புரட்சி ரோசா !


மார்டின் லூதர் கிங் எனும் பெயருக்கு இணையாக உலக வரலாற்றில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான போரில் உச்சரிக்கபடவேண்டிய இன்னொரு பெயர் ரோசா பார்க்ஸ். மாண்டிகோமேரி பேருந்தில் டிக்கெட் எடுத்து இருக்கையில் அமர்ந்தவண்ணம் போய்க்கொண்டு இருந்தார் ரோசா
பார்க்ஸ்.பிறப்பால் ஆப்ரோ அமெரிக்கர் அவர்.

கணவர் முடிதிருத்தும் வேலை செய்து கொண்டிருந்தார். கறுப்பின மக்கள் பேருந்தில் தனி இருக்கைகளில் அமர வேண்டும் ; அதுவும் முன்புறம் இருந்து ஏறக்கூடாது. பின்புறம் இருந்தே ஏற வேண்டும். வெள்ளையின மக்கள் வந்தால் இடம் கொடுத்து எழுந்து நகர்ந்துவிட வேண்டும். டிக்கெட் எடுத்திருக்கிறேன் நான் என்று விதியெல்லாம் பேசக்கூடாது.

ஒரு நாள் அப்படி பேருந்தில் உட்கார்ந்தவாறு போய்க்கொண்டு இருந்தார் ரோசா. வெள்ளையர் வந்ததால் பின்பக்கம் போய் உட்கார சொன்னார் ஓட்டுனர். முன்பக்கம் போனார் ரோசா. கொட்டும் மழையில் பேருந்தைவிட்டு அவரை இறக்கினார் அந்த ஓட்டுனர்

அடுத்த முறை,அதே பேருந்து,அதே சூழல்,அதே ஓட்டுனர். இடம் மாற சொன்னார் ஓட்டுனர். “எழ மாட்டேன் நான் !” என்று அமர்ந்திருந்தார் ரோசா. மூன்று ஆப்ரிக்க அமெரிக்கர்கள் எழுந்தார்கள். அப்பொழுதும் ரோசா எழ மறுத்தார். முடியாது என இவர் மறுக்க மறுத்தால் கைது செய்வோம் என கண்டக்டர் பயமுறுத்த செய்யுங்கள் என கம்பீரமாக சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர்.கைது செய்யப்பட்டார்.
“எனக்கு நாற்பத்தி இரண்டு வயது தான் ; நான் களைப்பாக இல்லை. முதுமை என்னை அழுத்தவில்லை. ஆனால்,எழுந்து,எழுந்து அடக்குமுறைக்கு பயந்து பயந்து களைப்படைந்து விட்டோம் நாங்கள்.அதனால் எழ மறுத்தேன்.”என்றார் ரோசா

கறுப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்.லூதர் கிங் பின் அணி
திரண்டார்கள்;நடந்தே போனார்கள் ,டாக்சியில் போனார்கள் ஆனால் ரோசாவுக்கு நீதி கிடைக்கும் வரை பேருந்தில் ஏறமாட்டோம் என ஒரு மாகாணமே தீர்க்கமாக நின்றது வரலாறு. நாற்பதாயிரம் மக்கள் அறப்போரில் பங்கு கொண்டார்கள். நடந்து போனார்கள் ; டாக்சி டிரைவர்கள் இலவசமாக தங்கள் வண்டிகளில்
அழைத்துப்போனார்கள். ஆனால்,பேருந்தில் மட்டும் ஏறவில்லை இவர்கள்.

ரோசவுக்கு வேலை போனது ; பல இடங்களில் போராடிய மக்கள் தாக்கப்பட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை ; உரிமைக்கான கனத்த மவுனம் மட்டுமே இருந்தது அங்கே.

ஒரு அவலம் கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான்,ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள் )அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள் .சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது.தன கணவர்,பிள்ளை,சகோதரர்,தாய் என அனைவரையும் கேன்சருக்கு
இழந்து தனிமையில் இருந்த பொழுதெல்லாம் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.”விடுதலை போரின் தாய் !”என அழைக்கப்படும் அவரின் நினைவுதினம் இன்று .”அன்று அவர்
எழ மறுத்த்தால் தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நடக்கிறோம் !” என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள்

காது கேட்பதே இல்லை யாரேனும் பிச்சை கேட்கிற நொடிகளில் கண்கள் தெரிவதே இல்லை எளியவர்கள்


காது கேட்பதே இல்லை 
யாரேனும் பிச்சை கேட்கிற நொடிகளில் 

கண்கள் தெரிவதே இல்லை 
எளியவர்கள் அடித்து வீழ்த்தப்படும் பொழுது 

கால்கள் நடப்பதே இல்லை 
ஆபத்து என்று யாரேனும் அலறும் 
குரல் கூப்பிடும் பாதையில் 

கரங்கள் நீள்வதே இல்லை 
பிறர் கண்களில் இருந்து 
நீர்த்துளிகள் சிதறி விழும் கணத்தில் 

நெஞ்சம் குமுறுவதே இல்லை 
அநியாயத்தின் வாட்கள் 
அபலைகளை அரிந்தெடுக்கும் அக்காலத்தில் 

மூளையின் சுருக்கங்களில் தேங்கி இருக்கும் 
உண்மைகளை தோண்டி எடுக்க முயல்வதே இல்லை 

சாக்ரடீஸ்,வள்ளுவன் என்று எத்தனை பேரை படித்தாலும் 
அவற்றை மேற்கோள்களுக்கு மட்டுமே 
பயன்படுத்த பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறேன் 
பாராட்டு விழாக்களில் தேவைப்படலாம் 

நா அடங்கிக்கொள்கிறது வல்லவன் 
வகுத்து வழி காட்டுகிற 
தருணங்களில் 

எல்லாம் இருந்தும் எதுவும் இயங்குவதில்லை 
அதனாலேயே நான் வாழத்தெரிந்தவன் 
என்று போலி புன்னகையால் குறிக்கிறார்கள் 
வாழ்க்கை வனப்பானது இல்லையா

 

விலை போகுதல்


விலை போகுதல்

உண்மை என் கரங்களில் இருக்கிறது
பொய் என் கிரீடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது
புன்னகை பல்லில் இருந்து நழுவதற்கு முன்னமே
வன்மம் பாய்ந்து போர் செய்கிறது
காணாத கடவுளுக்கு கீதங்கள் பாடுமுன்னே
சாத்தானின் கச்சேரி களை கட்டிவிடுகிறது
உயிரை காத்த உத்தமர் என பல்லவி பாடுவதற்குள்
ரத்தம் குடித்த பெருங்கதைகள் உலகை உலுக்குகின்றன
ஜெயித்தேன் என்று சொல்லிவிடத்தான் ஒவ்வொருவரும்
ஆசைப்படுகிறார்கள்
ஆனால்,ஒவ்வொரு முறை ஜெயித்தேன் என்கிற பொழுதும்
தோற்றேன் என்று தான் கேட்கிறது காதுகளுக்கு !
விலை போகுதல் உலக வழக்கா என்ன ?

கூடடைந்த பறவைகளின்இறுதிக்கணங்களை காலக்குடுவையின்மணல்கள் உதிர்த்து எறிகின்றன நெருக்கியடித்த உணவுச்சாலைகள்,எலிப்பொறி விடுதிகளின் ஏகாந்த பொழுதுகள் அரைகுறை


கூடடைந்த பறவைகளின்
இறுதிக்கணங்களை காலக்குடுவையின்
மணல்கள் உதிர்த்து 
எறிகின்றன 

நெருக்கியடித்த உணவுச்சாலைகள்,
எலிப்பொறி விடுதிகளின் ஏகாந்த பொழுதுகள் 
அரைகுறை தூக்கத்தின் அற்புதக்கணங்கள் 
பட்டாம்பூச்சியின் பிய்ந்த சிறகின் 
வண்ணம் போல மனவிரலில் மெத்தாக 
ஒட்டி வெளுக்கலாம் 

சட்டை மாறுதலும்,அசட்டைப்பொழுதுகளும் 
இலையோடு உதிர்ந்து வெயிலில் 
உடையும் நொடி கோழியின் இறுதி ஓட்டம் 
போல முடிந்து விட்டது 

கார் துரத்தும் நாய் போல 
கல்லூரி கடைசிவாசல் வரை 
அழைத்துப்போய் விடுவார்கள் நட்பு தேவர்கள் 

கார்டை கேட்கும் டீன்
ப்ராக்சி போடும் நண்பன் 
கவிதை மொழிபேசும் யுவதிகள் 
தூங்கும் பிள்ளையின் தலை தாங்கிய தலைமுறை இருக்கைகள் 
கடலளவு காதலர்கள் கண்டாலும் 
வெட்கப்படாமல் நிற்கும் கம்பீர கேலரி 
ஒருநாள் யாவும் விட்டுப்போகும் என்று 
சிவப்பு வண்ணம் பூசி 
பேசினார்களோ ?

தீராத கணமொன்றும் 
அழியாத வாழ்வொன்றும் 
தடுக்காத நடையொன்றும் 
அகலாத நினைவொன்றும்
பிரியாதப்பிணைப்பொன்றும் 
கல்லூரி வாழ்க்கையாகி விடக்கூடாதா

 

பேரழகிகள் நிரம்பிய உலகில் குதிப்பது எளிதல்ல அவர்கள் சில சமயம் அழுவார்கள் சொல்லாத சொற்களில்


பேரழகிகள் நிரம்பிய உலகில் 
குதிப்பது எளிதல்ல 

அவர்கள் சில சமயம் அழுவார்கள் 
சொல்லாத சொற்களில் வாழ்வின் கதைகளை 
பாடம் பண்ணிக்குமைவார்கள் 

வாளேந்தி வருபவர்களை 
கனிவால் கையறு நிலைக்கு தள்ளுவார்கள் 

உருண்டோடும் கண்ணீரில் உலகுக்கே அழுவார்கள் 

எல்லாருக்கும் கவலைப்பட்டு 
சிலருக்காக உழைத்து 
ஊருக்காக அன்பு செய்து 
பேருக்காக வாழ்ந்து 

சுருக்கங்கள் தேக்கி 
கதைகளின் முள்நீக்கி 
வெறித்த பார்வை ஒன்றைப்பார்க்கும் 
அத்தனை பேரழகிகளுக்கும் சொல்வதற்கு 
ஆயிரம் கதைகள் உண்டு 

சமையல் கட்டு,
அலுவலக ஒப்பனை அறை,
பேருந்து இருக்கைகள் 
படுக்கையறை 
என்றே வரையறுக்கப்பட்ட 
பேரழகிகள் உலகத்தை 
தப்பியும் எட்டாத 
தாளாத வெம்மை சுடும் 
அவர்கள் 
வியர்வைத்துளிகள் 
தெறித்த இடமெங்கும் 
கருகி உதிர்கின்றன கதைகளின் சுவடுகள் 
கொஞ்சம் கரிசனத்தோடு 😦

மழை இருட்டின் முடுக்குகளில் கரைந்து போன ரகசியங்களை முத்தமிட்டு நைந்து போன பிரியங்களை செப்பனிட்டு மாய்ந்து


மழை இருட்டின் முடுக்குகளில் 
கரைந்து போன ரகசியங்களை 
முத்தமிட்டு 
நைந்து போன பிரியங்களை செப்பனிட்டு 
மாய்ந்து போன மண்ணிற்கு 
திவலைகளில் திலகமிட்டு 
கடக்கையில் மரித்துப்போன 
எல்லா ஊர் நீர்நிலையும் 
அழுவதாக அனுமானம் !

கசக்கப்பட்ட மலர்களில் புறக்கணிக்கப்பட்ட முட்களின் காவியங்கள் காணடிக்கப்படுகின்றன மனச்சிறகின் பிய்ந்த


கசக்கப்பட்ட மலர்களில்
புறக்கணிக்கப்பட்ட முட்களின் காவியங்கள்
காணடிக்கப்படுகின்றன
மனச்சிறகின் பிய்ந்த மிச்சத்தில்
பெருங்கானகம் கடந்த பறவையின்
பிரயத்தனம் ஒளிந்து நகைக்கிறது
சிதறிக்கிடக்கும் காசுகளில்
காலங்காலமாக கரைந்து வழிகிறது தெருப்பாடகனின்
கேட்கப்படாத கீதம்
போராளியின் உடம்பின் மீது மொய்க்கும்
ஈக்களுக்கு இணையாக
அழுகிற மனிதர்கள் வருவதற்கு
முன்னும் பின்னும் மறதியின் புடவை
கிழிந்து போர்த்திக்கொள்கிறது
மரணத்தை
தற்கொலைகளுக்கு நடுவே வாழ்தலின்
பிரயாசைகள் தத்திக்கரைதல்
போலவே போலியாக நகர்கிறது வாழ்க்கை !

 

2382209408 27eaa94dd0 work life balance is a false choice


பறவையாக பூனையாக

பொம்மையாக யாதுமாக

மாறிப்பேசி ஆசைப்படும்

அம்முவுக்கு

மருத்துவர்,இன்ஜினியர்

என அப்பா அம்மா மொழிபேசு வன்முறைகள்

ஊமையாகிறது மழலை சாரல்

பால்யத்தின்

ஒழிப்பு

திணிப்புக்கு வராதா

போராட்டங்கள் 😦Image


தன்னைத்திட்டியபடி என்னைக்கடிதலும் முன்னை முறைத்து பின்னே கலங்கலும் நாளைக்கான பிரியங்களை நேற்றே ஈந்துவிட்டேன் என எட்டிச்சிரிக்கும் நச்சுக்கோப்பை விளிம்பு முத்தம் நீ


இசையாக வலிக்கிறது அவள் சொற்கள்
முணுமுணுப்பாக கடக்கிறது பார்வை எச்சங்கள்
கடக்க மறுத்து காலருகே படுத்துக்கொண்டு
நிழல் போல கால் வருடி படுத்திருக்கிறது நினைவு நாய்