அறுந்துவிழும் அத்தனை
சொல்லிலும் ஞாபகக்கயிற்றின் இழை
தெரிகிறது.
செய்து முடிக்கப்பட்ட துரோகங்களை துடைத்த
இடங்களில் படர்ந்திருக்கும் பாசியை
அலையும் முடிக்கற்றை போல
தள்ளிவிட்டு முத்தங்கள் பரிமாறிக்கொள்கையில்
பேருந்து விளக்குகளின் முகங்களில் இருந்து
கத்திகள் உயிரறுத்து
மவுனம் சுவைத்து சிரிக்கின்றன
கோப்பை வன்மத்தை
தரையில் ஊற்றிவிட்டு நடக்கத்தான் முடியவில்லை
மருகி கரையும் நகரக்காகங்களோடு
நாய்களும் சேர்ந்து சப்தவெளி கிழிக்கையில்
புரட்சிகள் முடிந்து நிறைகிறது இரவு !
சோற்றுத்தட்டில் சிறுநீர் பொழியும் சிறுவனின் அப்பாவித்தனமாய்
யாவும் தெரிவதை என்னவென்று சொல்ல
……. கல்நெஞ்சை கிழிக்கும் வார்த்தைகள் …
————————
ஒவ்வொரு நாளிலும்
வன்மங்களுடன் பயணப்பட்டே
எளிதாக இரவில்
இமை மூட
பழகி விட்டனர்கள்
மாந்தர்கள் …
http://pandianpadaippukal.blogspot.in/