நேரு: அழித்த தலைவரா? காத்த கடவுளா?


contemplative-nehru.jpg
Photo Credit: The Wire Photo Division

நேரு தொடர்ந்து இணையவெளியில் கடுமையாகத் தாக்கப்படுகிறார். அவரைப் பற்றிப் பொய்யான பரப்புரைகள், வதந்திகள் தொடர்ந்து பரப்பபடுகின்றன. நேருவை வில்லனாக்குவது ஒரு தனித்தொழில் போலச் செயல்படுவதை டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் அமுல்யா கோபாலகிருஷ்ணன் அம்பலப்படுத்தினார். ராஜஸ்தானில் இந்தியாவின் முதல் பிரதமரின் பெயர் அரசுப்பள்ளி பாடங்களை விட்டு சத்தமே இல்லாமல் நீக்கப்பட்டது. நேருவுக்கு எதிரான விமர்சனங்களை ஆதாரப்பூர்வமான தரவுகள், ஆய்வுகள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் வைக்காமல் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் இருட்டடிப்புச் செய்வது எளிதாக இருக்கிறது.

நேரு இல்லாமல் போயிருந்தால் இந்தியா என்ன ஆகியிருக்கும்? இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் ஒருவரை மற்ற மகத்தான தலைவர்களில் இருந்து பிரித்துப் பேசுவது கடினமான ஒன்றாகும். ஆனால், குறிப்பிட்ட சில சிக்கல்களில் ஒரு தலைவரின் ஆளுமை தனிப்பட்ட பங்காற்றியிருக்கும். நேரு இல்லாமல் போயிருந்தால் என்னாகி இருக்கும் என யோசித்தால் எட்டுக் கருத்துக்கள் தோன்றுகின்றன.

ப்ருசல்ஸ் நகரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் காங்கிரஸ் மாநாட்டில் நேரு 1927-ல் பங்குகொண்டார். அதன்மூலம் நம்முடைய விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு சர்வதேச பார்வையை வழங்கினார். அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்த பரந்துபட்ட நோக்கு இந்திய விடுதலைக்கு ஒரு நவீன முகத்தைத் தந்தது.

1928-ல் காந்தி இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வேண்டும் என்று கோரிய பொழுது, நேரு முழு விடுதலையே வேண்டும் என்று உறுதியாக நின்றார். இதையொட்டியே இந்திய அரசுச்சட்டம் 1935-ஐ கடுமையாக விமர்சித்தார். பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்புச் சட்டக் குழு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்தக் கருத்துகள்தான் குறிக்கோள் தீர்மானங்களை டிசம்பர் 13, 1946 அன்று அரசமைப்புச் சட்டக் குழுவின் முன்னால் நேரு கொண்டுவந்த பொழுது இந்தியாவை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட டொமினியன் நாடாக இல்லாமல், சுதந்திரம், சுயாட்சி கொண்ட குடியரசாக அறிவிக்க வைத்தது.

மூன்றாவது தான் நேருவின் மகத்தான சாதனை. மே 1946-ல் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் மாகாணங்களான பம்பாய், மெட்ராஸ், ஐக்கிய மாகாணங்கள் ஆகிய பல்வேறு மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் படிப்படியாக அளிக்கும் திட்டத்தை அனுப்பி வைத்தார். அதில் இந்த மாகணங்கள் கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்ட பின்பே அவற்றுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று சொல்லியிருந்தார். அதாவது ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவுக்குப் பிறகு பல்வேறு இந்தியாக்களை உருவாக்கும் திட்டம் அது. இந்தத் திட்டத்தை அதே வருடம் மே மாதத்தில் பிரிட்டிஷ் கேபினெட் ஏற்றுக்கொண்டது. இந்தியத் தலைவர்களை சந்தித்து இந்தத் திட்டத்தை சொல்வதற்கு முன்பு சிம்லாவில் நேருவை விருந்தினர் மாளிகையில் சந்தித்தார் மவுண்ட்பேட்டன். இதைக் கேட்டதும் நேரு அதிர்ச்சி அடைந்தார், எந்தக் கணத்திலும் இப்படிப்பட்ட இந்தியாவைத் துண்டாடும் திட்டத்துக்குக் காங்கிரஸ் நிச்சயம் ஒப்பாது என்று ஒரு நெடிய மறுப்புக் குறிப்பை அவர் வைஸ்ராய்க்கு எழுதினார். இந்தக் குறிப்பில் அவர் பலூசிஸ்தான் சுயநிர்ணயம் செய்து கொள்வது உட்பட்ட பல்வேறு பரிந்துரைகளைக் கடுமையாகத் தாக்கினார். மவுண்ட்பேட்டன் தன்னுடைய அறிவிப்பைத் தள்ளிவைத்தார். வி.பி. மேனன் இரண்டு தேசங்களாகப் பிரிட்டிஷ் இந்தியா பிரிவினை செய்யப்படும் என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார். மவுண்ட்பேட்டனின் ஆபத்தான, இந்தியாவின் ஒற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை நேரு எப்படித் தடுத்தார் என்பதை விரிவாக ‘Transfer of Power’ நூலில் வி.பி. மேனன் பதிவு செய்திருக்கிறார்.

நான்காவது, இந்தியாவின் பிரதமராகச் செயலாற்றிக்கொண்டு இருந்ததால் அவரால் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்கெடுக்க முடியவில்லை. அதேசமயம், மத்திய அரசமைப்புச் சட்டக் குழு, மத்திய அதிகாரங்கள் குழு ஆகியவற்றின் தலைவராக மாநில, மத்திய அரசுகளிடையே உள்ளே அதிகாரப் பங்கீட்டை அவர் கவனமாகத் திட்டமிட்டது இன்றுவரை பன்மைத்துவம் மிக்க தேசத்தை வெற்றிகரமாக, ஒன்றாகக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறது. அவருடைய அரசியல் பார்வை, தத்துவம் ஆகியவை ஜனநாயகத்தின் மீது உச்சபட்ச நம்பிக்கையைக் கொண்டிருந்தது. மதச்சார்பின்மை என்கிற வார்த்தை சட்டத்தில் இடம்பெறத் தேவையே படாத அளவிற்கு அரசமைப்புச் சட்டத்தில் குடிமகனைப் பிரதானமாக நிறுத்தி ஜாதி, இனம், மதம் முதலியவை உண்டாக்கிய தடைகள், சிக்கல்களைக் கடக்க அவர் உதவினார்.

நேரு ஜம்மு, காஷ்மீர் விஷயத்தை அணுகிய விதத்தைப் பலரும் தீவிரமாக விமர்சிக்கிறார்கள். எனினும், நேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் இருந்த உறவு குறைந்தபட்சம் 1952 வரை இந்திய யூனியனில் காஷ்மீர் இருப்பதை உறுதி செய்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆறாவதாக, நேரு வலியுறுத்திய பொருளாதார முறை தனியார், அரசுத்துறை இரண்டையும் இணைத்துக் கொண்டதாக இருந்தது. இந்த மாதிரியை இந்தியாவின் தொழிலதிபர்கள் பம்பாய் திட்டத்தில் வலியுறுத்தினார்கள். அவரின் சோசியலிச சாய்வை பலரும் இன்று சாடுகிறார்கள். அவரின் காலத்தில் ஐம்பதுகளில் தீவிரவாத கம்யூனிசம் பலமான எதிர்சக்தியாக இருந்தது. அவர் சோசியலிச பாதையைத் தேர்வு செய்து, கம்யூனிச இயக்கம் உடைந்து, அதன் கவர்ச்சி குறைவதற்கு வழிகோலினார்.

ஏழாவதாக, நேரு நான்கு இந்து சிவில் சட்டங்களை நிறைவேற்றினார். அவை மிகவும் முற்போக்கானதாக, இந்து மதத்தில் மேற்கொள்ளப்பட்ட உச்சபட்ச சீர்திருத்தமாக இருந்தன. அது அரசமைப்புச் சட்டக்குழுவிலேயே கொண்டு வரப்பட்டது. பழமைவாதிகள், இந்து தேசியவாதிகளால் அது கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்து மதத்தை நிராகரித்த டாக்டர்.அம்பேத்கரே இந்தச் சட்டங்களின் பிதாமகர். இந்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதை நேரு உறுதி செய்தார். இந்தச் சட்டம் இந்து மதத்தின் மிக மோசமான ஒடுக்குமுறை அம்சங்களை நீக்கியது. இதனை ஆர்.எஸ்.எஸ்., அதன் இணை அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இந்தச் சட்டம் பலதார திருமணத்தைத் தடை செய்தது, கலப்புத் திருமணத்துக்கு வழிவகுத்தது. விவாகரத்து வழிமுறைகளை எளிமைப்படுத்தியது, பெண் குழந்தைகளுக்கு ஆண் வாரிசுக்கு இணையாகக் குடும்பச் சொத்தில் உரிமை வழங்கியது.

எட்டாவதாக, நேருவின் தனிப்பட்ட முத்திரை இந்தியாவின் அணுசக்தி, விண்வெளித் திட்டங்களில் வெளிப்படுகிறது. 1939-ல் இந்திய அணுசக்தி அறிவியலின் தந்தை ஹோமி பாபா, நேரு இருவரும் பிரிட்டனுக்குச் செல்லும் கப்பல் பயணத்தில் சந்தித்தார்கள். அது நெடிய நீடித்த உறவாக மாறியது. அரசமைப்புச் சட்டசபையில் அணு சக்தி சட்டத்தின் மூலம் பிரதமர் தலைவராகப் பொறுப்பேற்கும் அணு சக்தி கமிஷனுக்கு அவர் உருவம் கொடுத்தார்.

நேருவிடம் எண்ணற்ற குறைகளும் உண்டு. காஷ்மீர் சிக்கலை ஐ.நா.வுக்குக் கொண்டு சென்றது, சீனாவுடனான எல்லைச் சிக்கலை ஒழுங்காகக் கையாளாமல் போனது ஆகியவை அதில் அடங்கும். நேரு இல்லாமல் வேறொரு முடிவு ஏற்பட்டிருக்கும். ஆனால், அது என்ன என்று உறுதியாக சொல்வது கடினம். சீனாவுடனான சிக்கலில் ராணுவப் போர் நிச்சயம் தேர்வாக இருக்கவில்லை. நேரு தளபதி கரியப்பாவிடம் திபெத்தில் இந்தியா தலையிட வாய்ப்பு உண்டா என்று கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாகக் கரியப்பா இந்திய ராணுவத்தின் பலவீனம், சாதகமில்லாத நிலப்பகுதி ஆகியவற்றால் அது சாத்தியமில்லை என்று பதில் அளித்தார். இவை அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதிவாகி இருக்கிறது.

நேரு ராணுவத்தை அணுகிய விதமும் மோசமான ஒன்று. அவரின் அமைதி சார்ந்த மனச்சாய்வு, அவரின் கனவுலக சிந்தனைகள் ஆகியவை ராணுவத்தலைவராக அவரைத் தோல்வியடைய வைத்தன. இவ்வாறு அரசின் மிக முக்கியமான அமைப்பு  செயல்திறம் இழக்க அவர் காரணமானார். அதற்குத் தேவையான கவனிப்பை அவர் தரவில்லை. மோசமான ஆளுமையைக் கொண்ட கிருஷ்ண மேனனிடம் ராணுவத்தைக் கொடுக்கிற இறுதித்தவறை செய்தார்.

இவையெல்லாம் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியா என்கிற உயர்ந்து நிற்கும் தேசத்தின் மீதான நேருவின் முத்திரையை அழிக்க முயல்வது முடியாத ஒன்று. ஏனெனில், அவர் இந்திய ஆன்மாவின் பிரிக்க முடியாத அங்கம். நேருவை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போனால், நீங்கள் இந்தியாவின் பெருமையைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்.

மனோஜ் ஜோஷி observer research foundation அமைப்பில் மூத்த பேராசிரியர்

கட்டுரை மூலம்: http://thewire.in/2016/05/24/the-bjp-wants-to-erase-nehru-lets-see-what-india-would-have-been-without-him-37866/
தமிழில்: பூ.கொ.சரவணன்

UPSC INTERVIEW ARAVIND SAXENA BOARD


I had my interview on April 18, 2016. I had never been nervous. The reason being that it was an angel story of me making into the interview. After being unwell for two months, I oddly had fifteen days for the mains. Then chennai floods came and I just rushed through my optional and gave my mains. I got selected for the interview. So, I was confident that I will make it into the list. I was the last candidate in the afternoon batch to enter the board. It was 4.45 pm when I was called in. I am producing whatever I remember and it is more than one month since I took the interview.

Name: P.K.SARAVANAN
Graduation: Agricultural and Irrigation Engineering
Optional: Tamil Literature
Board: Mr. Aravind Saxena

PKS: Good evening sirs
Chairman: Good evening Saravanan. Take your seat. (He smiled
at me )

PKS: Thank you sir.

Chairman: College of engineering guindy. It’s a very old college right?

PKS: Yes sir. It was the first engineering institution in India started as a survey school in 1794.

(He was hearing me and turning the DAF. Now he suddenly found something and looked at me)

Chairman: You have served as programme narrator? What is that. What did you do exactly?

Pks: It was an educational show run by vikatan which is a famous magazine in Tamil nadu. I reached thousands of students through that audio show for 365 days. The content, research all carried out by me and I narrate it to the students.

Chairman: So, whether its funded by government? How do you reach students? Being from engineering background do you only speak to them about science or about our culture,past?

Pks: It was entirely funded by the magazine and the show reached people through youtube and voice call. The show dealt with various aspects apart from Sciene like our forgotten culture, glorious past, our remarkable leaders. For example today is the birthday of D.K.Karve who created the first women’s university it India and was awarded Bharat ratna. I did a show on him. We also did a show on Sikadar Radhanath the great mathematician who originally scaled Mt.everest.

Chairman: So, do you get any feedback and how do you process
that?

PKS: The feedbacks are mostly encouraging and we have a time limit of three mins. So, if we do a show on Dravid for three minutes, his fans would ask us to do a show for five minutes which we do address through special shows.

Chairman: Did you get any negative feedbacks?
PKS: (was about to say that my voice received negative feedbacks) Some of the viewers used to ask for a female narrator
Chairman: (He smiled a bit) That normally happens. Now saravanan as you are so active across various platforms now tell me how to use social media positively. I am not asking this without reason. Recently Burmese Leader Aung san suu kyi commented that youths are wasting a lot of time in social media.

PKS: Social media has created a negative impact in inter personal relationships. Many families had the habit of eating together and discussing various things. Now people seek solace in social media and they live in a virtual world with scant respect for relationships. They find it easy to unfriend or block someone and they find it hard to face realities or stressful situations. We can use popular personalities to spread positive message in social media. Tn election commission is campaigning for 100% voting using various stars and it is getting amazing response. Recently, a famous actor named Prithiviraj came out with a short film in youtube to request youngsters not to take their life due to failures in life. It struck an emotional chord with many.

Chairman: Your graduation is from agricultural and irrigation engineering.Now tell me, why food processing industry didn’t progress in India?

PKS: Ours is a marginalized country

Chairman: Do u mean it?

PKS: Sorry sir! I meant to say that we have marginalized farmers in our country and the farms are fragmented. so, its hard to integrate and develop infrastructure.

Chairman: We have created good roads, even then food processing industry is not taking off. Why?

PKS: By infrastructure I meant cold storage facilities, better supply chain systems. The sterilization at the procurement point as done by AMUL, E-choupal by ITC are few such examples. The lack of better investment too causes the underdevelopment.

Chairman: Did you meant to say that government didn’t make proper investments?

PKS: No sir. Government has opened up 93 food parks and it is a right step forward.

Chairman: Then why the food processing industry has not progressed much?

PKS: (I was about to give up) Agriculture is a state subject sir. Central government tries to bring state government on board. Many times state government look at the centre’s steps with suspicion and as an encroachment on federalism. Yesterday governemnt announced national e market and though, it has great ambitions to empower farmers very few states have agreed to be part of it. The centre should take the state governments into confidence.

(He gave a satisfying look)

Chairman: You said that agriculture needs more investment, so, do we need bullet trains for our nation?

PKS: Yes sir. For faster connectivity and better augumentation of economic growth we do need them. The credit is also soft credit paid over a long time.

Chairman: Even though the interest is less, it is 90,000 crore loan and we have to repay it. Now tell me. Do we need bullet train?

PKS: With various other crucial sectors in the pipeline I would say that we can do better investments in other fields instead of spending 90,000 crores in bullet train.

Chairman: Then what is the logic for government to spend so much money?

PKS: Better and faster connectivity, augumentation of economic growth (I said the same points already, was searching for a convincing answer to escape the trap I got into). Science inspires millions of youths. When chandrayan was launched, a sixth standard student wrote to ISRO that he got inspired and he will land in moon someday. A bullet train also ignites imagination of many engineers and drives them to do great and innovative things.

M1: So why did you chose tamil literature

PKS: Tamil was close to my heart sir.

M1: Why?

PKS: ,My mom was a tamil teacher and I was a kambaramayana and periyapurana orator. And I was a translator too. So, I felt it comfortable to choose tamil literature sir.

M1: Why not some science subjects like maths, physics. You scored good marks in them

PKS: UPSC requires honors level knowledge for the optionals and hence, I decided to stick with tamil literature.

M1: Then why not Agriculture?

PKS: The upsc syllabus is different from what I learnt in undergraduation in Agricultural and irrigation engineering sir.
(Now comes the googly)

M1: You are good in tamil and you are good in english too, You are a master of words. I could see that. Now assume I am a layman and describe me types of tie and how to tie a tie?

PKS: (I literally got fumbled) I don’t know the types of tie sir.
M1: You have tied your tie well and so, tell me what is a tie and how to tie a tie.

PKS: Tie is tied around the head.

M1: Head?

Pks: Sorry sir. Neck. It makes one person to look better and it gives a gentleman look. The tie is tied around the neck, then we wrap it in the right, insert and pull it. (I did make actions) and It is rhombus shaped, it looks like a pole star, if one wears it he will look like a super star. (My voice had rose a bit)

M2: Tell me what is the contribution of agriculture to the GDP of nation?

PKS: 14% Sir

M2: Exactly. With very little contribution to agriculture why should we focus much on it?

PKS: with 60% working population involved in agriculture we need to focus on it. A 1% increase in agricultural GDP pulls 4% of indian population out of poverty according to worldbank.

M2: It is said that 1 dollar spent in health sector gives 6 dollar return in health sector. Leave it. Tell me of the total area in agriculture how much is irrigated in India?

PKS: 40% Sir
M2: So how we can improve irrigation?

PKS: The construction of big dams is feasible till the exploitable surface water is economical. (Explained what it is) We can construct area specific irrigation structures. Water shed management needed to be encouraged. We can construct johads in rajasthan, dugwells in bundelkhand, check dams, bunds depending on the region.

M2: How we can improve agriculture?

PKS: Investing more in research and development, concentrating on irrigation, moving more farmers out of agriculture to non-farm sector through skill development and rationalizing subsidies.

M2: What is DBT?

PKS: DIRECT BENEFIT TRANSFER. In this we link the bank account of the benefiter and deliver the subsidy directly in his account without any intermediaries.

M2: who are those intermediaries?

PKS: Middle men, arhityas, postman and so on. (I was about to say government officials and stopped from saying)

M2: How we can rationalise fertiliser subsidy?

PKS: We should decanalise urea subsidy and we should disperse urea based on biometric at the Point of sale. (Verbatim from economic survey)

M2: We are already doing something with respect of urea. Can u tell me what is that?

PKS: We are neem coating urea to prevent it from using it for non-agricultural purposes.

M3: Have you heard of migration crisis? Elaborate it with respect to europe.

PKS: In syria a the internal conflict ended up in a civil war and millions of people are escaping from their country to seek asylum in european countries. There are grave human rights violations and continuous bombings, European union is unable to stop the inflow of refugees so It has now signed an agreement with Turkey to accept refugees and also assured it will consider Turkey for membership in european union.

M3: See the migration crisis is happening in Libya, Yemen too. Now provide solution in case by case approach.

PKS: All the conflicts have their own features and its hard to comment on solutions for each and every case sir. We can try to bring all the stake holders into table, negotiate and arrive at a solution. If its not possible to bring them to table as in the case of ISIS, we have to neutralise them using force.

M3: We voiced our concern against apartheid in south africa Human rights violations in Israel. Why we are silent when it comes to Myanmar when US has imposed sanctions?

PKS: Myanmar is our neighbouring country and in the present geopolitical situation if India raises any voice against human rights violations in Myanmar China would step in and capitalise upon it. We also never claimed ourselves to be global policemen and we are empathising with common people of Myanmar. The sanctions affects common people.

M3: Still why should we do that? If its fine with Israel, why not with Myanmar.

PKS: India in the case of Israel condemns human right violations and at the same time, cooperates with it on defence, agricultural sectors. It is realist rather than idealist foreign policy.

M3: Why only Myanmar?

PKS: If south africa, Israel had been our neighbouring nation India would not have condemned the human rights violations. Having a powerful neighbour in the gates is always a point of worry. So, we have to engage with myanmar to keep china off the gate.

M4: World bank says it wont give loan to India if environmental norms are not strictly adhered to. So which do you prefer, development or environment

PKS: It’s the combination of both. We can’t sacrifice our development with complete emphasis on environment. The over use of fertilizers to increase the yield during green revolution has spoiled the soil health drastically. We are losing around 6% of GDP due to environmental degradation. So, it’s the middle path where both environmental concerns and developmental goals meet. Sustainable development is the ultimate destination.

M4: India is not successful in enforcing water sharing between its states itself, Indus water treaty signed between India and Pakistan is so successful and works till date. Now tell me what it is?

PKS: Indus water treaty was signed between India and Pakistan under the mediation of World bank in 1960. According to the treaty six rivers namely Indus, ravi, beas, chenab, sutlej, jhelum were shared between the two countries. Rivers in the west Indus, Chenab, Jhelum went to Pakistan, Rivers in the east Ravi, Beas, Sutlej stayed with India.

Chairman: Thank you. You may go.

PKS: Thank you sir.

Duration: 40 minutes

Marks: 190

வாக்களிப்பது ஏன் அவசியம்? – ஒபாமா


வாக்களிப்பதும், அடித்தட்டு மக்களுக்கு உழைப்பதும் நம் நாட்டின் கடமை! 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கறுப்பின மாணவர்கள் நிரம்பிய ஹோவார்ட் பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கமான எழுத்து வடிவம்:

Obama3.jpgமேன்மைதாங்கிய அவையினரோடு இந்த நாளை கொண்டாட வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். இந்த வருடம் பட்டம் பெறும் மாணவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் மறுபடியும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரவில் நீங்கள் என் வீட்டுக்கு அருகே வந்து கொண்டாடித் தீர்த்தீர்கள். அதற்குக் கைம்மாறு செலுத்தவே நான் இன்றைக்கு இங்கே வந்துள்ளேன்.

உங்களுடைய குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என்று உங்களை ஊக்குவித்த, உதவிசெய்த அனைவருக்கும் உரிய நன்னாள் இது. அவர்களுக்குக் கரவொலி எழுப்பி உற்சாகம் ஊட்டுவோம்.

நீங்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறீர்கள் என்று நான் அறிவேன். சிலர் களைத்துப் போயிருப்பீர்கள். சிலர் உங்கள் சான்றிதழ்கள் சரியாக இருக்கிறதா எனப் பரிசோதிப்பீர்கள்… எப்படியிருந்தாலும், நீங்கள் இந்த உன்னதக் கணத்தை அடைந்திருக்கிறீர்கள். அதற்குக் கடுமையான உழைப்பினை நீங்கள் செலுத்தியதை நினைவுகூர்கிறேன். சவால்மிகுந்த வகுப்புகள், உற்சாகம் தரும் ஆடுகளங்களில் அடித்து ஆடுவது, சமூகசேவைகள் செய்வது, பயிற்சிப்பணிகளில் சேர்வது, ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேலைகளைப் பெறுவது, வாழ்நாளுக்கும் வரும் நண்பர்களைப் பெறுவது, எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் யார் என்பதைக் கண்டடையும் அற்புதம் எந்த ஹோவார்ட் பல்கலையில் நிகழ்ந்திருக்கிறது.

ஹோவார்ட் பல்கலையின் நீண்ட நெடும் பட்டதாரிகள் பட்டியலில் இணைந்திருக்கிறீர்கள்., சில பட்டதாரிகள் மேடையிலும், சிலர் கீழேயும் இருக்கிறார்கள். அடிமைமுறை ஒழிப்புச் சாசனம் அறிவிக்கப்பட்ட நான்கு வருடத்தில் ப்ரீட்மான் தலைமையிலான துறை இந்த ஹோவார்ட் பல்கலை உருவாக்கப்பட்டது. அது உள்நாட்டுப் போர் நிகழ்ந்து இரண்டு வருடங்களே ஆகியிருந்த சூழலில் எழுந்து நின்றது. இந்தப் பல்கலையை அடித்தட்டு மக்களைத் தலைநிமிரச் செய்யும் தலைநோக்கோடு உருவாக்கினார்கள். இங்கே அமெரிக்காவின் குடிமகன்களின் தலையெழுத்தை அவர்களின் இனம், பாலினம், மதம், மொழி ஆகியவற்றால் நிர்ணயிக்காமல் அமெரிக்கர்கள் எல்லா வகையிலும் விடுதலை ததும்பும், தங்களின் தனிப்பட்ட, கூட்டுக்கனவுகளைத் துரத்தும் மகத்தான தொலைநோக்கோடு இந்தப் பல்கலை ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் வரலாறு, ஆப்ரிக்க அமெரிக்க அறிவுலக வாழ்க்கையின் மையப்புள்ளியாக ஹோவார்டை மாற்றியது இந்த உன்னதத் தொலைநோக்கே ஆகும். முதல் கறுப்பின நோபல் பரிசு பெற்றவர், முதல் கறுப்பின உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிய பலர் இங்கே இருந்தே வந்திருக்கிறார்கள். இந்த முதல் சாதனையாளர்களோடு அந்த வெற்றிக்கதைகள் முடிந்துவிடக்கூடாது என்கிற தீர்க்கமான இலக்கு அதற்கு உண்டு. எண்ணற்ற அறிஞர்கள், வல்லுனர்கள், கலைஞர்கள், தலைவர்கள் பலர் இங்கே தான் தங்களைச் செதுக்கி, சீரமைத்துக்கொண்டு வெளிப்பட்டார்கள். இங்கே இந்தப் பாதையில் நடந்த பல தலைமுறை ஆண்களும், பெண்களும் அரசை சீர்திருத்தினார்கள்,சமூக உரிமைகளை முன்னெடுத்தார்கள், நம்முடைய கலாசாரத்தை வடிவமைத்தார்கள். நம்முடைய மாற்றத்துக்கான விதை இங்கே விதைக்கப்பட்டது. அந்தப் பெருங்கதையை நான் நினைவுகூர விரும்புகிறேன்…

நான் கல்லூரியை விட்டு வெளியேறி 33 வருடங்கள் ஆகிவிட்டது. அந்தக்காலத்தில் நியூயார்க் நகரம் குற்றங்களால், சீரழிவால், திவாலாகும் சூழலில் சிக்கிக்கொண்டு தவித்தது. பல நகரங்கள் அதே நிலையில் இருந்தன. பொருளாதாரத் தேக்கம், வெளிநாட்டு கச்சா எண்ணெயின் கொடுங்கரம், பொருளாதார மந்தநிலை ஆகியவை 11% வேலைவாய்ப்பை காலி செய்தன. வாகனத்துறை முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களால் துடைக்கப்பட்டன. நான் கல்லூரியை விட்டு வெளியேறிய வருடத்தில் இருந்து ஏழ்மை சதவிகிதம் வீழ்ந்து இருக்கிறது, கல்லூரிகளில் பட்டம் பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, நகரங்கள் மறுமலர்ச்சியைக் கண்டன, குற்றங்கள் குறைந்தன. அதிகளவில் பெண்கள் பணிகளில் இணைந்தார்கள். அவர்கள் அதிகமான ஊதியமும் பெற ஆரம்பித்தார்கள். பள்ளியைவிட்டு வெளியேறும் ஆப்ரோ-அமெரிக்கர்களின் எண்ணிக்கை 6௦% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. நான் கல்லூரியை விட்டு வெளியேறிய காலத்தில் ஆப்ரோ-அமெரிக்கர்களில் பத்தில் ஒருவரே கல்லூரியில் பட்டம் பெற்றார்கள். இப்பொழுது அந்த எண்ணிக்கை இருபது சதவிகிதமாக மாறியிருக்கிறது. தற்போது இருக்கும் கறுப்பினத்தவர்களில் பாதிப் பேர் தங்களின் பெற்றோர்களை விட மேலான வாழ்க்கை வாழ்கிறார்கள்,. அவர்களின் பிள்ளைகள் இன்னமும் மேலான வாழ்க்கையைப் பெறுவார்கள் என அவர்கள் உறுதியாக எண்ணுகிறார்கள்.

ஆகவே, அமெரிக்காவும், உலகமும் மேம்பட்டு இருக்கிறது. பெர்லின் சுவர் விழுந்திருக்கிறது. இரும்புத்திரை கிழித்து எறியப்பட்டுள்ளது. அருவருப்பைத் தரும் நிறவெறி தென் ஆப்ரிக்காவில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு தலைமுறை அமைதியை மட்டுமே கண்டு வளர்ந்தது. மண உரிமையை ஒரே பாலினத்தில் உள்ளவர்களுக்கும் வழங்கிய நாடுகளின் எண்ணிக்கை ஒன்றில் இருந்து இருபத்தி நான்காகக் கூடியிருக்கிறது. அதிக மக்கள் ஜனநாயக நாடுகளில் வாழ்கிறார்கள். நூறு கோடி மக்கள் கொடிய வறுமையைவிட்டு மீட்டெடுக்கப்பட்டு உள்ளார்கள். குழந்தைகள் மரண விகிதம் உலகம் முழுக்கப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மேம்பட்டுள்ளது. உலகம் செம்மையாக மாறியிருக்கிறது. நான் பட்டம் பெற்ற காலத்தைவிட இன உறவுகள் மேம்பட்டு இருக்கிறது. அதுவே உண்மை. என்னுடைய வெற்றி நிறவெறிக்கு பிந்தைய சமூகத்தைத் தலைகீழாக மாறியதாகச் சொல்லப்படுவது உண்மையில்லை. அப்படிச் சொல்பவர்கள் தவறான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வெற்றி நம்முடைய மனப்போக்கு எப்படி மாறியிருக்கிறது என்பதைப் புலப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமே ஆகும்.

நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற உடன் ஆற்றிய உரையில், அறுபது வருடங்களுக்கு முன்னால் வாஷிங்கடனில் என்னுடைய தந்தைக்கு எந்த உணவகத்திலும் உணவு பரிமாறப்பட்டு இருக்காது என்பதை நினைவுபடுத்தினேன். டாப் ஐநூறு நிறுவனங்களின் சி.இ.ஓவாக எந்தக் கருப்பினததவரும் அப்பொழுது இருக்கவில்லை. மிகக்குறைவான கறுப்பினத்தவரே நீதிபதிகளாக இருந்தார்கள்… ஆனால், இப்பொழுது மைக்கேல் ஜோர்டான் வெறுமனே உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக மட்டும் ஜொலிக்கவில்லை. அவர் ஒரு அணியின் உரிமையாளராக உள்ளார். அரிதிலும் அரிதாகக் கறுப்பின நாயகர்கள் திரையில் தோன்றினார்கள். ஹிப் ஹாப், ராப் ஓரமாக எழும்பிய சலனங்களாகப் பார்க்கப்பட்டன. இப்பொழுது நாங்கள் உங்களை மகிழ்விப்பவர்கள் மட்டுமல்ல, நாங்கள் தயாரிப்பாளர்கள். ஸ்டுடியோ முதலாளிகள். நாங்கள் சி.இஓக்கள், மேயர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமெரிக்காவின் ஜனாதிபதிகள்.

வெள்ளையின-கறுப்பின மக்களிடையே வேறுபாடுகளே இல்லை என்று சொல்லமாட்டேன். அவை நிச்சயம் உள்ளன. சமத்துவமின்மை இன்னமும் உள்ளது. அதைக்குறித்து நான் நிச்சயம் பேசுவேன். அதே சமயம், நாம் எத்தகு மகத்தான தருணத்தில் நிற்கின்றோம் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். நீங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் எந்தப் பகுதியில் வாழ விரும்புகிறீர்கள் என்கிற வாய்ப்பே அது. உங்களின் நிறம், இனம், தேசம், பாலினம், பாலுறவு பண்பு ஆகியவை எப்படி இருக்கும் எனத்தெரியாமலே வாழ்வதற்கு ஒரு மகத்தான கணத்தைத் தேர்வு செய்ய விரும்பினால் அவை நூறு வருடங்களுக்கு முன்னாலோ, ஐம்பது, அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னாலோ நிச்சயம் இல்லை. லோரைன் ஹான்ஸ்பெரி வார்த்தைகளில்,’ இளமைத்துடிப்பு, வாய்ப்புகள், கருப்பு நிறம்’ கொண்டவராக நீங்கள் வாழ உகந்த தருணம் இதுவே.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம் மாற்றத்தை நாம் உணரவேண்டும். நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை மறுதலிப்பது நீதியின் வெற்றிக்கு உதவாது, நமக்காகப் போராடிய மகத்தான மக்களின் நினைவுக்கு அது பெருமையல்ல. நாம் கொண்டாடித்தீர்க்கும் மகத்தான தலைவர்கள் மட்டுமல்ல, உங்களின் அப்பா, அம்மா, பாட்டன், முப்பாட்டன் என நீதியை நோக்கி நடைபோட்டு, துயருற்று, பாரம் சுமந்து, அவற்றைக் கடந்து இந்தக் கணத்துக்கு அழைத்து வந்திருக்கும் அவர்களும் மெச்சத்தகுந்தவர்கள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று அகமகிழ்வதற்கு இதை நிச்சயம் சொல்லவில்லை. நீங்கள் களத்தில் இறங்கி செயலாற்ற வேண்டும் என்பதற்காக இதனைச் சொல்கிறேன். இந்தத் தேசம் இந்தப் பாணியை நீங்கள் உற்சாகமும், உத்வேகமும் ததும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. இன்றைய தினத்தைக் கொண்டாடுங்கள், நீங்கள் கடக்க வேண்டிய தூரமும், செய்ய வேண்டிய பணிகளும் நெடியவை.

நம் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்பது உண்மைதான். என்றாலும், நம் மக்களில் பலர் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சி நிலவுகிற சம்பாதிக்க முடியாமல் அல்லல் படுகிறார்கள். பலர் ஓய்வுக்குப் பிறகு கவலையின்றி வாழ சேமிக்கப் பணமின்றித் தவிக்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகளில் இரண்டு இனங்களுக்கு இடையேவும் பெருத்த இடைவெளி உள்ளது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 5%, கறுப்பினத்தவர்களிடையே இது 9%. வெள்ளையின பிள்ளைகள், பெண்களை விடக் கறுப்பின பிள்ளைகள், பெண்கள் பள்ளி, கல்லூரியைவிட்டு குறைவாகவே தேர்வு பெறுகிறார்கள். ஒரு வெள்ளையின ஆண் பெறுகிற சம்பளத்தில் 66% சதவிகிதம் மட்டுமே அவருக்கு இணையாக உழைக்கும் கறுப்பின பெண் பெறுகிறாள்.

நீதி பரிபாலனத்திலும் பெரும் இடைவெளி இருக்கிறது. கறுப்பின ஆண், பெண் குழந்தைகள் குறைவாக நிதி பெறும் பள்ளிகளில் துவங்கி நிரம்பி வழியும் சிறைகளைக் கடக்கிற கொடிய சூழலை எதிர்கொள்கிறார்கள். நான் கல்லூரி படிக்கிற காலத்தில் ஐந்து லட்சம் அமெரிக்கர்கள் சிறையில் இருந்தார்கள். இப்பொழுது 22 லட்சம் மக்கள் சிறைச்சாலைகளில் உள்ளார்கள். நீங்கள் கருப்பினத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நீங்கள் கம்பி எண்ணும் வாய்ப்பு ஒரு வெள்ளையின ஆணைவிட ஆறுமடங்கு அதிகம்.

உலகம் முழுக்க நோய், போர்கள், தீவிரவாதம், பருவநிலை மாற்றம் என்று பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்றன. ஆகவே, அன்புமிக்க என் செல்வங்களே, நீங்கள் பெரும்பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இவை மிகக்கடுமையானதாக, அடைய முடியாததாகத் தோன்றினாலும் இவற்றை எதிர்கொள்ள மற்ற எந்தத் தலைமுறையைவிடவும் மேலான இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். வரலாற்றைப் புரட்டிப்போட உங்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.

இவற்றை எப்படிச் செய்வீர்கள், எப்படி இந்தச் சவால்களைச் சந்திப்பீர்கள், எப்படி மாற்றத்தை சாதிப்பீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். என்னுடைய தலைமுறை மற்ற எந்தத் தலைமுறையைப் போலவும் தன்னுடைய சொந்த அனுபவத்தில் உழல்கிறது தன்னுடைய சொந்த மனச்சாய்வுகளுக்கு ஏற்ப எங்களின் முதலீடுகளை மேற்கொள்கிறோம். எங்களுடைய வழிமுறைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறோம். ஆனால், முந்தைய தலைவர்களான நாங்கள் கற்றுக்கொண்ட சில பாடங்கள் உங்கள் பயணத்தில் பயன்தரக்கூடும். உங்களின் தலைவிதியை, கூட்டு எதிர்காலத்தை எப்படி நீதி, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றால் நிரம்பிய ஒன்றாக மாற்றமுடியும் என்பதற்குச் சில வழிகளைப் பரிந்துரைக்கிறேன்.

முதலாவதாக உங்களின் பாரம்பரியத்தில் அவமானம் கொள்ளாதீர்கள். அதைப்பற்றிப் பெருமைப்படுங்கள். உங்கள் கருப்பு நிறத்தில் ஊக்கமுடையவராக இருங்கள். என் காலத்தில் இருந்து இந்தக் காலத்துக்குள் நம் நாடு கருப்பாய் இருப்பது ஒன்றும் குற்றமில்லை என்பதை உணர்ந்திருக்கிறது. நான் உலகின் தலைவர்களோடு உணவருந்த நேரிடுகிறான் பொழுது என்னுடைய அடையாளங்கள் சார்ந்து தடைகள், இடர்ப்பாடுகள், முன்முடிவுகள் அவர்களிடம் துளியும் தென்படுவதில்லை.

இந்த ஹோவார்ட் பல்கலையை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பல்கலை எவ்வளவு பன்மைத்தன்மையால் நிரம்பியது என் நீங்கள் அறியமாட்டீர்கள். சிலருக்கு ஐயோவாவிலும் கறுப்பின மக்கள் இருக்கிறார்கள் என்பதே அதிசயமாக இருந்திருக்கும். உங்களின் நண்பர்கள் பெருநகரங்கள், ஊரகச் சமூகங்கள், ஏன் கடல் கடந்து கற்க வந்திருக்கிறார்கள். உங்களைப்பற்றிய சகல கற்பிதங்களையும் அடித்து நொறுக்குகிறீர்கள். நன்றாகக் கற்ற குடும்பங்களில் இருந்து சிலர் வந்திருக்கிறீர்கள். சிலர் உங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாகச் சாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறீர்கள். வெவ்வேறு வகையில் உடுத்துகிறீர்கள். உங்கள் ரசனைகள் வேறுபட்டவை.

நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கலாம் , ஒரு கம்பெனியை ஆரம்பிக்கலாம். அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கலாம், அரசியல்வாதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்புகளை நடத்தலாம். புத்தகங்கள் எழுதி தேசிய விருதுகளை அள்ளலாம். உங்களுடைய தனித்த பாணியை, தனித்த அழகின் அளவுகோலை, உங்களுக்குப் பிடித்த வகையில் உங்களின் பாலினத்தை அமைத்துக்கொள்ளலாம்.

உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்யுங்கள். என் மகள்கள் என்னிடம் சொல்வதைப் போல. ‘நீங்கள் நீங்களாகவே இருங்கள், அப்பா!’. சமயங்களில் என் மகள் ஷாஷா வேறு வகையில், ‘நீங்கள் செய்வதைச் செய்யுங்கள் அப்பா’ என்கிறாள். நீங்கள் கருப்பினத்தவர் என்பதால் நீங்கள் சாதிக்கிற ஒவ்வொன்றும் கறுப்பின சாதனையாக ஆகிறது. பெருமிதப்படுங்கள்.

நம்முடைய கருப்பின அடையாளத்தின் அழகு, தனித்தன்மை, அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றிக்கொள்கிற அதேசமயம் இதே நிறத்தைக் கொண்டு நமக்கு இழைக்கப்படும் அநீதி, காட்டப்படும் பாரபட்சம், எதிர்கொள்ளும் போராட்டங்களை மறந்துவிடக்கூடாது. எனவே கண்ணை மூடிக்கொண்டு கவலையில்லாமல் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துவிட முடியாது. நீங்கள் வரலாற்றை அறிவற்றவராக இருக்கக் கூடாது. இந்த உலகமே உங்களுக்கு உரியது என்று நீங்கள் இந்த உலகை எதிர்கொள்ள முடியாது. நீங்கள் ஒரு வீடற்ற மனிதனை கடக்கிற பொழுது இவ்வளவு செல்வவளம் மிக்க நம்முடைய சமூகம் இப்படிப்பட்ட சூழலில் அவனை ஏன் வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பாமல் இருக்கக்கூடாது. ஒரு தவறான தொழிலில் ஈடுபடும் ஒரு பதின்ம வயது சிறுவனைச் சிறையில் அடைக்கிற நீங்கள், பால்யகாலத்தைக் கடந்த அவனுக்கு ஏன் வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை என்று கேட்க வேண்டும். நம்மளவுக்குத் திறமை மிக்க நம்முடைய உறவினர்கள், சக சகோதரர்கள், சகோதரிகள் ஏன் இந்த அநீதி, பாரபட்சம்மிக்க அமைப்புகளால் சிதைக்கப்பட்டார்கள் என்று யோசிக்க வேண்டும்.

ஆகவே, நாம் இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்பதோடு, நம்மளவுக்கு வாய்ப்புகள் இல்லாத சக ஆப்ரிக்க அமெரிக்கர்ளுக்காகப் போராட வேண்டும். நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள் என்பதோடு, உங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது என்பதை நீங்கள் உணரவேண்டும். நீங்கள் வெற்றி பெற்றதில் அதிர்ஷ்டம் உள்ளது, அல்லது கடவுளின் ஆசீர்வாதம் உள்ளது எனச்சொல்வதால் உங்களின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆகவே, நீங்கள் மேலானவர்கள் என்று எண்ணிக்கழிக்க வேண்டாம். உங்களின் அறச்சிந்தனையின் பரப்பை விரிவுபடுத்துங்கள். துயரத்தில் உழல்கிற மக்களின் பாடுகளை உங்களுடையதையாக உணருங்கள். வெறுமனே கறுப்பின மக்கள் மட்டும் துன்பப்படுவதாக உணராதீர்கள். அகதி, புலம் பெயர்ந்து வந்த அயல்நாட்டவர், கிராமப்புற ஏழை ஆகியோரைப் பற்றியும் கவலைகொள்ளுங்கள். உங்களுக்கு இல்லாத வாய்ப்புகளைப் பெற்ற நடுத்தர வயது வெள்ளையின ஆண், கடந்த சிலபத்தாண்டுகளின் பொருளாதார, கலாசார, தொழில்நுட்ப மாற்றத்தால் தன்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறி இருப்பதாக, அதை மாற்ற வழியின்றித் தவிக்கிறான். அவன் என்ன யோசிக்கிறான் என்றும் நீங்கள் உணரவேண்டும்.

இந்தச் சவால்மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைகிற உங்களுக்குத் தீரா வேட்கை மட்டுமில்லாமல் அதைச் செயல்படுத்த செயல்திட்டம் இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு வேட்கையோடு செயல்திட்டம் இருக்கவேண்டும். வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது, செயல்பாடு முக்கியம். வெறும் hashtags போதாது, ஓட்டுக்கள் தேவை.

மாற்றம் ஏற்பட ரௌத்திரத்தை விட மேலான ஒன்று தேவைப்படுகிறது. அதற்கொரு திட்டம், கட்டமைப்புத் தேவைப்படுகிறது. 1964-ல் ஜனநாயக மாநாட்டில் ஐந்து அடி நான்கு அங்குலம் கொண்ட பெண்மணி லோ ஹேமார் ஒரு கிளர்ச்சி ஊட்டும் பேச்சால் அசத்தினார். அதற்குப் பின் மிஸிஸிபி மாகாணத்தில் பருத்தி பொறுக்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராடினார். ஒரு கணத்தில் கூட்டத்தில் ஒருங்கிணைக்கும் கருவிகள், தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் வீடாக வீடாகப் போய் மக்களைத் திரட்டினார். தற்காலக் கறுப்பினத் தலைவர்கள் இது உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்கு உவகைத் தருகிறது.உங்களைப்போன்ற எண்ணற்ற இளைஞர்களின் செயல்பாடே பலரின் பார்வையை மாற்றியுள்ளது. உங்களின் தொடர் முயற்சியால் வெள்ளையினத்தவர்கள், கருப்பினத்தவர், ஜனநாயக, குடியரசு கட்சியினர் ஆகியோர் கிரிமினல் சட்ட பரிபாலனத்தில் உள்ள நிஜமான சிக்கல்களைக் கவனத்தில் கொள்ள உதவியது.

அமைப்புமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர, வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது. சட்டத்தில் மாற்றம் தேவைப்படுகிறது, நம்முடைய வழக்கமான அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. பல அப்பாவிகள் சிறையில் அடைக்கப்படுவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் உங்களிடம் ஒரு கேள்வி எழுப்புகிறேன். கிரிமினல் சட்ட சீரமைப்பு மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற என்ன முயற்சிகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள் ? சிறப்பான காவல் கண்காணிப்பு தேவை என்றால் உங்கள் மாவட்ட அரசு வழக்கறிஞர் யாரென்று தெரியுமா? உங்கள் மாநில தலைமை அரசு வழக்கறிஞர் யார் எனத் தெரியுமா? யார் அவர்களை நியமனம் செய்கிறார், அவர்களுக்குள் என்ன பாகுபாடு எனத் தெரியுமா. அவர்கள் யார், அவர்களின் பொறுப்புகள் என்னென்ன என்று கண்டறியுங்கள். உங்களுடைய மக்களை அணிதிரட்டுங்கள். அவர்களுக்கு ஒரு திட்டத்தை ஒரு கையளியுங்கள், மாற்றத்துக்கு இணைந்து செயல்படுங்கள், அவர்கள் செயல்படாமல் போனால் அவர்கள் அதற்குப் பதில் சொல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேட்கை அவசியம், அதைவிடச் செயல்திட்டம் மிகமுக்கியம்.

Obama1.jpgஉங்களுடைய திட்டத்தில் ஓட்டளிப்பது எப்பொழுதோ நடக்கிற ஒன்றாக இருக்கக் கூடாது. எப்பொழுதும் வாக்களிப்பதில் நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும். ஓட்டளிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு ஐம்பது வருடங்கள் ஆனபின்னும் ஓட்டளிப்பதற்கு எண்ணற்ற தடைகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. பலர் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட்டளிக்காமல் தடுக்கப் புதிய தடைகளை ஏற்படுத்துகிறார்கள். உலகின் வளர்ந்த ஜனநாயகம் ஒன்று தன் மக்களை ஓட்டளிக்காமல் இங்குமட்டுமே ஆகும். அதற்கொரு பூர்வகதை உண்டு.

எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டாலும் உலகிலேயே அமெரிக்காவில் மிகக்குறைந்த ஓட்டளிப்பு விகிதங்கள் உள்ளன. 2014-ல் இடைப்பருவ தேர்தல்களில் ஓட்டளிப்பு 36% மட்டுமே இருந்தது. இது இரண்டாவது மிகக்குறைந்த வாக்குப்பதிவு ஆகும். உங்களைப்போன்ற இளைஞர்கள் வெறும் 20% அளவில் மட்டுமே ஓட்டளிக்க வந்தார்கள். அதாவது உங்களில் ஐந்து பேரில் நான்கு பேர் வாக்களிக்கவில்லை. 2012-ல் மூன்றில் இரண்டு ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஓட்டளித்தார்கள். 2014-ல் ஐந்தில் இருவர் மட்டுமே வாக்களித்தார்கள். நான் சமாளிக்கத் தடுமாறும் காங்கிரசை நான் எப்படி உங்களின் ஆதரவு இல்லாமல் எதிர்கொள்வது? இப்படிப்பட்ட சூழலில் என்னைவிட்டுவிட்டு ஏன் ஒபாமா சாதிக்கவில்லை என்று குமைகிறார்கள். உங்களின் வாக்களிப்பு அதை மாற்றியிருக்கும் என்று புரிகிறதா? நீங்கள் நாடு முழுக்க 50,60,70 சதவிகிதம் என்கிற அளவில் வாக்களிக்க வந்திருந்தால் வரலாறு மாறியிருக்காதா? மக்கள் அரசியலை சிக்கல் ஆக்குகிறார்கள். என்ன மாதிரியான சீர்திருத்தங்கள் தேவை என்று கேள்வி எழுப்புகிறார்கள்? அதை எப்படிச் சாதிப்பது? நான் ஒரே எளிய வழி சொல்கிறேன். ஓட்டளியுங்கள். அது தேவை. மற்ற எவரையும்விட அதிக ஓட்டுக்கள் உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.

நீங்கள் ஏன் ஓட்டளிக்கவில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டாதீர்கள். உங்கள் மளிகை பெட்டியில் எவ்வளவு கடுகு இருக்கிறதோ என்றோ, சோப்பில் எவ்வளவு நுரை உள்ளதோ எனக் கணக்கிட்டால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஓட்டளிக்க நீங்கள் உயிரெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. பலர் உயிர் கொடுத்துதான் உங்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள். உங்களின் மூதாதையர்கள் பலர் அந்த மகத்தான வேள்வியை மேற்கொண்டு சாதித்தார்கள். அவர்கள் தற்போதும் உற்சாகமாக வாக்களிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் வாக்களிக்காத பொழுது நீங்கள் உங்களின் அதிகாரத்தைக் கைவிடுகிறீர்கள். உங்களின் வாக்குரிமையைக் கைவிடுகிறீர்கள். உங்களுக்கு இருக்கும் உரிமையை, அதிகாரத்தைத் துறந்து விடுகிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வாக்களிக்கும் உரிமைகளை எடுக்க எண்ணுபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்காமல் உதவி செய்கிறீர்கள். முதியோர், ஏழைகள், சிறையில் உள்ளவர்கள் ஆகியோரின் வாக்களிக்கும் உரிமையை மறுதலிக்கும் செயல்கள் இங்கே நடைபெறுகின்றன.

நீங்கள் எல்லாச் சமயத்திலும் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு வசதியாக இருக்கும் பொழுது மட்டும் வாக்களிக்கக் கூடாது. உங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் பொழுது மட்டும் திரண்டு வந்து வாக்களிக்கும் நீங்கள், உத்வேகம் பெறுகிற பொழுது மட்டும் வாக்களிக்கும் நீங்கள் எல்லாக் கணங்களிலும் வாக்களிக்க வேண்டும். ஒரு எம்பி, எம்.எல்.ஏ, வார்டு கவுன்சிலர் என்று அனைவரை தேர்ந்தெடுக்கிற பொழுதும் நீங்கள் பெருமளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும். நமக்கான மக்களை, பிரதிநிதியை, நம்முடைய வினாக்களுக்குப் பதில் தரக் கூடிய தேர்ந்தெடுக்க வேண்டும். இது சிக்கலான ஒன்று அல்ல. வாக்களிக்காமல் உங்களின் அரசியலை சிக்கலானதாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.

Obama21.jpgஇறுதியாக மாற்றத்திற்கு உரக்க பேசுவதோடு, பிறர் பேசுவதைக் கேட்பதும் அவசியமாகிறது. யாரோடு நீங்கள் முரண்படுகிறீர்களோ அவர்கள் பேசுவதைக் கேட்கவும், சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும்… நமக்கு ஜனநாயகத்தில் கூட்டாளிகள் வேண்டும். அதுவே நமக்கான வழி. அது எரிச்சல் உண்டு செய்வதாக, மெதுவான ஒன்றாக இருக்கும். ஆனால், வரலாறு ஜனநாயகத்துக்கு மாற்று அதைவிட மோசமான ஒன்றே என்று உணர்த்துகிறது. இது நம்முடைய நாட்டில் மட்டும் உண்மையில்லை. கருப்பு, வெள்ளை என்று ஒன்றுமில்லை. பல கட்சி ஆட்சியிருந்த நாடுகளில் ஒரு கட்சி ஆட்சி ஏற்பட்ட பின்பு அந்த நாடுகள் எப்படிச் சீரழிந்தன என எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை நான் காட்டமுடியும்.

நீங்கள் 100% சரியாக இருந்தாலும் ஜனநாயகத்தில் சமரசம் தேவைப்படுகிறது. அதை விளக்குவது சமயங்களில் கடினமானதாக இருக்கிறது. நீங்கள் முழுக்கச் சரியாக இருந்தாலும் உங்களோடு முரண்படுகிறவர்களோடு நீங்கள் உரையாட வேண்டும். நீங்கள் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லாமல் இருந்தால், உங்களுக்கு ஒரு அற சுத்தம் இருக்கும், உங்களைப்பற்றிப் பெருமையாக நீங்கள் உணர்வீர்கள், ஆனால் , நீங்கள் எதையும் பெற்றுவிட முடியாது. நீங்கள் நினைத்ததைப் பெறமுடியாமல் போனால், ஒட்டுமொத்த அமைப்பே அயோக்கியமானது என்று நம்ப ஆரம்பிப்பீர்கள். அது மேலும் உங்களை அவநம்பிக்கை கொள்ள வைக்கும். குறைவான பங்கேற்பு, அநீதியை நோக்கிய அவலமான பயணம் வேகப்படும், மேலும் கோபமும், ஆற்றாமையும் கூடும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. அது முன்னேற்றம் என்று ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

மார்டின் லூதர் கிங்கின் எழுச்சி ஊட்டும் உரைகளைக் கேட்டிருப்போம். பிர்மிங்காம் சிறையில் இருந்து அவர் எழுதிய கடிதங்கள், அவரின் தலைமையால் கூடிய மகத்தான கூட்டங்கள் எல்லாம் நினைவுகூரத்தக்கவை. அதேசமயம் ஓவல் அலுவலகத்தில், ஜனாதிபதி ஜான்சனுடன் உட்கார்ந்து சமஉரிமை சட்டம், வாக்களிப்பு உரிமை சட்டம் ஆகியவற்றில் கையெழுத்திட்டார். அவை விடுதலை பிரகடனத்தைப் போலவே குறைபாடுகள் கொண்டது என்பது சந்தேகமில்லை. இந்த முன்னேற்றத்தின் மைல்கற்கள் கச்சிதமானது இல்லை. நூற்றாண்டுகள் கடந்து இருந்த அடிமைமுறை, ஜிம் க்ரோவ் சட்டங்கள், இனவெறி ஆகியவற்றை முழுக்க நீக்கிவிடவில்லை. ஆனால் இந்தச் சட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தின. எது மேலானதோ அது நல்லது. உங்களுக்குக் கிடைக்கும் லாபங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அடுத்தப் போருக்கு வலிமையோடு தயாராகுங்கள்.

பிரிட்டானி பேக்நெட் என்கிற புரட்சிகரச் சிந்தனை கொண்ட கறுப்பின செயல்பாட்டாளர் தன்னுடைய கைகளை முறுக்கிக் கொண்டு கம்பீரமாகக் காவல்துறை சீர்திருத்தங்கள் சார்ந்த சட்ட வரைவில் பங்குகொண்டார். அவர் துரோகம் செய்ததாகச் சிலர் விமர்சித்த பொழுதும், அவர் சமரசத்துக்குத் தயாராக இருந்தார். போராட்டக் காரர்கள் கோரிய பல்வேறு மாற்றங்கள் அந்தச் சட்டங்களால் படிப்படியாக நிறைவேறின. கருத்தியல் தூய்மைக்காகச் சமரசத்துக்கு அவர் தயாராக இருக்கவில்லை என்றால், அந்த மகத்தான சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாக மட்டுமே இருந்திருக்கும். இப்படித்தான் மாற்றம் நிகழ்கிறது.

Obama41.jpgஜனநாயகம் நம்முடைய சிக்கல்களை விவாதங்கள், கருத்துக்கள், வாக்களிப்பின் மூலமே தீர்த்துக் கொள்ளவேண்டும். வன்முறை, வெறும் அறுதிப் பெரும்பான்மை உண்மையான ஜனநாயகம் இல்லை. ஆகவே மக்களின் வாயை மூடாதீர்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். இங்கே கல்லூரிகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் ஆளுமைகளைப் பேச அழைக்காமல் தடுக்கும் தவறான போக்கு அதிகரித்து உள்ளது. அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் முட்டாள்தனமானதாக, வேடிக்கையானதாக இருந்தாலும் அவர்களைப் பேசவிடுங்கள். ஒவ்வொருமுறை ஒரு முட்டாள் பேசுகிற பொழுதும் அவன் எவ்வளவு மோசமானவன் என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்கிறான். அவர்கள் பேசட்டும். அவர்களைப் பேசவிடவில்லை என்றால், அவர்கள் அநீதிக்கு உள்ளனாவர் ஆகி, தியாகிகளாகக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகிவிடுவார்கள்.

அதற்காக அவர்களின் கருத்தை மறுதலிக்கக் கூடாது என்று பொருளில்லை. அவர்களை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், உங்களின் அற நேர்த்தியில் நம்பிக்கை வையுங்கள். சமயங்களில் உங்களின் மைய விழுமியங்களைச் சமரசம் செய்துகொள்ளாமல்,உங்களுடைய நேர்மையை மாற்றிக் கொள்ளாமல் அநீதியை முகத்துக்கு முகம் பார்த்து பொறுப்போடு பேசவேண்டி இருக்கும். அவசியம் செய்யுங்கள். கவனியுங்கள். உரையாடுங்கள். அவர்களிடம் ஒரு கருத்து இருந்தால், கவனித்துச் சரியென்றால் ஏற்றுகொள்ளுங்கள். அவர்கள் தவறான கருத்துக்கள் இருந்தால், அதைச் சுட்டிக்காட்டி சரி செய்யுங்கள். அவர்களுக்குக் கற்பியுங்கள். அவர்களைக் கருத்துக் களத்தில் வீழ்த்துங்கள். இதைக் கல்லூரிக் காலத்தில் இருந்தே நீங்கள் வழக்கமாக்கி கொண்டால் நீங்கள் அறியாமை, நிறவெறி, வெறுப்பரசியல், மடமை ஆகியவற்றை எப்படிச் சமாளிப்பது என்று கண்டுகொள்வீர்கள். இவற்றை உங்கள் வாழ்க்கை முழுக்க எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது முழுக்க நியாயமான வழியாகத் தோன்றாது. வாழ்க்கை மலர்ப்பாதை என்று யாரும் வாக்களிக்கவில்லை. உலகை மேலான ஒன்றாக மாற்றவேண்டும் என்றால் மாசுகளால் நிரம்பிய உலகிலேயே நீங்கள் துவங்கவேண்டும்.

இதுவே என்னுடைய அறிவுரை. மாற்றம் என்பது நான்கு, எட்டு வருடங்களில் வருவதில்லை.ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை நம்புவதோ, கால் மேல் கால் போட்டுக் கொண்டு, ‘வெளியே போ!’ என்று அரசியல்வாதியை வெளியேற்றுவது மட்டுமே தீர்வு அல்ல. மகத்தான கொள்கைகளுக்காக ஒவ்வொரு நாளும் தீர்க்கமாகப் போராடும் குடிமகன்கள் தேவை…

ஜேம்ஸ் பால்ட்வின் இப்படி எழுதினார்: ‘நாம் எதிர்கொள்கிற எல்லாச் சவாலையும் மாற்றமுடியாது, அதே சமயம், எதையும் எதிர்கொள்ளாமல் மாற்றத்தை சாதிக்க முடியாது.’

இது உங்களின் தருணம்.நீங்கள் ஏற்கனவே அதற்குத் தயாராகி விட்டீர்கள். உங்கள் பயணம் கொடிய ஒன்றாக இருக்கிற பொழுது, அவதூறு பேசுபவர்களின் அலட்சியக் குரல்கள் உங்களை மூழ்கடிக்கிற பொழுது, ‘நீங்கள் முட்டாள், நீங்கள் நம்புவது தவறானது. நீங்கள் முயற்சியைக் கைவிடுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்.’ என்றெல்லாம் அவர்கள் சொல்கிற பொழுது என்னுடைய வாசகத்தைச் சொல்லிக் கொள்ளுங்கள், ‘ஆம்!நம்மால் முடியும்.’

வாழ்த்துகள். நல்லவை நடக்கட்டும். கடவுள் உங்களையும், இந்த மகத்தான தேசத்தையும் ஆசீர்வதிக்கட்டும். உங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

NEET உருவாக்கி இருக்கும் நெடிய கவலைகளும்,கேள்விகளும்


NEET தேர்வு அனைவருக்கும் கட்டாயம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு சமூக நீதிக்கே எதிரானது எனும் வாதங்கள் எழுவதையும் காணமுடிகிறது. இது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் விஷயம் மேலும் சிக்கலானது.

இந்தியாவில் உயர்கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகள் பெரும் சீர்கேடுகள், ஊழல் ஆகியவை மலிந்து காணப்படுகின்றன. எக்கச்சக்கமாக பணம் வாங்கிக்கொண்டு மருத்துவ இடங்கள் தனியார் கல்லூரிகளில் மிக குறைவான மதிப்பெண் எடுத்த பணக்கார வீட்டுப்பிள்ளைகளுக்கு தரப்படுவது நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டிய MCI லட்சணம் மோசமானது. தனியார் கல்லூரிகள் ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் கல்லா கட்டுகின்றன.

இதை சீர்செய்யும் நோக்கத்தோடு NEET தேர்வு கொண்டுவர இரண்டாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது நூற்றைம்பது கோடி வரை லஞ்சம் தரப்பட்டு தீர்ப்பு இந்த தேர்வுக்கு எதிராக தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஓய்வு பெறுவதால் வேகவேகமாக அல்டாமஸ் கபீர் தீர்ப்பெழுதினார் என இப்பொழுது வழக்கு மறு ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு NEET இரண்டு கட்டங்களில் இந்தியா முழுவதும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் தனியார் கல்லூரிகள் விரும்பியபடி பணம் வாங்கிக்கொண்டு சேர்க்க முடியாது. மாநில அரசுகளும் நுழைவுத்தேர்வு, +2மதிப்பெண்களை கொண்டு மருத்துவ இடங்களை நிரப்ப முடியாது. NEET தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறும் மாணவரே தகுதியுடையவர் ஆவார்.

இது அநீதி, அடக்குமுறை என முழங்கினாலும் முழுக்க சமூக நீதிக்கு எதிரானது இல்லை இது. 85% இடங்களை அந்தந்த மாநில மாணவர்களைக்கொண்டே மாநில அரசுகள் நிரப்பிக்கொள்ளும். அதேபோல இட ஒதுக்கீடும் தொடரும். ஆனால் NEET தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவேண்டும். அவர்களின் மதிப்பெண் வரிசையில் இடம் தரப்படும்.

இப்போது தான் சில சிக்கலான கேள்விகள். ஒரு வாரத்துக்குள் AIPMT தேர்வு என்கிற சூழலில் வெவ்வேறு மாநிலங்கள் நுழைவுத்தேர்வு என அறிவித்திருந்த சூழலில் இந்த வருடமே இதை அமல்படுத்தும் காரணம் என்ன? கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் பொழுது மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதைப் போல இது ஆகிறது. CBSE வினாத்தாளை தயார் செய்கிறது என்றால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் உள்ளே நுழையும் வாய்ப்பு அடைபட்டு போகிறது.
AIIMS தேர்வின் வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். மாநில அரசுகளின் வினாத்தாள்கள் மாநில மொழி, ஆங்கிலம் இரண்டிலும் இருக்கும். தமிழ்நாடு அரசு கட்டி நடத்தும் ஒரு கல்லூரியில் சேர விரும்பும் மாணவனுக்கு தமிழில் வினாத்தாள் தரப்படாது. மத்திய அரசு தேர்வுகளுக்கு இரண்டு அதிகாரப்பூர்வ மொழியில் வினாத்தாள்கள் தருவார்கள் என்றால் அந்தந்த மாநில அரசின் ஆளுகைக்குட்பட்ட கல்லூரியில் இணைய மாநில மொழியிலும் வினாத்தாள் வேண்டுமல்லவா?

கார்ப்பரேட் தனியார்களின் பல்லைப்பிடுங்குவதாக சொல்கிறார்கள். ஏன் ஆந்திர மாணவர்கள் சென்னை ஐஐடியை நிறைக்கிறார்கள்? அரை லட்சம் கோடி அளவுக்கு வருமானம் தரும் நுழைவுத்தேர்வு பயிற்சி மாபியாக்கள் முக்கிய காரணம் என்கிறார் பொருளாதார மேதை ஹரீஷ் தாமோதரன். நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் கல்லா கட்டப்போகின்றன. ஆக பணக்கார மாணவர்களுக்கும், CBSE முறையில் படித்த மாணவர்களுக்கும் மறைமுகமாக இம்முறை உதவும்.

தமிழகத்தின் கடைக்கோடி ஏழைமாணவன் கிராமத்தில் இருந்து மருத்துவப்படிப்பை எட்டுவது பெருங்கனவு. இப்போது அது மேலும் சாத்தியம் இல்லாமல் போகும்.தமிழ்நாட்டில் CBSE முறையில் படித்த மாணவர்கள் சுலபமாக இந்த தேர்வுகளை கடக்க முடியும். மாநில அரசுக்கு கல்விக்கு நிதியை ஒழுங்காக ஒதுக்காத மத்திய அரசு மாநில அரசுகளின் பாடத்திட்டங்கள் இப்படிப்பட்ட தேர்வால் செம்மையடையும் என நம்பலாம். இன்னொருவழி  இருக்கிறது. அறிவியல், கணிதம்  ஆகிய  பாடங்களில்  இரண்டு  தரப்பும்  ஒரே  பாடத்தை  பின்பற்றலாம்.  நடக்குமா என்பது மருத்துவ கனவுகளோடு இருப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைப்போலவே மில்லியன் டாலர் கேள்வி.

போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா?


போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பது போன்ற கருத்தை உண்டு செய்யும் ஒரு பேட்டி இன்றைய தமிழ் இந்துவில் வந்திருக்கிறது.
https://twitter.com/PUKOSARAVANAN/status/727016224429760512

இந்தப் பேட்டிக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்லுகிற அளவுக்கு எக்கச்சக்க பிழைகள்.
/ ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது./ போஸ் படைகள் மகத்தான வெற்றியை நோக்கி சென்றது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் தடைபட்டது போன்ற தோற்றம் இந்த வரியில் ஏற்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வரலாற்று ஆசிரியரான Srinath Raghavanதன்னுடைய புதிய புத்தகத்தில் ஆசியாவில் ஜப்பான் தன்னுடைய மிகப்பெரிய தோல்வியை போஸால் சந்தித்தது என்று பதிவு செய்கிறார். நேதாஜி படைகளை முன்னின்று நடத்தும் திறமையற்றவர் எனக்கருதிய ஜப்பான் களத்தில் அவரைப் போரிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் Sunil Khilnani. (http://www.bbc.co.uk/programmes/b072jfcz) மேலும் இம்பால் போர் நடைபெற்றது நாற்பத்தி நான்கில், அணுகுண்டு வீசப்பட்டது அதற்கு அடுத்த வருடம். பசும்பொன் தேவர் எப்படி இத்தனை ஆயிரம் பேரை அவ்வளவு தூரத்துக்கு பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத் தூவி அனுப்பினார்? போர்க்காலத்தில் கப்பல் போக்குவரத்து தமிழகத்துக்கும், ஜப்பானுடன் போர் நடந்து கொண்டிருந்த பகுதிகளுக்கும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் பி.ஏ.கிருஷ்ணன்

இது இருக்கட்டும். /இந்திரா காந்தி ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ‘கோஸ்லா’ விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக் கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலத்தில் போஸ் அவர்களை நேரு காட்டிக்கொடுக்கிற வகையில் அட்லீக்கு கடிதம் ஒன்றை டிக்டேட் செய்ய, அதை தான் அடித்ததாக ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார். ஆசப் அலியோடு நேரு நடுவில் ஆசப் அலியின் இல்லத்தில் பேசியதாகவும் குறிப்பிடுகிறார். காண்க:http://www.dailypioneer.com/…/nehru-termed-bose-your-war-cr…

அந்த கடிதத்தினை மோடி அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம் கடிதம் டெல்லியில் இருந்து எழுதப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலியின் வீட்டில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டதாகவும் ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார்.

முதலில் தேதி டிசம்பர் 26, 1946 அன்று இந்தக்கடிதம் ஆசப் அலி முன்னிலையில் அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலி அதற்கு முந்திய நாள் சென்னையில் காமராஜர் ராஜாஜி கோஷ்டி சிக்கலை தீர்க்கும் வேலையில் இருந்தார். கடிதம் அடிக்கப்பட்டதாக சொல்லப்படும் நாளில் அவர் மும்பையில் படேலை சந்தித்து உரையாடினார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர் அடுத்த நாள் தான் டெல்லிக்கு கிளம்பிச் செல்கிறார் என்பதும் செய்தித்தாள் செய்திகளின் மூலம் தெளிவாக புலப்படுகிறது. டெல்லியில் கடிதம் அடிக்கப்பட்ட நாளில் ஆசப் அலி இல்லை!

 

சரி நேரு இருந்தால் கூட போதுமே. கதையை முடித்துவிடலாம் என்று கருதினால் அதற்கும் வழியில்லை. நேரு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தில் அப்பொழுது இருந்தார். கல்கத்தா, பாட்னா என்று பயணம் மேற்கொண்டிருந்த நேரு இருபத்தி ஆறு டிசம்பர் முதல் இருபத்தி ஒன்பது டிசம்பர் வரை அலகாபாத்தில் இருந்திருக்கிறார். மதன் மோகன் மாளவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார். மகளுடன் இணைந்து ‘DISCOVERY OF INDIA’ நூலின் பிழை திருத்தும் பணியை டிசம்பர் 29 அன்று அலகாபாத்தில் மேற்கொண்டு இருக்கிறார். ஆக, அவர் டெல்லியில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட்ட காலத்தில் இருக்கவில்லை.

ஆதாரங்களுக்கு காண்க:

https://raattai.wordpress.com/…/nehru-was-in-allahabad-fro…/

கோஸ்லா கமிட்டியின் முன்னால் இந்த வாக்குமூலத்தை ஷியாம்லால் ஜெயின் வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், கோஸ்லா கமிட்டியின் இறுதியின் அறிக்கையில் இந்தக் கடிதம் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை. இந்த வாக்குமூலம் தரப்பட்டதாக சொல்லப்படும் முதல் கதை போஸின் உறவினர் பிரதீப் போஸ் வாஜ்பேயிக்கு 1998-ல் எழுதிய கடிதத்தில் தான் முதன்முதலில் இடம்பெறுகிறது. அதை வாஜ்பேயி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை ஏன் என்று யோசித்துக் கொள்ளலாம்.http://www.telegraphindia.com/116…/…/nation/story_65592.jsp…

இந்த ஷியாம்லால் குறிப்பிடும் கடிதத்தில் சோவியத் ரஷ்யா வெறும் ரஷ்யா என்று தற்கால வழக்கில் இருக்கிறது. அதேபோல நேதாஜியை போர்க்குற்றவாளியாக ஆங்கிலேய அரசு அறிவிக்கவில்லை. அவரை போர்க்குற்றவாளி என்று இந்தக்கடிதம் பிழையாக குறிப்பிடுகிறது. அதேபோல எல்லா கடிதங்களிலும் இருக்கும் நேருவின் கையெழுத்து இந்தக் கடிதத்தில் இல்லை.

இதற்குப் பிறகு வாய்மொழிக் கதைகளாக வழங்கப்படும் சிலவற்றை கட்டுரை சொல்லிச்செல்கிறது. அவற்றுக்கு ஆதாரங்கள் எழுபது வருடங்களாக கிட்டவில்லையா என்ன? இறுதியாக ரஷ்யாவில் வைத்து ஸ்டாலின் போசை கொடுமைப்படுத்தினார் என்று உண்மையை மட்டுமே பேசும் சுப்ரமணிய சுவாமி சொன்னதை ஆதாரமாக சுட்டுகிறது கட்டுரை. ரஷ்யாவுக்குள் போஸ் நுழைந்திருக்கிறாரா என்று அறிய இந்திய அரசு கேட்ட கேள்விக்கு ‘அவர் இங்கே நுழையவில்லை.’ என்று சோவியத் அரசு பதில் தந்திருக்கிறது.http://www.ndtv.com/…/netajis-death-grandnephew-releases-se…

மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் போஸ் குறித்து ரஷ்ய அரசு எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கையை விரித்துவிட்டது.
போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஒரே ஒரு கடிதமும் போலியானது என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கிறார்கள். தரவுகளும் இது புனையப்பட்ட கடிதம் என்பதை நிறுவுகிறது. ஜப்பான் இந்த வருட இறுதியில் தன்னிடம் இருக்கும் இரண்டு கோப்புகளை வெளியிடுகிறது. மேலும் மூன்றுநாடுகளிடம் இந்திய அரசு கோப்புகளை வெளியிடச்சொல்லி கேட்டிருக்கிறது. அதுவரை போஸ் விஷயத்தில் நேரு தவறிழைக்காத மனிதர் என்று உறுதிபடச்சொல்லலாம். முக்குலத்தோர் ஓட்டுக்களை வாங்கும் முனைப்பில் இருக்கும் ஒரு சங்கத்தலைவரின் பேட்டியின் கருத்துக்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிப்பித்து இருக்கலாம் Tamil The Hindu