‘எது உண்மையான அழகு?’- சோனம் கபூரின் கடிதம்


டீனேஜ் வயதில் தன்னுடைய படுக்கையறை கண்ணாடியின் முன் கவலையோடு நின்று கொண்டிருக்கும் அன்புத் தோழிக்கு. சோனம் கபூர் எழுதிக்கொள்வது.

நீ ஏன் நான் ஒரு திரையுலக நாயகியை போல மின்னவில்லை என்று பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிற போதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். (கனவு நாயகி Beyoncé கூட ஒப்பனை இல்லாமல் ஒளிர மாட்டார் என்று நான் சத்தியம் செய்கிறேன்.)

Image result for சோனம் கபூர்

அப்போது எது தான் உண்மை: ஒவ்வொரு முறை மின்னும் கேமிராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை அறையில் ஒன்றரை மணிநேரம் தவங்கிடக்கிறேன். 3-6 பேர் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒப்பனை செய்கிறார்கள். ஒரு தேர்ந்த அழகுக்கலை நிபுணர் என் நகங்களைப் பொலிவாக்குகிறார். என் கண் புருவங்கள் பிறைநிலா போல வளைக்கப்படுகின்றன. என் மேனி முழுவதும் ஒப்பனை பூச்சுக்கள் நிறைத்து மூச்சடைக்க வைக்கின்றன.

காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். சமயங்களில் படுக்கப்போவதற்கு முன்னும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிட கூடாது என்பதைத் தீர்மானிக்க மட்டுமே ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறேன்.  நான் போட்டுக்கொள்ளும் ஒப்பனை பொருட்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், நான் உண்கிற உணவில் அதை விட மிகக்குறைவான சத்துக்களே உள்ளது என்கிற அளவுக்கே நான் சாப்பிட முடிகிறது. நான் அணிவதற்கு உரிய கவர்ந்து இழுக்கும் ஆடைகளைத் தேர்வு செய்யவே ஒரு குழு இருக்கிறது.

இவ்வளவு போராடியும், “மாசற்ற” முழு அழகு சமயங்களில் வெளிப்படுவதில்லை. போட்டோஷாப் புண்ணியத்தில் நான் பேரழகியாகப் படைக்கப்படுகிறேன்.

என்னை அழகியாகக் கட்ட ஒரு பெரும் படை, எக்கச்சக்க பணம் தேவைப்படுகிறது. ஒரு திரை நாயகியை கனவுக்கன்னி போலக் காட்சியளிக்க வைக்கப் பல மணிநேரங்கள் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அது உண்மையில்லை. எங்களைப் போல அழகியாக வேண்டும் என்று கனவு காண வேண்டாமே!

நம்பிக்கை மிளிர்பவராக ஆக ஆசைப்படுங்கள். அழகாக, கவலைகள் அற்றவராக, ஆனந்தம் மிக்கவராக இருக்க ஆசைப்படுங்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கவலையில்லாமல் கம்பீரமாக வாழுங்கள்.
நண்பர்களே. அடுத்த முறை 13 வயது பெண் ஒருத்தி மாசு மருவற்ற, பளபளக்கும் கூந்தல் கொண்ட ஒரு பாலிவுட் நாயகியின் படத்தைப் பார்த்து சொக்கி நின்றால், அந்தக் குறைகளற்ற பேரழகின் பின்னிருக்கும் குன்று போன்ற குறைகளைக் கொட்டுங்கள்.

அந்த வளரிளம் பருவப் பெண் எந்த ஒப்பனைகளும் இல்லாமலே எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று சொல்லுங்கள். அவளின் புன்னகை, கள்ளமில்லாத சிரிப்பு, அறிவுத்திறம், இயல்பான நடை என்று எதையேனும் பாராட்டுங்கள்.

அவளை நான் குறையுள்ளவள் என்கிற நம்பிக்கையோடு வளர விடாதீர்கள். கட்டவுட்களில் கலக்கலாகச் சிரிக்கும் பெண்ணிடம் இருக்கும் எதோ ஒன்று தன்னிடம் இல்லை என்று போலியாக அவள் ஏமாற விடவேண்டாம். இயல்பாக இருப்பதே இனிமை என உணர வையுங்கள். கட்டவுட் நாயகி போல ஆவது ஒன்றும் அவளைப்போன்ற உண்மை அழகிக்கான இலக்கு இல்லை எனப் புரியவையுங்கள். – Sonam Kapoor🙂

இந்த மொழிபெயர்ப்பு தி இந்து நாளிதழின் இணைய களத்தில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு நன்றி:

http://tamil.thehindu.com/opinion/blogs/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/article9779623.ece

Image may contain: 1 person

Advertisements

ஆண்,பெண் உயிர்மொழி !


உளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் உயிர்மொழி நூலை வாசித்து முடித்தேன். நூற்றுக்கு சற்றே அதிகமான பக்கங்கள் இருக்கும் இந்த நூலை படித்து முடிக்கும் பொழுது பரிணாமத்தின் வளர்ச்சியில் நடக்கும் ஆண்-பெண் இருவருக்கும் இடையேயான போராட்டத்தின் பிரமிப்பை உணர்வீர்கள். 

தங்களுக்கான இணையை தெரிவு செய்கிற உரிமை பெண்களிடமே ஒரு காலத்தில் இருந்தது. காலப்போக்கில் அதை ஆண் பறித்துக்கொண்டான். பொனோப்போ என்கிற மனிதர்களோடு இரண்டு சதவிகிதம் அளவுக்கே வித்தியாசமுள்ள ஜீன் கட்டமைப்பை கொண்டுள்ள வானர இனத்தில் தாயே தலைமை தாங்குகிறாள். சிம்பன்சிக்களிலும் அப்படியே. தாய் தெய்வங்களே ஆரம்ப கால தெய்வங்களாக உலகம் முழுக்க அதிகமாக காணப்படுகின்றன. பண்டைய இலக்கியங்களும் அப்படியே வழிமொழிகின்றன. 

ஆண்கள் பாலியல் ரீதியான உணர்வுகளை தாயின் ஸ்பரிசத்தில் இருந்தே முதன்முதலில் பெறுகிறார்கள் என்பதை ஹாரி ஹார்லோ சிம்பன்சி குட்டியை தன்னுடைய தாயிடம் இருந்து பிரித்து வைத்திருந்த குட்டி பெண் மோகமே இல்லாமல் இருந்ததன் மூலமும்,மோரிஸ் என்பவரும் தன்னுடைய மனைவியின் அரவணைப்பில் வளர்ந்த குட்டி அவ்வாறே இருப்பதை சொல்லி அதை உறுதிப்படுத்தினார். மீனி என்கிற அறிஞர் தாயால் நக்கப்படாத எலி கலவியலில் சரி வர இயங்குகிற இணைப்புகளை பெற முடியாமல் போனதை கண்டறிந்து மேலும் அதிர்ச்சி சேர்த்தார். இவ்வாறு மரபணு முன்னேற்றத்துக்கு அன்னையின் பங்களிப்பு தேவை. 

தாயின் கருவில் ஆரம்ப காலத்தில் இருக்கிற பொழுது எல்லாருமே பெண்ணாக தான் முதலில் இருக்கிறோம். அதற்குபின்னரே எக்ஸ் குரோமோசோம் வெளிப்பட்டு ஆணாக மாறுகிறார்கள் சிலர். ஆண்களின் வீரியத்தை பரிணாமத்தின் ஆரம்பகாலத்தில் அறிந்து கொண்டு பெண்கள் தெரிவு செய்ய பயன்படுத்தியது ஆணின் கலவி வீரியத்தையே. அதற்கு ஈடுகொடுக்க பாக்குலம் என்கிற எலும்பை துறந்து ஆண்கள் ஈடு கொடுத்தார்கள். அதற்கு பின்னர் வேட்டுவ குணம் முன்னிலைப்பட அதில் வென்ற ஆணுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. அதற்கு பின்னர் ஆயுதம் ஏந்தி போராடி வென்றவன் தெரிவில் முன்னணியில் இருந்தான். பின்னர் அதுவும் போய் அறிவாளி தேர்ந்தெடுக்கப்பட்டான். பெண் உடலுறவில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க ஆணே அதிகம் இயங்க வேண்டியது ஆயிற்று. உருவம் அறிந்து பொருந்தும் திறன் அவனுக்கு அதிகம் தேவைப்பட்டது. அதற்காக உருவம் அறிந்து பொருந்தும் குணமான stereognesis வளர்ந்தது. அது பிற துறைகளிலும் அவனை பெரிதாக இயங்க வைத்தது. அதே சமயம் அவனின் பேச்சு,உணர்வுகளை உணரும் திறன் ஆகியன மங்கின. கண்களைத்திறந்து கொண்டே ஒரு பெண் கலவியில் இன்பமுற்றால் மட்டுமே அவனுடைய உடலில் பரவசமூட்டும் சுரப்பிகள் சுரந்தன. பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு ஸ்பரிசத்தை உணர்தலை செய்தார்கள். 

ஆரம்பத்தில் சொன்ன மரபணு முன்னேற்றத்துக்கு பிறகு குட்டியை அதன் போக்கில் தன்னுடைய சந்ததியை பெருக்கும் ஜீன்களை கொண்டிருக்கும் இணையை தேடி நகர்வதற்கு அன்னை அனுமதிப்பதே எல்லா விலங்குகளிலும் வழக்கம். 

ஆனால்,மனித பெண்கள் இதை பெரும்பாலும் செய்வதில்லை. காரணம் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களிடம் இருந்து வெகு காலத்துக்கு முன்னரே பறிக்கப்பட்டு விட்டது. சீதை எப்படி ராமனை தேர்வு செய்தாள் என்பதை பார்த்தாலே அவ்வுரிமை நிலவி இருக்கிறது என்பது புலப்படும். பெண்கள் கல்வி கற்க முடியாத முட்டாள்கள்,கடவுள் உன்னை ஈனமாகவே படைத்தார் என்கிற பொய்கள்,அவர்கள் வெளியே வரக்கூடாது,கற்பை போற்றி அவர்கள் இயங்க வேண்டும்,கணவனை மீறக்கூடாது என்று அவளை திட்டமிட்டு ஆணினம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தன்னுடைய பாலியல் தேவைகளை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனக்கு பிறக்கும் ஆண் வாரிசுகளை கொண்டு பெண்கள் தீர்க்க ஆரம்பித்தார்கள். அப்படி உண்டாகி நிற்பது தான் அம்மா செண்டிமெண்ட்,மருமகளிடம் மகனை சேரவிடாமல் தடுக்கும் அம்மாக்கள்,பையனை திருமணம் பக்கம் ஒதுங்கவே விடாமல் தடுக்கும் தாய்மார்கள். ஆணுக்கு தான் பேச்சிலும்,உணர்வுகளை கப்பென்று பிடித்துக்கொள்வதிலும் சாமர்த்தியமில்லையே ? அதனால் அவனை வேலைகள் செய்ய விடாமல் தடுத்தும்,அம்மா செண்டிமெண்ட் மூலமும்,குரலை மாற்றியும் பெண்கள் தங்களின் ஆளுகைக்குள் வைத்திருக்கிறார்கள். போராட்டம் தொடர்கிறது. 

விகடன் பிரசுரம் 
பக்கங்கள் :128
விலை : எழுபது