாமியர்கள் தங்களை கூட்டாக இணைத்துக்கொண்டு போராட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார். சுயராஜ்ய கட்சியோடு இணைந்து கொண்டு ஆங்கிலேய அரசாங்கத்தை சட்ட சபைகளில் எதிர்த்தார். 1925 இல் ஒரு இஸ்லாமிய இளைஞன் ,”நான் முதலில் ஒரு இஸ்லாமியன் !” என்ற பொழுது அவனைக்கண்டித்து ,”நீ முதலில் இந்தியன் ; பிறகு தான் முஸ்லீம் !” என்றார். சைமன் கமிஷனை புறக்கணித்த காங்கிரசின் போராட்டத்தை ஆதரித்தார்,ஆனால்,அதில் பங்குபெறவில்லை. 

சைமன் கமிஷனுக்கு போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளை கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல்,வட கிழக்கு மாகாணத்தை தனி மாகாணமாக நடத்துதல்,மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல்,இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித்தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு புள்ளி அறிக்கையை உருவாக்கினார் இதற்கு இணையாக காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பது தான் அது ! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள். இன்னொரு புறம் ஹிந்து மகா சபை,சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். 

ஜின்னா தோல்வி முகத்தை தாங்கிக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து போய் அங்கிருந்தபடியே வட்ட மேசை மாநாடுகளில் பங்குகொண்டார். நான்கு வருடங்கள் கழித்து முஸ்லீம் லீகின் தலைவர் பதவியை ஏற்க அவரை அழைத்தார்கள். ஜின்னா இந்த்முறை காயங்களை ஆற்றிக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டு வந்திருந்தார். இந்திய அரசு சட்டம் மீண்டும் தேர்தல்களை கொண்டு வந்திருந்தது. தேர்தல்களில் போட்டியிட்டார். 

ஏற்கனவே பதினான்கு புள்ளி அறிக்கைகளில் இருந்த எல்லா கோரிக்கைகளையும் ஆங்கிலேய அரசு நிறைவேற்றியிருந்தது. 
அடுத்த நடந்த தேர்தலில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமிய தொகுதிகளையே லீக் வென்றிருந்தது. காங்கிரசுடன் பேச வேண்டும் என்றால் காங்கிரஸ் தன்னை ஒரு ஹிந்து கட்சி என்று அறிவித்துக்கொண்டு பேசவரட்டும் என்று லடாய் போட்டார். இனிமேல் சமூக மாற்றம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்துகொண்டு கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைத்தார்,பல்வேறு மாகணங்களில் பயணம் செய்து மதவாதத்தை பரப்பினார். 

காங்கிரஸ் அரசுகள் உருதுக்கு பதிலாக ஹிந்தியை மாகாண மொழியாக அறிவித்தது,வந்தே மாதரம் பாடலை பாடியது,பசுவதையை எதிர்த்து சட்டங்கள் இயற்றப்பட்டது எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக ஜின்னா மாற்றிக்கொண்டார். அல்லா மற்றும் குரானின் பெயரால் இயங்குங்கள் ; இந்து அரசை அமைக்க பார்க்கும் காஃபிர்களின் சதிக்கு பலியாகாதீர்கள் ! என்று முழங்க ஆரம்பித்தார். லாகூர் மாநாட்டில் சிறுபான்மை என்பதை தனி நாடு என்று மாற்றிக்கொண்டார் . பாகிஸ்தான் கோரிக்கை எழுந்தது. 
உலகப்போர் சமயத்தில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவு தந்தார் ஜின்னா. அப்பொழுது பாகிஸ்தான் கோரிக்கையை பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லி வைத்தார்கள் ஆங்கிலேயர்கள். வெள்ளையனே வெளியேறு என்றது காங்கிரஸ் ,”வெட்டிவிட்டு வெளியேறு !” என்று சொன்னார் ஜின்னா. காந்தியுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்,ஆனால்,ஒரு இம்மிகூட நகராமல் தன்னுடைய நிலைப்பாட்டிலேயே நிற்பார் அவர். 


“இஸ்லாமை காப்பாற்ற ஒரே வழி பாகிஸ்தான் தான் ! நாத்திகவாதிகளுக்கும்,இஸ்லாமின் பாதுகாவலர்களுக்குமான போராட்டம் இது ” என்று அழுத்தி சொன்னார். சூத்திரர்களை போல நம்மையும் ஹிந்துக்கள் ஆக்கிவிடுவார்கள் என்று சொல்லி தேர்தல்களை சந்தித்தார். முஸ்லீம் தொகுதிகளை அப்படியே அள்ளியது லீக். எண்பத்தி எட்டு சதவிகித இஸ்லாமிய ஓட்டுக்களை பெற்றிருந்தது லீக். பஞ்சாப் மற்றும் வங்கத்தில் இருந்த 207 தொகுதிகளில் 188 தொகுதிகளை வென்று மிரட்டியது. 

கேபினெட் மிஷன் பாகிஸ்தான் என்கிற கோரிக்கையை நிராகரித்து மூன்று பிரிவாக மாகாணங்களை பிரித்துக்கொள்ளும் திட்டத்தை அறிவித்தது. அதை தங்களுக்கு சாதகமான அம்சமாக காங்கிரஸ் மற்றும் லீக் இரண்டுமே அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . மாகாண அரசுகளிடம் முக்கியமான எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டுமே என்று கேட்டார் ஜின்னா. முடியாது என்று காங்கிரஸ் மறுத்தது. 

நேரடி நாள் என்று அறிவித்து பாகிஸ்தானுக்கு போராட சொன்னார் மக்களை. மதக்கலவரங்கள் வெடித்தன. வங்கம்,பஞ்சாப்,பீகார் எல்லாம் ரத்தமயமானது. நிலைமை கைமீறி போவதை பார்த்தார்கள் ; காந்தி ஜின்னாவையே நாட்டின் தலைவர் ஆக்கிவிடலாம் என்கிற அளவுக்கு இறங்கி வந்தார். நேருவும்,படேலும் கேட்கிற மனநிலையில் இல்லை. பிரிவினையை மவுன்ட்பேட்டன் முடித்துவைத்தார். 

ஜின்னா ஒரே ஒரு ஸ்டெனோ,டைப்ரைட்டரை வைத்து தன்னுடைய தேசத்தை சாதித்தார். அதற்கு பிறகு பாகிஸ்தானை ஒரு மதச்சார்பற்ற தேசமாக கனவு கண்டார் ,”இங்கே அரசு ஒரு மதத்துக்காக இயங்காது. பாகிஸ்தான் மதச்சார்பற்ற தேசமாகவே இருக்கும் !” என்று சொன்னார் அவர். ஆனால்,அவரின் மரணத்துக்கு பிறகு அவர் வளர்த்த மதவாதம் பாகிஸ்தானை இஸ்லாமிய தேசமாக்கியது. மும்பையில் தனக்கிருந்த வீட்டை ஜின்னா விற்கவில்லை ; இந்த பிரிவினை நிரந்தரமானதில்லை என்றே அவர் நம்பினார். ஆனால்,அது காலத்துக்குமான பிரிவுக்கோடாக ஆகிப்போனது !

 
 
 

காந்தியின் மரணமும்,ஹிந்து பாகிஸ்தானும் !


ராமச்சந்திர குஹா இன்று சென்னை லாண்ட்மார்க்கில் அவரின் GANDHI BEFORE INDIA நூலைப்பற்றி பேச வந்திருந்தார். அவர் பேசியவை இங்கே தொகுப்பாக. அப்படியே வரிக்கு வரி சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது ; இருந்தாலும் நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன் :உங்களின் எழுத்துக்களில் பனியா என்று காந்தியை குறிக்கிறீர்கள்.காந்தியா பனியா என்று பெரியாரும்,அம்பேத்கரும் விமர்சித்தார்கள் இல்லையா ? காந்தியை எந்த அளவுக்கு அவரின் ஜாதி ஆக்கியது ?

நான் சமூகவியல் மாணவன். ஜாதி மற்றும் வர்க்கம் பற்றி ஏகத்துக்கும் படித்தவன். அந்த தாக்கத்தில் அப்படி எழுதியிருக்கலாம். காந்தியின் தென் ஆப்ரிக்க அனுபவங்களில் பெரும்பாலும் ஜாதிக்கு இடமில்லை. இந்தியாவில் அவரின் வாழ்வைப்பற்றி பதிவு செய்யப்போகும் என்னுடைய அடுத்த நூலில் கண்டிப்பாக அதை சார்ந்த விஷயங்களை பார்க்கலாம் நீங்கள்.

கறுப்பின மக்களைப்பற்றிய காந்தியின் பார்வை எப்படி இருந்தது ?
அவர் முதலில் அவர்களை காபிர்கள் என்றே அழைக்கிறார். ஆங்கில கல்வி பெற்ற எந்த இந்திய பட்டதாரிக்கும் ஐரோப்பா தான் சிறந்த அறிவின் மூலம் அவர்கள் மேதைகள் என்கிற எண்ணம் இருந்தது. கறுப்பினத்தவரை இழிவாக பார்க்கும் அவர்களின் மனோபவத்தை காந்தியும் கடன் வாங்கியிருந்தார். பின்னர் அதை படிப்படியாக மாற்றிக்கொண்டார் அவர்.

காந்தியின் செயல்பாடுகள் தென் ஆப்ரிக்காவில் அவருக்கு ஆதரவாக இருந்த இஸ்லாமியர்களை ஓரளவுக்கு அவர் மீது நம்பிக்கை இழக்க செய்தது இல்லையா ? அது அவரின் பிந்தைய அரசியல் வாழ்வில் தாக்கம் உண்டு செய்ததா ?

காந்தியின் போராட்டங்களில் முதலில் குஜராத்தி வியாபாரிகள் ஈடுபட்டார்கள். அதில் ஹிந்துக்கள் முஸ்லீம்கள் என இருசாராரும் இருந்தார்கள். பின்னர் அவர்கள் காந்தியை விட்டு விலகியதும் தமிழர்கள் தான் அவரின் போராட்டங்களை வெற்றி பெற வைத்தார்கள். அடுத்து தென் ஆப்ரிக்க கோர்ட் கிறிஸ்துவ திருமணங்கள் தவிர மற்ற திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பு சொன்னதும் காந்தி போராடி அரசிடம் எல்லா திருமணங்களும் என்று அறிவிக்க உறுதி பெற்றார் . அப்பொழுது ஒரே ஒரு திருமணங்கள் மட்டுமே செய்துகொண்டவர்களுக்கு மட்டுமே அச்சட்டம் செல்லுபடியாகும் என்கிற உட்பிரிவை ஏற்றுக்கொண்டார். பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஒரே ஒரு திருமணம் செய்திருந்ததால் இது பெரிய நம்பிக்கை இழப்பு என்று சொல்லமாட்டேன். காந்தி தென் ஆப்ரிக்காவில் இருக்கும் பொழுதே தன் மகன் ஹரிலாலிடம் தீர்க்க தரிசனத்தோடு ,”என்னுடைய உயிர் போகும் என்றால் அது நான் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைகளுக்காக நடத்திக்கொண்டு இருக்கும் போராட்டங்களின் மூலமே உண்டாகும்” என்று குறித்திருக்கிறார்

காந்தியின் வர்க்கம் சார்ந்த பார்வை எப்படி இருந்தது ?

காந்தி பெரும்பாலும் வெறும் வர்க்க கண்ணாடி கொண்டு எல்லாவற்றையும் பார்க்கவில்லை என்பதே உண்மை. அவர் ஏழைகளின் வீடுகளிலும் தங்கினார் ; பணக்கார பிர்லாக்களின் வீட்டிலும் தங்கினார். அவர் இருவரையும் மனிதர்களாக மட்டுமே பார்த்தார். மார்க்ஸிட்டுகள் உடனே காந்தியை பூர்ஷ்வா என்று சொல்லுவார்கள். காந்தி எளிய மக்களின் மேம்பாட்டுக்கும்,அவர்களுக்கு மரியாதையான வேலையை உறுதி செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார் என்பதை பதிவு செய்ய வேண்டும். ஆகவே நான் அவர்களின் பார்வையை காந்தியை எடைபோட கடன்வாங்கவில்லை.

Displaying DSC_0693.jpg
காந்திக்கும்,ஜின்னாவுக்கும் 1897 இல் கடிதப்போக்குவரத்து நிகழ்ந்து இருப்பதாக முதல்முறையாக இந்த நூலில் குறித்திருக்கிறீர்கள். அதைப்பற்றி சொல்லுங்களேன். ?ஜின்னா இம்பீரியல் கவுன்சிலில் காந்தியின் போராட்டங்களை ஆதரித்து பேசியதை பற்றி நடந்த கடிதப்போக்குவரத்தே அவர்களுக்குள் நடந்த முதல் கடிதப்போக்குவரத்து என்று கருதி வந்தோம். ஆவணங்களை தேடிப்பார்த்த பொழுது தென்ஆப்ரிக்காவில் காந்தி இருந்த பொழுது ஜின்னாவிடம் இருந்து காந்திக்கு அதற்கு பதினோரு வருடங்களுக்கு முன்னர் இரண்டு கடிதங்கள் வந்திருக்கிறது. அதில் என்ன இருந்தது என்று தெரியாது. காந்தி தனக்கு உதவ வக்கீல்கள் தேடிக்கொண்டு இருந்ததால் அதை நான் கவனமான யூகித்தலோடு ஜின்னாவை சேர்த்துக்கொள்ள விரும்பினார் என்று அனுமானிக்கிறேன். உண்மை என்று சொல்லவில்லை. என்னுடைய அனுமானம் அவ்வளவே !

காந்தியைப்பற்றிய புத்தகத்தை ஏன் எழுத வேண்டும் நீங்கள் ? அதான் காந்தியின் சுயசரிதையே இருக்கிறதே ?

சுயசரிதையை ஒருவர் எழுதி வைத்துவிட்டுப்போவது தன்னைப்பற்றி வருங்காலத்தில் எழுதப்பட இருக்கும் வாழ்க்கை வரலாற்று நூல்களுடன் நிகழ்த்தப்படும் போராட்டம் என்றே சொல்வேன். காந்தியின் சுயசரிதையில் நேர்மை உள்ளது. ஆனால்,அது தொடர்ச்சியானது இல்லை. உறுத்தும் சம்பவங்களையே அவர் பதிவு செய்திருக்கிறார். தான் சாதித்தவற்றை பற்றி அவர் பெரிதாக குறிக்கவே இல்லை. ஆங்காங்கே தாவித்தாவி காந்தி பதிவு செய்கிறார். நிறைய இடைவெளிகள் வேறு உண்டு. காந்தியின் வாழ்க்கையில் இருக்கும் அந்த இடைவெளிகளை நிரப்புகிற பணியிலேயே ஈடுபட்டிருக்கிறேன்.

தில்லையாடி வள்ளியம்மை பற்றி நூலில் ஏதேனும் குறிப்புகள் உண்டா?
இரண்டு இடங்களில் அவரைப்பற்றி குறிப்புகள் உண்டு. பேராசிரியர் சுவாமிநாதன் என்னை தொடர்ந்து தமிழ் கற்றுக்கொள் என்று சொல்லி நான் தான் கேட்கவில்லை. இந்த நூலில் அதனால் தமிழ் மூலங்களை நான் பயன்படுத்தவில்லை. அவற்றில் ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருக்ககூடும். அதே சமயம் மிக இளம் வயதில் பெண்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவது தென் ஆப்ரிக்காவில் தான் நிகழ்ந்தது. சுதேசி இயக்கத்தில் பெண்கள் பங்கு பெறவில்லை. அந்த தென் ஆப்ரிக்க போராட்டத்தில் மிக இளம் வயதில் மரித்த வீரப்பெண்மணி வள்ளியம்மை. அவரைப்பற்றி நிறைய நேரடித்தரவுகள் இல்லை என்பதே உண்மை

காந்தியின் போராட்ட அணுகுமுறைகள் பற்றி சொல்லுங்களேன் ?
காந்திக்கு முன்னரே அமைதி வழியில் தர்ணாக்கள்,உண்ணாவிரத போராட்டங்கள் இருந்துள்ளன. அதை அரசியலில் பயன்படுத்திய முதல் ஆள் அவர் தான். சத்தியாக்ரகம் முழுக்க அரசியல் ரீதியானது. அகிம்சை அறம் சார்ந்த நேர்மை என்று சொல்லலாம். அரசாங்கங்களை ஆயுதம் ஏந்தி எதிர்க்க சொல்லவில்லை அவர். விடாது சிறைக்கு போய் அரசுகளை அவமானப்படுத்தி சாதிக்கும் முறையை அவர் நடைமுறைப்படுத்தினார். காந்தியின் போராட்டங்கள் இன்றுவரை அரசாங்கங்களை எதிர்க்கும் சிறந்த வழிமுறை. நாற்பதுகளிலேயே பிரேசிலில் அவரை வாசித்து இருக்கிறார்கள். கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்களின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் போராடியதும்,அமெரிக்காவில் நடந்த சிவில் உரிமை போராட்டங்கள்,தென் ஆப்ரிக்கா,பர்மா என்று காந்திய ரீதியான போராட்டங்கள் உலகம் முழுக்க ஏராளம். அதை மூன்றாவது புததகத்தில் பதிவு செய்ய வேண்டும்

காந்தியைப்பற்றி சுவையான சம்பவங்களை சொல்லுங்களேன் ?

காந்தி அவரின் அப்பா உயிரோடிருந்தால் கப்பலில் ஏறி போயிருக்க முடியாது என்பதை குறிப்பால் தன்னுடைய நூலில் உணர்த்துகிறார். அவரின் அப்பா அங்கே அரசில் திவானாக இருந்தார். காந்தியின் சகோதரர் லக்ஷ்மண தாஸ் இளவரசருடன் கூட்டணி போட்டுக்கொண்டு அவர் பட்டம் ஏற உதவி செய்தார். அதன் ஒரு பாகமாக நகைகள் திருடப்பட்டு இருவரும் மாட்டிக்கொண்டார்கள். அதனால் காந்தியின் குடும்பம் போர்பந்தருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னணியில் தான் காந்தி படிக்க லண்டன் போனார். மேலும் காந்தி தென் ஆப்ரிக்காவில் நல்ல வக்கீலாக சாதித்த பின்னர் கிளம்பி இந்தியாவில் வந்து தன் பிள்ளைகளை படிக்க மும்பை வந்தார் அங்கேயே ஒருவேளை நல்ல வழக்குகள் கிடைத்து இருந்தால் செட்டில் ஆகியிருப்பார் அப்படி நடக்கவில்லை. அதே போல தென் ஆப்ரிக்கா போகாமல் இருந்திருந்தால் அவருக்கு இந்தியாவின் பன்முகத்தன்மை அவருக்கு புரிந்திருக்காது. இவற்றில் எது மாறி நடந்திருந்தாலும் மகாத்மா காந்தி இந்த தேசத்துக்கு கிடைத்திருக்க மாட்டார்

காந்தியிடம் உங்களை ஈர்க்கும் விஷயம் என்ன ?
காந்தி மூன்று கண்டங்களில் வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கையை எழுதுவது என்பது மூன்று கண்டங்களின் அரசியல் வரலாறை பதிவு செய்வது உள்ளடக்கிய சவாலான பணி. கடந்த நூற்றாண்டில் அவரைப்போல உலகம் முழுக்க தாக்கம் ஏற்படுத்திய இன்னொரு ஆளுமை கண்டிப்பாக் இல்லை. அதிகம் கொண்டாடப்படும் மற்றும் வெறுக்கப்படும் கலவையான அனுபவத்தை அவரின் ஆளுமை பெற்றிருக்கிறது. ஒரு சுவையான் சம்பவத்தை பதிவு செய்கிறேன். கொண்டபள்ளி சீதராமையா நக்சலைட் தலைவர். அவர் தான் மக்கள் போர் குழுவை உருவாக்கியவர். ஆந்திர அரசு அவரைக்கைது செய்த பொழுது தப்பி ஓடினார் மீண்டும் அவர் மாட்டிக்கொண்டார். நடுவில் எங்கே போயிருந்தார் அவர் தெரியுமா ? எண்ணூறு மைல்கள் எப்படி எப்படியோ பயணம் செய்து காந்தியின் போர்பந்தர் வீட்டுக்கு போய் அவரின் குவளையில் எச்சில் துப்பிவிட்டு வந்திருக்கிறார் என்றால் காந்தி எப்படி இங்கே பாதிப்பை அறுபது வருடங்கள் கடந்தும் உண்டு செய்கிறார் என்று உணரலாம்

Gandhi Before Indiaகாந்தி அப்படி கொல்லப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ? காந்தியின் சாதனை என்ன ?

காந்தி கொல்லப்படாமல் இருந்தால் என்னாகி இருக்கும் என்று சொல்வது கடினம். அது ஒரு வரலாற்றாசிரியரின் வேலை இல்லை. காந்தி கொல்லப்பட்டது இந்தியாவில் அடுத்த இருபது வருடங்களுக்கு அமைதியை கொண்டு வந்தது.. பாகிஸ்தானில் இன ஒழிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது இங்கே வலதுசாரி இயக்கங்கள் வன்முறையை தூண்டிக்கொண்டு இருந்தன. காந்தியின் இறப்பு அவர்களைப்பற்றி பேரச்சத்தை உண்டு செய்து படேல் மற்றும் நேருவை உலுக்கியது. அவர்களை விட்டு மக்களை விலக செய்தது. அதனால் ஹிந்து பாகிஸ்தான் ஒன்று உருவாகாமல் போனது. அப்படி ஆகாமல் போயிருந்தால் வலதுசாரி சக்திகளின் அழுத்தத்துக்கு படிந்து நேரு மற்றும் படேல் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்றியிருக்கக்கூடும். இந்தியா இன்றும் மதச்சார்பற்ற தேசமாக இருப்பதற்கு காந்தியே காரணம். காந்தியை அதிகம் ஆர்.எஸ்.எஸ்,சங் பரிவார்,பி.ஜே.பி ஆகிய அமைப்புகள் அதிகம் வெறுப்பதற்கும்,வலதுசாரிகள் திட்டுவதற்கும்
இதுவே காரணம்

உங்களின் இந்த நூலை ஆவணங்களாக இருக்கிறது,சலிப்பாக இருக்கிறது என்று இந்தியா டுடேவில் ஒருவர் குறித்திருந்தாரே ?

அவர் மீது எல்லாவகையான மரியாதையுடன் சொல்கிறேன் அவர் பெரும்பாலும் நூல்கள் வாசிப்பதில்லை. என் நூல்கள் நல்ல வாசிப்பு அனுபவத்தை தரும். இந்த நூலை வாசித்துவிட்டு சொல்லுங்கள். நன்றி

காந்தி,படேல்,மோடி !


பெரும்பான்மையினரின் மதவாதம் தேசியம் என்று கருதப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் !- நேரு ஜனவரி ஐந்து,1961.
நேருவை முன்னிறுத்தாமல் தொடர்ந்து வலதுசாரி இயக்கங்கள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் முதலிய ஹிந்துத்வா அமைப்புகள் மற்றும் மதவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் பி.ஜே.பி ஆகியவை படேலை ஏன் இப்படி முன்னிறுத்துகிறார்கள். படேல் இந்த தேசத்தை ஒன்று சேர்த்தவர் என்பதும்,காந்தியின் மரணத்துக்கு பின்னர் அவரே ஹிந்துத்வா அமைப்புகள் ஆபத்தானவை என்று உணர்ந்தார் என்பதும் சந்தேகமே இல்லாத உண்மைகள். அதே சமயம் அவரின் மதத்தைப்பற்றிய பார்வை என்ன என்று பார்க்கிற பொழுது அவர் மதவாதத்தை ஆதரிக்கிற ஒரு ஆளுமையாகவே இருந்திருக்கிறார் என்பது தான் கசப்பான உண்மை. அதை விவரிக்கும் எ.ஜி.நூரனியின் கட்டுரையின் உள்ளடக்கம் மட்டும் இங்கே :

நவம்பர் 1945 இல் ப்ரன்சுக்லால் மபாட்லால் ஹிந்து நீச்சல் குளத்தை ஒரு காங்கிரஸ் தலைவர் துவங்கி வைத்தார். அது அன்று முதல் இன்றுவரை ஹிந்துக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நீச்சல் குளம். அதைத்திறந்து வைத்தவர் படேலே தான் . இதை அழகாக கடல் நீரில் கூட பங்கு தர மாட்டார்கள் காங்கிரஸ் காரர்கள் என்று அரசியலாக்கினார் ஜின்னா !

படேல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து மகா சபையோடு நெருக்கமாகவே இருந்தார். வைஸ்ராய் வேவல் இங்கிலாந்து அரசருக்கு எழுதிய கடிதத்தில் படேல் வெளிப்படையாகவே மதவாதியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார் (Transfer of Power, Volume 8, page 772).

கிறிஸ்டோபர் ஜெப்ரோல்ட் இப்படி பதிவு செய்கிறார் :

“ஜூனாகாதுக்கு நவம்பர் 12, 1947 இல் வந்த படேல் “சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம். இங்கே இருக்கும் சிலைகளை மீண்டும் உருவாக்குவது ஹிந்துக்களின் பெருமை மற்றும் நம்பிக்கையை மீட்பது போல இருக்கும் !” என்று பேசினார்

இன்றைக்கு படேலை கொண்டாடும் பலபேர் ராஜாஜியை,நேருவை முற்றாக நிராகரிப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நேரு மத நம்பிக்கை இல்லாதவர் என்பதால் அவரை அவர்கள் நிராகரிக்கவில்லை. நேரு மதசார்பின்மை கொண்டவராக இருந்ததே அவர்களின் கோபம். ராஜாஜி பகவத் கீதை,உபநிஷதங்கள் படித்திருந்தாலும் அவர் மதச்சார்பின்மையில் உறுதியாக இருந்தார். ஏன் தீவிர மத நம்பிக்கை கொண்ட ராஜேந்திர பிரசாத்தை படேல் ராஜாஜியை விடுத்து இந்தியாவின் ஜனாதிபதி ஆக்கினார் என்று நீங்கள் உணரமுடியும் . படேல் தன்னுடைய மகன் நரசிம்மனுக்கு எழுதிய கடிதத்தில் ,”ராஜாஜி ஒரு அரை முஸ்லீம் !” என்று வெறுப்போடு பதிவு செய்கிறார்

இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு படேல் மட்டுமே காரணம் என்பது போல பலர் எழுதுகிறார்கள். மன்னர்களை ஏற்க வைத்த மவுண்ட்பேட்டன்,தொடர்ந்து தீவிரமாக இயங்கிய மேனன் ஆகியோரும் முக்கிய பங்காற்றினார்கள் என்பதை மறைக்கக்கூடாது. கூடவே இளவரசர்கள் கூட்டமைப்பின் தலைவரான போபால் நவாப் நான் ஜின்னாவுக்கு ஆதரவானவன் என்று சொன்னதும் ஹிந்து மன்னர்களை இந்தியாவை நோக்கி செலுத்தியது என்பதும் வரலாறு

காந்தியின் பிரார்ததனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது ; கைது செய்யப்பட்ட மதன்லால் தான் தனி ஆளில்லை என்று தெளிவாக சொல்லியிருந்தான். காந்தியின் படுகொலைக்கும் அந்த குண்டுவெடிப்புக்கும் இடையில் பத்து நாட்கள் இடைவெளி இருந்தது. உள்துறை அமைச்சராக இருந்த படேல் தீவிரமாக் செயலாற்றவில்லை. தொடர்ந்து முடுக்கி இருந்தால் காந்தியை காத்திருக்க முடியும். ஆனால்,நேருவுடன் பிப்ரவர் 27 அன்று தான் குண்டுவெடிப்பு வழக்கினைப்பற்றி தினமும் கவனித்துக்கொண்டு இருந்ததாக குறிக்கிறார் (Durga Das (Ed.) Sardar Patel’s Correspondence (SPC); Navajivan Publishing House; Volume 6, page 56).

ஜின்னாவின் கோபத்துக்கும்,தீவிர இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டு பாகிஸ்தான் என்கிற தேசத்தை ஆதரித்தவர்களையும் தொடர்ந்து எதிர்த்த ஆசாத்தை இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என்ற அவரை படேல் அவமானப்படுத்தினார். அவர் அமைச்சரவையில் இருந்ததை எதிர்க்கவும் செய்தார்.The (Collected Works of Mahatma Gandhi, Volume 9, page 408). டிசமபர் 27, 1947 இல் முஸ்லீம் லீகை கலைத்துவிட்டு காங்கிரசில் இணையுங்கள் என்று இஸ்லாமியர்களிடம் பேசியிருந்தார் ஆசாத். (Vide the writer’s The Muslims of India: A Documentary Record; Oxford University Press, 2003; page 65 for the full text).

அதே லக்னோவில் ஏழே நாளுக்கு பின்னர் பேசிய படேல் ஆசாத்தின் தேசபக்தியை கேள்வி கேட்டதோடு நில்லாமல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து மகா சபை உறுப்பினர்களை காங்கிரசில் சேரச்சொல்லி அழைப்பு வேறு விடுத்தார்அங்கேயே “இந்திய முஸ்லீம்களை நான் கேட்கிற கேள்வியெல்லாம் நீங்கள் ஏன் காஷ்மீர் பற்றி வாயை திறப்பதே இல்லை ஏன் பாகிஸ்தானின் செய்கையை கண்டிக்கவில்லை ? இது உங்கள் மீது சந்தேகத்தையே உண்டு செய்கிறது. நன்றியோடு இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு கிளம்ப வேண்டியது தான் “என்று முஸ்லீம்கள் மத்தியில் பேசினார் படேல்

காந்தியின் படுகொலைக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நோக்கி ” உங்களின் அறிவை,பணிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். தீவிரப்போக்கை கொண்டிருக்காதீர்கள். நன்றி இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டியது தான், இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்புவர்கள் ஹிந்துஸ்தான் என்கிற குதிரையை விட்டுவிட வேண்டும். நீங்கள் காங்கிரசில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன் !” என்றும் பேசினார்

November 10, 1949 இல் காங்கிர்ஸ் கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் நுழையலாம் என்கிற தீர்மானத்தை வேறு படேல் நிறைவேற்றினார். நேரு இந்தியாவில் இல்லாத நேரத்தில் இதை அவர் செய்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். (Jaffrelot notes, page 90). நேரு வந்ததும் அந்த தீர்மானம் November 17, 1949 அன்று திரும்ப பெறப்பட்டது

படேல் இஸ்லாமிய அதிகாரிகள் எல்லாரும் துரோகிகள் அவர்கள் பாகிஸ்தானுக்கு உதவுவார்கள் ஆகவே அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தார் நேரு அதற்கு உடன்படவில்லை என்று சர்வபள்ளி கோபால் பதிவு செய்கிறார். இந்தியாவில் இருந்த முஸ்லீம்களை பணயமாக பயன்படுத்தி பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்துக்களை நன்றாக நடத்த வைக்கலாம் என்று படேல் நினைத்தார். நேரு முஸ்லீம் அகதிகளை கவனிக்க இஸ்லாமியர்களை நியமிக்கலாம் என்று முனைந்த பொழுதும்,சில பகுதிகளை டெல்லியில் இஸ்லாமிய அகதிகள் தங்க ஒதுக்கிய பொழுதும் கடுமையாக எதிர்த்தார். ராணுவத்தை கொண்டு வந்து இஸ்லாமியர்களை காப்பது எந்த பயனையும் தராது என்றும் எழுதினார் படேல் (Gopal; Volume 2, pages 15-16).

நேரு மறுவாழ்வுக்கான அமைச்சரான மோகன்லால் சக்சேனாவை டெல்லி மற்றும் ஐக்கிய மாகாணத்தின் இஸ்லாமிய கடைகளை சீல் செய்ய சொன்னதற்காக ” நீங்கள் எல்லாரும் அகதி மனோபாவத்தில் அதைவிட ஆர்.எஸ்.எஸ் மனோபாவத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது !” என்று கடிந்து கொண்டார் (ibid, page 77).

ஸ்டாபோர்ட் க்ரிப்சிடம் படேல் பேசுகிற பொழுது கலவரங்களில் இருந்து ஒரு முடிவு கிடைத்துக்கொண்டிருக்கிறது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வென்றிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்தப்பட்டிருந்தால் காங்கிரசுக்கு அது உதவியாகவும்,முஸ்லீம் லீகை பலவீனப்படுத்தவும் உதவி இருக்கும் என்று இயல்பாக குறித்தார்.
ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் படேல் ,”வங்கத்தில் அமைதியும்,ஒழுங்குமில்லை என்று தெரிகிறது. என்றாலும் யாரும் இதற்கு பொறுப்பில்லை ; இது முஸ்லீம் லீகுக்கு நல்ல பாடம். எண்ணற்ற முஸ்லீகள் இறந்து போனார்கள் என்று அறிகிறேன் நான் !”
(ibid, page 49).

நேரு பீகார் கலவரங்களால் அதிர்ந்து போயிருந்தார். “முஸ்லீம்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நடந்த சதி அது !” என்று அதிர்ந்து எழுதுகிறார் அவர். ஆனால்,படேல் ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொண்டார்

ஒரே ஒரு கருத்து விவாததுக்கு உரியது ; இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் உண்டாக உதவியுள்ளார்கள். முஸ்லீம்கள் நேர்மையான குடிமகன்கள் என்கிறார்கள். உங்களை எப்படி ஒரே நாளில் நம்ப மடியும் ? உங்களின் மனசாட்சியை நீங்கள் உண்மையனவர்களா என்று கேட்டுக்கொள்ளுங்கள் !” என்று பேசினார் படேல் January 3, 1948 (ibid, page 128). இஸ்லாமியர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றிவிட்டு பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு இடம் தரலாம் என்று கேபினெட் கூட்டங்களில் சொல்கிற அளவுக்கு படேல் போனார்
Vazira Fazila-Yacoobali Zamindar; The Long Partition; Oxford University Press, Karachi, 2008; page 39. மே 4, 1948,அன்று நேருவிடம் “பொதுமக்கள் எக்கச்சக்க வெறுப்பில் இருக்கிறார்கள். நாம் பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர்களை தடுக்கவில்லை என்று குறைபடுகிறார்கள் என்று நேருவுக்கு எழுதினார். (SPC, Volume 6, page 319). ஐ பி யை பயன்படுத்தி அமைச்சரவையில் இருந்த இஸ்லாமியர்களை வேவு பார்க்கிற அளவுக்கு படேலின் சந்தேகங்கள் விரிந்து கொண்டே போயின என்பது தான் வரலாறு. மேலும் வாசிக்க.

http://www.frontline.in/cover-story/patels-communalisma-documented-record/article5389270.ece
நன்றி : Frontline